Wednesday, 22 July 2020

எலுமிச்சை


எலுமிச்சை - எல்லா பழங்களையும்
எலி கடித்து விடும் .. ஆனால் ., எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது .

எலி மிச்சம் வைத்ததால் தான்
எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம்
என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம்.

இது சிட்ரஸ் லிமன் (Citruslimon) என்னும் அறிவியல் பெயர் கொண்டது.

எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.

இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன் படுத்துகிறார்கள்.

இதன் தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.

100 கிராம் எலுமிச்சை பழத்தில்
உள்ள சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி

இதிலுள்ள அதிகமான வைட்டமின்
'சி' சத்தும்,

ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.

எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.

வாந்தியா? எலுமிச்சைச் சாறுடன்,
இஞ்சி சாறு, சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல்,
ஏப்பம், வயிறு உப்புசம் குறையும்.
ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.

கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த
டானிக் எலுமிச்சை.

பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.

சருமப் புண்களுககு ஆன்டிசெப்டிக்காக
பயன்படுகிறது. எலுமிச்சைச் சாற்றை
முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.

பாலேட்டுடன் எலுமிச்சைச் சாறு
கலந்து முகத்தில் தடவினால் சரும
நிறம் பளிச்சிடும்.

தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.

பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.

இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.

மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.

இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.

காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின்
போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை
நீக்கப்பெரிதும் உதவுகிறது.

சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.

தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.

சிறிய பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.

இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.

தேள் கொட்டினால், அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக
நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க
விஷம் இறங்கும்.

தலைவலிக்கு கடுங்காபியில்
எலுமிச்சையின் சாற்றை கலந்து
கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.

எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.

அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,

மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி, அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில்
2 நாள் ஊற வைத்து, பின் அந்த
சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும்.

நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.

நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த
அழுத்தம் சீராகும்.

ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.

முக்கிய வைட்டமின் சத்தான
வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில்
நிறைய இருக்கிறது.

எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.

எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.

எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும். உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.

இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக
எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில்
உள்ளது. உயர் இரத்த அன்பர்கள்
எலுமிச்சையால் நலம் பெறலாம்.

சிறுநீர் அடைப்பு விலகும். உடல்
நச்சுக்களை வெளியேற்றும். உடலின்
தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.

கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.

எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன் படுத்தக்கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த
வேண்டும்.

எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.

இவ்வளவு பயன் தரும் தேவகனி .

(எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு
மிக்கது என்றால் அது மிகையல்ல..

Monday, 20 July 2020

தாங்க முடியாத தலைவலிக்கு இயற்கை வீட்டு மருந்துகள்


தாங்க முடியாத தலைவலிக்கு இயற்கை வீட்டு மருந்துகள்

தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.

அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறை யில் குணமாக்குங்கள்.

கிராம்பும் உப்பும் கலந்த கலவை :

கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.

வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு :

ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் :

தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.

சூடான பால் அருந்துதல் :

சூடான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உண வில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

பட்டையை அரைத்துத் தடவுதல் :

தலைவலிக்கு மற்றுமொரு சிறப்பான மருத்துவமாகக் கருதப்படுவது, வீட்டில் மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்து விடுவதை உணரலாம்.

மல்லியும் சர்க்கரையும் கலந்து குடித்தல் :

சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை சளிபிடித்ததால் ஏற்பட்ட தலைவலியாக இருந் தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

சந்தனத்தை அரைத்துத் தடவுதல் :

சந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போல மென்மையாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :

நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

சிறிது பூண்டு ஜுஸ் அருந்துதல் :

சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து, இந்த ஜுஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும். இதனால் குடித்த பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாகக் குறைக்கும்.

கால்களை வெந்நீரில் வைத்திருத்தல் :

ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பது, தலைவலிக்கு மற்றொரு வீட்டு மருத்துவமாக செய்யப்பட்டு வருகிறது. இரவு படுக்கப்போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இதனைச் செய்ய வேண்டும்.

சைனஸினால் பாதிக்கப்பட்டு தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், நீண்டகாலமாக தலைவலியினால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், இம்முறையை குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது செய்து வரவேண்டும். இதனால் நல்லதொரு முன்னேற்றத்தினை உணரக் கூடும்.

ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுதல் :

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :

தலைவலிக்கு நல்ல நிவார ணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

இஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் அருந்துதல் :

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமாப அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலையை அரைத்துத் தடவுதல் :

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சீஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் :

தலைவலியினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சீஸ், சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்து விட வேண்டும். இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும்.

அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலியிலிருந்து விடு படவேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

நன்றாக தூங்குதல் :

பெரும்பாலான மக்கள் தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாதது தான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

அதிலும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தலைவலி குறையும். மேலே குறிப்பிட்டுள்ளவை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் தலைவலிக்கான கை மருத்துவங்கள்.

இவற்றை நீங்களும் பின்பற்றி, தலை வலியிலிருந்து நிவாரணம் பெறுங்கள்.

Sunday, 19 July 2020

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்.

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்.

எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில் ஒரு நல்ல மருந்துப் பொருளாக இருக்கிறது. சில சமயம், அது அழகுக் கலையிலும் வெகுவாகப் பயன்பட்டு வருகிறது.

எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் பல அற்புதமான நன்மைகளில் ஐந்தை மட்டும் இப்போது நாம் பார்க்கலாம்.

வைட்டமின் சி.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

சமமான பி.எச். அளவுகள்.

நம் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.

உடல் எடையைக் குறைக்க...

உடல் மற்றும் மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். அல்கலைன் அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம். உடல் எடையும் குறைந்து விடும்.

செரிமானம்.

நம் உடலில் செரிமானம் மட்டும் ஒழுங்காக இல்லையென்றால், அது பலவிதமான உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும். எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய் விடும்.

காபிக்கு குட்பை.

காபி குடிப்பதால் அவ்வப்போது ருசியும் மணமும் கிடைத்து வந்தாலும், அது நரம்பு மண்டலத்தையும் செரிமானத்தையும் பாதிக்கக் கூடியது. ஆனால், எலுமிச்சையின் பலனை அறிந்து, எலுமிச்சை ஜூஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காபிக்கு விரைவில் தலை முழுகி விடலாம்.

Saturday, 11 July 2020

நோய் எதிர்ப்பு சக்தி பெற

நோய் எதிர்ப்பு சக்தி பெற

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளியை தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

உடலில் உள்ள அதிக கொழுப்பைக் குறைக்கும் சக்தி பப்பாளிக்கு உள்ளது.

தோளில் ஏற்படும் தொற்றுக்களுக்கும், காயங்களுக்கும் பப்பாளி சிறந்த மருந்தாக உள்ளது. அடிபட்ட இடத்தில் பப்பாளிப் பழச் சாறை தடவினால், வீக்கத்தைக் குறைக்கலாம்.

5 மாதத்தைக் கடந்த கர்ப்பிணிப் பெண்கள், சிறிய துண்டு பாப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மந்தத் தன்மை குணமடையும்.

வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் படிந்துள்ள கழிவுகளை அகற்ற பப்பாளி அருமருந்தாகும். வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு பப்பாளி சாப்பிட்டால், குடலில் உள்ள அனைத்துக் கழிவுகளும் அகற்றப்படும்.

அடிக்கடி சளி, இரும்பல், காய்ச்சல் வந்து அவதிப்படுபவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால், இயற்கையாகவே உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

Friday, 3 July 2020

பெரிய கற்கள்


*பெரிய கற்கள்*

வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப் பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர். ''மாணவர்களே,  இன்று நாம் செய்முறை விளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.''

வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக் கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச் செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீது வைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்துவரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன்மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‌‎ன்றாக எடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார்.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ''ஜாடி நிறைந்து விட்டதா?'  அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்..ஸார்!''

சலனமில்லாமல் ''நல்லது''  எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போட ஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில் ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட,ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்பு செய்தன.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''

வகுப்பறையில் நிசப்தம். ஒரு மாணவர் மட்டும்''அப்படி நிச்சயமாக சொல்லிவிட முடியாது'' எ‎ன்றார்.

மெல்லிய பு‎ன்னகையுடன் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர்,  பி‎ன் ஒரு வாளி நிறைய ஆற்று மணலைக் கொண்டு வரச் செய்தார். மணலை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் போடப் போட, கிடைத்த இடைவெளிகளில் மணல் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தது. ஜாடியைக் குலுக்கி விட, மேலும் மணலை அள்ளிப் போட முடிந்தது.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''
இப்பொழுது,  வகுப்பறை முழுவதும் கோரஸாக, ''நிச்சயமாக ‏இல்லை!''

சிரித்த பேராசிரியர் ''நல்லது''  எ‎ன்றவாறே, ஒரு வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வரச் செய்தார். தண்ணீரை ஊற்ற ஊற்ற மணலைக் கரைத்துக் கொண்டு தண்ணீர் நிறைந்தது ஜாடியினுள்.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துச் பேச ஆரம்பிக்கிறார் பேராசிரியர். ''ஜாடி நிறைந்து விட்டதா எ‎ன்று ‏இப்போது நான் கேட்கப் போவதில்லை. ‏இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டபாடம் எ‎ன்ன?''

ஒரு மாணவர் எழுந்தார். ''நமது நேர நிர்வாகம்எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல;  எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில சிறிய வேலைகளையும் முடிக்க முடியும்''
''இல்லை.. அதுவல்ல பாடம்''

பேராசிரியர்
பதிலுரைத்தார்:
பெரிய கற்களை நீங்கள் முதலில் ஜாடிக்குள் போடாவிடில்,  பி‎ன்னர் எப்போதுமே அவற்றை நீங்கள்போட முடியாது;  ஜல்லிகளும் மணற்துகள்களும் அடைத்துக் கொண்டிருக்கும். வாழ்க்கையை ஒரு ஜாடியாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பெரியகற்கள் எ‎ன்பவை இ‏ங்கே உங்கள் அ‎ன்பிற்குரியவர்களை,  உங்கள் த‎ன்னம்பிக்கையை, உங்கள் கல்வியை,  உங்கள் எதிர்காலக் கனவுகளை, குறிக்கோள்களைக் குறிக்கி‎ன்றன. இவற்றை அந்தந்தக் கால நேரங்களில் சரியாக உள்ளிடாவிட்டால் பி‎ன்னர் அவற்றை உள்ளிட முடியாது. விளைவு?''

''ஆகவே, ‏ இன்று வீட்டுக்குச் செல்லுங்கள். ந‎ன்றாகத் தூங்குங்கள். காலையில் எழுந்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், 'பெரிய கற்கள் என்பவை எ‎ன் வாழ்க்கையில் யாவை'  எ‎ன்று''