Tuesday, 15 October 2019
வாழ்வியல் ரகசியங்கள்
Thursday, 10 October 2019
வெளியில் சாப்பிடப் போகிறீர்களா?!
வெளியில்
சாப்பிடப் போகிறீர்களா?!
வெளியிடங்களில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று தெரிந்தாலும் பலராலும் அதைத் தவிர்க்க முடிவதில்லை. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் வெளியில் சாப்பிட நேரும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்...
மெனு கார்டைப் படியுங்கள்...
மெனு கார்டில் உள்ள ஐட்டங்களை முழுமையாகப் படியுங்கள். அதிக எண்ணெய் அல்லது கொழுப்பு சேர்த்த உணவுகளாகத் தெரிந்தால் அவற்றைத் தவிருங்கள். நீங்கள் ஆர்டர் செய்யும் உணவுகள் எத்தனை கலோரிகள் கொண்டவை என்பதையும் ஆராயலாம். அந்த உணவு எப்படிப்பட்டது என்று கணிக்க முடியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் கேட்டுத் தெளிவு பெறலாம். இதெல்லாம் சாத்தியமில்லை என்று நினைத்தால் ஏற்கனவே உங்களுக்குப் பரிச்சயமான, ஆரோக்கியமானது என நீங்கள் நம்பும் உணவை ஆர்டர் செய்து சாப்பிடவும்.
சாப்பிடுவதற்கு முன் சாப்பிடுங்கள்...
ஹோட்டலில் அல்லது பார்ட்டியில் சாப்பிடுவது என முடிவாகி விட்டதா? வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பே கொஞ்சம் நட்ஸ், பழங்கள் போன்று எதையாவது சாப்பிட்டு விட்டுக் கிளம்புங்கள். வெளியிடத்தில் நீங்கள் உங்களையும் அறியாமல் அதிகம் சாப்பிடுவதை இது தடுக்கும். ஹோட்டல் அல்லது பார்ட்டியில் சூப், சாலட், கொண்டைக்கடலை அல்லது பழக்கலவை போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடியுங்கள்....
அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைப்போரும் பின்பற்றும் பிரபலமான டெக்னிக் இது. சாப்பிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். தண்ணீரில் கலோரி கிடையாது. ஆனாலும் அது வயிற்றை நிரப்புவதோடு குடலை சுத்தப்படுத்தும் கிளன்சராகவும் செயல்படும்.
இனிப்புகளைத் தவிருங்கள்...
ஃபுல் மீல்ஸ் அல்லது பஃபே சாப்பிட்டவுடன் கடைசியாக விதம்விதமான இனிப்புகளையும், ஐஸ்கிரீம் வகைகளையும் சாப்பிடுவது சில வருடங்களாக பழக்கத்தில் இருக்கிறது. ஆனால், இது மிகவும் மோசமான ஒன்று. வயிறு நிறைய உணவு உண்ட பிறகு கூடுதலாக இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடலில் வயிறு,இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளைச் சுற்றி கொழுப்பு சேரக் காரணமாகி விடும். எனவே, கூடிய வரையில் உணவுக்குப் பிறகு அல்லது உணவுடன் சேர்த்து இனிப்புகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நாவை அடக்க முடியாது, இனிப்பு சாப்பிட்டே ஆக வேண்டும் என நினைப்பவர்கள் மெயின் கோர்ஸ் உணவுகளைத் தவிர்க்கலாம்.
ஆப்பிள் சிடர் வினிகர் குடியுங்கள்..
ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடியுங்கள். வெளியில் சாப்பிடப் போவதற்கு முன் இதை முயற்சி செய்தால் உணவுகளின் மீதான தேடல் குறையும். ரத்த சர்க்கரை அளவையும் குறைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
பஃபே சீக்ரெட்ஸ்...
பஃபே சாப்பிடச் செல்லும் போது சூப், ஸ்டார்ட்டரில் தொடங்கி பிறகு மெயின் கோர்ஸ்க்குச் செல்வது வழக்கம். ஸ்டார்ட்டரில் பெரும்பாலும் பொரித்த, வறுத்த உணவுகள் அதிகம் இருக்கும். அதை அடுத்த மெயின் கோர்ஸிலும் கலோரி அதிகமான உணவுகள் அடுக்கப்பட்டிருக்கும். இவை எல்லாவற்றையும் ருசி பார்க்க ஆசைப்பட்டு தட்டு நிறைய எடுத்து வந்து திணறத் திணற சாப்பிடுபவர்கள் பலர். இவற்றையெல்லாம் முடித்து விட்டு கடைசியாக டெசர்ட் செக்ஷனுக்குச் செல்வார்கள்.
இதைத் தவிர்க்க சாலட் வகைகளிலிருந்து உங்கள் பஃபேவைத் தொடங்கலாம். அதுவே ஓரளவு பசியைக் குறைத்து விடும். பிறகு கொழுப்பில்லாத ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். இது எதுவுமே முடியாது என்பவர்கள் பஃபே சாப்பிட்ட அடுத்த சில வேளைகளுக்கு பச்சைக் காய்கறிகள், பழங்கள் என கலோரி குறைவான உணவுகளை சாப்பிட்டு ஏற்கனவே சாப்பிட்ட உணவுகளின் பாதிப்பிலிருந்து மீளலாம்.
உணவுடன் வேண்டாமே பானங்கள்....
ஃபுல் மீல் சாப்பிட்டு முடித்த பிறகு சிலருக்கு காப்பியோ, டீயோ குடித்தால் தான் நிறைவு கிடைக்கும். இன்னும் சிலருக்கு உணவுடன் சேர்த்து கார்போனேட்டட் பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு வழக்கங்களுமே தவறானவை. இவை இரண்டுமே நீங்கள் ஏற்கனவே உட்கொண்ட உணவுகளில் உள்ள சத்துக்களை உடல் கிரகிக்க விடாமல் செய்து விடும். இவற்றிலுள்ள சர்க்கரை உடல் பருமனுக்கும் வழிவகுத்து விடும். செரிமானத்திலும் பாதிப்பு ஏற்படும்.
Thursday, 3 October 2019
வெங்காயத்தின்_பலன்
#வெங்காயத்தின்_பலன்.........
வெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைத்த ஏழை குடும்பத்தினால் ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்....
பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம்.
இந்த வெங்காயத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மாற்றமடைந்ததாக இல்லை என்பது தான் உண்மை.
இந்த பகுதியில் வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்.
1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்தனர்.
இது எந்த விதமான நோய் என்றும், இதற்கு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றியும் யோசித்து வந்தனர். அந்த சூழ்நிலையில் ஒரு ஏழை விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த ஆரோக்கிய சீர் கேடுகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது.
எப்படி இருந்தாலும் இவரது குடும்பத்தினக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் எப்படி இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியம் என்று மருத்துவர்கள் சிந்தித்தனர்.
மற்ற குடும்பத்தினரை விட இவர்கள் எந்த விதத்தில், வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள்.
ஒரு முறை அந்த ஏழை விவசாயின் வீட்டிற்கு சென்று, நீங்கள் மற்றவர்களை விட எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் அந்த விவசாய குடும்பத்திற்கு ஒன்றும் தெரியவில்லை.
பின்னர் மருத்துவ ஆய்வாளர்கள் அவர்களது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகளை கண்டனர். இது எதற்கு என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் நாங்கள் நீண்ட நாட்களாக நாங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் வெங்காயத்தை இரண்டு தூண்டுகளாக அரிந்து வைத்து, காலையில் அதனை எடுத்து வெளியே எடுத்து எரிந்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.
ஆச்சரியம்!
பின்னர் மருத்துவர் ஒருவர் அந்த வீட்டில் இருந்த வெங்காயத்தை எடுத்து சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் ஒரு ஆச்சரியமான உண்மை வெளிப்பட்டது.
அந்த அரிந்த வெங்காயத்தில் எக்கச்சக்க பாக்டீரியாக்கள் இருந்தன. அந்த மருத்துவ ஆய்வாளர்கள், வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து, ஆய்வு செய்ததில், அந்த வெங்காயமானது அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றை ஈர்த்து தன்னுள் வைத்து கொள்வதாக தெரிய வந்தது. இதனால் தான் அந்த விவசாயின் குடும்பம் ஆரோக்கியமாக இருந்ததும் தெரிய வந்தது.
இதனை பயன்படுத்திய சிலரும் தான் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். தினமும் இரவு உறங்கும் போது, எனது படுக்கை அறையில், படுக்கைக்கு அருகில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து படுத்து உறங்குவேன்.
இதனால் சில நாட்களிலேயே நான் எனது நோயில் இருந்து விடுபட்டேன், நான் காலையில் எழுந்து பார்க்கும் போது நான் அரிந்து வைத்த வெங்காயமானது கருப்பு நிறத்தில் மாறியிருக்கும், அதனை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த கருப்பு நிறமானது, எனது உடலில் இருந்து கிருமிகளை வெங்காயம் ஈர்த்து விட்டது என்பதை குறிக்கிறது என்பதை அறிந்தேன், எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நோய் குணமானது.
பயன்படுத்தும் முறை
நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன்னர், பெரிய வெங்காயத்தை இரண்டாக அரிந்து, உங்களது தலை மேட்டில் வைத்து உறங்குவதால், அது அந்த அறையில் இருக்கும் அனைத்து தீய பாக்டீரியாக்களையும் ஈர்த்து தன்னுள் அடங்கிக் கொள்ளும். நீங்கள் இதனை காலையில் எடுத்து வெளியில் எரிந்து விட வேண்டும்.
குறிப்பு
நாம் பெரும்பாலும், பாதி வெங்காயத்தை உணவு சமைக்க பயன்படுத்தி விட்டு மீதி வெங்காயத்தை மறுமுறை உணவு சமைக்கும் போது பயன்படுத்துவது உண்டு.
ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். நீங்கள் அரிந்து வைத்த வெங்காயத்தை அரை மணி நேரத்திற்குள் கட்டாயம் பயன்படுத்தி விட வேண்டியது அவசியம்.
அவ்வாறு இல்லை என்றால், வீட்டில் உள்ள தீய பாக்டீரியாக்கள் வெங்காயத்தினுள் புகுந்து விடும். இதனை நீங்கள் உபயோகப்படுத்தினால், உணவுப் பொருள் ஒவ்வாமை ஏற்படும்.
இது உடலுக்கு மிகவும் தீங்கானது. மீஞ்சிய வெங்காயத்தினை பாலித்தின் பைகள் அல்லது பிளாஸ்டிக் சாமான்களினுள் அடைத்து, அதனை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தாலும் கூட இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
Wednesday, 2 October 2019
வயதை கடந்தும்
35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள் !...
30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.
இதற்கு சொத்து மதிப்பே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 5 அல்லது 10 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும்.
அவரே Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.
குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.
பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுய தொழில் செய்து வருகின்றனர்.
சுய தொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவது இல்லை.
பெண் வீட்டாரும் விரும்புவது இல்லை.
வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் !!.
அப்புறம் இதெல்லாம் இருந்தால் தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா அவர்கள் போல் இருக்க வேண்டும் !.
1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துதான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது.
இதில் இப்போ என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிகமாக இருப்பதுதான் !!
ஒரு கட்டத்தில் ஜாதக பொருத்தமும் திருமண தடங்கலாக இருந்து வருகிறது.
சரி,
இதன் விளைவு என்ன என்று பார்ப்போமா ?!.
1947 ஆண்டுக்கு முன் 13 - 15 வயதுக்குள் திருமணம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை. ஒரு டஜன் குழந்தைகள். ஒவ்வொருவரும் இந்த குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள். பெண்ணின் வேலையே பெற்ற பிள்ளை, குடும்பத்தோடு கொஞ்சி மகிழ்வதுதான்.
தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்பும் இல்லை. தேவையும் இல்லாத மன நிலை.
1960 ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலருக்கு 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் என சர்வ சாதாரணமாக பெற்றுக் கொண்டார்கள். நிலை தொடர்ந்தது.
1980 ஆண்டுக்கு பின் 100ல் 80 குடும்பம் இரண்டு குழந்தைகள், எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு. விளம்பரமும் நாம் இருவர் நமக்கு இருவர் என்று சாக்கிய சதி வெளிப்படையாக பிரச்சாரம் செய்தது.
2000 ஆண்டுக்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறி விட்டது. நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற சதிப் பிரச்சாரம். ஒற்றை குழந்தையின் வளரும் மன நிலை எப்படி இருக்கும் !!
ஆனால் 2010 ஆண்டுக்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை என்ற நிலையில் உள்ளனர்.
இதற்கு அறிவியல் ஆயிரமாயிரம் காரணங்களை சொல்லலாம்.
ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்.
1960 ஆண்டு வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம்
உணவு: ராகி, கம்பு, சோளம்,குதிரைவாலி,வரகு,கருப்புக் கொள்ளு,கருப்பட்டி...
1975 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22.
உணவு: ஐ.ஆர் அரிசி
1992 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25
உணவு: பட்டை தீட்டப்பட்ட டபிள் பாலீஷ் அரிசி.
2000 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்..
உணவு: துரித உணவு.
2010க்கு மேல்
உணவு: மைதா மாவில் தயாரித்த கேவல உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம். தரம் குறைந்த எண்ணெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மை தாக்கத்தில் இருக்கிறோம்.
இந்நிலையில் 28க்கு மேல் 35 வயது வரையிலும் திருமணம் ஆகாமல் பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.
ஆண்கள் 30 வயது முதல் 40 வயது வரை திருமணம் ஆகாமல் உள்ளார்கள்.
வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.
திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ் பெற்ற மனிதர்கள் ஏராளம். முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் எத்தனையோ அதிகம் பேர்.
எனவே, வரும்காலம் இப்படிதான் இருக்கும் என்று நீங்கள் தீர்மானம் செய்யாமல் இறைவனை முழு மனதாக வேண்டி நல்லதை நினைத்து மனங்கள் பிடித்தால் பாசத்தோடு வளர்த்த பெற்றவர்களுக்கு துரோகம் செந்யாமல் திருமணம் செய்யலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக மாடு வளர்த்தால் கேவலம்.
பால் கறந்தால் கேவலம்.
மரம் வளர்த்தால் கேவலம்.
விவசாயம் செய்தால் கேவலம்.
இது நம் வாழ்வியல் என்பதை சுலபமாக மறந்து விடுகிறோம்.
ஐடி தொழில் போகிறோம்.
கலாச்சாரம் மாற்றப் படுகிறது.
தவறுக்கு சுய அறிவு இல்லாத இன்னொருவனிடம் கை கட்டி நிற்கிறோம்.
இஷ்டம் இல்லாத பல நிலையை கடந்து பணம் சம்பாதிக்கிறோம்.
ஒரு கட்டத்தில் வெளியே போக சொல்கிறான்.
வாழ்வை தொலைக்கிறோம்.
இது எல்லாமே நம் நிஜ வாழ்வியலை கேவலம் என்று நாம் தொலைத்ததால் வந்த வினைதானே!.
துபாய் போகிறேன் என்பான்.
அவன் என்ன வேலை செய்வான் என்று அவனே வெளியில் சொல்ல முடியாது.
ஆனால் தான் உபயோகிக்கும் பாத்ரூமை சுத்தப் படுத்த தயங்கியவனாகவே கடைசி வரை வாழ்ந்து சாகிறான்.
நம் வீடு, நம் குடும்பம், என் தோட்டம்,என் மாடு, என் சாமி, என் கலாச்சாரம், என் தெய்வம்,என் பண்பாடு, என் மண்,என் ஊர் ,என் தேசம் என்று ஒற்றுமையில் துண்டாடப்பட்டு உடைகிறானோ அன்றே தொலைகிறான்.
ஆண் 20,21 தாண்டிய உடன், பெண்கள் 17,18 வயதில் திருமணம் செய்து விட வேண்டும்.
நான் சம்பாதித்தால்தான் திருமணம்.
எனக்கு வெள்ளை மாப்பிள்ளை வந்த பிறகுதான் திருமணம் என்று எதையாவது கற்பனை செய்து பொன்னான காலத்தை தொலைத்தால் பொன்னான குழந்தைச் செல்வம் இருக்காது.
கஷ்டம் என்பது தவறு அல்ல.
அது வாழ்க்கைக்கு தேவை.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் அதற்கு பணம் தேவைதான். ஆனால், பணத்தால் வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.
சரியான கல்வி அறிவு, நல் ஒழுக்கம், நற்குணம், நல்ல சுறுசுறுப்பு, உழைக்கும் மனப்பான்மை உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து திருமணம் முடியுங்கள்.
நான் 21 வயது ஆன உடன் எனக்கு கல்யாணம் பண்ணுங்க என்று என்று என் அப்பா தியாகி S.T.ஆதித்தனார் அவர்களிடம் பிடிவாதம் பிடித்து 1982 ஆண்டு 21 வயதில் திருமணம் செய்து கொண்டேன். அந்த வயது ஆசை அடங்கிற்று. தேவையற்ற சபலமும் தொலைந்து போயிற்று.
10 பைசா வருமானம் கிடையாது.
குழந்தைகள் உருவாகத் தொடங்க தொடங்க பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு 24 வகையான தொழில்களை செய்தேன்.
கடனும் ஆனது.
ஆனால் முயற்சி மட்டும் தொலையவே இல்லை.
25 வது தொழில் செய்தேன்.
வென்றேன்.
நில புலன்களை அடைந்தேன்.
எனது 52 வயதிற்குள் 4 பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தேன்.
தொழிலில் பயிற்சி பெற்றேன்.
அடுத்தவரின் கையை எதிர்பாராது அரசியலில் பயிற்சி பெற்றேன்.
பொது வாழ்வில் தேர்ச்சி பெற்றேன்.
இயற்கை விவசாயம் செய்கிறேன்.
உங்களோடு வெளிப்படையாக வாழ்கிறேன்.
முடி மட்டும்தான் போச்சு.
உணவே மருந்து என அலோபதி பக்கமே 33 ஆண்டு அனுபவம் என்பதால் இன்னும் இளைஞன்தான்.
காரணம் அனுபவம்.
அத்தனையும் ஒரு பெண்ணே வாழ்க்கையில் கொண்டு வந்து விட்டால் ஆணே உனக்கு என்ன வேலை!!.
அது ஆண் மகனுக்கும் அழகு அல்ல.
அது அந்த பெண்ணுக்குமே சுவாரஸ்யம் இருக்காது.
அன்றும் இன்றும் என் உழைப்பில் நான் வாழ்கிறேன்.
என்றும் அது என் பணமாக மட்டுமே இருக்கும்.
எனக்கு சொத்து உள்ள பொண்டாட்டிதான் வேண்டும் என்றால் அதை விற்றே என்றோ தொலைந்து இருப்பேனே!!.
பெண்களே உங்களுக்கு தெய்வ நம்பிக்கையும், அன்பும்,அறிவும் இருந்தால் கட்டாயமாக உங்கள் கணவனோடு சேர்ந்து முன்னேறி விடுவீர்கள். பல குழந்தை பெற்று சிறப்போடும் இருப்பீர்கள்.
ரொம்ப கணக்குப் போட்டாலும் ஆண்டவன் போடும் கணக்கு வேற மாதிரிதான் இருக்கும்.
அப்பா சம்பாதித்து கொடுக்கும் பிள்ளைக்கு பெரிய அனுபவம்,நம்பிக்கை இருக்காது.
அதே நேரத்தில் அவள் வீட்டில் கார் கிடைக்குமா பவுன் கிடைக்குமான்னு பேயா அலையாமல் நம்ம குணத்துக்கு ஒத்து வருவாளான்னு பார்க்கும் ஆம்பளையா ஆண் வாழ வேண்டும்.
வாழும் வாழ்க்கையில் மனது ஒத்து போகிறதா பாருங்கள்.
வாழும் சிறந்த வயதை தொலைக்காதீர்கள்.
தெய்வ நம்பிக்கை ஒன்றை மட்டும் அசைக்க முடியாத அளவு நிலையாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை இனிமை ஆகியே தீரும்.
வாழ்க்கையில் கடைசி வரை ஏதாவது கடன்,ஏதாவது பிரச்சனை இருக்கும்.
எல்லாவற்றையும் முடித்து விட்டுதான் திருமணம் என்றால் வாழும் கலம் தொலைந்து போகும்.
வாழ்க்கை வாழ்வதற்கே.
தட்டிக் கழிக்க அல்ல.
வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா
கட்டாயமாக பகிர வேண்டுகிறேன்.