ரகசியம் (secret.tv)






ü இயற்கை விதிதான் ஈர்ப்பு விதி. புவியீர்ப்புவிசை விதியைப் போலவே இதுவும் பாரபட்சமற்றது
ü தொடர்ச்சியான எண்ணங்கள் மூலமாக நீங்கள் அழைப்பு விடுத்தால் ஒழிய, எதுவுமே உங்கள் வாழ்க்கை அனுபவமாக ஆகாது.
ü நீங்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று உங்களையே
கேட்டுக் கொள்ளுங்கள். நாம் என்ன சிந்தித்துக்
கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு உடனடியாக அறிவிக்கும் சிறந்த சாதனம் நம்முடைய உணர்ச்சிகள்
தான்
ü மோசமான உணர்வுடன் இருக்கும் அதே நேரத்தில் நல்ல எண்ணங்களைச் சிந்திப்பது இயலாத
காரியம்.
ü உங்கள் எண்ணங்கள் உங்களது அலைவரிசையைத் தீர்மானிக்கும். உங்களது உணர்வுகள் நீங்கள் எந்த அலைவரிசையில்
இருக்கிறீர்கள் என்பதை உடனடியாக உங்களுக்கு எடுத்துரைக்கும். நீங்கள் மோசமான உணர்வுடன் இருக்கும்போது, மேலும் மோசமான விஷயங்களைக் கவர்ந்திழுக்கும்
அலைவரிசையில் இருக்கிறீர்கள். நல்ல உணர்வு நிலையில்
இருக்கும்போது மேலும் நல்ல விஷயங்களைச் சக்தியுடன் கவர்ந்திழுக்கிறீர்கள்.
ü இனிய நினைவுகள், இயற்கை அல்லது உங்கள்
உள்ளம் கவர்ந்த இசை போன்ற இரகசிய மனமாற்றிகள் நொடிப்பொழுதில் உங்கள் உணர்வுகளை மாற்றி
உங்கள் அலைவரிசையில் மாற்றம் ஏற்படுத்த வல்லவை.
ü அன்பு உணர்வுதான் நீங்கள் வெளிப்படுத்துவதிலேயே மிகவும் உயர்ந்த அலைவரிசை, எவ்வளவு அதிகமான அன்பை வெளிப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமான சக்தியை நீங்கள் உற்பத்தி செய்வீர்கள்.
ü அலாவுதீனின் பூதத்தைப்போல ஈர்ப்பு விதியும் உங்களுடைய ஒவ்வோர் ஆணையையும் நிறைவேற்றும்
ü நீங்கள் விரும்பியவற்றை மூன்று எளிய படிகள் மூலமாக உருவாக்க, படைப்பியக்கச் செயல்முறை உங்களுக்கு உதவும். அவை கேளுங்கள்,
நம்புங்கள் மற்றும் பெறுங்கள் ஆகியவை (ASK, BELIEVE & RECEIVE)
ü உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடன் கேட்கும்போது, உங்கள் விருப்பம் குறித்த தெளிவை நீங்கள் பெறுவதற்கு
ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச்
சமானம்.
ü நீங்கள் கேட்டது ஏற்கனவே கிடைத்துவிட்டது போல நடந்து கொள்வது, பேசுவது,
மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும். கிடைத்துவிட்டது என்ற அலைவரிசையில் நீங்கள்
ஒளிப்பரப்பும் போது அதை நீங்கள் பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை, நிகழ்வுகளை மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.
ü உங்களது விருப்பம் நிறைவேறிவிட்ட பிறகு நீங்கள் எப்படி உணர்வீர்களோ அத்தகைய
மன உணர்வை உண்டாக்கிக் கொள்வது பெற்றுக் கொள்ளுதலின் முக்கியமான அம்சம். மகிழ்ச்சியான மனநிலையுடன் இருப்பது உங்களுக்கு
வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் அலைவரிசையில் உங்களை வைத்துவிடும்.
ü உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால்,
கவனத்தை எடைக் குறைப்பில் காட்டாதீர்கள். மாறாக கச்சிதமான எடையில் உங்களது கவனத்தைக்
குவியுங்கள். உங்களுடைய கச்சிதமான
எடையை உணர்வுபூர்வமாக உணருங்கள். அது உங்களை நோக்கித்
தானாகவே ஓடிவரும்.
ü நீங்கள் விரும்புபவற்றை உங்களுக்கு அளித்திடப் பிரபஞ்சத்திற்குச் சொடுக்கும்போடும்
நேரம் கூட ஆகாது. ஒரு டாலரைத் தருவிப்பது
எவ்வளது எளிதோ அதே அளவு எளிதானது தான் ஒரு மில்லியன் டாலரைத் தருவிப்பதும்.
ü ஒரு டம்ளர் காபி அல்லது கார் நிறுத்தும் இடம் போன்ற சிறிய விஷயங்களில் துவங்குவது, ஈர்ப்பு விதி மீது நம்பிக்கை ஏற்படச் சிறந்த
வழி, ஏதாவது சிறிய விஷயம் ஒன்று தேவை என்று சக்தியுடன்
கேளுங்கள். ஈர்க்க்க் கூடிய உங்கள்
சக்தியை நீங்கள் உணர உணர பெரிய விஷயங்களை ஈர்ப்பது பெரிய காரியமாக இருக்காது.
ü நாளைய தினம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதை முன்கூட்டியே சிந்தனை மூலம் உருவாக்கிக்
கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையையும்
உங்களது நோக்கப்படி உங்களால் அமைத்துக் கொள்ள முடியும்.
·
எதிர்பார்ப்பு ஓர் ஆற்றல்மிக்க ஈர்ப்பு சக்தி. உங்களுக்கு வேண்டியதை மட்டும் எதிர்பாருங்கள்
வேண்டாதவற்றைத் தவிர்த்து விடுங்கள்
·
உங்களுடைய சக்தியைச் சரியான முறையில் இடம்பெயரச்
செய்து, நீங்கள் வேண்டுபவற்றை
உங்கள் வாழ்வில் அதிகமாகக் கொண்டு வருவதற்குச் சிறந்த செயல்முறை நன்றியுணர்தல் ஆகும்.
·
நீங்கள் வேண்டும் என்று விரும்புபவற்றிற்கு, முன்னதாக நன்றி தெரிவிக்கும் செயல் உங்களுடைய
ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும்
சக்தி வாய்ந்த சமிக்கையை அனுப்பும்.
·
உங்களுக்கு வேண்டியதை நீங்கள் மகிழ்ச்சியாக
அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை உங்கள் மனத்தில் உருவாக்குவதுதான் அக்க்காட்சிப்படைப்பாகும். அகக்காட்சிப் படைப்பில் ஈடுபடும்போது அவற்றை
இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் சக்திமிக்க எண்ணங்களையும் உருவாக்குகிறீர்கள். நீங்கள் உங்கள் மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ
அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்.
·
ஈர்ப்பு விதியை உங்களுக்குச் சாதகமான உபயோகப்படுத்திக்
கொள்ள அதை ஒருமுறை நிகழ்வாக ஆக்காமல் அதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்
·
ஒரு நாளின் இறுதியில், தூங்கப்போவதற்கு முன்பு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை
மனக் கண்ணால் பாருங்கள். ஏதாவது ஒரு நிகழ்வோ அல்லது
தருணமோ நீங்கள் விரும்பியபடி அமையவில்லை என்றால் அதை அழித்துவிட்டு நீங்கள் எப்படி
நிகழ வேண்டும் என்று விரும்பியிருந்தீர்களோ அப்படி நடைபெற்றது போல உங்கள் மனத்தில்
மாற்றி ஓடவிட்டுப் பாருங்கள்.
·
பணத்தை கவர வேண்டுமா செல்வத்தின்மீது கவனத்தை
குவியுங்கள். பணத்தின் பற்றாக்குறை
மீது நீங்கள் கவனம் செலுத்தினால், அதிகப் பணத்தை உங்கள்
வாழ்க்கையில் கொண்டுவருவது இயலாத காரியமாகிவிடும்.
·
உங்களுக்குத் தேவைப்படும் பணம் உங்களிடம் ஏற்கனவே
இருப்பது போன்று பாவனை செய்வதும், கற்பனை செய்து கொள்வதும்
அதைப் பெற உதவும். செல்வம் இருப்பது போன்ற
விளையாட்டில் ஈடுபடுங்கள். பணம் குறித்த உங்களது
மனநிலை மேம்படும். அந்த மனநிலை இன்னும்
சிறப்பானவை உங்கள் வாழ்க்கையை நோக்கிப் பாய வழி வகுக்கும்.
·
தற்போது மகிழ்ச்சியாக இருக்கும் உணர்வு உங்கள்
வாழ்வில் இன்னும் அதிகமான பணத்தை விரைவாகக் கொண்டுவரச் சிறந்த வழி.
·
நீங்கள் விரும்பும் அனைத்தையும் நோக்கி உங்களுக்குள், இது எனக்குக் கட்டுப்படியாகும். அதை என்னால் வாங்க முடியும் என்று கூறிக்கொள்வதை
ஒரு நோக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அது உங்களது எண்ணங்களை மாற்றி, பணம் குறித்த உங்களது மனநிலை மேம்பட உதவும்
·
உங்கள் வாழ்வில் மேலும் பணத்தைக் கொண்டுவர
வேண்டுமெனில் அதைப் பிறருக்குக் கொடுங்கள்.
நீங்கள் பணம் குறித்துப் பெருந்தன்மையாக இருந்து அதை பிறருடன்
மனமகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளும்போது என்னிடம் ஏராளமான பணம் இருக்கிறது என்று தெரிவிக்கிறீர்கள்.
·
உங்களது அஞ்சலில்
/ மின்னஞ்சலில் கிப்ட் வவுச்சர்கள் காசோலைகள் வருவதாக அகக்காட்சியில்
பார்த்துக் கொள்ளுங்கள்.
·
செல்வம் ஒரு பக்கமும், தரித்திரம் ஒரு பக்கமும் இருக்கும் தராசில், செல்வத்தின் பக்கம் உங்கள் எண்ணம் இருக்குமாறு
பார்த்துக் கொள்ளுங்கள். செல்வ செழிப்பு பற்றியே
சிந்தியுங்கள்
·
உறவு ஒன்றைக் கவர்ந்திழுக்க நீங்கள் விரும்பினால்
உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் சூழல்கள் ஆகியவை உங்களுடைய
விருப்பத்தோடு முரண்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
·
உங்களுடைய முதற்கவனமும் முழுக்கவனமும் உங்கள்
மீதே இருக்கட்டும். உங்களை நீங்களே நிரப்பிக்
கொள்ளாவிடில் மற்றவர்களுக்குக் கொடுக்க உங்களிடம் எதுவும் இருக்காது.
·
உங்களுக்கு நீங்களே அன்பும் மரியாதையும் செலுத்திக்
கொள்ளுங்கள். உங்களிடம் அன்பும் மரியாதையும்
செலுத்தும் நபர்களை நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள்.
·
நீங்கள் உங்களைப்பற்றி மோசமாக உணரும்போது, அன்பைத் தடுக்கிறீர்கள். அதோடு உங்களைத் தொடர்ந்து அந்நிலையிலேயே வைத்திருக்கும்
நபர்களையும் சூழல்களையும் கவர்ந்து இழுக்கிறீர்கள்.
·
உங்களிடம் நீங்கள் நேசிக்கும் குணங்களில் கவனம்
செலுத்துங்கள். உங்களிடம் இருக்கும்
மேலும் அதிகமான சிறப்புகளை ஈர்ப்பு விதி உங்களுக்குக் காட்டும்.
·
ஓர் உறவு சரியாகச் செயல்பட வேண்டும் என்றால், அடுத்தவரிடம் நீங்கள் மெச்சும் விஷயங்களில்
கவனம் செலுத்துங்கள். அவர்களுடைய குற்றங்குறைகள்
மீது அல்ல. அவர்களிடம் உள்ள வலுவான
அம்சங்களில் கவனம் செலுத்தினால் அவற்றை மேலும் அதிகமாக நீங்கள் பெறுவீர்கள்
·
ஈர்ப்பு விதியின் நடைமுறைச் செயல்பாட்டின்
நிருபணம்தான் பிளேஸ்போ விளைவு. ஒரு நோயாளி, ஒரு மாத்திரை தன்னைக் குணப்படுத்தும் என்று
நம்பினால், தான் நம்புவதைப் பெறுகிறார்
குணமாகிறார்.
·
வெளியில் என்ன நடந்தாலும் பரவாயில்லை. ஆரோக்கியத்தின் மீது முழுக் கவனம் செலுத்துவதை
நாம் ஒவ்வொருவரும் நம்முள் செய்து கொள்ளலாம்.
·
சிரிப்பு,
மகிழ்ச்சியைக் கவர்ந்திழுக்கிறது. எதிர்மறை விஷயங்களை வெளியேற்றுகிறது. அதிசயமான குணமாதல்களுக்கு வழி வகுக்கிறது.
·
எண்ணங்கள் மூலமும், வியாதிகளை கவனித்து அதற்குக் கவனம் அளிப்பதன்
மூலமும், நாம் நம் உடலில் வியாதிகள்
நிலைதிருக்க வழி வகுக்கிறோம் உங்களுக்கு எப்போதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அது
குறித்துப் பேசாதீர்கள். அவ்வியாதி மேலும் பெருக
பேசுவதைக் கவனிக்கும் போது நீங்கள் அதற்கு ஆற்றல் அளிக்கிறீர்கள். மாறாக உரையாடலை நல்ல விஷயத்திற்குத் திருப்புங்கள். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக உங்கள்
மனத்தில் உருவகப்படுத்தி அந்தச் சக்திமிக்க எண்ணங்களைப் பிரபஞ்சத்திற்கு அனுப்புங்கள்.
·
வயதால் குறித்த சில நம்பிக்கைகள் நம் மனத்தில்
ஆழப் பதிந்துள்ளன. அவற்றை உங்களது மனத்திலிருந்து
வெளியேற்றிவிட வேண்டும். ஆரோக்கியம் மற்றும் மாறாத
இளமை குறித்து கவனம் செலுத்துங்கள்
·
வயதாதல் மற்றும் வியாதி குறித்துச் சமுதாயம்
கொண்டிருக்கும் கருத்துகளுக்குச் செவி சாய்க்காதீர்கள்.
எதிர்மறையான எண்ணங்களால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது
·
எதிர்ப்பது வலுக்கு. ஏனெனில் நீங்கள் மிகுந்த உணர்ச்சியுடன் அதில்
கவனம் செலுத்துவீர்கள். எதை மாற்ற வேண்டுமானாலம்
நீங்கள் உங்களுடைய உள்முகமாக அணுகி உங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மூலமாகப்
புதிய சமிக்கையை வெளிப்படுத்துங்கள்.
·
எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதன்
மூலம் உலகிற்கு உங்களால் எவ்விதத்திலும் உதவி செய்ய முடியாது. உலகின் எதிர்மறை நிகழ்வுகளில் கவனம் செலுத்தும்
போது நீங்கள் அதற்கு மேலும் சக்தியளிப்பதோடு,
உங்களுடைய வாழ்வினுள்ளும் எதிர்மறையான விஷயங்களைக் கொண்டு
வருகிறீர்கள்.
·
உலகின் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்குப்
பதிலாக உங்களது ஆற்றலையும் கவனத்தையும், நம்பிக்கை அன்பு, அபரிமிதம், கல்வி மற்றும் அமைதி ஆகியவற்றிற்கு அளியுங்கள்.
·
நல்ல விஷயங்கள் ஒருபோதும் தீர்ந்து போகாது
ஏனெனில் எல்லோருக்கும் போக உபரியாகவும் ஏராளம் உள்ளது.
வாழ்க்கை அபரிமிதமாக இருத்தல் வேண்டும்.
·
உங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மூலமாக
எல்லையற்ற மூலத்தை அணுகக் கூடிய திறனும், அதை உங்களது அனுபவமாக மாற்றிக் கொள்ளும் சக்தியும் உங்களிடம் இருக்கிறது.
·
உலகிலுள்ள சகலத்தையும் ஆராதனை செய்யுங்கள். ஆசிர்வதியுங்கள்.
அப்படி செய்யும்போது எதிர்மறை விஷயங்களையும் பிணக்குகளையும்
கரைத்துவிடுவீர்கள். மிக உயர்ந்த அலைவரிசையான
அன்பின் அலைவரிசையோடு உங்களை இசைவாகப் பொருத்திக்கொள்வீர்கள்.
·
அனைத்துமே ஆற்றல்தான். நீங்கள் ஆற்றலால் ஆன காந்தம். அதனால் நீங்கள் எல்லாவற்றையும் மின்காந்த ஆற்றலாக
உங்களை நோக்கி இழுக்கிறீர்கள். நீங்கள் வேண்டுபவற்றை
நோக்கி உங்களையும் மின் காந்த ஆற்றலாக மாற்றிக் கொள்கிறீர்கள்.
·
நீங்கள் ஓர் ஆன்மா. ஓர் ஆற்றல்.
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அது தன் வடிவத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும். அதனால் உங்களது பரிசத்தமான சாராம்சம் எப்பொழுதும்
இருந்து வந்துள்ளது. எப்பொழுதும் அப்படியே
இருந்து வரும்.
·
பிரபஞ்சமானது எண்ணித்திலிருந்து பிறக்கிறது. நாம் சிருஷ்டி கர்த்தாக்கள். நாம் நமது தலைவிதியை மட்டும் நிர்ணயிப்பதில்லை. பிரபஞ்சத்தின் தலைவிதியையும் சேர்த்து நிர்ணயிக்கிறோம்.
·
கணக்கிலடங்கா எண்ணிக்கையில் புதுக் கருத்துக்களும்
புதிய யோசனைகளும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து அறிவும்,
அனைத்து கண்டுபிடிப்புகளும் பிரபஞ்ச மனத்தில் சாத்தியக் கூறுகளாக
உலா வந்து கொண்டிருக்கின்றன. மனித மனம் அதிலிருந்து
எடுத்துக் கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
நீங்கள் அனைத்தையும் உங்களது அக உணர்வு நிலையில் அடக்கி வைத்திருக்கிறீர்கள்.
·
நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர்கள். நாம் அனைவரும் ஒன்றே.
·
உங்களது கடந்தகாலக் கஷ்டங்கள், கலாச்சாரக் குறியீடுகள், சமுதாய நம்பிக்கைகள் ஆகியவற்றின் பிடியிலிருந்து
மீளுங்கள். உங்களுக்குத் தகுதியென்று
கருதும் வாழ்க்கையை உங்களுக்காக உருவாக்கிக் கொள்ளும் வல்லமை உங்களுக்கு மட்டும் தான்
உள்ளது.
·
உங்களது அபிலாஷைகளை நிஜமாக்க ஒரு சுருக்கு
வழி உள்ளது. அது நீங்கள் என்ன வேண்டும்
என்று விரும்புகிறீர்களோ அதை மூல உண்மையாகப் பார்ப்பது.
·
உங்களது சக்தி உங்களது எண்ணத்தில்தான் உள்ளது. அதனால் விழிப்புடன் இருங்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நினைவில் வைத்திருக்க
வேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
நன்றி thesecret.tv
No comments:
Post a Comment