Friday, 31 January 2014

ராகு காலம், எமகண்டம், குளிகை


கிழமை
இராகு
எமகண்டம்
குளிகை
சூலம்
பரிகாரம்
ஞாயிறு
04.30 – 06.00pm
12.00 – 01.30pm
03.00 – 04.30pm
மேற்கு
வெல்லம்
திங்கள்
07.30 – 09.00am
10.30 – 12.00am
01.30 – 03.00pm
கிழக்கு
தயிர்
செவ்வாய்
03.00 – 04.30pm
09.00 – 10.30am
12.00 – 01.30pm
வடக்கு
பால்
புதன்
12.00 – 01.30pm
07.30 – 09.00am
10.30 – 12.00am
வடக்கு
பால்
வியாழன்
01.30 – 03.00pm
06.00 – 07.30am
09.00 – 10.30am
தெற்கு
எண்ணெய்
வெள்ளி
10.30 – 12.00am
03.00 – 04.30pm
07.30 – 09.00am
மேற்கு
வெல்லம்
சனி
09.00 – 10.30am
01.30 – 03.00pm
06.00 – 07.30am
கிழக்கு
தயிர்

நவகிரக வழிபாடு

கேது பகவான்
கேதுத் தேவே
கீர்த்தித் திருவே
பாதம் போற்றி
பாபம் தீர்ப்பாய்
வாதம், வம்பு
வழக்குகள் இன்றி
கேதுத் தேவே
கேண்மையாய் ரஷி

சனிபகவான்
சங்கடந் தீர்க்கும்
சனி பகவானே
மங்களம் பொங்க
மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாக
நெறியில்
இச்சகம் வாழ
இன்னருள் தா தா

ராகுபகவான்
அரவெனும் ராகு
அய்யனே போற்றி
கரவா தருள்வாய்
கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள்புரி
அனைத்திலும்
வெற்றி
ராகுக்கனியே
ரம்மியா போற்றி

சுக்ர பகவான்
சுக்கிரமூர்த்தி
சுபமிக யீவாய்
வக்கிரமின்றி
வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர
வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய்
அடியார்க்கருளே

புதபகவான்    
இதமுற வாழ
இன்னல்கள் நீக்கு
புத பகவானே
பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய்
பண்ணொலியானே
உதவியே அருளும்
உத்தமா போற்றி

சூரிய பகவான்
சீலமாய்வாழச்
சீரருள் புரியும்
ஞாலம் புகழும்
ஞாயிறே போற்றி
சூரியா போற்றி
சுதந்திரா போற்றி
வீரியா போற்றி
வினைகள்
களைவாய்

சந்திர பகவான்
எங்கள் குறைகள்
எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி
திருவருள் தருவாய்
சந்திரா போற்றி
சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய்
சதுரா போற்றி

அங்காரக பகவான்
சிறப்புறு மணியே
செவ்வாய்த் தேவே
குறையிலாது
அருள்வாய்
குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய்
மலரடி போற்றி
அங்காரகனே
அவதிகள் நீக்கு

குருபகவான்
குணமிகு வியாழக்
குரு பகவானே
மணமுடன் வாழ
மகிழ்வுடனருள்வாய்
ப்ருகஸ்பதி
வியாழப் பரகுரு
நேசா
க்ரகதோஷம் இன்றிக்
கடாஷித்தருள்வாய்

ஶ்ரீ அபிராமி அந்தாதி

ஶ்ரீ அபிராமி அந்தாதி

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராதநட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணியி லாதஉடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாதவாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உத விப்பெரிய
தொண்டரோடுகூட்டுக்கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே                                             
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி அபிராமியே