Wednesday, 20 September 2017

தெரிந்து கொள்ளுங்கள்

*தெரிந்து கொள்ளுங்கள்*

*தலைப்பு - மனித உடல்*

☦🅾மனித மூளையின் நிறம் சாம்பல் நிறம்.

☦🅾 ரத்தவகை ஆயுள் முழுவதும் மாறாது.

☦🅾 யோகாசனம் என்னும் பயிற்சி 21 வகைப்படும்

1. பத்மாசனம், 2. சித்தாசனம், 3. வஜ்ராசனம், 4. உட்கடாசனம், 5. பட்சி மோத்தாசனம், 6. வக்ராசனம், 7. உஷ்டிராசனம், 8. அர்த்த சிரசாசனம், 9. பாதஹஸ்தாசனம், 10. திரிகோணாசனம், 11. தனுராசனம், 12. விருட்சாசனம், 13. ஹனுமானாசனம், 14. தாடாசனம், 15. அர்த்த சக்கராசனம், 16. சோணாசனம், 17. புஜங்காசனம், 18. வீரபத்ராசனம், 19. சக்கராசனம், 20. அதோமுக சவாணாசனம் 21. நாற்காலி ஆசனம்.

☦🅾 மனித உடலில் வினாடிக்கு 15 மில்லியன் ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன. அதேசமயம் அழியவும் செய்கின்றன.

☦🅾 மனித உடலில் உள்ள ஐம்புலன்களின் உறுப்புகளில் கடைசியாகச் செயலிழப்பது காது.

☦🅾இடது நுரையீரலை விட அதிகமான காற்றை வலது நுரையீரல் உள் வாங்குகின்றது.

☦🅾 மனித மூளையின் நினைவுத்திறன் நான்கு டெராபைட் அளவை விட அதிகமானது.

☦🅾 நமது நாக்கின் நீளம் 10 செ.மீ. எடை 56 கிராம். சுவை அறியும் சுவை மொட்டுகள் நாக்கில் உள்ளன. அதன் மூலம் சுவை அறிய முடிகிறது. பேசும் சாதனம். உமிழ்நீர் சுரக்கும் இடம். நுனி நாக்கில் உப்பு சுவை மொட்டுகள், நடுவில் இனிப்பு சுவை அறியும் மொட்டுகள், உள் நாக்கில் கசப்பு சுவை மொட்டுகள், நாக்கின் ஓரத்தில் காரச்சுவை உணரும் மொட்டுகள் உள்ளன.

☦🅾 நமது தலையின் எடை அளவு 3,175 கிலோ கிராம்.

* நமது உடலில் 600 தசைகள் உள்ளன.

☦🅾நமது உடலில் இருக்கும் கொழுப்பைக் கொண்டு 7 சோப்புகள் செய்யலாம்.

☦🅾மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.

☦🅾மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும் தன்மையுடையது.

☦🅾 மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் சத்துப்பொருட்கள் புரதச்சத்து ஆகும்.

☦🅾 தும்மலின்  வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர்.

☦🅾‘மெலனின்’ என்று ஒரு ரசாயனப் பொருள்தான் நமது உடம்பின் தோலுக்கு நிறம் கொடுக்கிறது.

☦🅾 ஒரு நாளில் நமது இரத்தம் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல்கள் 23 ஆயிரத்து 40 தடவைகள் சுவாசிக்கின்றன.

இதயம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 689 தடவைகள் துடிக்கிறது.

☦🅾 குழந்தை பிறந்த போது 270 எலும்புகள் இருக்கும். பிறகு சேர்ந்து 206 எலும்புகள் நிலைக்கும்.

☦🅾 கைரேகையைப் போலவே நாக்கிலுள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

* மனித உடலில் சதை அழுத்தமாக உள்ள பகுதி நாக்கு.

☦🅾 மனிதர்களின் இரண்டு பக்க மூக்குத் துவாரங்களும் நுகர்வதர்கு வெவ்வேறாக செயல்படுகின்றன மனதுக்கு பிடித்த வாசனைகளை இடது பக்கத்தைக் காட்டிலும், வலது பக்கத் துவாரங்களே அதிகம் உணருகின்றன. எனினும், சரியான வாசனைகளைத் துல்லியமாக உணர இடது பக்கமே உதவுகிறது.

☦🅾மூக்கை அடைத்துக்கொண்டு ஆப்பிளையோ உருளைக்கிழங்கையோ வெங்காயத்தையோ சாப்பிட்டால் எல்லாம் ஒரே ருசியாகத்தான் தெரியும்.

☦🅾ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நமக்கு வாசனை உணர்வுகள் ஏற்படாது.

☦🅾 கோபம் மிகும்பொது முகத்திலுள்ள சிறு நாளங்கள் விரிந்து அதிக இரத்தம் பாய்கிறது. அதனால் முகம் சிகப்பாகிறது.

☦🅾 நம் உடலில் அதிகம் உள்ள சுரப்பி வியர்வைச் சுரப்பிகளே. ஏறத்தாழ 20 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.

☦🅾 'ஆக்சிஜன் படகு' எனப்படுவது ஹீமோகுளோபின்.

☦🅾 மனித உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன.

☦🅾 நம் உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை 830.

☦🅾 நமக்கு களைப்பு ஏற்படும்போதும், மூளை சோர்வு அடையும்போதும், இதனை நமக்கு அறிவிக்கும் செயலே கொட்டாவி ஆகும்.

☦🅾 நாம் உண்ணும் உணவில் அதிகப்படியாக புரதப் பொருள் இருந்தாலும், புளிப்பு பொருள்கள் இருந்தாலும் இவற்றை சிதைக்கும்பொழுது ஏற்படும் வாயு ஏப்பமாக வெளிவருகிறது.

☦🅾உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல்பட முடியாத போது ஏற்படும் சுவாச சிக்கலே விக்கலாக மாறுகிறது.

☦🅾 உணவுப் பாதையில் செல்லவேண்டிய உணவுத் துணுக்குகள் சுவாசப் பாதையில் பாதை மாறி நுழையும் பொது பொரை ஏறுதல் நிகழ்கிறது.

☦🅾சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் ஒவ்வொரு நிமிடமும் நம் மூளைக்குள் பாய்கிறது.

☦🅾 நம் கையின் கட்டை விரல் நகம்தான் மிகவும் மெதுவாக வளர்கிறதாம். வேகமாக வளர்வது நடு விரல் நகம்.

☦🅾 உடல் உறுப்புகளில் தானாகவே இயங்கும் உறுப்பு இதயம் ஆகும்.

☦🅾 மனித உடலில் இரத்தம் பாயாத இடம் விழி வெண் படலம். அதற்கு இரத்தமே செல்வதில்லை. தனக்குத் தேவையான ஆக்ஸிஜெனை அது காற்றிலிருந்து எடுத்துக் கொள்கிறது.

☦🅾 மனித உடலில் வியர்வைச் சுரப்பிகள் உண்டு. ஆனால் பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது அதனால் அதற்கு வியர்ப்பது இல்லை.

☦🅾 மனிதக் கண்களின் எடை 1.5 அவுன்சுகள் மட்டுமே ஆகும்.

☦🅾 நமது உடலிலிருந்து தினமும் 0.8 லிட்டர் வியர்வை வெளியேறுகிறது.

☦🅾 நமது உரோமம் 0.004285 சென்டி மீட்டர் வளர்கிறது.

☦🅾 பெண்களைக்காட்டிலும் 40  சதவீதம் அதிகமாக ஆண்களுக்கு வியர்க்கிறது.

☦🅾 நமது உடலில் வியர்க்காத பகுதி உதடு.

☦🅾 கை விரல்களில் சுட்டு விரலுக்கு உணர்வு அதிகம்.

☦🅾 சுவாசித்தல் சிதை மாற்றம் எனும் வழியின் கீழ் அடங்கும்.

☦🅾 நமது உடல் 866 டிகிரி வெப்பத்தை வெளியேற்றுகிறது.

☦🅾 நமது உரோமம் 0.04285 செ.மீ. வளர்கிறது.

☦🅾நமது விரல் நகம் 0.00115 செ.மீ. வளர்கிறது.

☦🅾 நமது இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.

☦🅾 நாம் 76,09,000 மூளை அணுக்களுக்கு வேலை தருகிறோம்.

☦🅾 உடலில் மிகத் துரிதமாக செய்தியைக் கடத்துவது நரம்பு மண்டலம்தான். இது ஒரு மணி நேரத்தில் 283 கி.மீ. வேகத்தில் செய்தியைக் கடத்துகிறது.

☦🅾 நாம் தூங்கும்போது எல்லா உறுப்புகளும் ஒரே நேரத்தில் ஓய்வெடுப்பதில்லை. முதலில் கண்கள், பின்பு காது, தோல் என ஒவ்வொன்றாக ஓய்வெடுக்கத் துவங்கும்.

பல்வலியை போக்கும் இயற்கை மருந்து பொருட்கள் !

பல்வலியை போக்கும் இயற்கை மருந்து பொருட்கள் !
நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.
1.பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டடும்.
2.கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.
3.எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.
4.வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.
5.அசோக மரப்பட்டையுடன் உப்பு சேர்த்து பொடியாக்கி அதில் பல் துலக்கினால் பல் ஈறுகள் வலுப்படும், பல் நோய்கள் குணமாகும்.
6.ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் காய வைத்துக் கொள்ளவும். இத்துடன் படிகாரம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் பல் துலக்கி வந்தால் பல் தொடர்பான நோய்கள் வராது.
7.ஆலமரத்துப் பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் நோய்கள் குணமாகும்.
8.ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும்.இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் பல் வலி குணமாகும்.
9.உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம் பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.
10.எலியாமணக்கு குச்சியால் தினமும் பல் துலக்கினால் பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
11.எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து பல் தேய்க்க பயன்படுத்தலாம். இதன் மூலம் பல்லின் பளிச் தோற்றத்தை பாதுகாக்கலாம்.
12.ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, ஈறுகளில் ஏற்படும் புண் ஆகியவை குணமாகும்.
13.கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல் வலி மறையும்.

எளிய இயற்கை வைத்தியம்

எளிய இயற்கை வைத்தியம்
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

உடல் எடையை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..

உடல் எடையை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..

★ இன்றைய மக்களுள் சிலர் எடை அதிகமாக உள்ளது என்பதற்காக அதை குறைக்க நிறைய முயற்சிகளை எடுக்கின்றனர். அதே சமயம், சிலர் எடை அதிகமாகவில்லை என்று அதற்காக பல முயற்சிகளை எடுக்கின்றனர். அவ்வாறு முயற்சி செய்யும் போது, எல்லா உணவுகளையுமே சாப்பிடக் கூடாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உணவுகளை சாப்பிட்டால் தான், உடல் எடை அதிகமாவது, குறைவது போன்றவை ஏற்படுவதோடு, உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்கும்.

  
இப்போது எந்த உணவுகளை எப்போது, எப்படி சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

★  வேர்க்கடலை, வெண்ணெய்,

வேர்க்கடலை, வெண்ணெயை கோதுமை பிரட் உடன் தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.

★ முட்டை

அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரிந்தது தான். அத்தகைய முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடையும் அதிகரிக்கும்.

★ வெண்ணெய்

அனைவரும் வெண்ணெயை தினமும் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான். ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது. ஜூஸ்

★ உடல் ஆரோக்கியமாகவும், எடை அதிகரிக்கவும், சில பவுண்ட் உடலுக்கு தேவைப்படுகிறது. ஆகவே தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.

★ கோதுமை பிரட்

தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பிரட் வாங்கும் போது, கோதுமை பிரட்டை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.ஓட்ஸ்

★ காலையில் சாப்பிட ஓட்ஸ் மிகவும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. அதிலும் இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் சீரான இரத்த ஓட்டம் இருப்பதோடு, உடலும் பருமனடையும்.

★ தயிர் பழங்களை விட, தயிரில் 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.

★ வாழைப்பழம்

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமில்லை, குறைந்தது 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.

★ உருளைக்கிழங்கு

கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.

Monday, 11 September 2017

நாற்பது வயதில் வரும் மூட்டுவலி, கை கால் நடுக்கம், வாதம் நீங்க எளிய வைத்தியம்!

நாற்பது வயதில் வரும் மூட்டுவலி, கை கால் நடுக்கம், வாதம் நீங்க எளிய வைத்தியம்!

நாற்பதை கடந்துவிட்டாலே மூட்டுவலி, கை கால் நடுக்கம், வாதம் போன்ற பல தொந்தரவுகள். இதற்கு மருந்து சாப்பிட ஆரம்பித்தால் வாழ்க்கை முடியும் வரை சாப்பிட வேண்டும், ஆனால் இதை போக்க ஒரு எளிய வைத்தியம்.

ஒரே ஒரு எண்ணெய் போதும், அதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா..?

நல்லெண்ணெய் – நூறு மில்லி
வேப்ப எண்ணெய் – நூறு மில்லி
விளக்கெண்ணெய் – நூறு மில்லி
புளித்த காடி நீர் – (அதாவது புளித்த பழைய சோற்று நீர்)
மருந்துப் பொருட்கள:

சுக்கு
மிளகு
திப்பிலி
பூண்டு
ஓமம்
பெருங்காயம்
கிராம்பு
வசம்பு
சதகுப்பை
மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும் சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும் பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும். இந்த சூரணத்தில் நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து அதை புளித்த காடி நீரை ஊற்றி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பிலேற்றி முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின் விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின் நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச் சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும் இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில் அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும். நன்கு கொதிக்க விடவும் நுரை அடங்கி வரும். நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்.

இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும் இந்த முழு செயலையும் சிறு தீயில் செய்ய வேண்டும். இந்த வாத எண்ணெயை தினமும் இரவில் கை கால்களில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து மறு நாள் காலையில் இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வர நடுக்கு வாதம், முடக்கு வாதம், கீல்வாதம், நரித்தலைவாதம், ஆமைவாதம்,
பக்கவாதம் கைகால்கள் வீக்கம், வலி போன்ற அனைத்து வாத நோய்களும் அனைத்து சூலை நோய்களும் குணமாகும்.

ரத்த அணுக்களை அதிகரிக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

ரத்த அணுக்களை அதிகரிக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ரத்த அணுக்கள் வெகுவாக குறைந்திடும் சில நேரங்களில் இதனால் மரணம் கூட ஏற்படுவதுண்டு.

இதனை தவிர்க்க, டெங்கு காய்ச்சல் ஏற்படாதவாறு உங்களை பாதுகாத்துக் கொள்வதுடன் ரத்த அணுக்களை மேம்படுத்தும் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளிப் பழம் :

ரத்த அணுக்களை மேம்படுத்துவதில் பப்பாளிப் பழம் மிகச்சிறந்த இடம் வகிக்கிறது. பழத்தை விட பப்பாளி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளம் பழம் :

சிகப்பு வைரம் என்று புகழப்படும் மாதுளம்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. அதனால் ஹீமோக்ளோபினை அதிகப்படுத்தும். மாதுளம்பழத்தில் விட்டமின்ஸ்களும் இருப்பதால் உங்களுக்கு உடல் வலிமையையும் கொடுத்திடும். இது டெங்கு வைரஸுக்கு எதிராக போராடவும் செய்திடும்.

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் நிறைந்த மீன்,நண்டு,சிக்கன் போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். அவை உங்களின் ரத்த அணுக்களை மேம்படுத்துவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

பூசணிக்காய் :

விட்டமின் ஏ நிறைந்த பூசணிக்காய் அல்லது பூசணிப்பழம் சாப்பிடலாம். இது நம் ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்திடும். அதே போல உடலில் உள்ள செல்களில் ப்ரோட்டீன் அதிகரிக்கச் செய்திடும். இதனால் ப்ளேட்லெட்ஸ் அதிகரிக்கும்.

விட்டமின் சி :

ரத்த அணுக்களை மேம்படுத்த விட்டமின் சி நிறந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். இது சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகவும் செயல்படும். இதனால் ரத்த அணுக்கள் பாதுகாக்கப்படும். ஒரு நாளைக்கு 400 முதல் 2000 கிராம் அளவில் விட்டமின் சி எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம், எலுமிச்சைப் பழம், ப்ரோக்கோலி,கீரை வகைகள் போன்றவற்றில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது.

நெல்லிக்காய் :

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த அணுக்களை மேம்படுத்தவும் பயன்படுத்துவது நெல்லிக்காய். காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். நெல்லிக்காயை சாறு எடுத்து தேனுடன் கலந்து குடிக்கலாம்.

பீட்ரூட் :

மிகவும் ரத்தசோகையில் இருப்பவர்கள் பீட்ரூட் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும். வாரத்திற்கு இரண்டு முறை ஒரு கப் நிறைய பீட் ரூட் சாப்பிட வேண்டும். பீட்ரூட் ஜூஸ் செய்தும் குடிக்கலாம். சாலட் அல்லது சூப் என எதாவது ஒரு வடிவில் பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

மிகவும் பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.

Tuesday, 5 September 2017

இரசாயனங்களை நம் உடலிலிருந்து விலக்க வேண்டும்:

1. இரசாயனங்களை நம் உடலிலிருந்து விலக்க வேண்டும்:
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், நச்சுக்கள் அடங்கிய இரசாயனங்களால் ஆனது. இத்தகைய நச்சுக்கள் விளைபொருட்களிலும் தங்கி விடுகின்றன. நாம் உண்ணும் பெரும்பாலான உணவு வகைகள் நச்சுத்தன்மை கொண்டுள்ளன. இவை உணவுப் பொருட்களைக் கழுவுவதின் மூலம் நீங்குவதில்லை. மாறாக அவை மிகக் கடுமையான உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. பல்வேறு ஆய்வறிக்கைகள், பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் ஆபத்துக்களாக, புற்றுநோய், நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு, மலட்டுத்தன்மை, போன்றவற்றை சுட்டிக்காட்டுகின்றன.
2. வருங்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்க வேண்டும்:
பூச்சிக்கொல்லியின் நச்சுத்தன்மையானது, ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டத் துவங்குதற்கு முன்னரே, பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அபாயத்தைக் கொண்டுள்ளது. குழந்தைத் தன் தாயின் கருவில் இருக்கும்போதே, நூற்றுக்கணக்கான இரசாயனங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் உணவானது, எந்த விதமான நச்சுக்களும், இரசாயனங்களும் இல்லாதிருக்கின்றது. எனவே அவை வளர்ந்த மனிதர்களைக் காட்டிலும், மிகக் குறைவான எடை கொண்ட குழந்தைகளின் உடல் உறுப்புகள் மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகிறது.
3. ஹார்மோன், நோய் எதிர்ப்பு ஊசிகள் மற்றும் மருந்துகளை கால்நடைகளுக்குப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்:
கறவை மாடுகள் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்கு, வளர்ச்சியை அதிகரிப்பதற்காகத் தொடர்ந்து ஹார்மோன் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் ஊசிகள் போடப்படுகிறது. இந்த மருந்துகளின் தாக்கம் பாலிலும், இறைச்சியிலும் கலந்து, உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.

4. சிறந்த ஊட்டச்சத்து மற்றும் சிறந்த சுவையைப் பெறவேண்டும்:
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், இரசாயன முறை விளைபொருட்களைக் காட்டிலும், அதிகளவு வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், என்சைம்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டுகளைக் கொண்டுள்ளன. மேலும் இயற்கை விளைபொருட்கள் எப்பொழுதும் சுவை மிகுந்ததாக உள்ளது.
5. சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும்:
இரசாயன முறை விவசாயம் சுற்றுப்புறத்திற்கு கேடுவிளைவிக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் நிலத்தடி நீரில் கலப்பதால், நீர்வாழ் உயிரினங்களுக்கும், பறவைகளுக்கும், வனவிலங்குகளுக்கும் அழிவை உண்டாக்குகிறது. தற்போதைய விவசாயம் இரசாயன உரங்களைச் சார்ந்திருப்பதால், மண்ணில் இயற்கையான வளம் அழிந்து விட்டது.
6. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்:
இயற்கை முறை விவசாயம், விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்காக, மற்றவர்களை சார்ந்திருப்பதை தடுக்கிறது. மாறாக விவசாயிகள் தமக்குத் தேவையானவற்றை மாட்டுச்சாணம், பயன் தரும் மூலிகைகள் மற்றும் இலைகளிலிருந்து தயாரித்துக் கொள்ள முடிகிறது. இதை விடுத்து மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலை என்பது, அதிகப்படியான பொருளாதார விரயத்தை ஏற்படுத்தி, விவசாயிகளை மனம் உடைந்து போகச் செய்கிறது.
7. விவசாயிகளின் உடல்நலத்தைப் பாதுகாக்க வேண்டும்:
இந்திய விவசாயிகள், வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள ஏராளமான பூச்சி மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து இரசாயன நச்சுக்களை உபயோகிப்பதால், விவசாயிகளும் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள், இன்ன பிற ஆபத்தான நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். இத்தகைய பாதிப்புகளை சுயமாக அனுபவித்த பல விவசாயிகள், இயற்கை முறை விவசாயத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
8. பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்க வேண்டும்:
இந்திய விவசாயிகள் உருவாக்கியுள்ள விதைகள் அனைத்தும் இயற்கையிலேயே பூச்சிக்களின் தாக்குதலை சமாளிக்கும் தன்மை கொண்டவை. மேலும் அவை மிகுந்த சத்துக்களை உள்ளடக்கியதாகவும், உள்ளூர் தட்பவெப்பத்திற்கேற்ப வளரும் தன்மையுடையதாகவும் உள்ளது. வேதியுரங்களைக் கொண்டு செய்யப்படும் விவசாயத்தில், கலப்பினம் செய்யப்பட்ட, இந்திய மரபில்லாத விதைகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
9. மரபணு மாற்றப்பட்ட உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்:
இயற்கை வழி விவசாயத்தில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. ஒரு வேளை இந்திய உணவுச் சந்தையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அனுமதிக்கப்பட்டு விட்டால், அவற்றை இயற்கை வழி விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களிலிருந்து நம்மால் வேறுபடுத்திக் காண இயலாது. இதைத் தடுக்க, இயற்கை வழி விவசாயத்தைச் சார்ந்திருப்பதே சிறந்த வழியாகும்.
10. பல்லுயிரியம் பாதுகாக்க வேண்டும்:
நீங்கள் இயற்கை முறை விவசாயம் நடைபெறும் வயல்களில் நடந்து சென்றிருந்தால், பலவகையான விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் நடமாட்டத்தைப் பார்த்திருக்க முடியும். இயற்கை முறை விவசாயத்தில் முதல் அறுவடைக்குப் பிறகு, பல்லுயிர்ப் பெருக்கம் தானாகவே நிகழ்கிறது.