ஶ்ரீ அபிராமி அந்தாதி
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராதநட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணியி லாதஉடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாதவாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உத விப்பெரிய
தொண்டரோடுகூட்டுக்கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே
No comments:
Post a Comment