Tuesday, 28 August 2018

மகிழ்வாக வாழ பல வழிகள்

மகிழ்வாக வாழ பல வழிகள்...
1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.
3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.
4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.
6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.
7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!
10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.
11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,
14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.
15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.
16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.
17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.
18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.
19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.
21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.
24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.
28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.
31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.
33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.
35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.
36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.
37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.
38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.
39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!
40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
வாழ்க வலிமையுடன்!!!

Monday, 27 August 2018

எந்த மூலிகை பொடி

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி  எதற்கு பயன்படும்..?*

*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி*
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியா நங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு
சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

Sunday, 26 August 2018

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்

*மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-*

மல்லிகைப் பூவை அந்தக் காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர்.

அதே போல, பல்வேறு மருத்துவக் குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளியில் உணவை வாங்கிச் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.

வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.

அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும்.

இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதே போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து
உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.

எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது.

அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும்.

ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது.

தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.

மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ..

*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*

Saturday, 25 August 2018

பனை கருப்பட்டி

பனை கருப்பட்டி என்ற பெயரில் நடத்தபடும் முறைகேடுகளை பற்றி ஒரு சிறப்பு பார்வை !!!

1) சில நயவஞ்சகர்கள் பனை பாளை பாலில் அவர்களுக்கே தெரிந்த சதவீதத்தில் சீனி சர்கரையை கலந்து காய்ச்சி விற்கப்படும்.

2) சில கோல்மால் செய்தே பழக்கப்பட்ட வணிகர்கள் பனை பாலுடன் கரும்பு சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளான மொலசஸ் சேர்த்து பனை கருப்பட்டி தயாரிக்கபடும்.

3) தரமற்ற இனிபூட்டிகளான சாக்ரீன் போன்ற தரமற்ற பொருட்கள் கலப்படம் செய்ய பட்டு விற்கப்படும்.

4) சில பண முதலைகள் தரமற்ற பிஞ்சு பனை பாளைகளில் இருந்து பால் எடுக்கப்பட்டு அதனை கொண்டும் பனை கருப்பட்டி தயாரிக்கபடுகிறது.

5) இராசயன மணமூட்டிகள், நிறமூட்டிகள் சேர்க்க படுகிறது .

தரமான பனை கருப்பட்டியை எவ்வாறு கண்டறிவது ???

1) கலப்படமற்ற கருப்பட்டியை காற்றோட்டமாக வெட்டவெளியில் வைக்க இயலாது !! வைத்தால் அது மாவு போல் ஆகிவிடும்.

2. கலப்படமற்ற கருப்பட்டியை காற்றோட்டமாக வெட்டவெளியில் ஒரு வாரம் வரை  வைத்தால் அது புளித்த வாடை வீசும். தரமற்ற கருப்பட்டியோ வெல்ல பாகு போல் கரைந்து ஓடும்.

3) கலப்படமற்ற கருப்பட்டி துண்டை உடைத்து நமது நாவில் வைத்தால் அது எக்ஸ்லர்ஸ் சாக்லேட் போல் நமது நாவில் கரையும் அதாவது திருநெல்வேலி அல்வா போல் உருகும் ஆனால் தரமற்ற கருப்பட்டியை நாவில் வைத்தால் அது மிட்டாய் போல் மெதுவாக கரையும்.

ந. சண்முக சூரியன்
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

பழங்களில் உள்ள சத்துகள்

பழங்களில் உள்ள சத்துகள்

மாம்பழம்

வைட்டமின் ஏ 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி, சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மாலைக்கண் நோய் ஏற்படும்.
ஆரஞ்சுப் பழம்

வைட்டமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.

பப்பாளிப் பழம்

வைட்டமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம்.

நெல்லிக்கனி

வைட்டமின் சி 600 மி.கி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களுடன் வைட்டமின்கள் ஏ.பி. சிறிதளவு உள்ளன. உடலுக்கு உரம் தரும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும் வைட்டமின் சி, குறைவினால் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.

கொய்யாப்பழம்

வைட்டமின் சி 212 மி.கி. உள்ளது. பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும் பற்களும் உறுதிதரும்.

சாத்துக்குடி

வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன. வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.

எலுமிச்சை

கால்ஷியம் 70 மி.கி. வைட்டமின் சி 39 மி.கி. இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருளகளும் வைட்டமின் பி சிறிதளவும் உள்ளன. அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும் கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.

கறுப்பு திராட்சை

வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.

பச்சை திராட்சை

வைட்டமின் சி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. அதோடு நார்சத்து 2.9 கிராம் உள்ளது. பச்சை திராட்சைப் பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும் நா வறட்சி நீங்கும்.

பேரீச்சம் பழம்

இரும்புச் சத்து 7.3 மி.கி., கால்ஷியம் 120 மி.கி. பாஸ்பரஸ் 50 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி சிறதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.

சப்போட்டா

மாவுச் சத்து 21.4 கிராம், இரும்புச் சத்து 2 மி.கி. உள்ளது. வைட்டமின் ஏ.பி மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.

வாழைப்பழம்

கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது (116 கலோ¡¢கள்). தவிர வைட்டமின்கள் ஏ.பி.சி உள்ளன. இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. பூவன்பழம் மலச் சிக்கலைப் போக்க உதவும் நேந்திரன் பழம் ரத்த சோகையை நீக்க உதவும். மலை வாழைப் பழம் ரத்த விருத்தி செய்ய வல்லது.

ஆப்பிள்

வைட்டமின்கள் ஏ.சி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும் பற்களின் உறுதித் தன்மைக்கும் உதவும்.

தர்பூசணி

இரும்புச் சத்து 7.9 கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம் தணிக்க உதவும்.

புளியம் பழம்

இரும்பு 17 மி.கி. கால்ஷியம் 170 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச் சத்துக் குறைவினால் ரத்த சோகை ஏற்படும்.

சீத்தாப் பழம்

பொட்டாஷியம் 340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளன. இது தவிர கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் வைட்டமின்கள் பி, சி-யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும். பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.

அண்ணாசிப் பழம்

இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. நார்ச்சத்து 0.5கிராம், கால்ஷியம் 20 மி.கி., மாவுப் பொருள் 10.8 மில்லிகிராம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

மாதுளம் பழம்

பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்ஷியம், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. கால்ஷியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.

மருத்துவ குறிப்புகள்

பயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புகள்:-

1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.

4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.

6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.

7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.

8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.

9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.

10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.

மூளையின் ஆரோக்கியத்திற்கான உணவுகள்

மூளையின் ஆரோக்கியத்திற்கான உணவுகள்

மூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் தேவையான உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அவைகளை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் அவசியமானது. எந்தெந்த நேரத்தில் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.

காலையில் எழுந்ததும் டீயோ, காபியோ பருகுவதற்கு முன்பாக லவங்கப்பட்டை கலந்த பானம் பருகுவது நல்லது. அதிலிருக்கும் வேதியியல் பொருட்கள் பெருமூளையின் சீரான இயக்கத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் வழிவகை செய்கின்றன. லவங்கத்தை பொடி செய்து எலுமிச்சை சாறு மற்றும் சூடான நீரில் கலந்தும் பருகலாம். தினமும் காலையில் இதனை பருகுவதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்தும் விடுபடலாம்.

காலை உணவுடன் முட்டையை அவித்தோ, ஆம்லேட்டாக தயார் செய்தோ சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் வைட்டமின் பி, கோலின் போன்றவை நினைவாற்றல், மனநலத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. தினமும் காலை உணவுடன் முட்டையை சேர்க்கும்போது திருப்தியாக சாப்பிட்ட மன நிறைவு கிடைக்கிறது. மதியம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும் உதவுகிறது.

மதிய உணவில் கட்டாயம் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் அமினோ அமில டைரோசின் உள்ளடங்கி இருக்கிறது. அது டோபமைன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்க டோபமைன் துணைபுரிகிறது. மேலும் தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் குடலுக்கு நலம் சேர்க்கிறது. மதியம் சாப்பிட்டபிறகு மந்தமான உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்கும்.

மாலை வேளையில் வால்நெட் சாப்பிடுவது மூளைக்கு நல்லது. அதிலிருக்கும் ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அறிவாற்றல் திறனை அதிகரிக்கும். நினைவாற்றலும் மேம்படும். தினமும் 7 வால்நட்டுகள் சாப்பிட வேண்டும்.