Friday, 3 March 2023

ஆளி விதைகளிகள் 11 அற்புத பயன்கள்

ஆளி விதைகளிகள் 11 அற்புத பயன்கள் 

ஆளி விதை ஓர் அட்டகாசமான உணவுதான். தாவர உணவுப் பொருட்களிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது இது. நமது உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான இந்தக் கொழுப்பு அமிலங்களை, நமது உடலால் சுயமாக உற்பத்தி செய்ய முடியாது.

இந்தக் கொழுப்பு அமிலம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் (Essential fatty acid – EFA). ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன் ஒமேகா 6-ம் இருப்பதால், செல் செயல்பாடுகளை ஆரோக்கிய மாக வைத்திருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், இதயத்துக்குப் பாதுகாப்பையும் ஆளி விதை உறுதிப்படுத்துகிறது. உடல் நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

இதில், அதிக அளவு மக்னீசியம், பாஸ்பரஸ், செம்பு, தியாமின், மாகனீஸ் மற்றும் நார் சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால் காயங்களினால் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது. இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள ஃபைபர் செரிமான பிரச்சனையை போக்குகிறது.

ஆளி விதைகளின் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

புற்றுநோயை எதிர்த்து போராடும்

ஆளி விதையில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போல செயல்பட்டு புற்று நோய் பிரச்சனையை எதிர்த்து போராடும் வல்லமை உடையது. மேலும் இதில் உள்ள லிக்னன்கள், உடலினுள் கெமிக்கல்களால் மாற்றப்பட்டு உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும்.

இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மார்பகம், புரோஸ்டேட், குடல் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும்.

நீரிழிவு நோய்க்கு பயன்படும் ஆளி விதை

ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மேம்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஹீமோகுளோபின் ஆய்வுகளின் போது, இரத்தத்தில் 2 வகையான நீரிழிவு நோய்கள் கணடறியப்படுகின்றன. இரண்டு வகையான நீரிழிவு பிரச்சனைக்கு ஆளி விதை அற்புத மருந்தாக பயன்படுகிறது. மேலும் இதில் உள்ள நார்சத்து செரிமான பிரச்சனைகளை எளிதில் போக்கும்.

இதயத்தின் நண்பன்

ஒமேகா 3 நிரம்பியுள்ள ஆளி விதைகள் தமனிகள் கெட்டிப்படுவதை தவிர்க்கின்றன. வெள்ளை அணுக்களை இரத்த நாளங்களின் உள் வளையங்களுடன் இணைத்து வைப்பதன் மூலம் தமனிகளில் கழிவுகள் சேருவதையும் ஒமேகா 3 தவிர்க்கிறது. இந்த ஒமேகா 3 ஆளி விதைகளில் பெருமளவு குவிந்துள்ளது. இதனால் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது.

வீக்கங்களை குறைக்கும்
2 தேக்கரண்டி ஆளி விதையில் 140% சத்துக்கள் நிரம்பியுள்ளது. மேலும், இதில் ஒமேகா 3 பெருமளவு உள்ளதால் காயங்களால் ஏற்படும் வீக்கங்களை விரைவில் குணப்படுத்துகிறது. அழற்சியினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வை தருகிறது.

உடல் எடை குறைத்தல்

ஆளி விதைகளில் நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளதால் இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். இதனை சரியான அளவில் எடுத்து கொண்டால் பசியெடுக்காது . மேலும் இது உடல் எடையை கச்சிதமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. இதில் உள்ள லிக்னன்ஸ் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் தேவையற்ற கொழுப்புகளை

எரிக்க உதவும். அதுமட்டுமல்லாமல் சிறந்த ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் அளிக்கிறது.

செரிமான பிரச்சனையை தீர்க்கும்
ஆளி விதைகளில் ஏராளமான நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளது. இதனால் செரிமான பிரச்சனையை எளிதில் தீர்க்கும். ஆளி விதை முக்கியமாக மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். ஆளி விதை அரைத்து மாவாக்கிஉண்ணும் போது, கூடவே நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். இது சப்பாட்டின் அளவை கூட்டும், தினமும் தொடர்ந்து செய்தால்தான் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். ஒமேகா 3 பெருமளவு உள்ளதால் காயங்களால் ஏற்படும் வீக்கங்களை குறைக்கும்.

மாதவிடாய் பிரச்சனைகள்

ஆளி விதையில் லிக்னன் என்ற தாவர வேதிப்பொருள் இருப்பதால் பெண்களின் ஹார்மோன் சமநிலையைப் பாதுகாத்து, மாதவிடாய் சுழற்சியை இயல்பாக வைக்கிறது. ஓழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளை சரி செய்யும்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு..
ஆளி விதையில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 நிரம்பியுள்ளதால் கர்ப்பிணிகளுக்கு தேவையான புரோட்டின் சத்துக்கள் கிடைக்கிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது பயன்படுகிறது. மருத்துவர்கள் இதனை இவர்களுக்கு பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது.

சருமம் பொலிவு பெற

ஆளிவிதையில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலம் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. இது வறண்ட சருமத்தை மிருவாக்கும், தினமும் உடலில் ஏற்படும் மாசுக்களை நீக்குகிறது. இதில் உள்ள மூலப்பொட்கள் முகம் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தருகிறது. சுருக்கங்களை போக்கும், முகப்பருக்களை நீக்கும்,

அடர்த்திய முடி
ஆளிவிதையில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலம் முடி பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது. இது முடி உடையும் பிரச்சனை, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வலிமையான முடிகளை வளர செய்கிறது.

2 கப் தண்ணீர் சூட வைத்து அதில் 4 தேக்கரண்டி ஆளி விதைகள் போட்டு வேக வைக்க வேண்டும். பின்னர் சூடு தனிந்த பின்பு அதனை எடுத்து தினமும் உச்சந்தலையில் பூசிக் கொண்டால் வலிமையான முடி வளரும்.

ஆளி விதைகளில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்

புரோட்டீன்கள்
கொழுப்பு அமிலங்கள்
நார்ச்சத்துக்கள்
நியாஸின்
பேண்டோதெனிக் அமிலம்
பிரிடாக்சின்
ரிபோஃப்ளாவினோடு
தையமின்
வைட்டமின் ஏ
வைட்டமின் சி
வைட்டமின் இ
வைட்டமின் கே
சோடியம்
பொட்டாசியம்
கால்சியம்
காப்பர்
அயன்
மக்னீசியம்
மாங்கனீசு
துத்தநாகம்

இந்த ஒரே ஒரு ஆளி விதையில் ஏராளமான அற்புத மூலப்பொருட்கள் ஒளிந்துள்ளது. இதனை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான பயன்களை அடையலாம்.

ஆளி விதைகளை எப்படி உள்கொள்வது

ஆளி விதைகளை உறவைத்து பின்னர் அதனை 10 நிமிடங்கள் சூடு தண்ணீர் அல்லது 2 மணி நேரம் குளிர்ந்த நீரில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
இதனை முழுமையாக உட்கொள்வதன் மூலம் முழுவதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது,

ஆளி விதைகளை நீங்கள் காலை நேரத்தில் எடுத்து கொண்டால் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்கும். இதனை சாப்பிடுவதற்கு உகந்த நேரமும் காலை தான். இதனை சாலடுகளிலும் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

ஆளி விதைகளை வறுத்தும் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடல் சூட்டை தணிக்கும்.
பேலியோ டயட் இருப்பவர்களும் இந்த ஆளி விதைகளை சாப்பிடலாம்.

எவ்வளவு தான் நன்மை இருந்தாலும் இந்த ஆளி விதைகளில் சில தீமைகளும் உள்ளது.

ஆளி விதைகளின் பக்க விளைவுகள் Side effects of flax seeds
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் ஒரேடியாக உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. சிறிது சிறிதாகத்தான் சேர்த்துக்கொள்ள வேண்டும்

இரத்தத்தில் உள்ள சர்க்கரை நிலைகள்
ஆளிவிதைகள் சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பதால் நீரிழிவு
நோயினால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்து கொள்பவர்கள் இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

குறைந்த இரத்த அழுத்தம்

ஆளிவிதைகள் இரத்த அழுத்தத்தை அதிகமாக குறைக்கும். இதனால் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்து கொள்பவர்கள் கண்டிப்பதாக இதனை தவிர்க்க வேண்டும்.

இரத்தம் உறைதல்
ஆளிவிதைகள் இரத்தத்தை மெதுவாக தான் உறைய வைக்கும். இதனால் இரத்தப்போக்கு கோளாறுகள் இதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரத்திற்கு முன்பும் ஆளி விதைகளை உட்கொள்ளக் கூடாது.

ஹார்மோன் மற்றும் உணர்திறன் நிலைகள் அதிகரிக்கும்
ஆளி விதைகள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை அதிகப்படுத்தும். இதனால் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் வரவாய்ப்புள்ளது.

கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் பிரச்சினைகள்

ஆளி விதைகளை கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.

முடிவுரை
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த ஆளி விதைகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் வல்லமை உள்ளது. உடல் எடையை குறைக்கும் அற்புத மருந்தாகவும் உள்ளது. மேலே கூறிய இதன் நன்மைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்

ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம்

நான்கு நாட்களில் உங்கள் #ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம் !!

! ரஷ்யாவின் பாரம்பர்ய மருத்துவம்.

பொதுவாக நாம் இதயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஈரலுக்கு கொடுப்பதில்லை . ஏனெனில் இதயம் வேலை செய்வது நின்றால் நம் உயிர் உடலில் தங்காது என்பதாலேயே இந்தப் பயம் . ஆனால் இதயத்தை , ஈரலுடன் ஒப்பிடும் போது இதயத்தின் இயக்கம் சாதாரணமானதுதான் . இதயம் ஓயாது சுருங்கி , விரிந்து இயங்கும் சதைப் பிண்டமே , ஆனால் ஈரல் ஒரு வேதியியல் தொழிற்சாலை போல் ஓயாது இயங்குகிறது.ஈரல் வேலையை நிறுத்திவிட்டால் நாம் ஒரு இரு சக்கர வாகனப் புகையே நம்மைக் கொல்லப் போதுமானது. உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான்

கிராமங்களில் சொல்வார்கள் எனக்கு அந்த கடுமையான சமயத்தில் ஈரக் குலையே நடுங்கிவிட்டது என்பார்கள் .அதாவது ஈரல் என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. காரணமற்ற கவலை (கவலையே இல்லை என்று கவலைப்படுவார்கள் ) ஈரல் குறைபாட்டின் அறிகுறி.

உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.அல்லோபதி மருந்துகளே அதிகம் கல்லீரலைக் கொல்லுபவை . ஏனெனில் அவை கடும் விஷம் கொண்டவை . அவை கொடுக்கும் நோக்கத்தை நிறைவேறுகிறதோ இல்லையோ கடைசியில் அவை கல்லீரலில் அவை விஷமாக தங்கி ஈரலை அதிகம் கொல்லுகின்றன.

இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பசித்த பின் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தாலும் , கல்லீரலில் கொழுப்புகள் அதிகரித்துவிடும்.

கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைக் கீழே காண்போம்!!

வாய் துர்நாற்றம்:

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். வாய்துர்நாற்றம் சாதாரணமானது என்று பற்பசை விளம்பரங்களில் வருவதைப் பார்த்தால் , மக்களை எவ்வளவு முட்டாள்களாக நினைக்கிறார்கள் என்று தோன்றுகிறது .

கண்களைச் சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் மற்றும் பார்வைக்குறைபாடுள்ள கண்கள்

கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்சனை அதிகம் ஏற்படும் .எண்ணெய்ப் பண்டங்களையும், கொழுப்புப் பொருட்களையும் சாப்பிடும் சமயம் அதிக நெஞ்செரிச்சல் உண்டாகும் .கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருப்பதால் கல்லீரல் வீக்கமடையும் ,இதனால் மேல் வயிறு வீக்கமடையும் . இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்

வெளுத்த சருமம்:

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள மெலனின் நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்

அடர்ந்த சிவந்த மற்றும் மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்:

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த கரு நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

மஞ்சள் நிற கண்கள்:

கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது,அல்லது பித்தப்பையில் உள்ள பித்த நீர் (இதுதான் மஞ்சள் நிறத்தை அளிக்கிறது )உடலில் கலந்து , உடலை விஷமித்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்று பொருள் , பித்தப்பையில் கல் உண்டாகி பித்தப்பையின் வாயிலை அடைத்துவிட்டாலும் இது நிகழும்.எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

வாய் கசப்பு:

கல்லீரலில் பித்தப்பையில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இப்பொழுது ஈரலை எவ்வாறு சுத்தம் செய்வது என பார்ப்போம்.

உலர்ந்த திராட்சை எனப்படும் கிஸ்மிஸ் உங்கள் ஈரலை சுத்தப்படுத்தும் ஒரு எளிய மருந்தாகும்.

காலையில் எழுந்தவுடன் அரை கப் உலர்ந்த திராட்சயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவவும். மறுபடியும் சூடாக்கி ஆறவைத்த தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுத்த நாள் காலையில் முதலில் வெறும் வயிற்றில் ஊறவைத்த தண்ணீரை குடிக்கவும். அத்துடன் ஊறவைத்த உலர்திராட்சையையும் சாப்பிடவும். பிறகு படுக்கையில் ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் ஒரு பாட்டிலில் மிதமான சூடு தண்ணீர் நிறைத்த ஹாட் வாட்டர் பேக் அல்லது பாட்டில் கொண்டு வலது பாகம் வயிற்றில் சூடுபடும் படியாக கிடந்து ஒய்வெடுக்க வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் வீதம் ஒரு மாதம் செய்யவும். இந்த முறையில் வருடத்தில் இரண்டு தடவை மட்டும் செய்ய வேண்டும். அதற்க்கு மேல் செய்யக்கூடாது.

ஈரல் பாதிப்பு நீங்க மற்றொரு எளிய மருந்து:

ஈரல் நோயைக் குணப்படுத்த, சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், ஈரல் நோய் குணமாகும்.

ஏலக்காய்

பசி  மற்றும்  நோய் தீர்க்கும் மருந்து  #ஏலக்காய்  

  சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், கேக், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் - செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

1   ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.

2   ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

3   சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.

4   ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

5   ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

6   தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

7   ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

8  ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.

9   நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.

10   ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.

11   வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

12   சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.

13   ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.

14   அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

15   சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

16   ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.

17   திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.

18   ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும்.

19   செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.

20   வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படும்.

21   வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். 

22   பக்கவாதம் வராது.  

23   ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம்.
  
24   அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெறலாம்.

25   குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

26   ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

27   மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

28   நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். 
           ***அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.***

29   வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

30  விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

31   வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

32   பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது.