Thursday, 21 January 2021

துாித உணவுகள் உட்கொள்வதை ஏன் தவிா்க்க வேண்டும்?

துாித உணவுகள் உட்கொள்வதை ஏன் தவிா்க்க வேண்டும்? எப்பொழுதாவது ஒரு முறை துாித உணவு சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது. ஆனால் அதை ஒரு வாடிக்கையாக மாற்றும் போதுதான் வைட்டமின் சத்துக் குறைபாடு ஏற்படும் என்று டையட் போடியம் (Diet Podium) என்ற அமைப்பின் நிறுவனரும், முழுமையான ஊட்டச்சத்து நிபுணருமான சீக்கா மகாஜன் என்பவா் தொிவிக்கிறாா். துாித உணவுகள் உட்கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டால் உடலுக்கு என்னன்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கு பாா்க்கலாம் சொிமான அமைப்பை பாதிக்கும் மற்றும் இரத்த சா்க்கரையை அதிகாிக்கும் பெரும்பாலான துாித உணவுகள் மற்றும் திண்பண்டங்களில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் நாா்ச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். துாித உணவுகள் நமது சொிமான அமைப்பில் பாதிப்பு ஏற்படுத்துவதால், கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாறி நமது இரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகின்றன. அதனால் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாிக்கிறது. நமது உடல் சீராக இருந்தால் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு சாியாக இருக்கும். இரத்தத்தில் சா்க்கரையின் அளவு சாியாக இருக்கும் போது நமது சிறுநீரகங்கள் பாதுகாப்பாக இருக்கும். உடல் எடை மற்றும் சுவாச அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் துாித உணவுகளில் கலோாிகள் அதிகமாக இருப்பதால், அவற்றை வாடிக்கையாக சாப்பிடும் போது உடல் எடை அதிகாிக்கும். உடல் பருமன் அதிகாித்தால் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும் உடலில் அதிக சதை போடும் போது இதயம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளில் அதிக அழுத்தம் ஏற்படும். அதனால் நடைப்பயிற்சி, படிகளில் ஏறுதல் மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவற்றில் ஈடுபடும் போது மூச்சுத் திணறல் ஏற்படும். சா்க்கரை மற்றும் கொழுப்பு அதிகாித்தல் பொதுவாக துாித உணவுகளில் சா்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அவற்றில் கலோாிகள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கும். மேலும் துாித உணவுப் பானங்களிலும் சா்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 12 அவுன்ஸ் சோடாவில் 8 தேக்கரண்டி அளவு சா்க்கரை இருக்கும். இது 140 கலோாிகள் மற்றும் 39 கிராம் சா்க்கரையின் அளவிற்கு சமமானது ஆகும். பொதுவாக உணவுகளைப் பதப்படுத்தும் போது மாற்றியமைக்கப்பட்ட கொழுப்பு (Trans fat) தயாாிக்கப்படுகிறது. இந்த கொழுப்பு மோசமான ஒன்றாகும். ஆகவே இந்த கொழுப்பை உண்பதைத் தவிா்ப்பது நல்லது. ஏனெனில் மாற்றியமைக்கப்பட்ட கொழுப்பு கலந்த உணவுகளை அடிக்கடி உண்டால் அது நமது உடலில் உள்ள தீங்கிழைக்கக்கூடிய கொழுப்பின் அளவை அதிகாித்து, நல்ல கொழுப்பின் அளவை குறைக்கும். அதனால் அது உடலில் டைப்-2 வகை நீரிழிவு நோயை ஏற்படுத்தும். அதோடு இதயம் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்தும். சோடியத்தின் அளவை அதிகாித்தல் கொழுப்பு, சா்க்கரை மற்றும் உப்பு (சோடியம்) ஆகியவை அதிகமாக கலந்து தயாாிக்கப்படும் துாித உணவுகள் சிலருக்கு மிகவும் சுவையாக தோன்றலாம். ஆனால் உப்பு அதிகமாக சோ்க்கப்பட்ட உணவுகள், உடலில் உள்ள நீா்ச்சத்தை அதிகாிக்கும். அதனால் துாித உணவுகளை சாப்பிட்ட பின்பு உடலில் வீக்கம் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு. அதிக உப்பு உள்ள உணவு இரத்த கொதிப்பு அல்லது இரத்த அழுத்தம் உள்ளவா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதாவது உப்பு இரத்த அழுத்தத்தை அதிகாித்து இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். நாா்ச்சத்து இல்லாமை பொதுவாக துாித உணவுகளில் நாா்ச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். அதற்கு காரணம் துாித உணவுகளில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சோ்க்கப்படுவதில்லை. ஆனால் பழங்கள், காய்கறிகள், உடைக்கப்படாத தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளில்தான் நாா்ச்சத்து அதிகம் இருக்கிறது. சாண்விட்ச், ராப்ஸ் மற்றும் ஹாம்பா்கா் போன்ற துாித உணவுகளை சமைக்க வெள்ளை ரொட்டி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த வெள்ளை ரொட்டியில் நாா்ச்சத்து இருப்பதில்லை. அதனால் மேற்சொன்ன உணவுகளில் நாா்ச்சத்து இருக்காது என்பதே உண்மை. முடிவு நாம் வெளியில் அதாவது பொிய உணவு விடுதிகளில் அமா்ந்து சாப்பிட்டாலும் அல்லது துாித உணவு கடைகளில் நின்று கொண்டு சாப்பிட்டாலும், அவற்றில் ஊட்டச்சத்துகள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவை குறைவாகவே இருக்கும். ஆனால் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவில் போதுமான அளவு நாா்ச்சத்து, புரோட்டீன், ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் இருக்கும். அவை நமக்கு ஆரோக்கியத்தைத் தருவதோடு, நமது உடலை நோய்கள் அண்டவிடாமல் பாதுகாக்கும். ஆகவே வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை உண்பதே ஆரோக்கியத்தைத் தரும்.

Wednesday, 20 January 2021

தியானம் - ஒரு முழு பார்வை

தியானம் - ஒரு முழு பார்வை


தியானம் மனதிற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது, தியானம் செய்து வரும் போது நமக்குள் மட்டுமல்ல, நம் அருகில் உள்ளவர்களுக்கும் இதன் அலைகள் பரவத் தொடங்கும்.

அமரும் நிலை
தியானத்திற்கு முக்கியமானது அமரும் நிலை. எந்த நிலையில் வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம்.

ஆனால் அடிக்கடி அசையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நாற்காலியிலோ அல்லது தரையிலோ அமர்ந்து கொள்ளலாம்.

எந்த இடம் நமக்கு உட்கார வசதியாக உள்ளதோ அங்கு அமர்ந்து கொள்ளலாம். ஆரம்ப காலங்களில் சற்று அமைதியான இடம் தேடி அமர்வது நல்லது.

வசதியாக அமர்ந்த பின் இரண்டு கைகளை சேர்த்து வைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக் கொள்ளுங்கள்.

உடலையும், மனதையும் இறுக்கமின்றித் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தர் அமர்ந்திருக்கும் முறைப்படி அமருவோமானால் நமக்குள் ஒரு சக்தி வளையம் உருவாவதை நம்மால் உணர முடியும்.

உடலின் ஆரவாரங்கள் மெல்ல அடங்கும் வேளையில் உள்ளுணர்வு தன் அடுத்த நிலை நோக்கி செல்ல ஆரம்பிக்கும்.

மனம் என்பது நம் எண்ணங்களை சேகரித்து வைத்திருக்கும் ஒரு அறை அவ்வளவு தான்.

நமது எண்ணங்களை சேகரித்து வைத்து அதில் உள்ள ஏதாவது எண்ணத்தைப் பற்றி நமக்கு அவ்வப்போது எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருப்பது தான் மனதின் வேலை.

மூளையில் உள்ள நினைவாற்றலை சேமித்து வைத்து அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொள்வது போல மனமும் நம் எண்ணங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும், நம் அனுமதியின்றி.

மனதின் இந்த நிலையைக் கடந்து செல்ல வேண்டும் என்றால் நாம் நமது மூச்சுக் காற்றினை கவனிக்க வேண்டும்.

நமது ஆன்மாவின் இயல்பான குணம் கவனித்தல், ஆகவே நாமும் மூச்சை கவனிக்கத் தேவையாய் இருக்கிறது.

மேலும் மூச்சிற்கும் உயிருக்கும் இடையே ஒரு ஆழ்ந்த தொடர்பு உள்ளது. ஆகவே மூச்சை கவனிப்பதன் மூலம் நம் உயிரும் கவனம் பெறுகிறது.

இந்த மூச்சை கவனிக்கும் பயிற்சியை நாம் ஒரு உடற்பயிற்சி போல செய்யக் கூடாது. மூச்சு உள்ளே வருவதும் போவதும், அதன் இயல்பிலேயே இருக்க வேண்டியது அவசியம். வெறுமனே சுவாசத்தின் பாதையை கவனித்தால் மட்டுமே போதுமானது.

அமைதியாக அமர்ந்து மூச்சை கவனிக்கும் நேரத்தில் பல வித எண்ணங்கள் நம்மை நோக்கி வரும். ஆனாலும் அதனைப் புறக்கணித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மூச்சில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

மூச்சை கவனிக்க கவனிக்க எண்ணங்கள் குறைவதுடன் மூச்சு விடுதலும் சீராகக் குறைந்து விடும்

இதன் பின்னர் பிரபஞ்ச சக்தி நம்மோடு தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும். பிரபஞ்ச சக்தி நமது உச்சந்தலையில் உள்ள சஹஸ்ரஹாரா எனும் சக்கிரத்தின் வழியே நம் உடல் வழி பயணிக்க ஆரம்பிக்கும்.

72000 நாடிகள் அல்லது சக்தி குழாய்கள் வழியே பிரபஞ்ச சக்தி பரவுகிறது, இந்த நிலைக்கு சக்தி நிலை என்று பெயர்.

பிரபஞ்ச சக்தியை உள்வாங்கிக் கொள்ளும் இந்த சக்தி குழாய்கள் நமது உச்சந்தலையில் இருந்து தான் ஆரம்பிக்கின்றன.

இந்த சக்தி குழாய்கள் நமது உடலெங்கும் பூமியைத் துளைக்கும் வேர்களென ஊடுருவி இருக்கின்றன. இதன் மூலம் தெய்வீகத்தின் பூக்கள் நம்முள் மலரத் தொடங்குகின்றன.

நாம் சாதாரணமாக உறங்கும் போதும் தியானத்தின் போதும் இந்த சக்திக் குழாய்கள் பிரபஞ்ச சக்தியை சேகரிக்கின்றன, இதன்மூலமே நம் அன்றாட சக்தி செலவழிக்கும் செயல்கள் நடந்தேறுகிறது.

நம்முள் உருவாகும் எண்ணங்களின் அளவு வைத்துத் தான் பிரபஞ்ச சக்தியை நம் உடல் அனுமதிக்கிறது. எண்ணங்கள் அதிகமாக இருந்தால் பிரபஞ்ச சக்தியை நம்மால் குறைவாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும்.

பிரபஞ்ச சக்தியின் அளவு குறையக் குறைய நமது சக்தி நிலைகள் பழுதுபடுகின்றன. இதனால் வெற்றிடம் ஏற்படுகின்றது. இதுவே சிலகாலம் கழித்து நோயாக மாறுகிறது.

ஆக நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு முதல் காரணம் நம் உடலில் தேவையான அளவு பிரபஞ்ச சக்தி இல்லாதது தான்.

தியானத்தின் மூலம் அபிரிமிதமான பிரபஞ்சசக்தி நம் உடலுக்குள் நுழைந்து அதன் வெற்றிடங்களை சுத்தப்படுத்துகிறது. இதன் மூலம் நோய்கள் குணப்படுகின்றன.

நாம் பிரபஞ்ச சக்திகளை உள்வாங்கத் தொடங்கும் போது நம் தலைப்பகுதியில் ஒரு அழுத்தத்தை உணர முடியும். அல்லது நம் உடல் முழுதும் பாரமாகி விடுவது போன்ற நிலை ஏற்படும்.

இடைவிடாத பிரபஞ்ச சக்தியின் பாய்ச்சலால் நம் வெற்றிடங்கள் சுத்தப்படுத்தப்படுகிற போது அங்கு ஒருவித வலியோ அல்லது அரிப்போ ஏற்படுகிறது.

சில சமயங்களில் நம் உடலின் பல பகுதிகளில் நமக்கு வலி ஏற்படும். தீவிரமான தியானங்கள் மூலம் இந்த வலிகள் காணாமல் போய்விடும்.

தியானத்தின் மூலம் நாம் பிரபஞ்ச சக்தியை பெற்றுக் கொள்ளப் பெற்றுக் கொள்ள நம் உடல் நோய்களில் இருந்தும் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடும்...

கேள்வியும் நானே பதிலும் நானே

வெ. இறையன்பு அவர்கள் எழுதிய *கேள்வியும் நானே பதிலும் நானே!* புத்தகத்திலிருந்து....... 

 *சில உண்மைகளை பட்டென்று கூறுவது தான் மற்ற புத்தகங்களிலிருந்து இந்தப் புத்தகத்தைப் பிரித்துக் காட்டுகிறது.*

 அவற்றில் சில கேள்வி பதில்களை இங்கு பார்ப்போம்.

1. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எது?
நாட்டுப்பண்ணும்! தமிழ்த்தாய் வாழ்த்தும்!

2. எது சிறந்த உதவி?
செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது!

3. நமக்கு நாமே எதிரியாவது எப்போது?
உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடும்போது! நாம் செய்த நல்ல செயல்கள் எல்லாம் காற்றில் பறந்து போய்விடுகின்றன. அப்போது நமக்கு நாமே எதிரியாகிவிடுகிறோம்.

4. மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்?
தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது!

5. குழந்தைகள் வளர்ப்பில் உள்ள இன்றைய பிரச்சினைகள் என்ன?
இன்றுள்ள குழந்தைகள் எந்த வரிசையிலும் காத்திருப்பதற்காகப் பழக்கப்படவில்லை. அனைத்தையுமே ஆன்லைன் மூலம் பெற்றுவிடுகிறார்கள். எனவே அவர்கள் ஏமாற்றுத்துக்குப் பழக்கப்படாமல் வாழ்கிறார்கள். ஒரு சின்ன தோல்வி ஏற்பட்டாலும் அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.,

6. நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
மௌனத்தை…

7. அன்பு முக்கியமா… அறம் முக்கியமா?
அறத்துக்கும் அன்பே ஆதாரம்!

*8. நண்பர்களுக்கும்… சந்தர்ப்பவாதிகளுக்கும் என்ன வேறுபாடு?*
*நெருக்கடி வந்தால் அதை உதவி செய்யும் சந்தர்ப்பமாகக் கருதுபவர்கள் நண்பர்கள். விட்டுவிட்டு ஓடுபவர்கள் சந்தர்ப்பவாதிகள்.*

*9. புறம் சொல்பவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?*
*புறம் சொல்வது சிலருக்குப் பொழுதுபோக்கு.*

*” ஆற்றில் குளித்து முடித்துவிட்டு வந்த யானை ஒன்று, அழுக்கில் புரண்டு வந்த பன்றியைப் பார்த்ததும் ஓரமாக ஒதுங்கிச் சென்றது.*

*உடனே பன்றி, ‘ இவ்வளவு பெரிய உருவத்தோடு இருந்தாலும்… என்னைப் பார்த்து பயந்துவிட்டாயே! ‘ என்று பரிகசித்தது.*

*அதற்கு யானை, ‘ நீ மோதினால் மறுபடி குளிக்க வேண்டுமே என யோசிக்கிறேன். உன்னை ஒரே மிதியில் என்னால் துவம்சம் செய்ய முடியும்! ” என்று சொன்னது. புறம் சொல்பவர்களிடம் அந்த யானையைப் போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பன்றிகளின் சேறு நம் உடலெல்லாம் ஒட்டிக் கொள்ளும்.*

10. சோம்பலின் உச்சம் எது?
கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட கொட்டாவி வருவதற்காகக் காத்திருப்பது.

11. ஒருவரை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சில உண்மைகளைப் பேசாமல் இருந்தால் போதும்!

12. துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா?
பலருக்கும் முடியும்… அடுத்தவர்களுக்கு வரும்போது!

*13. தகுதியற்றவர்களும் புகழ் பெறக் காரணம் என்ன?*
*தகுதியற்றவர்களை ஆர்வப்பட்டு தூக்கிப் பிடிப்பதாலும் தரம் பிரிக்கத் தெரியாதவர்களை அவசரப்பட்டு முன்மொழிவதாலும் இது போன்ற விபத்துக்கள் நிகழ்வதுண்டு. ஆனால் அது புகழ் அல்ல. பிரபலம் மட்டுமே! வளரும்போது வாத்துக்களுக்கும் அன்னத்துக்குமான வேறுபாடு வெளியில் தெரிந்துவிடும். கண்கள் சொல்லாததைக் காலம் சொல்லிவிடும்.*

*14. திருமணம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?*
*கணவனும் மனைவியும் நண்பர்களைப் போல பழக வேண்டும். ஒரே ரசனையை உள்ளவர்களைவிட … அடுத்தவர் ரசனையை மதிக்கத் தெரிந்தவர்களே மிக நல்ல இணையர்கள்.*

15. எது அழகு?
செயற்கை ஒப்பனைகளின்றி இயல்பாக இருப்பதே அழகு!

16. பிரபலமானவர்களைப் பற்றி ஏன் வதந்திகள் அதிகமாக உருவாகின்றன?
பிரபலமானவர்கள் மீது மக்களின் இதயத்தில் ஒரு சின்ன பொறாமை இருக்கிறது. அவர்களைப் போல நாமும் பலருக்குத் தெரியவில்லையே என்கிற வருத்தம் மேலிடுகிறது. அவர்களுக்கு அவதூறு நேர்ந்தால்… தாங்கள் அவர்களைவிடப் புனிதமானவர்கள் என்பதைப் போன்ற எண்ணமும் சமாதானமும் ஏற்படுகிறது. அந்தப் பரபரப்பை வைத்தே வதந்திகளைப் பரப்புகிறவர்கள் இயங்குகிறார்கள்.

17. எந்தப் பஞ்சம் கொடியது?
இயற்கை தவறுவதால் ஏற்படும் பஞ்சத்தை விட… இருப்பவர்கள் பதுக்குவதால் உண்டாகும் பஞ்சம் கொடியது.

18. யாருடைய மரணம் அழகு?
இறந்த பிறகும் வாழ்பவர்களின் மரணம்!

19. எப்போது தவறுகள் மறைகின்றன?
அவற்றை மனதார ஒத்துக்கொள்ளும் போது!

20. கோபத்திலும் யார் அழகாக இருப்பார்கள்?
கோபம் வருகிற போது உலக அழகிகள் கூட பொலிவை இழந்துவிடுவார்கள். ஆனால் கோபத்திலும் அழகாக இருப்பவர்கள் குழந்தைகள் !