Thursday, 29 October 2020
அத்திப் பூத்தது போல் என்று தமிழில், ஒரு பழமொழி
அத்திப் பூத்தது போல் என்று தமிழில், ஒரு பழமொழி சொல்வார்கள்.அத்தி மரம் பூக்காது என்றால் அத்திப்பழம் நமக்கு எப்படிக் கிடைக்கும்பூ பூத்தால் தான் கனி.பூ பூக்காமல் நமக்கு காயோ கனியோ கிடைக்காது .இதற்கு அத்திமரமும் விலக்கல்ல .அத்திமரமும் பூக்கத் தான் செய்கிறது.ஆனால்....அந்தப் பூக்கள் நம் பார்வைக்கு தட்டுப்படாத அளவுக்குமிக மிகச் சிறியதாக இருக்கும்.அதுவும் இல்லாமல் பூக்கள் கிளைகளில் காய்க்காமல்அடிமரத்தில் இருந்து உச்சி வரைக்கும் மரத்தை ஒட்டியே மறைவாய்ப் பூத்துக் காயாக, கனியாக மாறும் போது மட்டுமே, நம் பார்வைக்குக் கிடைக்கும்.அத்திப் பூத்து இருப்பதைப் பார்க்க வேண்டுமானால்,மரத்துக்கு மிக அருகில் சென்று பார்க்க வேண்டும் .பூ பூத்த சில மணி நேரங்களில் அது காயாக மாறி விடுவதால் பூ பார்வைக்கு கிடைப்பது அரிது.
சிந்தனைக் களம் வேண்டாம் நடைப்பிண வாழ்க்கை
சிந்தனைக் களம்
வாழ்க்கை இன்பமயமானது. எப்படி பூமியானது பெரும்பங்கு இயற்கையால் சூழபட்டிருக்கிறதோ, அதுபோல வாழ்க்கையும் இன்பங்களால் சூழபட்டிருக்கிறது. ஆனால், அவற்றைக் கண்டுபிடிப்பதில் தான் நம்முடைய திறமை அடங்கி இருக்கிறது. முதலில் தீமைகளை எவ்வாறு நன்மைகளாக மாற்றிக் கொள்வது என்று ஆராய்ந்து, அதன்படி செயல்படுங்கள். பின்னர் வாழ்க்கை முழுவதும் இன்பம் தான்.
காலை முதல் மாலை வரை அலுவலகத்திற்குள் அடைந்து கிடப்பது, மாலையில் அலுவலகம் முடிந்ததும் வீட்டுக்குச் சென்று அடைந்து கொள்வது என எப்போதும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறை வேண்டாம். இது தொடர்ந்தால் நாளடைவில் நீங்கள் ஒரு நடைபிணம் போல் ஆகிவிடுவீர்கள். மகிழ்ச்சி உங்களை விட்டு வெகுதூரத்திற்குச் சென்று விடும். எனவே, சிறிதுநேரத்தை நண்பர்களுடன் செலவழியுங்கள். வீட்டுக்குச் சென்றால் மனைவி, குழந்தைகளை அல்லது பெற்றோர்களை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள கோவில் அல்லது பூங்காவிற்குச் சென்று வாருங்கள். (கொரானா விழிப்புணர்வுடன்)
எல்லா காலகட்டத்திலும், எல்லோராலும் வித்தியாசங்கள் விரும்பப்படுகின்றன. வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டவர்கள் தான் இன்றைக்கு உலக அளவில் புகழ் பெற்றுத் திகழ்கிறார்கள். எனவே, வாழ்க்கையை வித்தியாசமாக வாழப் பழகுங்கள். நீங்கள் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகள் தான் உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். பெரும்பாலும் அது நன்மையாகவே முடியும்; சில நேரங்களில் தீமையாகவும் முடியலாம். ஆனால் முயற்சியே செய்யாமல் அது நன்மையாக முடியுமா அல்லது தீமையாக முடியுமா என்று ஆருடம் பார்பது நல்லதல்ல.
உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, எதை உங்களால் சிறபாகச் செய்ய முடிமோ அதை லட்சியமாகத் தேர்ந்தெடுங்கள். அந்த லட்சியத்தை அடைவதற்காகக் கடுமையாக உழைங்கள். அதிகமான உழைப்பிற்கு இடையே வரும் சிறுபகுதி தான் புகழ். அது எப்போதுமே நிலைத்திருக்க இன்னும் கடுமையான உழைப்பு தேவை. உழைப்பில் மட்டும் எப்போதும் திருப்தி கொள்ளக் கூடாது. வெற்றி மீது ஆசை வைத்து உழைத்தால் தான் நினைத்தது கிடைக்கும்.
வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பொருளாதாரம் பெரும்பங்கு வகிப்பது உண்மை தான். அதற்காக இறக்கும் வரை பணம் பணம் என்று அலையக் கூடாது. இன்று நீங்கள் தவற விடும் ஒரு நிமிட சந்தோஷத்தை அறுபது விநாடிகளாகக் கணக்கிட்டு பாருங்கள். பின்னர் எந்த தருணத்திலும் சந்தோஷத்தை இழக்க மாட்டீர்கள். அவ்வப்போது கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை பிறகு அனுபவித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல், உடனுக்குடன் அனுபவித்து விடுங்கள். நீங்கள் வரும்வரை அந்த சந்தோஷம் உங்களுக்காகக் காத்திருக்காது.
படிப்படியாய் திட்டமிட்டு, நல்ல பாதையில் பயணித்தால் நீங்கள் வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது.
Monday, 5 October 2020
மனஅழுத்தம் இன்றி வாழ சில வழி முறைகள்
மனஅழுத்தம் இன்றி வாழ சில வழி முறைகள்.
காலையில் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.
எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.
முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்த பின் செய்வதைத் தவிருங்கள்.
வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.
சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப்படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.
இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப்போவதில்லை.
தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத் தொந்தரவும இன்றி.
செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.
உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
எளிமையாக வாழுங்கள்.
உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.
நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.
வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தைத் தரும்.
ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.
எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.
குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.
தினமும் உங்கள் மனதை மகிழச் செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.
பிறருக்காக எதையேனும செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.
என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
உங்கள் உடை, நடை பாவனைகளினால் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.
இன்றையப் பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.
மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.
இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை வாழலாம்!
Sunday, 4 October 2020
நம்பிக்கை
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...
எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது
இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்
சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்...
ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை...
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...
நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...
துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...
தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே
எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்
முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்...
அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...
பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..
வேதனைகளை ஜெயித்துவிட்டால்
அதுவே ஒரு சாதனைதான்...
உன்னால் முடியும்
என்று நம்பு...
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே...
எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்......
குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி......
ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு...
தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு
உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு...
எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்...
நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்...
முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை...
புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்
தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...
தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்...
எல்லோரிடமும் உதைபடும்
கால்பந்தாய் இருக்காதே
சுவரில் எறிந்தால்
திரும்பிவந்து முகத்தில்
அடிக்கும் கைபந்தாயிரு...
எண்ணங்களிலுள்ள தாழ்வு
மனப்பான்மையால் திறமைக்கு
தடை போடாதீர்கள்....
முடியும் என்ற சொல்லே
மந்திரமாய்....
( நம்பிக்கை )
மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,
தோல்வி பல கடந்து வென்றவர்களே...
தனியே நின்றாலும்
தன் மானத்தோடு...
சுமையான பயணமும்
சுகமாக....
(நம்பிக்கை)
Subscribe to:
Posts (Atom)