Saturday, 25 February 2017

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

🤗🏃🏻🏃‍♀ *வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?*
😆💥🙏🏻💐

தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.

🌞💧 *1. இளஞ்சூடான நீர்* 🍸

இளஞ்சூடான நீர் - காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும்.  மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

🍶 *2. வெந்தயம் நீர்* 🍜

வெந்தயம் நீர் - வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

🍹🐝 *3. தேன்*

தேன் - இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

🍅🍆🌶 *4. காய்கறிகள்*

காய்கறிகள் - கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொழுப்பைக் குறைக்கும்.

🍊🍎 *5.பழங்கள்*🍌🍋

பழங்கள் - வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. பழங்களை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது.

🍚 *6. அரிசிக்கஞ்சி*

அரிசிக்கஞ்சி - குறைந்த அளவு கலோரி கொண்டது. கஞ்சி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி-6, பி-12 அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

✨ *7.உளுந்தங்களி*

உளுந்தங்களி - பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.

🌱🍵🔅 *8.முளைக்கட்டிய பயறு*

முளைக்கட்டிய பயறு - முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

வாய்ப்புண். உதடுவெடிப்பு (ORAL ULCER) !!!

வாய்ப்புண். உதடுவெடிப்பு (ORAL ULCER)  !!!

1.கோவைக்காயில் சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு  குணமாகும்
2.சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலைமாலை 1தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு,உதட்டுப்புண் குணமாகும்
3.தவசுமுருங்கை இலைகளை மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
4.கொப்பரைத்தேங்காயை துருவல் அரை கோப்பையுடன் அரை தேக்கரண்டி கசகசா சேர்த்தரைத்து துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
5.திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும்
6.1பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்
7.நெல்லிபட்டையை தூள் செய்து தேனில் குழைத்து வாய்ப்புண் மீது தடவ குணம் ஆகும்
8.மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
9.மணத்தக்காளியிலைகளை  மென்று சாறை  1நாளைக்கு 6முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்
10.மருதாணிஇலைகளை 1மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்கொப்புளிக்க  வாய்வேக்காடு,வாய்ப்புண்,தொண்டைப்புண் ஆறும்
11.மாதுளம்பூச்சூரணம் அரைதேக்கரண்டி, 250மிலி நீரில் காய்ச்சி வாய்கொப்புளிக்க வாய்ப்புண், தொண்டைரணம், வலி  தீரும்.
12.அன்னபேதிச்செந்தூரம்200மிகி,,திரிபலாச்சூரணம்1-2கிராம்,5-10மிலி  தேனில் குழைத்து  தினமிருவேளை  சாப்பிட வாய்ப்புண்  ஆறும்.
13.நன்னாரி மணப்பாகு 5-10மிலி,தினமிருவேளை கொள்ள வாய்ப்புண்கள் ஆறும்
14.வெங்காரமது 3-5துளி வாய்ப்புண்களின்மீது  தடவிவர  குணமாகும்
15.மாசிக்காயை  இழைத்து வாய்ப்புண்களின் மீது தடவ குணமாகும்.
16.அகத்திக்கீரையை  கழுநீரில் வேகவைத்துக் குடிக்க வாய்ப்புண்கள் ஆறும்
17.வசம்பைச்  சுட்டு சாம்பலாக்கி,தாய்ப்பாலில் உரைத்து நாவில் தடவ, நாத்தடுமாற்றம்,வாய்நீரொழுகல்  குணமாகும். நன்கு பேச்சுண்டாகும்.
18.ஒதியம்பட்டைசூரணம் 1-2கிராம்,தினம்3வேளை,மோரில் உண்டு வர வாய்ப்புண்,குடற்புண்,பேதி,குருதிக்கழிச்சல்  தீரும்.
19.பச்சைபயரை முளைகட்டி காலையில் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும்
20..ஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய்கொப்புளிக்க வாய்ப்புண், வாய்துர்நாற்றம் நீங்கும்
21.சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம்,வாய்ப்புண் குணமாகும்
22.கொய்யாஇலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி,வாய்ப்புண் குணமாகும்
23.தான்றி தளிரிலைச் சாற்றினை வெள்ளைத் துணியில் தடவியுலர்த்தி, நீரில் பிழிந்து,வாய் கொப்புளிக்க   வாய்ப்புண்  குணமாகும்
24.அகத்திக்கீரை  கொழுந்தை வாய்கொண்டமட்டும் காலையில் மென்று தின்ன 3நாளில் வாய்வேக்காடு தீரும்
25.மருதாணி இலையை கியாழம்செய்து வாய் கொப்புளிக்க வாய் வேக்காடு நீங்கும்
26.மணித்தக்காளியிலையை சிறுபயர் போட்டு சமைத்துச்சாப்பிட வாய்வேக்காடு நீங்கும்
27.மல்லிகை இலையை வெற்றிலைபோல் மென்று துப்பிவர வாய்ப்புண் ஆறும்
28.அம்மான்பச்சரிசி இலையை சமைத்துண்ண  வறட்சி அகலும். வாய்,நாக்கு, உதடுவெடிப்பு,ரணம்  தீரும்.
29. ஆலம்பாலை காலைமாலை தடவிவர  வாய்ரணம், உதடு, நாக்குவெடிப்பு, கைகால் வெடிப்பு, பல்ஆட்டம் தீரும்.                                      30.ஒருபங்கு எலுமிச்சைசாறு,5பங்கு நீர் கலந்து வாய்கொப்புளிக்க வாய் வேக்காடு தீரும்.                                                                                                         31.திருநீற்றுப்பச்சிலையை வெறும் வயிற்றில் வாய் கொண்டமட்டும்  மென்று தின்ன வாய்வேக்காடு தீரும்.                                                                          32.உணவுக்குமுன் எலுமிச்சம்பழசாறு பருக அஜீரணம்,வாய்வேக்காடு தீரும்.