Thursday, 28 February 2019

ஒரே மருந்து!!!

பல நோய்களுக்கு தீர்வாகும் ஒரே மருந்து!!! என்ன மருந்து அது?
ஒரு நோய்க்கே மருந்து சொன்னாலே மகிழ்ச்சியடையும், ஒரே மருந்தில் பல நோய்களுக்கு தீர்வாகும் மருந்து இருந்தால் எப்படி இருக்கும். அதுபோன்ற, ஒரு மருந்தைப்பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
* வெந்தயம். – 250gm
* ஓமம் – 100gm
* கருஞ்சீரகம் – 50gm
* மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.
இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.
1. தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.
2. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
3. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.
4. இருதயம் சீராக இயங்குகிறது.
5. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.
6. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.
7. எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.
8. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.
9. கண் பார்வை தெளிவடைகிறது.
10. நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.
11. மலச்சிக்கல் நீங்குகிறது.
12. நினைவாற்றல் மேம்படுகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
13. பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.
14. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.
15. ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.
16. நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.
17. இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது...

தேனின் மருத்துவ குணங்கள்

சித்த மருத்துவம் - தேனின் மருத்துவ குணங்கள்

தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

கண் பார்வைக்கு

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

இரத்த கொதிப்பு

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

இதயத்திற்கு டானிக்

அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.

2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.

3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.

கேழ்வரகு இட்லி தினம் ஒரு சிறுதானியம்..!

கேழ்வரகு இட்லி (தினம் ஒரு சிறுதானியம்..!
ஆவியில் வேகவைத்துச் சாப்பிடும் எந்த உணவுமே, உடலுக்கு நன்மையைத் தரக்கூடியதுதான். அதிலும், கேழ்வரகில் செய்யும் இட்லி, உடலுக்கு ஊட்டத்தைத் தரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.
கேழ்வரகு இட்லி
செய்முறை: தலா 200 கிராம் கேழ்வரகு, இட்லி அரிசி எடுத்துக் கொள்ளவும். இதனுடன், 100 கிராம் பச்சரிசி சேர்த்து, நன்றாகக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். 400 கிராம் உளுந்தைத் தனியாக ஊற வைக்கவும். ஊறிய உளுந்தில் தண்ணீர் தெளித்து அரைக்கவும். அரிசியையும் கேழ்வரகையும் அரைத்து எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, இட்லி தட்டில் மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.
பலன்கள்
கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், வயதானோர் என அனைவரும் சாப்பிடலாம்.

Wednesday, 20 February 2019

இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்

இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்