Thursday, 31 January 2019

இரவு பணியின் பரிசு மரணம்

*இரவு பணியின் பரிசு மரணம் ☠*
--------------------------------------------------------------

*உள்ளூர் மாடு விலை போகாது என்பார்கள்.*

*இரவு பணிக்கு செல்வோர் கோடி கோடியாய் வந்து கொட்டினாலும் அவர்களுக்கு வைத்தியம் பார்க்க மாட்டேன் என்று ஏற்கனவே பல முறை எனது Whats app குழுக்கள் மற்றும் முகநூலில் சொல்லி இருக்கிறேன். என்னிடம் சிகிச்சைக்கு வருவோர் அனைவரிடமும் இதை சொல்வது வழக்கம்.*

*அப்படி இரவு பணிக்கு செல்வோர் ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்து நடந்த சுவாரஸ்யமான விடையத்தை பிறகு பார்ப்போம்.*

*அதற்கு முன்*

*Hong Kong ல் இரவு பணிக்கு செல்வோரை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் திடுக்கிடும் பல அதிர்ச்சி முடிவுகள் வெளியானது.*

*இவை Anesthesia Academic Journal ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.*

*இச்செய்தியை முதலில் நேற்று முன்தினம் Indo Asian News Service 27.01.2019 ல் வெளியிட்டது.*

*அதன் பின் Press Trust Of India என்னும் News Agency அனைத்து ஆங்கில இணைய செய்தி தளத்திலும் இச்செய்தியை வெளியிட்டது.*

*இதோ அதன் link 👇🏽*

https://m.timesofindia.com/home/science/night-shifts-may-cause-dna-damage-study/articleshow/67710439.cms

*Indo Asian News Service வெளியிட்ட செய்தியின் link 👇🏽*

https://in.news.yahoo.com/night-shift-damage-dna-study-095803070.html

*கண் விழித்து இரவு வேலை பார்ப்பவர்களுக்கும் !*

*இரவு நேரம் கழித்து உறங்குபவர்களுக்கும் !*

*இரவு தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கும் !*

*ஏற்படும் பேராபத்துக்கள் !*

*இதை எதுவும் நான் சொல்லவில்லை சீன நாட்டில் The University of Hong Kong என்னும் பல்கலைக்கழகத்தில் Research Associate ஆக பணிபுரியும் S. W. Choi  என்னும் ஆய்வாளர் சொல்கிறார்.*

*இதோ ஆய்வு முடிவுகள் 👇🏽*

*Lack of proper sleep and night-time wakefulness can cause damage to the structure of the human DNA.*

*இரவு கண் விழிப்பதும், இரவு தூக்கமின்மையும் மனித மரபணு வடிவத்தையே சிதைக்கும்.*

*௧ - மரபணு சிதைவு (DNA damage)*

*௨ - புற்று நோய் (Cancer)*

*௩ - இருதய கோளாறுகள் (Cardiovascular disease)*

*௪ - நீரிழிவு (Diabetes)*

*௫ - வளர் சிதை மாற்றம் (Metabolic disorders)*

*௬ - நரம்பியல் நோய்கள் (Neurological disease)*

*௭ - நுரையீரல் நோய்கள் (pulmonary diseases)*

*௮ - மரபணு உறுதியற்ற தன்மை (Genomic instability)*

*௯ - செல் இறப்பு (Cell death)*

*இது மட்டுமா, இவர் குறிப்பிடும் முக்கிய வரிகள் இதோ 👇🏽*

*Although this work is very preliminary, it is clear form the results that even a single night of sleep deprivation can trigger events that may contribute to the developments of Chronic disease, said Siu-Wai Choi, of The University Of Hong Kong.*

*இது ஆரம்ப கட்ட ஆய்வாக இருந்தாலும், ஒரு நாள் இரவு தூக்கமின்மை கூட, நோய் காரணிகளை தூண்டிவிட்டு நாட்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை ஆய்வு முடிவு தெளிவாகக்காட்டுகிறது என சொல்கிறார், The University of Hong Kong பல்கலைக்கழகத்தை சேர்ந்த Siu-Wai Choi என்னும் ஆய்வாளர்.*

*சரி வாருங்கள் ஏன் இரவு கண் விழிப்பது ஆபத்து என்று நான் சொல்கிறேன்.*

*பொதுவாக அனைத்து உறுப்புகளும் அனைத்து நேரத்திலும் இயங்கிக்கொண்டு இருந்தாலும், 2 மணி நேரங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட உறுப்பு அதிகமாக பிரபஞ்ச சக்தி பெற்று இயங்கும். எந்த எந்த உறுப்பு எந்த எந்த நேரத்தில் அதிகமாக இயங்குகிறது என்று அதிகாலை 3 மணி முதல் பார்ப்போம்.*

*உறுப்புகளின் நேரம் !*

*நுரையீரல்                 : 3 Am - 5 Am*

*பெருங்குடல்             : 5 Am - 7 Am*

*இரைப்பை                : 7 Am - 9 Am*

*மண்ணீரல்               : 9 Am - 11 Am*

*இருதயம்                   : 11 Am - 1 Pm*

*சிறுகுடல்                   : 1 Pm - 3 Pm*

*சிறுநீர்பை                 : 3 Pm - 5 Pm*

*சிறுநீரகம்                  : 5 Pm - 7 Pm*

*இருதய மேலுறை    : 7 Pm - 9 Pm*

*மூவெப்ப மண்டலம் : 9 Pm - 11 Pm*

*பித்தப்பை                  : 11 Pm - 1 Am*

*கல்லீரல்                     : 1 Am - 3 Am*

*இதில் மூவெப்ப மண்டலம், பித்தப்பை மற்றும் கல்லீரல் நேரத்தை யாரேனும் கவனித்தீர்களா ? இரவு 9 மணி முதல் 3 மணி வரை.*

*இந்த நேரங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.*

*இரவு 9 மணி முதல் 11 மணி வரை மூவெப்ப மண்டலம் இரத்தத்தை தூய்மை செய்ய உடலில் எங்கு எங்கு, எந்த அளவு வெப்பம் இருக்க வேண்டுமோ, அந்த அளவுகளை பொருத்தி வைப்பான். கழிவுகள் அதிகம் உள்ள இடத்தில் அதிகமாகவும், குறைவாக உள்ள இடத்தில் குறைவாகவும் வெப்பத்தை பொருத்தி வைப்பான் இவன்.*

*நீங்கள் இந்த நேரத்தில் ஓய்வில் இருந்தால் மட்டுமே வெப்பத்தை சீர் செய்யும் இந்த வேலை நடைபெறும். வேறு என்ன செய்துகொண்டிருந்தாலும், இந்த வேலை சரியாக நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.*

*பின் மனித உடலின் பெரிய உறுப்பு என பெயர் பெற்ற புஜபலபராக்கிரமனான கல்லீரல் உடலை தன் கட்டுப்பாட்டிற்குள் எடுப்பான்.*

*இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பித்தப்பை மற்றும் கல்லீரல் நேரம். இது இரத்தத்தை தூய்மைப்படுத்தும் நேரம்.*

*இந்த நேரத்தில் கல்லீரல் உச்சி முதல் பாதம் வரையில் உள்ள இரத்தங்களை தன்னிடம் வரவழைத்து அதில் உள்ள நச்சுக்களை முறிக்கும் வேலையை செய்வான்.*

*முறிக்கப்பட்ட நச்சுக்களை ஒரு மில்லியன் வடிப்பான்களை(Nephrons) தன்னகத்தே கொண்ட சிறுநீரகம் நச்சுக்களை வடித்து சிறுநீர்ப்பைக்குள் தள்ளிவிடுவான்.*

*பின் காலை சிறுநீர் செல்லும் வேளையில், விடிய விடிய இரத்தத்தை தூய்மை செய்யும் போது பிரிக்கப்பட்ட நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர்பை வெளியேற்றிவிடுவான். அதனால் தான், காலை போகும் முதல் சிறுநீர் பழுப்பு நிறம் மற்றும் நாற்றம் நிறைந்ததாக உள்ளது.*

*அது அனைத்தும் கல்லீரலால் முறிக்கப்பட்ட நச்சுக்கள். புடுங்கும் ஆணி அனைத்தும் தேவை இல்லாத ஆணி தான். எனவே இதை பிடித்து பரிசோதனை செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.*

*பாருங்கள் உறுப்புகள் எப்படி ஒற்றுமையாக இயங்குகிறது என்று. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உடல் உறுப்புகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.*

*கல்லீரல் உங்கள் இரத்தத்தை தூய்மை செய்யும் இந்த வேளையில்*

*நீங்கள்*

*இரவுப் பணியில் இருந்தாலோ !*

*உணவை அமுக்கிக்கொண்டு இருந்தாலோ !*

*கண் விழித்திருந்தாலோ !*

*தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாலோ !*

*கைப்பேசி நோண்டிக்கொண்டிருந்தாலோ !*

*கதை பேசிக்கொண்டிருந்தாலோ !*

*ஏதேனும் யோசனை செய்து கொண்டிருந்தாலோ !*

*போர்வை இழுத்து தலையுடன் போத்தி, யார் யார் என்ன என்ன Status வைத்திருக்கிறார்கள் என பார்த்துக்கொண்டிருந்தாலோ !*

*கல்லீரல் இரத்தத்தை துய்மை செய்யும் வேலை ஸ்தம்பித்துவிடும். இந்த வேலை நடக்காது.*

*முட்டி முட்டி முடிந்தவரை இரத்தத்தை தூய்மை செய்ய முயற்சிப்பான், அவன் நேரத்தை நீங்கள் அபகரித்து அவனுக்கு நேரம் தர மாட்டீர்கள், பின் மீண்டும் அடுத்த நாள் அவன் நேரத்திற்காக காத்திருப்பான்.*

*நீங்கள் அடுத்த நாளும் கல்லீரல் நேரத்தில் தூங்குவதை தவிர அனைத்து சேட்டைகளும் செய்து கொண்டிருப்பீர்கள்.*

*மீண்டும் முட்டி முட்டி முடிந்தவரை இரத்தத்தை தூய்மை செய்ய முயற்சிப்பான். அவன் நேரத்தை நீங்கள் அபகரித்து அவனுக்கு நேரம் தர மாட்டீர்கள், பின் மீண்டும் அடுத்த நாள் அவன் நேரத்திற்காக காத்திருப்பான்.*

*மீண்டும் உங்களின் சேட்டைகள் தொடரும்.*

*இப்படி தொடர்ந்து நடக்கும் போது என்ன ஆகும் தெரியுமா ?*

*கல்லீரல் இரத்தத்தை தூய்மை செய்யும் வேலையில், நீங்கள் தூங்காமல் வேறு ஏதேனும் செய்து கொண்டிருந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் இரத்தத்திலேயே தங்கிவிடுகிறது.*

*ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஏதாவது ஒரு பொடி போட்டு கலந்துகொண்டே இருந்தால் அந்த நீரின் அடர்த்தி அதிகரித்து திடமாகுமா ? அல்லது திரவமாகவே இருக்குமா ?*

*திடமாகும் அல்லவா. அதேப்போல் தான்.*

*நீங்கள் இரவு தூங்காமல், கல்லீரலுக்கு அதன் நேரத்தை கொடுக்காததால், நச்சை முறிக்க நேரம் இல்லாமல், நச்சுக்கள் அனைத்தும் இரத்தத்திலேயோ தங்கி, இரத்தம் சாக்கடை போல் கெட்டியாக மாறிவிடுகிறது.*

*கெட்டியான இந்த இரத்தத்தை இதயம் Pump செய்ய சிரமப்பட்டு வேகம் குறையும். இந்த நேரத்தில் நீங்கள் ECG எடுத்து பார்த்தால் இதயம் Low pump rate காட்டும். உடனே உங்களுக்கு இதயக்கோளாறு என்று சொல்லிவிடும் ஆங்கில மருத்துவம்.*

*பிரச்சனை இதயத்திலா ? அல்லவே அல்ல*

*Low pump rate ற்கு காரணம் கெட்டியான இரத்தம்.*

*கெட்டியான இரத்தத்திற்கு காரணம் நீங்கள் தூங்காமல் இருந்தது.*

*இப்பொழுது பிரச்சனை எங்கு என்று பாமரன் கூட அறிவான்.*

*இரவு தூங்காமல், இப்படி இரத்தம் கெட்டியாகி கழிவுகள் இரத்தத்திலேயே தங்கிவிடுவதால் நச்சு வெளியேறாத இந்த இரத்தம் செல்லும் இடமெல்லாம் பல்வேறு விதமான நோய்களை உருவாக்கிவிடுகிறது.*

*என்ன நோய் என்று கேட்கிறீர்களா ? ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் உலகில் உள்ள அனைத்து நோய்களும் என்று சொல்லலாம். ஆம் இது தான் நோய்களுக்கு மிக முக்கிய காரணம்.*

*நீங்கள் என்ன தான் இயற்கையில் விளைந்த உணவுகளை எடுத்தாலும். இரவு நேரம் கழித்து உறங்கினால் உங்களுக்கும் இதே நிலை தான்.*

*உணவில் மட்டும் அல்ல, வாழ்க்கை முறையிலும் வர வேண்டும் மாற்றம்.*

*சிலர் சிரித்துக்கொண்டே சொல்வார்கள் பகலில் தூங்கி சமன் செய்து விடுவேன் என்று நீங்கள் சமன் செய்யவில்லை உங்களுக்கு நீங்களே சமாதி கட்டிக்கொள்கிறீர்கள்.*

*இரவு தூங்கினால் மட்டுமே இரத்தம் தூய்மை பெறும் உடல் உஷ்ணம் குறையும் பகலில் தூங்கினால் நோய் தான் வரும். பகலில் அரை மணி நேரம் ஓய்வு எடுக்கலாமே தவிர தூங்க கூடாது.*

*பகல் தூக்கம் ஆகாது என்பார்கள்.*

*ஜப்பான் நாட்டின் டோக்கியோவிலுள்ள யமடா டோமாஹைட் என்ற பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களை ஆய்வு செய்ததில் 40 நிமிடத்திற்கு மேல் பகலில் தூங்குபவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பல்வேறு நோயினால் தாக்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளார்கள்.*

*இதோ அதன் link 👇🏽*

http://daily1tips.com/doc-1st/archives/7244

*சரி கட்டுரையின் ஆரம்ப பகுதியில் சுவாரஸ்யமான விடையம் ஒன்று உள்ளது என்று சொன்னேன் அல்லவா அதை பார்க்கலாம் வாருங்கள்.*

*எனது சிகிச்சை மையத்திற்கு 11.02.2018 அன்று 33 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சிகிச்சைக்காக குடும்பத்துடன் 7 பேர் ஒரு வாகனத்தில் வந்து இறங்கினார்கள்.*

*அனைவரும் ஒரு பதட்டத்துடன் வேர்க்க விறுவிறுக்க வந்து என் முன் அமர்ந்தார்கள். வணக்கம் ங்க, மருத்துவர் எனக்கு இதயக்கோளாறு என்று சொல்லிவிட்டார் எனக்கு பயமாக உள்ளது, இதை உங்கள் மருத்துவத்தில் சரி செய்ய முடியுங்களா என்று கேட்டார் பாதிக்கப்பட்ட நபர்.*

*நானும் நாடி பிடித்த அடுத்த கணமே அவரிடம் சொன்னேன், உங்களுக்கு பிரச்சனை இதயத்தில் அல்ல கல்லீரலில் என்று.*

*என்ன சொல்றீங்க மருத்துவர் ECG எடுத்து பார்த்து உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது என்றும் ஒரு நாளைக்கு நீங்கள் 14 மாத்திரை சாப்பிட வேண்டும் என்றும் எழுதி கொடுத்துள்ளார் பாருங்கள் என்றார்.*

*மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை இல்லை, நீங்கள் இரவு பணிக்கு செல்கிறீர்கள், சரியா என்று கேட்டேன்.*

*உடனே அவர் ஆச்சர்யத்துடன் ஆமாங்க, நான் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளேன், பெரும்பாலும் இரவு தூங்க முடியாது என்றார்.*

*பின் நான் வழக்கமாக சொல்வதை சொன்னேன். இரவு பணி செல்வோருக்கு நான் வைத்தியம் பார்ப்பதில்லை நீங்கள் செல்லலாம் என்றேன்.*

*முடிந்தால் அந்த பணியை விட்டு விட்டு வாருங்கள் பிறகு பார்க்கிறேன் என்றேன். குடும்பத்துடன் ஆலோசித்து, எனக்கு குணமானால் போதும் ங்க, இனி நான் இரவு பணிக்கு செல்ல மாட்டேன் என்றார்.*

*சரி என்று, நீங்கள் இரவு பணிக்கு செல்வதால் இரத்தம் தூய்மை பெறாமல் கெட்டியாகி இருப்பதால் இதயம் pump செய்ய சிரமப்படுகிறது என்று சொல்லி பிரச்சனை இதயத்தில் அல்ல உங்கள் தூக்கமின்மையில் என்பதை அவருக்கு புரிய வைத்து மரபு வைத்தியம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.*

*அலோபதி கொடுத்த 14 மாத்திரைகளும் அவருக்கு தேவைப்படாததாய் இருந்ததால் அனைத்தையும் அன்றே நிறுத்திவிட்டேன்.*

*மூன்று வாரம் கழித்து அதே ஆங்கில மருத்துவரிடம் சென்று பரிசோதித்து பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக முகத்தில் ஒரு புன்முறுவலுடன் என்னிடம் வந்தார், வணக்கம் ங்க மருத்துவர் ECG எடுத்து பார்த்து விட்டு உங்கள் இதயம் நன்றாகிவிட்டது, பரவாயில்லை நான் கொடுத்த மாத்திரைகள் அனைத்தையும் சரியாக எடுத்துள்ளீர்கள் என்றாராம் அந்த ஆங்கில மருத்துவர். இதை சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார்.*

*பிரச்சனையைத்தான் இவர்கள் சம்மந்தமே இல்லாமல் சொல்கிறார்கள் என்று பார்த்தால் குணமானதையும் சம்மந்தமே இல்லாமல் சொல்கிறார்களே என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படியாவது அவர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்.*

*இந்த மூன்று வாரங்கள் பாதிக்கப்பட்ட நபர் இரவு சரியாக தூங்கியதால் கல்லீரல் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தம் தூய்மை பெற்று, இதன் அடர்த்தி சீராகியதால், இதயத்தில் Pumping rate normal ஆகி உள்ளது.*

*இது எதுவுமே தெரியாத ஆங்கில மருத்துவம் ஒரு Machine ஐ நம்பி அவருக்கு இதயத்தில் பிரச்சனை என்று சொல்லிவிட்டது. இதேப்போல் தான் இவர்களின் அனைத்து நோய் கண்டறிதல் முறையும் உள்ளது என்பது கேலிக்குரிய விடையம்.*

*ஒரு நோயை குணமாக்க வேண்டும் என்றால் அதன் மூல காரணத்தை கண்டுபிடிப்பதே ஒரு மருத்துவரின் வெற்றிக்கான முதல் படி.*

*தவறாக கணித்து முதல் படியிலேயே சறுக்கி விளையாடுகிறது ஆங்கில மருத்துவம். நோய் கண்டறிதலே தவறாக உள்ள பட்சத்தில் நோய்களை எப்படி இவர்கள் குணப்படுத்துவார்கள் ?*

*உண்மையில் பிரச்சனை ஒரு இடத்தில் இருக்க, Machine ஐ நம்பி, வேறு இடத்தில் வைத்தியம் பார்த்து மேலும் பிரச்சனைகளை அதிகப்படுத்தும் வேலையை மட்டுமே செய்கிறது ஆங்கில மருத்துவம். அனுபவப்பட்டோர் இதை நன்கு அறிவர்.*

*ஒரு மனிதனுக்கு மூச்சு காற்று எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல் தான் தூக்கமும் முக்கியம். எனவே தான் எனது சிகிச்சை படிவத்தில் இரவு உணவு உண்ணும் நேரம் மற்றும் இரவு தூங்கும் நேரம் கேட்டிருப்பேன்.*

*இரவு கண் விழித்து வேலை பார்த்து சாம்பாதிப்பது என்பது கண்ணை விற்று கண்ணாடி வாங்கும் செயல்.*

*பெட்டி பெட்டியாய் பணம், ஒரு மருத்துவரிடம் நீங்கள் கொடுத்தால் உங்கள் உயிரை அவரால் காப்பாற்றி விட முடியுமா ? முடியவே முடியாது.*

*உதாரணம் பல கோடி சொத்து இருந்தும் 75 நாள் ஒரு உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையில் தங்கி வைத்தியம் பார்த்த ஒரு அம்மாவின் உயிரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.*

*இழந்த பிறகு தான் தெரியும்*
*ஆரோக்கியத்தின் அருமை.*

*ஒரு இருபது வருடங்களுக்கு முன் எல்லோரும் எத்தனை மணிக்கு உறங்கச்சென்றார்கள் ?*

*நினைத்தாலே பட்டாம்பூச்சி சிறகடித்து மனதில் மகிழ்ச்சி பிறக்கும் அளவிற்கு அழகான நாட்கள் அவைகள், இரவு நேரத்தில் உணவு எடுத்து 8 மணிக்கெல்லாம் ஊரே அடங்கிவிடும். குடும்பமே ஒரே இடத்தில் ஒன்றாகத்தான் உறங்குவார்கள். காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தங்களது பணியை தொடங்குவார்கள்.*

*அப்பொழுது அனைவரும் ஆரோக்கியத்தில் திளைத்து இருந்தார்கள். ஆரோக்கியத்தின் அதிபதியாய் இருந்தார்கள்.*

*ஆனால் இப்பொழுது அனைவரும் எத்தனை மணிக்கு உறங்கச் செல்கிறார்கள் ? இதோ என்னிடம் சிகிச்சை பெற்ற 21 பேர் குறிப்பிட்ட நேரத்தையே உதாரணமாக காட்டுகிறேன். சிகிச்சையாளர் பூர்த்தி செய்த படிவத்தின் படத்தை இதில் இணைத்துள்ளேன் நீங்களே பாருங்கள்.*

*இப்பொழுதெல்லாம் உணவு எடுப்பதே 10 மணியாக உள்ளது. சிலர் அதற்கும் மேல். உறங்க செல்வது பெரும்பாலும் 12 மணியாக உள்ளது. சிலர் அதற்கும் மேல்.*

*இச்சமூகத்தை பீடித்திருக்கும் 90% சதவீதமான நோய்களுக்கு, இரவு நேரம் கழித்து உறங்குவது தான் முக்கிய காரணம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?*

*இரவு உணவு எடுக்க சரியான நேரம் : 7Pm*

*இரவு உறங்க சரியான நேரம் : 9Pm*

*மிக அதிகபட்சம் 10 மணி வரை நீளலாம். Dead End Time 10Pm. இதற்கு மேல் தூக்கம் வராவிட்டாலும் ஒரு வினாடி கூட கண் விழித்திருக்க கூடாது, கண் மூடி படுத்து விட வேண்டும்.*

*இரவு எளிய உணவை மட்டுமே எடுக்க வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் உணவு எடுப்பது உங்கள் கல்லீரலை கசாப்பு கடைக்கு அனுப்புவதற்கு சமம். தூங்கும் முன் வயிற்றில் எதுவும் இருக்கக்கூடாது.*

*வயிற்றை நிறைத்து உறங்குபவரா நீங்கள் ? இப்பழக்கத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது மறைக்கப்படுவீர்கள் இயற்கையால்.*

*இரவு நீங்கள் கண் விழிக்கும் ஒவ்வொரு வினாடியும், உங்களின் இறுதி நாள் குறிக்கப்பட்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* 

*தூக்கத்தில் கனவு வந்தால் அது கெட்ட தூக்கம். கனவு இல்லை என்றால் தான் அது நல்ல ஆழ்ந்த தூக்கம். பெரும்பாலானோருக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை.*

*காரணம் மூன்று*

*1 - தேனீர்*
*2 - மனதிற்கு அதிக வேலை*
*3 - உடல் உழைப்பு இன்மை*

*இம்மூன்றையும் சரி செய்தால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். அதாவது டீயை தவிர்த்து மனதின் வேலையை குறைத்து உடலின் வேலை அதிகப்படுத்தினால் ஆழ்ந்த தூக்கம் வரும்.*

*இப்படி ஆழ்ந்த தூக்கம் தூங்கினால், காலையில் உடல் பட்டாம்பூச்சி சிறகு போல் லேசாக இருந்து, புத்துணர்வுடன் உங்களை எழுப்பிவிடும், இல்லை என்றால் நீங்கள் சிரமப்பட்டு கனமான சோம்பல் உடலை தூக்க வேண்டியதாய் இருக்கும்.*

*இரவு 9 மணிக்கு மேல் கண் விழித்தால் உடல் கோளாறுகள் ஏற்படும் என்று உலகவல்லாதிக்க தீய சக்திக்கு நன்கு தெரிந்ததால் தான், இரவு 9 மணிக்கு மேல் மக்களை கவரும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகங்கள் ஒளி பரப்பப்படுகிறது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?*

*இரவு 9 மணிக்கு மேல் கண் விழித்தால் உடல் கோளாறுகள் ஏற்படும் என்று நன்கு தெரிந்ததால் தான் நம் நாட்டு இளைஞர்களை உலகவல்லாதிக்க நிறுவனங்கள் இரவு வேளையில் பணிக்கு அமர்த்துகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?*

*நம்மிடம் இருந்த அறிவுப் பேழையை உலகவல்லாதிக்க தீய சக்தி திருடிச்சென்று இப்பொழுது, அதை நம் மீதே ஆயுதமாக பயன்படுத்தி வருகிறான்.*

*இதேப்போல் இன்னும் இன்னும் பல சதித்திட்டங்கள் அழகாக அரங்கேற்றம் பெற்று வருகின்றன.*

*இளைய சமூகமே, சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை நீ அறியாமல் உன் உயிரை விற்று இரவு பணிக்கு செல்கிறாய் என்பதை எப்பொழுது உணரப்போகிறாய் ?*

*இரவு கண் விழித்திருப்பவரா நீங்கள் ? நீங்கள் காண்பது கடைசி காட்சியாக கூட இருக்கலாம் கவனம் !*

*இரவு விழிக்கும் கண் !*
.
*நாளை விழிக்காமல் போகலாம் !*

*உயிர் வாழ உறங்கிடு !*

*நன்றி*
.

உங்கள் நண்பன்..

😴😴😴😴😴😴😴😴😴😴😴😴
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹?

குமரியை வெல்ல குமரியை உண்க!

குமரியை வெல்ல குமரியை உண்க!

சோற்றுக் கற்றாழையை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர வயாகரா இன்றி இளைஞர்களின் இல்வாழ்க்கை அளவோடு சிறக்கும். இதைத்தான் சித்தர்கள் தங்களுடைய பரிபாஷையில் ‘குமரியை வெல்ல குமரியை உண்க’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

மகரி தேரையரின் பாடலில் செப்பிய
“பொல்லா மேகம் கபம் புல்  சூலை
குட்டம்  ரசம் அல்லார் மந்தம்
பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும் இவை
குமரிக்கு மருண்டு”

வியப்பூட்டும் கற்றாழை ரகசியம்

ஆரோக்கியம், அழகு என இரண்டு ஏரியாவிலுமே சொல்லி அடிக்கும் கில்லி என்று கற்றாழையைச் சொல்லலாம். சாதாரண உடல் சூட்டிலிருந்து புற்றுநோய் வரை அத்தனைக்கும் நிவாரணமாகும் திறன் கொண்டது கற்றாழை. இதன் அருமையை உணர்ந்த சித்தர்கள், நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உறுதுணையாகும் வகையில் காயகல்ப மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.கற்றாழையின் மருத்துவ மற்றும் வரலாற்றுச் சிறப்புகளைப் பற்றி விளக்குகிறார் சித்த மருத்துவர் வெங்கடேசன்.

உடலை உறுதியாக்கும் கற்றாழை!

உடலை உறுதியாக்கி நோய்களை அருகில் வரவிடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது கற்றாழை. இதை உணர்ந்துதான் சித்தர்கள் அதைக் கொண்டு காயகல்ப மருந்தாக செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள். நாமும் செய்து பின்பற்றக் கூடிய எளிய முறைதான் இது.
கற்றாழையின் உட்பகுதியில் உள்ள ஜெல் போன்ற பகுதியான சோற்றை எடுத்து 7 முறை நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அதை சிறுசிறு துண்டுகள் போன்று வெட்டி, அதன்மீது பனங்கற்கண்டு சிறிது தூவிக் கொள்ள வேண்டும். இதை மூன்றிலிருந்து ஐந்து ஸ்பூன் அளவில் பகல் நேரத்தில் மட்டும் ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.

உடல் குளிர்ச்சிக்குக் கற்றாழை !

வெப்பம் மிகுதியால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணியாக கற்றாழை உள்ளது. உடல் சூட்டைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கற்றாழை உதவுகிறது. சர்வரோக நிவாரணிநமது உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்குத் தேவையான 22 அமினோ அமிலங்கள் கற்றாழையில் உள்ளது.

வைட்டமின்கள் A, B1, B2, B3,B5, B6, B12, C, E, மற்றும் துத்தநாகம், செலினியம், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், குரோமியம், தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இதில் உள்ளன. பெருங்குடலை சுத்தம் செய்து, மலத்தை வெளியேற்றும் Aloin, Emodin போன்ற Anthraquinones என்கிற வேதிப்பொருளும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் Amylases, Bradykinases, Catalases, Phosphokinases போன்ற நொதிகளும், சருமத்தைப் பாதுகாக்கத் தேவையான Lignins போன்றவையும் உள்ளன.

கற்றாழையில் உள்ள Salicylic Acid மற்றும் Saponins, Sterols ஆகியவை புண்களை ஆற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இவை அனைத்தும் ஒருமித்த முறையில் செயல்படுவதால் கற்றாழையை சர்வரோக நிவாரணி என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

புற்றுநோய்க்குத் தீர்வு

ஆரம்பநிலை புற்றுநோய்களுக்கு கற்றாழை நல்ல தீர்வளிப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Acemannan இதில் உள்ளது. இதை பயன்படுத்தி தற்போது எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய்களுக்கான மருந்துகள் தயாரித்து அமெரிக்க நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருகிறது. ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; அழகுக்கும்!

பெண்களின் சரும பராமரிப்பில் தனிச்சிறப்பு பெற்றது கற்றாழை. சருமம் பளபளப்பாக இருப்பதோடு பல்வேறு சரும நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் கற்றாழை உதவுகிறது. சோற்றுக் கற்றாழையை வெட்டி எடுத்து, அதில் சிறிது மஞ்சள் பொடியைக் கலந்து குழைத்து, உடல் முழுவதும் தேய்க்க வேண்டும். அதன்பிறகு அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான சுடுநீரில் குளிக்க வேண்டும். இது போல் வாரத்துக்கு இரண்டு நாள் குளித்து வந்தால் பெண்களின் சருமம் மிளிரும். பேரழகி என்று வர்ணிக்கப்படும் கிளியோபாட்ரா சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தி தன்மேனி அழகை பாதுகாத்துக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.

மலச்சிக்கலுக்கு முழுமையான நிவாரணம்சோற்றுக் கற்றாழையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, ஆமணக்கு எண்ணெயில் கலந்து அத்துடன் சிறிது சின்ன வெங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி, லேகிய பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும். மலச் சிக்கல் ஏற்பட்டு அவதிப்படும்போது இதனை ஒரு ஸ்பூன் அளவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் முழுமையாக குணமாகும்.

கூந்தல் வளர்ச்சிதேங்காய் எண்ணெய், சோப்பு, ஷாம்பூ போன்றவை தயாரிக்கும்போது, அவற்றுடன் கற்றாழை கலக்கப்படுகிறது. கற்றாழை பால் எடுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து, முடி கருமையாக இருக்கவும், நன்கு வளர்வதற்கும் உதவுகிறது. 

புண்களை ஆற்றும் கற்றாழைகாயங்கள் ஏற்பட்டவுடன் கற்றாழையின் சோற்றை எடுத்து அதன் மீது தடவிவர கொப்பளங்கள் மறைந்து புண்கள் குணமாகும். அல்சர் என்கிற வயிற்றுப்புண், மூலநோய் போன்றவற்றுக்கும் சோற்றுக் கற்றாழை சிறந்த நிவாரணம். வாய்ப்புண் மற்றும் நாக்கில் ரணம் வந்து அவதிப்படுபவர்கள் கற்றாழையை வெந்தயப்பொடி கால் ஸ்பூனுடன் கலந்து சாப்பிட்டுவந்தால் புண்கள் ஆறும்.  அலெக்ஸாண்டருக்கு உதவிய கற்றாழை!

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களை வெற்றி கொண்ட பிறகு, அடுத்த போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் மாவீரன் அலெக்ஸான்டர். தொடர்ந்து போர்க்களத்திலேயே வீரர்கள் இருந்ததால் என்ன செய்வது என்று குழப்பம் அலெக்ஸாண்டருக்கு வந்தது.
உடனே தன்னுடைய குருவான அரிஸ்டாட்டிலிடம் ஆலோசனை கேட்டார்.

அப்போதுதான் சோற்றுக் கற்றாழையைத் தொடர்ந்து 15 நாட்கள் காயங்களின்மீது தடவி வந்தால், புண்கள் ஆறும் என்று ஆலோசனை கூறினார் அரிஸ்டாட்டில். கற்றாழையைப் பயன்படுத்தி வீரர்களின் காயங்களை குணமாக்கிய பிறகு மீண்டும் பழைய உற்சாகத்தோடு போருக்கு வீரர்களை அழைத்துச் சென்று மேலும் பல வெற்றிகளைப் பெற்றார் அலெக்ஸாண்டர்.

யார் சாப்பிடக்கூடாது?

கற்றாழை குளிர்ச்சியானது என்பதால் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் சோற்றுக் கற்றாழை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

வீட்டில் வளர்க்கும் முறை

கற்றாழை ஒரு செடி வைத்தால் அதனருகே சிறிய சிறிய செடிகளாக வளரக்கூடியது. இதுபோன்ற ஒரு சிறிய செடியை அடிவேருடன் எடுத்து சின்ன சின்ன தொட்டிகளில் வைத்து வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். தோட்டங்கள் போன்ற மண் தரையில் ஒரு இடத்தில் ஒரு செடியை வைத்து நீரூற்றி வந்தால், பக்கத்திலேயே அடுத்தடுத்து சிறுசிறு செடிகளாக வளர்ந்து பல்கிப் பெருகக்கூடியது கற்றாழை.

“பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை”
.
   இதற்கு தழிழ் மெய் உலகம் பல்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இதை உணர்து இத்தாவரத்துக்கு “குமரி” என பெயர் இயம்பி இழமையை நிலைத்து முதுமையை விரட்டிடும் அற்புதமுகிலிகையாக இயம்பியிருக்கின்றது. மானிடப் பிறவியின் அர்த்தம் புரிந்து மானிடர்க்காக வாழ்ந்த சித்தார்கள் இதை புரிந்திருந்தனர். அனுபவ அறிவால் நுன்மதி நுளை புலத்தால் அவர்களின் தெய்வீக அற்றலால் வெளிப்படுத்தினர்.
     தேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் குமரியின் மருத்துவ பண்பை “பொல்லா மேகம் கபம் புல் சூலை
குட்டம் ரசம் அல்லார் மந்தம்
பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்
குமரிக்கு மருண்டு” என கூறுகிறார்

1.“பொல்லா மேகம்”: இது சக்கரை நோயைக் குறிக்கின்றது. இதனை மேகத்துக்கு ஒப்பிடுகின்றார். மேகமானது தோன்றி மறைவதுடன் திரும்பத் திரும்ப தோன்றுவதும் மேகங்கள் உயர்வதும் தாழ்வதும் அதன் இயக்கையான குணமாமும் இதையொத்த பண்புடையது சக்கரை நோயாகும். இன் நோயைப் போக்கும் தன்மை குமரிக்கு உண்டு.
2.“கபம்”: கபம் என்பது நாசி, தொண்டை, நெஞ்சிப்பகுதியில் சளி கட்டி உடலை உபாதைக்குட்படுத்தும். இதனை கிராமப்புறங்களில் சளிபிடித்தால் சனிபிடித்தமாதிரி என்று இயம்புவதுண்டு அவ்வளவு அவத்தைப்பாடுத்தும். கண்டத்தில் கபம் கட்டி சுவாசத்தை தடை செய்து உடல் இயக்கத்தை நிறுத்தக்கூடிய தன்மையானது கபம். நெருப்பெரிய ஒட்சிசன் தேவை ஒட்சிசன் இல்லாவிட்டால் நெருப்பு அனைந்து விடும். இது போன்றே பிரபஞ்கம் இயங்க பிராணவாயு தேவை. அதுபோன்று உடல் இயங்க ஆத்துமா வாகிய அக்கினி பிரகாசிக்க வேண்டும். அதற்கு பிராணவாயு கண்டத்தின் வழியாக செல்ல வேண்டும். அதை கபம் தடைசெய்யும் இச் சந்தர்ப்பாத்தில் வாயால் சுவாசிக்க நேரும் இதனை “மோவாய் சுவாசம்”என்பர். இது போன்று ஒரு மனிதன் இறப்பதற்கு முன்னர் சுவாசம் நெஞ்கிப்பகுதிக்கு மேல் சுவாசம் இழுத்துக் கொண்டு இருக்கும் இதனை “சேப்பம் கட்டி இழுக்குது” என்பர். சேப்பம் என்பது கபம் இறுதியாக உடலிலிருந்து உயிரை பிரிக்க கபம் உதவுகின்றது. அப்படிபட்ட கபத்தை இல்லாமல் செய்யும் ஆற்றல் குமரிக்குண்டு.
     குமரி குளிர்த்தன்மையானது. இது கபத்தை உருவாக்கக்கூடியது எனலாம். இதன் தன்மை கபத்தை இல்லாமல் செய்துவிடும் தன்மையுள்ளது. ஆரம்பத்தில் சளியை ஏற்படுத்தி பின்னர் தெடர்ந்து உண்டுவர நோய் எதிப்புச் சக்தியை உருவாக்கி கபத்தை அடியோடுடொலித்து விடும் சக்தி பெற்று விடும் குமரி.  குமரியைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை பொதுவாக கபத்தினால் உண்டாகும் அஸ்டுமா,கடுமையான ஜலதோம், சைனஸ் வருத்தங்கள் உள்ளவர் நிதானத்துடன் தவித்துக் கொள்வது நன்று. பொதுவாக குளிர்சியைத் தரும் தன்மை குமரிக்கு உண்டு. அதேவேளை சளியைத் தடுக்கும் வல்லமையும் குமரிக்கு உண்டு. சிறிது சிறிதாக நாளுக்கு நாள் உணவாக சேர்த்து வர காலப்போக்கில் நோய்எதிப்பு சத்தியைப் பொற்று விடும் உடல் அதன் பின்னர் கபம் தனது சக்தியை இழந்து விடும். வயதானவர்களுக்கு மார்புப் பகுதியில் கபம் கட்டுவது இயல்பு இதனால் உடல் நல்ல திடகாத்திரத்தை இழந்து விடும் அச்சந்தப்பத்தில் குமரியை உணவாக்கி  திடகாத்திரத்தைப் பெறமுடியும் எனவே குமரி ஓர் காயகற்ப முகிலிகையாகும.;
3.“புல் சூலை”: உடலில் குடலில் புழுக்கள் ஒட்டுண்ணியாக இருப்பது உடலில் உள்ள சத்துப்பொருட்களை உறுஞ்சி குடித்து தேகாரோக்கியத்தை இழக்கச் செய்வது இயல்பு பல்வேறு நோய்களை ஏற்ப்படுத்தும். இப்படிப்பட்ட புழுக்களை அகற்றும் ஆற்றல் குமரிக்கு உண்டு.
4.“சூலை”: சூலை என்பது கணுக்களில், கபாலத்தில்,வயிற்றில், குடலில் வரும். கணுக்களில் வரும்போது கணுச்சூலை என்றும் கபாலத்தில் ஏற்படுகின்ற போது கபாலைச்சூலை அல்லது சிரசூலை என்றும் குடலில் வருகின்ற போது குடல்சூலை என்றும் இரைப்பையில் வருகின்ற போது சூலை நோய் என்றும் குறிப்பிடுகின்றனர். சூலையின் வேதனை சூலத்தால் குத்துவதை ஒத்தவலியை போன்றது. இது உஸ்னத்தால் உண்டாவது இதை தடுக்கும் ஆற்றல் குமரிக்கு உண்டு. சங்கால இலக்கியம் குமரியின் தன்மையை “குமரியின் சாற்றை உண்டு குடல் புண் ஆறக்கண்டேன்” என்று கூறுகின்றது. கருக்குடலில் இருக்கும் பினிகளுக் கெல்லாம் அருமருந்து குமரி 
5.“குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் குமரிக்குண்டு.
6.“ரசம்”: எலும்பு மச்சையை ரசம் என்று அழைப்பதுண்டு எலும்பு மச்சையில் உள்ள சத்துக்கள் குன்றிப்போனால் சிவப்பணுக்களின் உற்பத்தி தடைப்படும் இதன் விளைவால் இரத்தத்தை நரம்பு வளியாக இலுத்துக் செல்லும் பிராணவாயுவின் அளவு குறைவடைந்து நாம் செயல்படும் செயலாற்றல் குறைவடையும் இதனால் இளமையில் முதுமையை எதிர் நோக்க விளையும் அத்துடன் வெளுப்பு நோய்க்கு ஆட்படுவோம். இன்நிலையிலிருந் எம்மை காக்க குமரி ஓர் அருமந்தாகும். இது சிவப்பணு உற்பத்தியை அதிகரித்து எம்மை பலமிக்தாக்கும் தன்மை குமரிக்கு உண்டு.

7.“மந்தம்”: மந்தம் என்பது ஐPரணக்குறைபாடு இயல்பான வேகத்தில் குறைபாடு இதனால் ஏற்படும் அஐPரணம் வயிற்று பொருமலாக இருக்கும் இதன் மூலம் உடலில் அமிலம் சுரந்து அசாதாரன நிலையை ஏற்படுத்தும் இவ்வாறன நிலையிலிருந்து குமரி எம்மைப் பாதுகாக்கும்.
8. “பகம் தரும்”: பகர்தரும் என்பது ஆசன வாசலில் ஏற்படும் புண்ணும் சீளுமான நிலை இதை வயல் வெளியில் சேறும்சகதியுமாக இருக்கும் நிலைக்கு ஒப்பிடுவர். இது மூலநோயின் ஒருவகை இதனால் குத்துகின்றது போன்ற வலியும் எரிச்சலும் கடுப்புடண் கூடிய வலியும் ஆசனவாசலால் இரத்தக்கசிவுள்ள பல பண்புகளைக் கொண்ட மூலரோகம் உழையும் மூலரோகம் எனப்படும். மூலநோய் என்பது பலவகை உண்டு உள்மூலம், வெளிமூலம், உதிரமூலம், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயில் திறவு இன்னுமோர் மேலதிக பாதை போல் தோன்றும் இயல்பு இதை பவித்திரம் என்பார்கள்  இதனை போக்க வவ்லது குமரி.
9.“குன்மம் எல்லாம் விட்டு ஏகும்”: அஜினத்தால் ஏற்படும் நோய் குன்மம் இப்படிப்hட்ட நோய்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிடும் எனக்குறிப்பிர்வதுடன். 
10. “அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்”: கிரிச்சரம் என்பது  சிறுநீர்த்தாரையில் சிறுநீர் வரும் பாதையில் அரிப்பும் எரிச்சலும் இருந்து அளொகரியத்தை ஏற்படுத்துகின்ற நீர்த்தாரை நோய் இதற்கு குமரி அருமருந்து .      
பயன் படுத்தும் முறைகள்:
       சோற்றுக்கற்றாழை(குமரி)யின் தொலை நீக்கி சோற்றை எடுத்து அதை ஏழு முறை சுத்மான நீரில் திரும்பத்திரும் புதிய புதிய நீரினால் கழுவி சுத்தம் செய்து அதிலுள்ள அலோயின் என்ற சத்தை நீக்கிவிட வேண்டும். இது கொளுகொளுப்பாக இருக்கும் இதை நீக்கியபின் மருத்து உயயோகத்துக்கு உகந்தாக அமையும். தாழையின் மடலைத் தெரிவு செய்கையில் பின்வரும் விடையங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. கற்றாழை மரத்தின் முதிர்வு ஆகக்குறைந்தது ஒன்றரைவருடத்தை பூர்திசெய்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் முழுமையான மருத்துவ பண்புகள் நிறைந்தாக இருக்கும். வேதியல் மூலக்கூறுகளை முழுமையாக பெற்றிருக்கும்.
2. தாழை ஓலை மரத்திலிருந்து வெட்டி எடுத்து அரைமணித்தியாலத்;துக்கும் ஒரு மனித்தியாலத்துக்கும் இடையில்  தோலை நீக்கி சுத்தம் செய்தல் உத்தமம். ஆனாலும் நான்கு மணித்தியாலத்துக்கு மேல்படுதலாகாது.

3. இவ்வாறு எடுத்து கொள்வதன் நோக்கம் உடலில் சத்து பொருளைகளை படிப்படியாக சேர்த்துக் கொள்வதே இதன் நோக்கம் இப்படி முறையான செயல் பாட்டுக்கு காரணமாகும்.
4. ஏக்கனவே கபம் அதிமாகி இளை நோய்க்கு ஆளானவர்களும் பினிச நோக்கு ஆளானவர்களுடம் வைத்தியரின் ஆலோசணையுடன் குமரியை உபயோகித்தொடங்குவது சிறந்தது. உகயோகிப்பதானால் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ஆலோபதி மருந்துடன் சேர்த்து பயன்படுத்தி காலப் போக்கில் ஆலோபதி மருந்துகளை நிறுத்திக் கொள்ள முடியும். பொதுவாக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளல் நன்று.
5. முதுமையால் உண்டாகும் மூட்டுவலி முட்டிவலி மூட்டுக்களில் வழுவின்மை போன்ற நோய்களுக்கு குமரியை தோலுடன் இரண்டு சதுரடி அளவு எடுத்து அதனுடன் இஞ்சி, மஞ்சல் சமனிடை சேர்த்து விழுது போல் அரைத்து சாதுவாக சூடாக்கி மூட்டுகளில் பற்றுப்போல் நன்றாக பூசி காயவிட மூட்டுவலி, வீக்கம் என்பன நீங்கி சுகம் பெறலாம். இது போன்று காலை மாலை பற்றிடலாம். 
      குமரி குளிர்மையானது  இதை பாவிக்க ஆரம்பிக்கும் போது இது முதலில் கபத்தை உருவாக்கி பின்னர் எதிப்புச் சத்தியை உடலில் ஏற்படுத்தி உடலை கபத்திலிருந்து காத்து ஸ்திரப்படுத்தும்.