Sunday, 9 May 2021

இறையன்பு

வெ. இறையன்பு ( இ ஆ ப )
புதிய தலைமை செயலாளர்
சிறப்பான தலைமை.


எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்து விட்டேன்.
ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அது தான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன. தோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக் கொள்பவர்கள் தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள்.

சேலம் மாவட்டம், காட்டூர் கிராமம் என் சொந்த ஊர். படித்தது எளிமையான பள்ளி. என்னுடன் படித்தவர்களில் சிலர் படிக்கும் போதே வாழ்க்கை துரத்த, பிழைப்புக்கு ஓடினார்கள். அவர்கள் கட்டடப் பணிகளுக்கும், மாட்டுவண்டி ஓட்டுவதற்கும் சென்றது என்னை நிறைய யோசிக்க வைத்தது.

அந்தச் சூழலிலும் ‘ஜெயிக்க வேண்டும்’ என்கிற பொறி உள்ளுக்குள் தீயாகக் கனன்று சுழன்றது. பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கியவர்கள் பெற்றோர். மேடையில் குரலெடுத்துப் பேசும் கலையைத் தந்தையும், ஆழ்ந்து வாசிக்கும் வித்தையைத் தாயும் கற்றுத் தந்தனர். 

தேசிய மாணவர் படை, சாரண இயக்கம், இந்தி வகுப்புகள் எனப் பள்ளி நாட்களிலேயே நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாகச் செலவிடக் கற்றுக் கொண்டேன்.
சின்ன வயதிலேயே நான் பார்த்த பல வறிய குடும்பங்கள், ஏழ்மையின் கொடூரங்கள் என்னை ரொம்பவே பாதித்தன. அதுதான் சமூகம் பற்றிய அக்கறையை எனக்குள் கொண்டு வந்தது. 

கோவை வேளாண்மைக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாட்களில் தான் என்னை நான் இன்னும் தீவிரப்படுத்திக் கொண்டேன். செடிகளையும் கொடிகளையும் நேசிக்கக் கற்றிருந்த எனக்கு வேளாண்மையே விருப்பப் பாடமாக அமைந்தது. விடுதி வாழ்க்கையும், அளவற்ற சுதந்திரமும் எனக்குள் சுயகட்டுப்பாட்டை ஏற்படுத்தின. பொறுப்பும், பொறுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற உண்மையை உணர்ந்தது அப்போது தான். கவிதையாக விரிந்த கல்லூரி வளாகத்தில், இலக்கியத்தில் ஈடுபாடும் கவிதையில் காதலும் உண்டானது.

கல்லூரிப் பூங்காவில், நானும் என் இலக்கிய நண்பர்களும் அடிக்கடி கூடுவோம். சம வயது உடைய மற்ற பலரிலிருந்து நாங்கள் விலகி இருந்தோம். 

கோவை ஆர்.எஸ்.புரத்தின் அகண்ட வீதிகளில் விழிகளின் தரிசனத்துக்காகத் தவம் கிடந்த அவர்களிடமிருந்து தனித்திருந்து கவிதையை, இசையை, நடனத்தைப் பற்றியெல்லாம் மரமல்லிகை மரங்களுக்கடியில் மணிக்கணக்கில் நாங்கள் பேசி மகிழ்ந்திருந்தோம். அப்படிக் கூடிய அனைவருமே இன்று ஒவ்வொரு துறையில் உன்னதங்கள் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கல்லூரி நாட்களில் தேநீரே ஆகாரமானது. புத்தகங்களே ஆகாயமாயின. இலக்கியப் பரிசாகக் கிடைத்த ‘இயேசு காவியம்’ நூலை அன்று இரவே முழுவதும் படித்து முடித்தேன். புத்தகங்கள் படிக்கப் படிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக விரிய ஆரம்பித்தேன்.

இரண்டு மூன்று மணி நேரம் தான் தூக்கம்.‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், மார்க்சிய நாத்திகம், தாய், அந்நியன் போன்ற நூல்கள் அப்போது அகலமான வாசல்களை எனக்குள் திறந்து விட்டன.
கல்லூரி நாட்களில் கவிஞராக வேண்டும் என்பது தான் லட்சியம். நோட்டுப்புத்தங்களின் கடைசி பக்கங்களில், வகுப்பு நடக்கும் போதே கவிதை எழுதுவது தொடர்ந்தது.
 
‘அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்; நீ கண்களோடு வந்திருந்தாய்’ & மண்ணறிவியல் பாட நோட்டின் கடைசி பக்கம் எழுதிய கவிதை இன்னமும் ஈரமாக நிற்கிறது நினைவில்.

‘நிறையப் படிக்க வேண்டும். முனைவர் பட்டத்துடன் தான் வெளியே வர வேண்டும்’ என்கிற கனவோடு கல்லூரியில் நுழைந்த நான், இளமறிவியலுடன் நிறுத்திக் கொண்டேன். கல்லூரியைத் தாண்டித் தான் உண்மையான வாசிப்பு நிகழும் என்கிற உணர்வுடன் பணி தேட ஆரம்பித்தேன்.

அப்போது பலரும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுமாறு வற்புறுத்தினார்கள். அது பற்றி ஒன்றும் தெரியாமலேயே நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில் ஒப்புக் கொண்டேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டு, அதுபற்றித் தகவல்களைத் தேடி, தட்டுத்தடுமாறி புத்தகங்களைத் திரட்டி படிக்க ஆரம்பித்த போது, அரசாங்கப் பணியும் கிடைத்தது.

தருமபுரி மாவட்டம், ராயக்கோட்டை கிராமத்தில், வேளாண் அலுவலர் பணி. அப்போது ராயக்கோட்டை மிகவும் பின்தங்கிய கிராமம். ஆங்கில நாளிதழ் வேண்டுமானால், ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட சூழலில் என் ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுக்கான தயாரிப்புகள் ஆரம்பித்தன.சின்ன குடியிருப்பு அது. பகலிலும் விளக்கு போட்டால் தான் வெளிச்சம் கிடைக்கும். மிகக் குறுகலான ஒரு அறை. பக்கத்து அறையில் எப்போதும் சீட்டாட்டம், கீழே டீக்கடையில் ஊருக்கே கேட்டும்படி சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பு. சீட்டுக் கச்சேரிக்கும் பாட்டுக் கச்சேரிக்கும் இடையில் தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தீவிரத்தில் இருந்தேன்.

காலையில் அவசரமாக உணவு அருந்தி விட்டு, ஒரு பொட்டலத்தில் நான்கு இட்லிகளையும் புளித்த சட்டினியையும் மதிய உணவுக்காக கட்டிக் கொண்டு, டவுன் பஸ் பிடித்து இறங்கி, அந்தந்த கிராமத்திலிருந்து வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கொண்டு வேளாண் அலுவலர் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்த காலம் அது. பேருந்திலும் கூடப் படித்துக் கொண்டே செல்வேன். அந்த நாட்களும் நிச்சயம் அழகானவை தான்! காரணம்... சைக்கிள் பயணம், காய்ந்து போன இட்லி, புளித்த சட்டினி இவை தானே என் வைராக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தின!

வேளாண் அலுவலராக அப்போது தொட்ட திம்மனஹள்ளி, உத்தனஹள்ளி போன்ற கிராமங்களுக்கு சைக்கிளில் பயணித்த போது, இன்னும் அதிகமாக மக்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அது, ‘நிச்சயம் நான் வெற்றி பெற வேண்டும்’ என்பதைத் தீவிரமாக்கியது.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். அதில் ஒரு குழப்பம். வேளாண்மை இன்னொரு விருப்பப் பாடம். ‘இரண்டையும் தமிழில் எழுத வேண்டும்’ என்று இந்தத் தேர்வை ஏற்கெனவே எழுதித் தோற்றுப் போன ஒரு நண்பர் குழப்பி விட்டார். வேளாண்மையை என்னால் தமிழில் எழுத முடியாது. ஏனென்றால், நான் படித்தது ஆங்கிலத்தில்! இந்தக் கேள்விக்கு விடை காண சென்னைக்கு ரயில் ஏறினேன்.

தலைமைச் செயலகத்தில் இருந்த என் உறவினர் உலகநாதன் மூலமாக விடை கிடைத்தது. பொது அறிவையும், வேளாண்மையையும் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று தெரிந்த போது தான் இழந்த சக்தி திரும்பியது.
இப்படித் தமிழகம் முழுவதும் தடுமாறும் இளைஞர்கள் தடம் மாறக்கூடாது என்பதற்காகத் தான் இந்தத் தேர்வை அணுகுவது பற்றி, ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’, ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ என்று நூல்களை எழுதினேன்.

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது பெரிய விஷயமல்ல; அதில் தேர்ச்சி பெறுவது கூடப் பெரிய சாதனையல்ல... அதற்குப் பிறகு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பது தான் முக்கியம். அறிவை அனுபவத்தால் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பராமரிக்காவிட்டால் பளபளப்பாக இருக்கிற கோயில்கள் கூடக் குட்டிச்சுவர்களாகி விடும்!
என்னுடைய பணிக்குப் பரிசை நான் ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை. சிறந்த பணியே செயல்பட்டதற்கான பதக்கம். அப்போது ஏற்படும் திருப்தியே விருது!

தூர் வாரப்பட்ட கால்வாயில் நீர் ஓடுவது பரிசு. நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளில் மக்கள் பயணிப்பதே பரிசு. நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறுவதே எனக்குக் கிடைத்த பெரிய விருது. 
நான் சாராட்சியராகப் பணியாற்றிய நாகப்பட்டினத்திலிருந்தும், கூடுதலாட்சியராகப் பணியாற்றிய கடலூரிலிருந்தும், ஆட்சியராக இருந்த காஞ்சிபுரத்திலிருந்தும் தலைமைச்செயலகம் வருகிற பொதுமக்கள் இப்போதும் என்னை வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போவது தான் என் பணிக்குக் கிடைக்கிற அங்கீகாரம்!

மதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருந்த போதும் மக்களுக்கும் எனக்கும் இடையே இருந்த இடைவெளி குறையவில்லை. மதுரையில் வாசிப்பவர் கூட்டமைப்பு உருவாக்க உதவியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில் தான் எம்.பி.ஏ., முடித்தேன். எம்.ஏ., ஆங்கிலம் படித்தேன். சம்ஸ்கிருதம் படித்தேன். திருக்குறளில் மனிதவள மேம்பாடு என முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தேன். பத்து நூல்கள் எழுதினேன். நூறு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதினேன். இருநூறுக்கும் மேற்பட்ட வானொலி உரைகள் வழங்கினேன். முன்னூறுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் இளைஞர்களுக்காகப் பேசினேன். மூன்று ஆய்வாளர்கள் என் நூல்களில் முனைவர் ஆய்வு செய்ய உதவினேன். இப்படி மதுரை என்னை இன்னொரு பரிமாணத்துக்கு அழைத்துச் சென்றது.
என் குடும்பத்தில் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி நான். இது தலைமுறைகளின் கனவு. அது பலித்தது என் காலத்தில்! துயரமும் சூழலும் நம்பிக்கையின் காட்டாற்றுப் பயணத்தை நிறுத்தி விட முடியாது.

நம்மை நாமே கடந்து செல்வது தான் வளர்ச்சி. நமக்குள்ளேயே அடுத்த தலைமுறையை அடையாளம் காண்பது தான் முன்னேற்றம். அந்தத் தேடுதல் தான் என் இலக்கு, பயணம், அனுபவம் எல்லாமே!

இறை நம்பிக்கை.

அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனை தான்! ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடு தான்!

ஜெயித்தது எப்படி?

சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிற போதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். 
வெற்றி என்பது நம் மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!

இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது..

தேடுதலை நிறுத்தி விடாதீர்கள். குறுக்குவழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை!

ஒரே கனவு

அழகான தோட்டம், அடர்ந்த தோப்புகள், கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து மெல்லிய இசையைக் கண்மூடி ரசிக்கும் தனிமை...

இயற்கையோடு நெருங்கிய சூழலில் அத்தனை அடையாளங்களையும் உதிர்த்து விட்டு மறுபடியும் குழந்தையைப் போல மாறும் பக்குவம்...
எல்லா சத்தங்களிலிருந்தும் விடுதலை...அமைதியான இனிமை...நெருடல் இல்லாத வாழ்வு...வலியில்லாத மரணம்....சாத்தியப்படுமா?

Dr. வெ. இறையன்பு IAS.

Tuesday, 27 April 2021

samayapuam mariamman

சமயபுரத்தாளே ,சமயபுரம் மாரியம்மன் தாயே! வாழ்வை வளமாக்கும் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி!!இன்று 27/4/2021 செவ்வாய்க்கிழமை அன்று இன்னல்கள் நீங்க இன்பங்கள் பெருக  அன்னையை வேண்டுவோம் . ஓம் சக்தி ஓம்

ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி!!!

1.ஓம் அம்மையே போற்றி

2.ஓம் அம்பிகையே போற்றி

3.ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி

4.ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி

5.ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி

6.ஓம் பூமாரித்தாயே போற்றி

7.ஓம் பூவில் உறைபவளே போற்றி

8.ஓம் பூஜைக்குரியவளே போற்றி

9.ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி

10.ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி

11.ஓம் மழைவளம் தருவாய் போற்றி

12.ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி

13.ஓம் மந்திர வடிவானவளே போற்றி

14.ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி

15.ஓம் செந்தூர நாயகியே போற்றி

16.ஓம் செண்பகாதேவியே போற்றி

17.ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி

18.ஓம் சொல்லின் செல்வியே போற்றி

19.ஓம் ஈகை மிக்கவளே போற்றி

20.ஓம் உமையவளே தாயே போற்றி

21.ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி

22.ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

23.ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி

24.ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி

25.ஓம் ஆதார சக்தியே போற்றி

26.ஓம் ஆதி பராசக்தியே போற்றி

27.ஓம் இருள் நீக்குபவளே போற்றி

28.ஓம் இதயம் வாழ்பவளே போற்றி

29.ஓம் இடரைக் களைவாய் போற்றி

30.ஓம் இஷ்ட தேவதையே போற்றி

31.ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி

32.ஓம் ஈடிணை இலாளே போற்றி

33.ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி

34.ஓம் ஏழையர் அன்னையே போற்றி

35.ஓம் ஐங்கரத்தவளே போற்றி

36.ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி

37.ஓம் ஓங்கார ரூபினியே போற்றி

38.ஓம் ஒளடதம் ஆனவளே போற்றி

39.ஓம் கவுமாரித்தாயே போற்றி

40.ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி

41.ஓம் கரை சேர்ப்பவளே போற்றி

42.ஓம் காக்கும் அன்னையே போற்றி

43.ஓம் கிள்ளை மொழியாளே போற்றி

44.ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி

45.ஓம் குங்கும நாயகியே போற்றி

46.ஓம் குறை தீர்ப்பவளே போற்றி

47.ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி

48.ஓம் கை கொடுப்பவளே போற்றி

49.ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி

50.ஓம் சக்தி உமையவளே போற்றி

51.ஓம் சவுந்தர நாயகியே போற்றி

52.ஓம் சித்தி தருபவளே போற்றி

53.ஓம் சிம்ம வாகினியே போற்றி

54.ஓம் சீரெலாம் தருபவளே போற்றி

55.ஓம் சீதளா தேவியே போற்றி

56.ஓம் சேனைத் தலைவியே போற்றி

57.ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி

58.ஓம் தத்துவ நாயகியே போற்றி

59.ஓம் தர்ம தேவதையே போற்றி

60.ஓம் தரணி காப்பாய் போற்றி

61.ஓம் தத்துவ நாயகியே போற்றி

62.ஓம் தர்ம தேவதையே போற்றி

63.ஓம் தரணி காப்பாய் போற்றி

64.ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி

65.ஒம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி

66.ஓம் தாமரைக் கண்ணியே போற்றி

67.ஓம் தீமை களைபவளே போற்றி

68.ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி

69.ஓம் தூய்மை மிக்கவளே போற்றி

70.ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி

71.ஓம் தேசமுத்து மாரியே போற்றி

72.ஓம் தையல் நாயகியே போற்றி

73.ஓம் தொல்லை போக்குவாய் போற்றி

74.ஓம் தோன்றாத் துணையே போற்றி

75.ஓம் நன்மை அளிப்பவளே போற்றி

76.ஓம் மழலை அருள்வாய் போற்றி

77.ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி

78.ஓம் மாணிக்க வல்லியே போற்றி

79.ஓம் மகமாயித் தாயே போற்றி

80.ஓம் முண்டகக்கண்ணியே போற்றி

81.ஓம் முத்தாலம்மையே போற்றி

82.ஓம் முத்து நாயகியே போற்றி

83.ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி

84.ஓம் நாக வடிவானவளே போற்றி

85.ஓம் நாத ஆதாரமே போற்றி

86.ஓம் நாகாபரணியே போற்றி

87.ஓம் நானிலம் காப்பாய் போற்றி

88.ஓம் நித்ய கல்யாணியே போற்றி

89.ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி

90.ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி

91.ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி

92.ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி

93.ஓம் நேசம் காப்பவளே போற்றி

94.ஓம் பக்தர் தம் திலகமே போற்றி

95.ஓம் பவளவாய் கிளியே போற்றி

96.ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

97.ஓம் பசுபதி நாயகியே போற்றி

98.ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

99.ஓம் புற்றாகி நின்றவளே போற்றி

100.ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி

101.ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

102.ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி

103.ஓம் பீடை போக்குபவளே போற்றி

104.ஓம் வீரபாண்டி வாழ்பவளே

105.ஓம் புத்தி அருள்வாய் போற்றி

106.ஓம் புவனம் காப்பாய் போற்றி

107.ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி

108.ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி

ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்

திருவடிகளே சரணம்!

வையகம் வாழ்விப்பாய் தாயே.

Monday, 15 March 2021

Yes I am CHANGING

Yes I am CHANGING    
Yes I am changing
Yes I am CHANGING
( படித்ததில் பிடித்தது )

என் வயதை ஒத்த நண்பர் கேட்டார். இந்த வயதில் உன்னைப் பொறுத்தவரை what is changing in your life style?

Yes,I am changing: இதுவரை என் பெற்றோர், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என்று அன்பு செலுத்திக் கொண்டிருந்த நான், now I have started loving myself.

Yes I am changing: இப்போது தான் உணர்ந்தேன்.  I am not Atlas.The world does not rest on my shoulders.

Yes I am changing: சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். ஒரு சிறு தொகையை அதிகமாக கொடுப்பதால் நான் திவாலாகி விட மாட்டேன். அந்த சிறு தொகை அவர்கள் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கலாம்.

Yes I am changing: Taxi driverக்கும், ஹோட்டல் சர்வருக்கும் தாராளமாக tips கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அவர்கள் என்னை விட தங்கள் வாழ்வாதாரத்திற்கு கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கி புன்னகைப்பது எனக்கு உற்சாகம்.

Yes I am changing: மிகவும் வயதானவர்கள் பல முறை சொன்ன தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை மீண்டும் சொல்லும் போது குறுக்கிடுவது இல்லை. After all the story makes them walk down the memory lane and breathe Oxygen.

Yes I am changing: எல்லோரையும் மனதார அவர்கள் நல்ல செயல்கள் செய்தால் பாராட்டுகிறேன். அது அவர்கனை உற்சாகப்படுத்துவது மட்டுமல்ல, என்னையும் உற்சாகப்படுத்துகிறது.

Yes I am changing: தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது இல்லை. என் மன அமைதி எனக்கு முக்கியம்.

Yes I am changing: என்னுடைய புறத்தோற்றத்தை பற்றி கவலைப்படுவது After all personality speaks louder than appearances.

Yes I am changing: என்னை மதிக்காதவர்களை விட்டு 
I am Just walk away. அவர்களுக்கு என் மதிப்பு புரியவில்லை.

Yes I am changing: என்னோட Ego வை விட உறவுகள் முக்கியம் என்று உணர்ந்ததால், உறவுகளை தொலைப்பதில்லை.

Yes I am changing: ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். இந்நாளே கடைசி நாளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன்.

Yes I am changing: நிறைவாக
I am doing what makes me happy. 
After all, I am responsible 
for my happiness 
and I owe it to me.

பள்ளியில் அதிக மன அழுத்தம்

பள்ளியில் அதிக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக கற்பித்தல் பணி செய்ய ஆசிரியப் பெருமக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் சில இதோ உங்களுக்காக, பொறுமையாகப் படித்து விட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1.காலை எழுந்தவுடன் மூச்சு பயிற்சி முக்கியமாக ஆசிரியர்கள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நலம்.

2.காலையில் பள்ளிக்கு செல்லும் முன் கடைசி அரைமணி நேரம் ஒய்வு எடுத்து விட்டு மனது சந்தோசமாக வைத்துக் கொண்டு இறைவனை வணங்கி விட்டு பள்ளிக்கு செல்ல வேண்டும்.

3.வகுப்பில் ஒவ்வொரு பாட வேளையின் கடைசி ஐந்து நிமிடம் மாணவர்களுக்கு நடத்தியது தொடர்பான கற்றல் பணி தந்து விட்டு நாம் பேசாமல் குரலுக்கு ஓய்வு தர வேண்டும்.

4.வகுப்பறையில் மிகவும் சத்தமாக பேசக்கூடாது.
சரியான சத்தத்துடன் மட்டுமே பேச வேண்டும்.நமது கண்பார்வை வகுப்பு முழுவதும் இருக்க வேண்டும்.

5.மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் மைக் மூலம் வகுப்பு எடுத்தால் நமது வாழ்நாள் நீடிக்கும். கரும்பலகையில் எழுதும்போது சுண்ணக்கட்டி உடம்பிற்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

6.ஒவ்வொரு பாடவேளை முடியும் போது குரல்வலை வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பாடவேளை முடியும் போதும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

7.பள்ளிக்கு செல்லும்போது முகம் மலர்ந்து சந்தோசமாக செல்ல வேண்டும்.

8.பள்ளி செயல்பாடு எதுவாக இருந்தாலும் வீட்டிலும்,வீட்டின் செயல்பாடு எதுவாக இருந்தாலும் பள்ளியிலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் பள்ளியின் செயல்பாட்டை மறந்துவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க பழக வேண்டும்.

9.பாடவேளை முழுவதும் நமது உடலும் உள்ளமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். மாணவர்களிடம் அன்புடன் மட்டுமே பேச வேண்டும். கோபப்பட்டு பேசக்கூடாது.

10.எண்ணம்,சொல்,செயல் மூன்றும் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒருநிலை படவேண்டும்.

11.அனைத்து நேரமும் நாமும் சந்தோசமாக இருந்தது நம்மை சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள்,குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், சொந்தங்கள், உலக மக்கள் என்று அனைவரையும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

12.ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும் போதும்,தண்ணீர் குடிக்கும் போதும் நமக்கு தந்த பிரபஞ்சம்,வழங்கிய உள்ளங்களை வாழ்த்த வேண்டும்.

13.மதிய இடைவேளை மற்றும் இடைவேளையின் போது சிரித்து சந்தோசமாக பாடத்தை தவிர்த்து மற்ற பயனுள்ள கருத்துக்களை சக ஆசிரியர்களுடன் பேசப் பழக வேண்டும்.

14.காலையில் பள்ளிக்கு சென்றவுடன் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களுக்கு முக மலர்ந்து வணக்கம் சொல்வது மிக முக்கியம் ஆகும்.

15.பள்ளியில் ஆசிரியர், பெற்றோர்,மாணவர்கள் கோபமாக பேசினாலும் மறந்து விட்டு அவர்களை வாழ்த்த கற்றுக் கொள்ள வேண்டும்.

16.பள்ளியில் நம்முடன் பேசும் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு நாம் பேசும் போது சரியாக,சுருக்கமாக அன்புடன் பிறர் மனம் வருந்தாத வண்ணம் பேச வேண்டும்.

17.நம்முடன் அனைவரும் சந்தோசமாக பேசும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அனைவரின் பேச்சிற்கும் மதிப்பு தர வேண்டும்.

18. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களின் குடும்ப சூழல் பற்றி கேட்டு தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.அவர்கள் மனம்விட்டு நம்முடன் பேச வாய்ப்பு தரவேண்டும்.

19.நாள்தோறும் இடைவேளையின் போது யாரேனும் ஒரு மாணவர் பெயர் சொல்லி அவரை வந்து நம்முடன் பேச சொல்லும்போது அவர்கள் மீது நாம் கவனம் செலுத்துவதை உணர்ந்து நன்றாக படிப்பார்கள்.

20.மாணவர்கள் செய்யும் சிறு தவறையும் தக்க அறிவுரை கூறி திருத்த முயற்சி செய்ய வேண்டும்.பாடவேளைக்கு செல்லும் போது கற்றல், கற்பித்தல் உபகரணம் கொண்டு சென்றால் கற்பித்தல் மேம்படும்.

21.இதுகூட தெரியாத என்ற வார்த்தை மட்டும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டாம்.அப்படி சொன்னால் மாணவர்கள் நம்முடன் கடைசியாக பேசுவது அதுவாகத்தான் இருக்கும்.

22.நமக்கு தெரியாது உலகில் நிறைய உள்ளது என்பதை உணர்ந்து மாணவர்களிடம் பேச வேண்டும்.அன்றாட தொலைக்காட்சியில் வரும் முக்கிய பயனுள்ள செய்திகளை கேட்டு மாணவர்களுக்கு சொல்ல வேண்டும்.

23.கிடைக்கும் நேரத்தை மனது அமைதியாக இருக்க பழக்க படுத்திக் கொள்ள வேண்டும்.

24.பள்ளியில் வரும் பணியை வேகமாக முடித்து விட்டு சந்தோசமாக இருக்க வேண்டும்.

25.பணியை அதிக நேரம் எடுத்து சென்று மனதை துன்பத்தில் வைத்திருக்க கூடாது.

26.மாணவர்களுக்கு பாட வேளையில் பேச வாய்ப்பு தரவேண்டும்.ஏன், எதற்கு, எப்படி,என்ன? என்பது போன்று வினா கேட்டு கற்க பயிற்சி தர வேண்டும்.புரிந்து படிக்க பயிற்சி தர வேண்டும்.

27.யாரிடமும் நமது துன்பத்தை பேசக்கூடாது.நமது சந்தோசத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

28.பள்ளியில் வகுப்பில் நடத்தும் பாடம் மற்றும் செயல்பாட்டை குறிப்பு எடுத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றால் மறக்காது.அப்போதுதான் அனைத்து கருத்துக்களையும் மாணவர்களுக்கு சொல்ல முடியும்.

29.பள்ளி முடிந்து விட்டு வீட்டிற்கு வந்தால் தங்களின் குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினருடன் சந்தோசமாக இருக்க வேண்டும்.நமது குடும்பம்தான் முதல் கோவில் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

30.தங்களின் குழந்தைகளின் தனித்திறனில் கவனம் செலுத்த வேண்டும்.நம்மை போன்று அவர்கள் எதிர்காலத்தில் வருந்தமால் இருப்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

31.பள்ளியில் இருந்து வந்தவுடன் அரைமணி நேரம் ஓய்வு எடுத்து விட்டு,அதன் பிறகு மற்ற பணிகள் செய்ய வேண்டும்.

32.நாள்தோறும் மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருக்க வேண்டும்.

33.விடுமுறை நாளில் குடும்பத்துடன் அருகில் உள்ள பூங்கா போன்று சிறு சுற்றுலா மேற்கொள்ள வேண்டும்.

34.உறங்கும் போது இறைவனை வேண்டிக்கொண்டு சந்தோசமாக உறங்க வேண்டும்.

35.நாம் வாழ்வில் அனைத்து செயலிலும் அமைதி ஆனந்தம் நம்பிக்கை பெருக வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

36.கடந்தகால மன உளைச்சலை மறந்து,எதிர்கால கற்பனை மறந்து,நிகழ்காலத்தில் சந்தோசமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

37.காலையில் எழுந்தவுடன் இரவு உறங்கும் வரை அனைவரையும் வாழ்த்த கற்றுக் கொள்ள வேண்டும்.

38.ஆசிரியராக அனைவரின் வாழ்வில் ஏணிப்படியாக இருப்போம்.சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம் என்ற குறிக்கோளுடன் வாழ வேண்டும்.

39.சமூகத்தின் முன்னுதாரணம் நாம் என்பதால் அனைவரிடமும் மாற்றம் வர முதலில் நம்மிடம் உருவாக வேண்டும்.

40.நீள் ஆயுள்,நிறை செல்வம், மெய் ஞானம்,உயர் புகழ் பெற்று பல்லாண்டு அனைவரும் வாழ வாழ்த்தும் நல்ல மனதுடன் வாழ வேண்டும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

கோபப்படுதல் பாவமென்றால், கோபமூட்டுதல் அதைவிடவும் மகாகொடிய பாவம்.....!!!

கோபப்படுதல் பாவமென்றால், கோபமூட்டுதல் அதைவிடவும் மகாகொடிய பாவம்.....!!!

கோபப்படுகின்றவன் வெளிப்படையானவன். ஆனால் கோபமூட்டுகின்றவன், நல்லவனைப் போல் தன்னைக் காட்டிக் கொண்டு திரைமறைவில் சதிவேலை செய்கின்றவன்.

இயல்பான கோபம் உடனடியாகத் தணிந்து விடும். அதனால் தான் ‘ஆறுவது சினம்’ என்றாள் அவ்வை.

பிறரால் தூண்டப்படுகின்ற கோபமோ, தணியும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் தூண்டி விடப்பட்டுக் கொண்டே இருக்கும். அதுதான் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

தெருவில் இரண்டு பேருக்கிடையே வாய்த்தகராறு. அதைச் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு கூட்டம்.

இருவரும் எப்போது கட்டிப் புரண்டு உருளுவார்கள், யார் முதலில் கத்தியை எடுத்து அடுத்தவனைக் குத்துவான், இந்தச் சண்டை இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும். இப்படித் தான் அந்தக் கூட்டம் எதிர்பார்த்து நிற்கிறது.

சண்டையின் வேகம் கொஞ்சம் தணிந்து, இருவரும் விலகிச் செல்ல தயாராகி விடுகிறார்கள். வேடிக்கை பார்க்கும் கூட்டத்திலிருந்து ஒரு குரல் வருகிறது.

‘எங்கிட்ட மட்டும் ஒருத்தன் இப்படி பேசியிருந்தா, இந்நேரம் அவன் மண்டைய பொளந்திருப்பேன்’ என்கிறான் ஒருவன்.

‘அதுக்கெல்லாம் நெஞ்சில துணிச்சல் வேணும். இவன்க சும்மா... வெறும் வாய்ச்சவடால் தான்’ என்று கிளறி விடுகிறான் இன்னொருவன்.

சூடு தணிந்த சண்டை மீண்டும் அனல் தெறிக்கத் தொடங்குகிறது. கைகலப்பு ஏற்பட்டு, ஒருவனுக்குப் பல் உடைகிறது.

 ஒருவனுக்குக் காது கிழிந்து ரத்தம் வழிகிறது. அதன் பின்னர் தான், தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தவர்களுக்கு ஒரு மனநிறைவு.

அப்படித் தூண்டி விடுகிறவர்கள் தெருவீதிகளில் மட்டுமல்ல, உங்கள் அக்கம்பக்கத்திலும் இருப்பார்கள்; உங்கள் நண்பர்களிலும், உங்களுடைய சொந்த உறவினர்களிலும் இருப்பார்கள்.

இருவருக்கிடையே புகுந்து சண்டையைத் தூண்டிவிடுவது மிக சுலபம். அது ஓர் அற்ப புத்தி. 

அத்தகைய அற்ப சிந்தை உடையவர்களால் எத்தனை ஊர்களில், எத்தனை எத்தனை குடும்பங்களில் பிரிவினைகளும், விரோதங்களும், படுகொலைகளும் நிகழ்ந்து விடுகின்றன.

சண்டை ஏற்படுகின்ற இடங்களில் சமாதானம் செய்கின்றவர்களைக் காண்பது அரிது.

ஆனால் அந்தப் பண்பு தெய்வீகமானது. அதனால் தானே ‘சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்’ என்று சீனாய் மலைப் பொழிவில் இயேசு பெருமான் கூறினார்.

கைகேயி தாயின் வரத்தால் ராமன் காடு செல்ல நேரிடுகிறது. அதை அறிந்த லக்குவன் சீறி எழுகிறான். 

உலகை, மகளிரை, யாவரையும் அழித்து விடுவேன் என்று கோபம் கொப்பளிக்கப் பேசுகிறான்.

அப்போது, மகுடமிழந்த ராமன் இதுதான் சரியான தருணமென்று, லக்குவனின் ஆத்திரத்தை மேலும் தூண்டிவிடவில்லை. மாறாக, லக்குவனைப் பார்த்து,

நதியின் பிழையன்று; நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த
விதியின் பிழைநீ இதற்கு என்னை வெகுண்டது

என்று கூறி அவனை அமைதிப்படுத்துகிறான்.

ராமன் மிகமிகப் பக்குவமாகச் சொன்னதைக் கேட்ட பிறகு தான் தம்பி லக்குவனின் கோபம் தணிந்தது.

கலவரம் ஏற்படும் தருணங்களில், சமாதானம் பண்ண அங்கு ஒருவர் இருந்து விட்டால் போதும். மிகப்பெரிய ஆபத்துகளைத் தவிர்த்து விடலாம். ஆனால் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் செயல்படுகிறவர்கள் தான் ஏராளம்.

அவர்களால் அல்லவா பகையும் வெறுப்பும் சண்டைகளும் அணையா நெருப்பாய் பல்வேறு இடங்களில் பற்றி எரிந்து கொண்டே இருக்கின்றன.

இனி உறவே இல்லை என்று சொந்தங்கள் பிரிந்து செல்வதற்கும், ஒருவரை ஒருவர் அழிக்கத் துடிப்பதற்கும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள கோபம் தான் காரணம்.

தற்கொலை என்றாலும், கொலைக்குற்றம் என்றாலும் ஓர் உணர்ச்சி வேகத்தில் நிகழ்ந்து விடுவது தான். அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மறைமுகமாகவோ நேரடியாகவோ யாரோ ஒருவரால் அல்லது சிலரால் தூண்டி விடப்படுகிறார்கள் என்பதே உண்மை.

சாதாரண தகராறு ஆகட்டும், வெட்டுக்குத்துச் சண்டையாகட்டும், கோபம் தான் அடிப்படை. தனியே அமர்ந்து சில நிமிடம் சிந்தித்தால் கோபத்தின் வேகம் குறைந்து விடும். 

ஆனால் சுற்றியிருப்பவர்கள் சிந்திக்க விட மாட்டார்கள். இருவர் முட்டி மோதிக் கொண்டால், அதுதான் அவர்களுக்குத் திருவிழாக்கூத்து.

ஒரு வீட்டின் அண்ணன் தம்பிக்குள் மோதல் வந்து விட்டால், பக்கத்து வீட்டுக்காரன் எட்டிப் பார்ப்பான். வழியில் தம்பியைச் சந்தித்து மெல்ல பேச்சுக் கொடுப்பான்.

‘என்ன தான் இருந்தாலும் உங்க அண்ணன் அப்படி செஞ்சிருக்கக் கூடாது. நீங்களும் இவ்வளவு ஏமாளியா இருக்கக் கூடாது. 

பேசிப் பாருங்க. சரிப்பட்டு வரலேன்னா, இருக்கவே இருக்காரு எனக்குத் தெரிஞ்ச வக்கீல்’ என்று அவன் காதில் ஓதிவிடுவான்.

அடுத்தவர்களின் குடும்பம் ரெண்டுபட்டால் சிலருக்கு மகிழ்ச்சி. அதற்கு அவர்கள் கையாள்கின்ற ஒரே உத்தி, ஒருவர் மீது ஒருவருக்குக் கோபத்தைத் தூண்டி விடுவது தான். அப்படிப்பட்டவர்களிடம் நமக்கு அதிக எச்சரிக்கை அவசியம்.

பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகளையும், பிள்ளைகளுக்கு எதிராகப் பெற்றோரையும் கோபமூட்டி முறுக்கேற்றி விடுகின்ற உறவினர்கள் உண்டு.

உங்கள் குடும்பத்திற்குள் நுழைந்து கபட நாடகம் ஆடுவார்கள். நம்பி விடாதீர்கள்.

மாமியாருக்கு விரோதமாக மருமகளையும், மருமகளுக்கு விரோதமாக மாமியாரையும் கிளப்பி விடப்பார்ப்பார்கள். செவி சாய்த்து விட்டால் நஷ்டம் உங்கள் குடும்பத்திற்கு தான். மறந்து விடாதீர்கள்.

சிலர் உங்களைக் கோபப்படுத்தி வம்புச் சண்டைக்கு இழுப்பார்கள். அந்நேரம் நீங்கள் அமைதி காத்துக் கொள்ளுங்கள். அதுதான் உத்தமம்.

ஒருமுறை புத்தபெருமானைக் காண வந்த ஒருவன், அவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தான். அவன் பேசியவை, கேட்போரையெல்லாம் கோபமடையச் செய்தன.

ஆனால் புத்தரோ எதுவும் பேசவில்லை. அவன் கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார். சீடர்கள் அவரை வியப்புடனும் கேள்விக்குறியுடனும் பார்த்தனர்.

வந்தவன் போனபின்பு புத்தர் சீடர்களைப் பார்த்து ‘உங்களுக்கு ஒருவன் ஒரு பொருளைக் கொடுக்கிறான். 

அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அது திரும்ப அவனிடம் தானே போய்ச் சேரும். 

நிந்தனைகளும் அப்படித்தான். அவற்றை நாம் பொருட்படுத்தாவிடில், அவையும் அவனையே தான் சாரும்’ என்றார்.

கோபம் பொல்லாதது. கோபமூட்டுதல் கொடியது. இந்த இரண்டிற்கும் நம்மை விலக்கிக் கொள்வது நம் வாழ்க்கைக்கு நல்லது.

அவசர யுகம், பரபரப்பான வாழ்க்கை, அன்றாட பணிச்சுமைகள், பல்வேறு பிரச்சினைகள், நேர நெருக்கடி எல்லாவற்றையும் சமாளித்தாக வேண்டும்.

சில சமயங்களில் கோபம் வந்து விடுவது சகஜம் தான். ஆனால் ஒருவர் கோபப்படும் போது இன்னொருவர் அவரை அமைதிப்படுத்த வேண்டும்.

கணவன் கோபப்பட்டால் மனைவி பொறுத்துக் கொள்வதில் ஒன்றும் கவுரவக் குறைச்சல் இல்லை. 

மனைவி கோபப்பட்டால் கணவன் பொறுமை காப்பதில் ஒன்றும் தன்மானப் பிரச்சினை இல்லை. உங்களிடையே மூன்றாம் நபர் தலையிட்டு கலகத்தை உண்டுபண்ண விட்டுவிடாதீர்கள்.

உங்கள் பிள்ளைகளுக்குள் சண்டை ஏற்பட்டால், அவர்களை சமாதானப்படுத்தி அன்பை வளரச் செய்யுங்கள். 

அதைவிட்டு, ஒரு பிள்ளையைப் பாராட்டியும் ஒரு பிள்ளையைப் பழித்தும் பேசத் தொடங்கி விட்டால், அவர்களுக்குள் பகையை உருவாக்கி உங்கள் குடும்பத்திற்கு நீங்களே சரிவை ஏற்படுத்துகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

கோபத்தை வளரச் செய்தால் அது உள்ளங்களைப் பிரிக்கும். உறவுகளை அறுக்கும். பகையை வளர்த்துக் குடும்பங்களைத் தகர்க்கும்.

எனவே எப்போதும் நல்லவற்றைச் செய்யுங்கள். கோபத்தைத் தணியச் செய்வது மிகப்பெரிய தர்மம். அதனால் அன்பு பெருகும். உறவுகள் தழைக்கும். நன்மைகள் பிறக்கும்.

சுக்ரீவன் நல்லவன் தான். ஆனால் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவன். கள் மயக்கத்தால், தான் வாக்கு கொடுத்திருந்தபடி குறித்த காலத்தில் ராமனுக்கு உதவ வானரப்படையுடன் அவன் வந்து சேரவில்லை.

எனவே ராமன் கோபம் கொள்கிறான். சுக்ரீவன் நன்றி மறந்தான் என்று எண்ணிய ராமன், தன் தம்பி லக்குவனை அனுப்பி கிட்கிந்தையைக் கலக்கச் சொல்கிறான்.

வாலியைக் கொன்ற அம்பு என்னும் கூற்றம் இங்கு தான் இருக்கிறது என்று எச்சரிக்கை செய்யவும் சொல்கிறான்.

சூழ்நிலையை உணர்ந்த அனுமன், அதைத் தணிப்பதற்காக, தாரையை வானர மகளிருடன் அனுப்பி லக்குவனின் வழியை மறித்து நிற்க வைக்கிறான். 

எதிரே நின்ற தாரையின் கோலம் ‘பார்குலா முழுவெண் திங்கள் பகல் வந்த படிவம்’ போல ஒளியிழந்து காணப்படுகிறது. அதைக் கண்ட லக்குவனுக்குச் சுக்ரீவன் மீதிருந்த சீற்றம் தணிகிறது.

தாரையின் விதவைக் கோலம் கண்டதும் ‘இளையராம் எனை ஈன்ற தாயர்’ என்று தன் தாய்மார்களை எண்ணிக் கண் கலங்கினானாம் லக்குவன்.

அனுமனின் ஏற்பாட்டினால் என்ன அருமையான மாற்றம்! சற்று சிந்தியுங்கள்! கோபமூட்டுவதை நிறுத்திடுங்கள்.

உறவுகளை வளர்த்திடுங்கள். அதுதான் வாழ்வெனச் சொல்லுகிறேன். நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்திடச் சொல்லுகிறேன்

Thursday, 21 January 2021

துாித உணவுகள் உட்கொள்வதை ஏன் தவிா்க்க வேண்டும்?

துாித உணவுகள் உட்கொள்வதை ஏன் தவிா்க்க வேண்டும்? எப்பொழுதாவது ஒரு முறை துாித உணவு சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது. ஆனால் அதை ஒரு வாடிக்கையாக மாற்றும் போதுதான் வைட்டமின் சத்துக் குறைபாடு ஏற்படும் என்று டையட் போடியம் (Diet Podium) என்ற அமைப்பின் நிறுவனரும், முழுமையான ஊட்டச்சத்து நிபுணருமான சீக்கா மகாஜன் என்பவா் தொிவிக்கிறாா். துாித உணவுகள் உட்கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டால் உடலுக்கு என்னன்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கு பாா்க்கலாம் சொிமான அமைப்பை பாதிக்கும் மற்றும் இரத்த சா்க்கரையை அதிகாிக்கும் பெரும்பாலான துாித உணவுகள் மற்றும் திண்பண்டங்களில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் நாா்ச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். துாித உணவுகள் நமது சொிமான அமைப்பில் பாதிப்பு ஏற்படுத்துவதால், கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாறி நமது இரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகின்றன. அதனால் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாிக்கிறது. நமது உடல் சீராக இருந்தால் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு சாியாக இருக்கும். இரத்தத்தில் சா்க்கரையின் அளவு சாியாக இருக்கும் போது நமது சிறுநீரகங்கள் பாதுகாப்பாக இருக்கும். உடல் எடை மற்றும் சுவாச அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் துாித உணவுகளில் கலோாிகள் அதிகமாக இருப்பதால், அவற்றை வாடிக்கையாக சாப்பிடும் போது உடல் எடை அதிகாிக்கும். உடல் பருமன் அதிகாித்தால் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும் உடலில் அதிக சதை போடும் போது இதயம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளில் அதிக அழுத்தம் ஏற்படும். அதனால் நடைப்பயிற்சி, படிகளில் ஏறுதல் மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவற்றில் ஈடுபடும் போது மூச்சுத் திணறல் ஏற்படும். சா்க்கரை மற்றும் கொழுப்பு அதிகாித்தல் பொதுவாக துாித உணவுகளில் சா்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அவற்றில் கலோாிகள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கும். மேலும் துாித உணவுப் பானங்களிலும் சா்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 12 அவுன்ஸ் சோடாவில் 8 தேக்கரண்டி அளவு சா்க்கரை இருக்கும். இது 140 கலோாிகள் மற்றும் 39 கிராம் சா்க்கரையின் அளவிற்கு சமமானது ஆகும். பொதுவாக உணவுகளைப் பதப்படுத்தும் போது மாற்றியமைக்கப்பட்ட கொழுப்பு (Trans fat) தயாாிக்கப்படுகிறது. இந்த கொழுப்பு மோசமான ஒன்றாகும். ஆகவே இந்த கொழுப்பை உண்பதைத் தவிா்ப்பது நல்லது. ஏனெனில் மாற்றியமைக்கப்பட்ட கொழுப்பு கலந்த உணவுகளை அடிக்கடி உண்டால் அது நமது உடலில் உள்ள தீங்கிழைக்கக்கூடிய கொழுப்பின் அளவை அதிகாித்து, நல்ல கொழுப்பின் அளவை குறைக்கும். அதனால் அது உடலில் டைப்-2 வகை நீரிழிவு நோயை ஏற்படுத்தும். அதோடு இதயம் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்தும். சோடியத்தின் அளவை அதிகாித்தல் கொழுப்பு, சா்க்கரை மற்றும் உப்பு (சோடியம்) ஆகியவை அதிகமாக கலந்து தயாாிக்கப்படும் துாித உணவுகள் சிலருக்கு மிகவும் சுவையாக தோன்றலாம். ஆனால் உப்பு அதிகமாக சோ்க்கப்பட்ட உணவுகள், உடலில் உள்ள நீா்ச்சத்தை அதிகாிக்கும். அதனால் துாித உணவுகளை சாப்பிட்ட பின்பு உடலில் வீக்கம் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு. அதிக உப்பு உள்ள உணவு இரத்த கொதிப்பு அல்லது இரத்த அழுத்தம் உள்ளவா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதாவது உப்பு இரத்த அழுத்தத்தை அதிகாித்து இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். நாா்ச்சத்து இல்லாமை பொதுவாக துாித உணவுகளில் நாா்ச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். அதற்கு காரணம் துாித உணவுகளில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சோ்க்கப்படுவதில்லை. ஆனால் பழங்கள், காய்கறிகள், உடைக்கப்படாத தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளில்தான் நாா்ச்சத்து அதிகம் இருக்கிறது. சாண்விட்ச், ராப்ஸ் மற்றும் ஹாம்பா்கா் போன்ற துாித உணவுகளை சமைக்க வெள்ளை ரொட்டி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த வெள்ளை ரொட்டியில் நாா்ச்சத்து இருப்பதில்லை. அதனால் மேற்சொன்ன உணவுகளில் நாா்ச்சத்து இருக்காது என்பதே உண்மை. முடிவு நாம் வெளியில் அதாவது பொிய உணவு விடுதிகளில் அமா்ந்து சாப்பிட்டாலும் அல்லது துாித உணவு கடைகளில் நின்று கொண்டு சாப்பிட்டாலும், அவற்றில் ஊட்டச்சத்துகள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவை குறைவாகவே இருக்கும். ஆனால் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவில் போதுமான அளவு நாா்ச்சத்து, புரோட்டீன், ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் இருக்கும். அவை நமக்கு ஆரோக்கியத்தைத் தருவதோடு, நமது உடலை நோய்கள் அண்டவிடாமல் பாதுகாக்கும். ஆகவே வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை உண்பதே ஆரோக்கியத்தைத் தரும்.

Wednesday, 20 January 2021

தியானம் - ஒரு முழு பார்வை

தியானம் - ஒரு முழு பார்வை


தியானம் மனதிற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது, தியானம் செய்து வரும் போது நமக்குள் மட்டுமல்ல, நம் அருகில் உள்ளவர்களுக்கும் இதன் அலைகள் பரவத் தொடங்கும்.

அமரும் நிலை
தியானத்திற்கு முக்கியமானது அமரும் நிலை. எந்த நிலையில் வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம்.

ஆனால் அடிக்கடி அசையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நாற்காலியிலோ அல்லது தரையிலோ அமர்ந்து கொள்ளலாம்.

எந்த இடம் நமக்கு உட்கார வசதியாக உள்ளதோ அங்கு அமர்ந்து கொள்ளலாம். ஆரம்ப காலங்களில் சற்று அமைதியான இடம் தேடி அமர்வது நல்லது.

வசதியாக அமர்ந்த பின் இரண்டு கைகளை சேர்த்து வைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக் கொள்ளுங்கள்.

உடலையும், மனதையும் இறுக்கமின்றித் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தர் அமர்ந்திருக்கும் முறைப்படி அமருவோமானால் நமக்குள் ஒரு சக்தி வளையம் உருவாவதை நம்மால் உணர முடியும்.

உடலின் ஆரவாரங்கள் மெல்ல அடங்கும் வேளையில் உள்ளுணர்வு தன் அடுத்த நிலை நோக்கி செல்ல ஆரம்பிக்கும்.

மனம் என்பது நம் எண்ணங்களை சேகரித்து வைத்திருக்கும் ஒரு அறை அவ்வளவு தான்.

நமது எண்ணங்களை சேகரித்து வைத்து அதில் உள்ள ஏதாவது எண்ணத்தைப் பற்றி நமக்கு அவ்வப்போது எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருப்பது தான் மனதின் வேலை.

மூளையில் உள்ள நினைவாற்றலை சேமித்து வைத்து அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொள்வது போல மனமும் நம் எண்ணங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும், நம் அனுமதியின்றி.

மனதின் இந்த நிலையைக் கடந்து செல்ல வேண்டும் என்றால் நாம் நமது மூச்சுக் காற்றினை கவனிக்க வேண்டும்.

நமது ஆன்மாவின் இயல்பான குணம் கவனித்தல், ஆகவே நாமும் மூச்சை கவனிக்கத் தேவையாய் இருக்கிறது.

மேலும் மூச்சிற்கும் உயிருக்கும் இடையே ஒரு ஆழ்ந்த தொடர்பு உள்ளது. ஆகவே மூச்சை கவனிப்பதன் மூலம் நம் உயிரும் கவனம் பெறுகிறது.

இந்த மூச்சை கவனிக்கும் பயிற்சியை நாம் ஒரு உடற்பயிற்சி போல செய்யக் கூடாது. மூச்சு உள்ளே வருவதும் போவதும், அதன் இயல்பிலேயே இருக்க வேண்டியது அவசியம். வெறுமனே சுவாசத்தின் பாதையை கவனித்தால் மட்டுமே போதுமானது.

அமைதியாக அமர்ந்து மூச்சை கவனிக்கும் நேரத்தில் பல வித எண்ணங்கள் நம்மை நோக்கி வரும். ஆனாலும் அதனைப் புறக்கணித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மூச்சில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

மூச்சை கவனிக்க கவனிக்க எண்ணங்கள் குறைவதுடன் மூச்சு விடுதலும் சீராகக் குறைந்து விடும்

இதன் பின்னர் பிரபஞ்ச சக்தி நம்மோடு தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும். பிரபஞ்ச சக்தி நமது உச்சந்தலையில் உள்ள சஹஸ்ரஹாரா எனும் சக்கிரத்தின் வழியே நம் உடல் வழி பயணிக்க ஆரம்பிக்கும்.

72000 நாடிகள் அல்லது சக்தி குழாய்கள் வழியே பிரபஞ்ச சக்தி பரவுகிறது, இந்த நிலைக்கு சக்தி நிலை என்று பெயர்.

பிரபஞ்ச சக்தியை உள்வாங்கிக் கொள்ளும் இந்த சக்தி குழாய்கள் நமது உச்சந்தலையில் இருந்து தான் ஆரம்பிக்கின்றன.

இந்த சக்தி குழாய்கள் நமது உடலெங்கும் பூமியைத் துளைக்கும் வேர்களென ஊடுருவி இருக்கின்றன. இதன் மூலம் தெய்வீகத்தின் பூக்கள் நம்முள் மலரத் தொடங்குகின்றன.

நாம் சாதாரணமாக உறங்கும் போதும் தியானத்தின் போதும் இந்த சக்திக் குழாய்கள் பிரபஞ்ச சக்தியை சேகரிக்கின்றன, இதன்மூலமே நம் அன்றாட சக்தி செலவழிக்கும் செயல்கள் நடந்தேறுகிறது.

நம்முள் உருவாகும் எண்ணங்களின் அளவு வைத்துத் தான் பிரபஞ்ச சக்தியை நம் உடல் அனுமதிக்கிறது. எண்ணங்கள் அதிகமாக இருந்தால் பிரபஞ்ச சக்தியை நம்மால் குறைவாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும்.

பிரபஞ்ச சக்தியின் அளவு குறையக் குறைய நமது சக்தி நிலைகள் பழுதுபடுகின்றன. இதனால் வெற்றிடம் ஏற்படுகின்றது. இதுவே சிலகாலம் கழித்து நோயாக மாறுகிறது.

ஆக நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு முதல் காரணம் நம் உடலில் தேவையான அளவு பிரபஞ்ச சக்தி இல்லாதது தான்.

தியானத்தின் மூலம் அபிரிமிதமான பிரபஞ்சசக்தி நம் உடலுக்குள் நுழைந்து அதன் வெற்றிடங்களை சுத்தப்படுத்துகிறது. இதன் மூலம் நோய்கள் குணப்படுகின்றன.

நாம் பிரபஞ்ச சக்திகளை உள்வாங்கத் தொடங்கும் போது நம் தலைப்பகுதியில் ஒரு அழுத்தத்தை உணர முடியும். அல்லது நம் உடல் முழுதும் பாரமாகி விடுவது போன்ற நிலை ஏற்படும்.

இடைவிடாத பிரபஞ்ச சக்தியின் பாய்ச்சலால் நம் வெற்றிடங்கள் சுத்தப்படுத்தப்படுகிற போது அங்கு ஒருவித வலியோ அல்லது அரிப்போ ஏற்படுகிறது.

சில சமயங்களில் நம் உடலின் பல பகுதிகளில் நமக்கு வலி ஏற்படும். தீவிரமான தியானங்கள் மூலம் இந்த வலிகள் காணாமல் போய்விடும்.

தியானத்தின் மூலம் நாம் பிரபஞ்ச சக்தியை பெற்றுக் கொள்ளப் பெற்றுக் கொள்ள நம் உடல் நோய்களில் இருந்தும் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடும்...

கேள்வியும் நானே பதிலும் நானே

வெ. இறையன்பு அவர்கள் எழுதிய *கேள்வியும் நானே பதிலும் நானே!* புத்தகத்திலிருந்து....... 

 *சில உண்மைகளை பட்டென்று கூறுவது தான் மற்ற புத்தகங்களிலிருந்து இந்தப் புத்தகத்தைப் பிரித்துக் காட்டுகிறது.*

 அவற்றில் சில கேள்வி பதில்களை இங்கு பார்ப்போம்.

1. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எது?
நாட்டுப்பண்ணும்! தமிழ்த்தாய் வாழ்த்தும்!

2. எது சிறந்த உதவி?
செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது!

3. நமக்கு நாமே எதிரியாவது எப்போது?
உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடும்போது! நாம் செய்த நல்ல செயல்கள் எல்லாம் காற்றில் பறந்து போய்விடுகின்றன. அப்போது நமக்கு நாமே எதிரியாகிவிடுகிறோம்.

4. மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்?
தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது!

5. குழந்தைகள் வளர்ப்பில் உள்ள இன்றைய பிரச்சினைகள் என்ன?
இன்றுள்ள குழந்தைகள் எந்த வரிசையிலும் காத்திருப்பதற்காகப் பழக்கப்படவில்லை. அனைத்தையுமே ஆன்லைன் மூலம் பெற்றுவிடுகிறார்கள். எனவே அவர்கள் ஏமாற்றுத்துக்குப் பழக்கப்படாமல் வாழ்கிறார்கள். ஒரு சின்ன தோல்வி ஏற்பட்டாலும் அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.,

6. நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
மௌனத்தை…

7. அன்பு முக்கியமா… அறம் முக்கியமா?
அறத்துக்கும் அன்பே ஆதாரம்!

*8. நண்பர்களுக்கும்… சந்தர்ப்பவாதிகளுக்கும் என்ன வேறுபாடு?*
*நெருக்கடி வந்தால் அதை உதவி செய்யும் சந்தர்ப்பமாகக் கருதுபவர்கள் நண்பர்கள். விட்டுவிட்டு ஓடுபவர்கள் சந்தர்ப்பவாதிகள்.*

*9. புறம் சொல்பவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?*
*புறம் சொல்வது சிலருக்குப் பொழுதுபோக்கு.*

*” ஆற்றில் குளித்து முடித்துவிட்டு வந்த யானை ஒன்று, அழுக்கில் புரண்டு வந்த பன்றியைப் பார்த்ததும் ஓரமாக ஒதுங்கிச் சென்றது.*

*உடனே பன்றி, ‘ இவ்வளவு பெரிய உருவத்தோடு இருந்தாலும்… என்னைப் பார்த்து பயந்துவிட்டாயே! ‘ என்று பரிகசித்தது.*

*அதற்கு யானை, ‘ நீ மோதினால் மறுபடி குளிக்க வேண்டுமே என யோசிக்கிறேன். உன்னை ஒரே மிதியில் என்னால் துவம்சம் செய்ய முடியும்! ” என்று சொன்னது. புறம் சொல்பவர்களிடம் அந்த யானையைப் போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பன்றிகளின் சேறு நம் உடலெல்லாம் ஒட்டிக் கொள்ளும்.*

10. சோம்பலின் உச்சம் எது?
கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட கொட்டாவி வருவதற்காகக் காத்திருப்பது.

11. ஒருவரை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சில உண்மைகளைப் பேசாமல் இருந்தால் போதும்!

12. துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா?
பலருக்கும் முடியும்… அடுத்தவர்களுக்கு வரும்போது!

*13. தகுதியற்றவர்களும் புகழ் பெறக் காரணம் என்ன?*
*தகுதியற்றவர்களை ஆர்வப்பட்டு தூக்கிப் பிடிப்பதாலும் தரம் பிரிக்கத் தெரியாதவர்களை அவசரப்பட்டு முன்மொழிவதாலும் இது போன்ற விபத்துக்கள் நிகழ்வதுண்டு. ஆனால் அது புகழ் அல்ல. பிரபலம் மட்டுமே! வளரும்போது வாத்துக்களுக்கும் அன்னத்துக்குமான வேறுபாடு வெளியில் தெரிந்துவிடும். கண்கள் சொல்லாததைக் காலம் சொல்லிவிடும்.*

*14. திருமணம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?*
*கணவனும் மனைவியும் நண்பர்களைப் போல பழக வேண்டும். ஒரே ரசனையை உள்ளவர்களைவிட … அடுத்தவர் ரசனையை மதிக்கத் தெரிந்தவர்களே மிக நல்ல இணையர்கள்.*

15. எது அழகு?
செயற்கை ஒப்பனைகளின்றி இயல்பாக இருப்பதே அழகு!

16. பிரபலமானவர்களைப் பற்றி ஏன் வதந்திகள் அதிகமாக உருவாகின்றன?
பிரபலமானவர்கள் மீது மக்களின் இதயத்தில் ஒரு சின்ன பொறாமை இருக்கிறது. அவர்களைப் போல நாமும் பலருக்குத் தெரியவில்லையே என்கிற வருத்தம் மேலிடுகிறது. அவர்களுக்கு அவதூறு நேர்ந்தால்… தாங்கள் அவர்களைவிடப் புனிதமானவர்கள் என்பதைப் போன்ற எண்ணமும் சமாதானமும் ஏற்படுகிறது. அந்தப் பரபரப்பை வைத்தே வதந்திகளைப் பரப்புகிறவர்கள் இயங்குகிறார்கள்.

17. எந்தப் பஞ்சம் கொடியது?
இயற்கை தவறுவதால் ஏற்படும் பஞ்சத்தை விட… இருப்பவர்கள் பதுக்குவதால் உண்டாகும் பஞ்சம் கொடியது.

18. யாருடைய மரணம் அழகு?
இறந்த பிறகும் வாழ்பவர்களின் மரணம்!

19. எப்போது தவறுகள் மறைகின்றன?
அவற்றை மனதார ஒத்துக்கொள்ளும் போது!

20. கோபத்திலும் யார் அழகாக இருப்பார்கள்?
கோபம் வருகிற போது உலக அழகிகள் கூட பொலிவை இழந்துவிடுவார்கள். ஆனால் கோபத்திலும் அழகாக இருப்பவர்கள் குழந்தைகள் !