Friday, 27 March 2015

உடற்பயிற்சி முறைகள்



இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.
=========================================================
(யோகா பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க,இந்த செய்தியை அனைவருக்கும் Share செய்யவும்.)
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர்.
ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.
இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.
இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.
ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
மகராசனம் (மகரம்–முதலை), சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி), சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ), மச்சாசனம் ( மச்சம் – மீன் ), கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )
இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :
பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )
பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு,
நாவாசனம் ( நாவா – படகு ), தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )
இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.
இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.
பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.
இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.
தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.
இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.
பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்.
இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.
1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.
1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.
இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.
யோகம் என்றால் என்ன?
=====================
யோகம் என்ற சொல் 'யுஜ்' என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு "ஒருங்கிணைத்தல்" அல்லது "எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்" என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம் தமிழில் தவம் அல்லது ஜபம் எனப்படும். சிவபெருமானுக்கு யோகி என்று மற்றொரு பெயரும் உண்டு. எனவே யோகத்தின் தலைவனாகவும், பிறப்பிடமாகவும் சிவபெருமானைக் குறிப்பிடலாம். சிவபெருமான் ஆதியில் மகேந்திர மலையில் தமிழ்நாட்டு முனிவர்கள் நால்வருக்கு ஒரு மரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்தார் என்று தேவாரத்திலும் திருவாசகத்திலும் நன்கு எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. சிவபெருமான் இந்த நான்கு முனிவர்களுக்கு காட்சி அளித்தது. தட்சிணாமூர்த்தம் என்று கூறப்படும். அந்த தட்சிணாமூர்த்தம் ஆறில் சிவபிரான் ஞானதட்சிணாமூர்த்தியாகவும், யோக தட்சிணாமூர்த்தியாகவும் காட்சி அளித்துள்ளார். யோக தீட்சை என்பது குரு யோக மார்க்கத்தால் சீடனது உடலுள் பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்து சிவன் திருவடியில் சேர்ப்பிக்கும் தீட்சை வகையாகும்.
அறிவியல் கலை
யோகம் என்பது மக்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கண்ட ஓர் அறிவியல் கலையாகும். யோகப் பயிற்சியில் சித்திபெற்ற அறிஞர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை என்று பல அறிஞர்கள் கூறுவர். யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம். யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும்.
யோகக் கலை
யோகம் பயில்வதற்கு ஆசனப்பயிற்சி இன்றியமையாதது. யோகப் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. யோகம் ஒரு கலை கல்வி பயில்வதற்கு எழுத்து எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது யோகம் பயில்பவர்களுக்கு யோகாசனம் பயில்வது என்று கூறினால் அது மிகையாகாது.
யோக முறை
யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும் உள்ளுறுப்புகள்தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும்.
யோகப் பயிற்சியின் சிறப்புகள்
===========================
*தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உடலை உருவாக்குகிறது.
*உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.
*சாதராணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.
*அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகுவிரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக்காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்குத் திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.
*நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை பு¡¢கிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.
ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:
------------------------------------------------------------------------
*ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன் மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.
*முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.
*பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.
*மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.
*தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.
*உடல் அவயவங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையின் இருந்திட வழி அமைகிறது.
*தோல், நரம்பு, மற்றும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆசனப் பயிற்சிகள் உரமூட்டுகின்றன.
"மூளைக்குப் போதிய பிராணவாயு கிடைக்காவிட்டால் படபடப்பும் பதைபதைப்பு உணர்வும் எழுச்சியும் உண்டாவதோடு உடல் அமைப்பையும் மாற்றி, செயல்களையும் சின்னாபின்னாப்படுத்துவதுடன் நோயுற்றவராகவும் ஆக்கிவிடுகிறது." என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இந்தப் பிராணவாயுவின் பெருமைகள் எல்லாம் நம்முடைய பிராணாயாமம் என்பதில் அடங்கியுள்ளது. உடலுக்குள்ளே பிராணவாயு என்கிற உயிர்க் காற்றைச் சேர்த்து வைத்து, பேராண்மைமிக்க சக்தியினைப் பெருக்கும் வழிதான் பிராணாயாமம் என்றனர்.
யோகாசானம் ஏன் செய்ய வேண்டும்?
================================
நாளாமில்லாச் சுரப்பிகளும் ஹார்மோன்களும்
மனித உடம்பில் குழலற்ற சதைக் கோளங்கள் ஆரோக்கிய வாழ்விற்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், எந்தெந்த ஆசனங்களைச் செய்தால் எந்தெந்தக் கோளங்கள் நன்கு வேலை செய்யும் என்பதையும் பார்த்தோம். அக்கோளங்களிலிருந்து வெளிப்படும் ஹார்மோன்களால் உடலில் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்தால் யோகாசனம் செய்வதன் அவசியத்தை நாம் உணர்வோம். பல்வேறு நோய்களுக்கு இக்கோளங்கள் சரியாக இயங்காததே முக்கிய காரணமாகும்.
சுரப்பிகள்:-
ஹார்மோன்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும்போதுதான் உடலில் செய்கைகள் செம்மையாக நடைபெறும். இந்த அளவு மாறுபடும்போது, அதாவது கூடினாலோ குறைந்தாலோ உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. எனவே இந்தச் சுரப்பிகள் ஒவ்வொன்றையும் சரியாக இயங்க வைக்க யோகாசனங்கள் சிறந்த உபாயமாக உள்ளன என்பதைப் பல்வேறு இரசாயன சோதனைகள் மூலம் மேல்நாட்டர் கண்டபின்னரே இவ்வசனத்தைப் பெரிதும் விரும்பிக் கற்று வருகின்றனர்.
கணையம் (Pancreas) :- இச்சுரப்பியானது வயிற்றின் உள்பகுதியில் முதுகெலும்பின் முன்னால் இருக்கிறது. சுரப்பிகளில் பெரியது. இரைப்பைக்குக் கீழ் 9 அங்குல நீளமும் 4 அங்குல அகலமும் உள்ளது. இச்சுரப்பியின் சீர்கேட்டால் நோய் உண்டாகிறது.
கணையத்தைச் சரியாக இயங்க வைக்கும் யோகாசனங்கள் :- இச்சுரப்பியை பச்சிமோத்தானம், பவன முக்தாசனம், யோகமுத்ரா, தனுராசனம், ஹலாசனம், நாவாசனம், உத்தானபாத ஆசனம், சலபானம் ஆகியவற்றில் ஏதேனும் ஓன்றால் கூட சிறப்பாக இயங்கச் செய்து நாள்பட்ட நீரிழிவைப் பூரணமாகக் குணப்படுத்திவிடலாம்.
கணைய நீர் (இன்சுலின் – Insulin) :-
இன்சுலின் குளுகோசை மூன்று வழிகளில் திரும்ப ப்பெறுகிறது. அது தசைகள், கல்லீரலில் கிளைக்கோஜினின் அளவைக் கூட்டுகிறது. குளுகோசைத் தன்மயமாக்கி கரியமிலவாயுவாகத் திசுக்களிலே மாற்றுகிறது. இது குளுக்கோஸ், கொழுப்பு அமிலங்களாக கல்லீரலிலோ மாறும் வேகத்தை அதிகரித்து ஏராளமான குளுகோஸ் (சர்க்கரை பொருள்கள் அல்லது மாவுப் பொருள்கள்) சாப்பிடும்போது, அவை கல்லீரால் கொழுப்பு அமிலங்களாக மாற்றப்படுகின்றன. இன்சுலின் இப்பணியை ஊக்குவிக்கிறது.
இன்சுலின் சுரப்புக் குறைவால் ஏற்படும் கேடுகள்:-
மிகையான பசி, அசதி, நடப்பதில் சிரமம், ஒரே ஹார்மோனாக இன்சுலின் சுரப்பது குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி நீரிழிவு நோய் உண்டாகும். அதிக சிறுநீர் கழியும், சமநிலையில் மூச்சுவிட முடியாது. இருமல்வரும், மயக்கம் ஏற்பட்டு மரணமும் சம்பவிக்கும்.
பிட்யூட்டரி சுரப்பி (Pituituary Gland) :-
மூளையின் அடிப்பாகத்தில் சிறிய பட்டாணி போன்று மூளையோடு ஒரு கம்பியினால் இணைக்கப்பட்ட சுரப்பி இது வேலை குருத்தெலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. திசுக்களின் மீதான வளர்ச்சியை அதிகரிக்கிறது. தாய்மார்களின் பால் சுரப்பை அதிகரிக்கிறது. புரத உற்பத்தியை அதிகரிக்கிறது. இன்சுலின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கத் தூண்டுகிறது. நினைவாற்றல், சிந்தனா சக்தியைத் தூண்டும் விந்து அணுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. பால் உணர்வு கேந்திரங்களைக் கட்டுப்படுத்துகிறது. இனப்பெருக்கம் சம்பந்தமான ஹார்மோன்களைச் சுரக்கும் சுரப்பிகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
தைராய்டு சுரப்பி :-
தைராய்டு சுரப்பியானது தொண்டையின் அடிப்புறத்தில் அமைந்திருக்கிறது. மிக அதிகமான இரத்த ஓட்டமுடைய இச்சுரப்பி தைராக்ஸின் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது முக்கிய நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
தைராக்ஸின் பணிகள்:-
சக்தி உற்பத்தியை அதிகரிப்பதோடு, உட்கொள்ளும் வாயுவின் அளவையும் அதிகரிக்கிறது. கல்லீரல், இதயத்தில் உள்ள கிளைக்கோஜினை இடப் பெயர்ச்சி செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து நைட்ரஜனை அதிகமாக வெளியேற்ற உதவுகிறது. உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயத்துடிப்பிற்கு உதவுகிறது. வைட்டமின் ‘A’ தயாரிப்பில் உதவுகிறது. எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி, பால் உறுப்புகளின் வளர்ச்சி, மன வளர்ச்சி, மைய நரம்பு மண்டல வளர்ச்சியிலும் பெரும் பங்கு எடுத்துக் கொள்கிறது.
தைராக்ஸின் குறைவால் ஏற்படும் கேடுகள்:-
குழந்தைகளின் வளர்ச்சி தடைப்படும் எலும்பு வளர்ச்சி தடைப்படும். தோலில் சுருக்கம் ஏற்படும். பால் உணர்வு தடைப்படும், முகம் ஒளி இழந்து வாயில் கோழை வடியும். சிந்திக்கும் திறன் குறையும் பசியின்மை, மலச்சிக்கல் ஏற்படும். கன்னம் கனத்து சோகை மாதிரி காணப்படும். சிறுநீரில் நைட்ரஜன் அளவு குறையும். உடலில் வெப்ப நிலை கூடும்.
பேரா-தைராய்டு சுரப்பி:-
பேரா-தைராய்டு சுரப்பி சிறிய பகுதிகளைக் கொண்டது. தைராய்டு சுரப்பியின் பின்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும். பேரா-தார்மான் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது. இரத்தக் கால்சியத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் இது.
இது நிறைய கால்சியத்தைத் திரும்ப கிரகிக்க, சிறுநீரகங்களை ஊக்குவிக்கிறது. எலும்பிலுள்ள கால்சியத்தை இரத்ததிற்கு இடப் பெயர்ச்சி செய்கிறது.
பேரா-தார்மோன் குறைவினால் ஏற்படும் கேடுகள்:-
சிறுநீரில் கால்சியம், பாஸ்பரஸின் அளவு குறையும், சுவாசம் வேகமாகவும், சத்த த்தோடும் இருக்கும். இதய துடிப்பு அதிகரிக்கும் உடலின் வெப்ப நிலை உச்ச நிலை அடையும் தசைகளில் இழுப்பு ஏற்படும். சுவாசத்திற்கான தசைகள் சுருங்கி விடுவதால் மரணம் ஏற்படும்.
போரா-தார்மோன் அதிகம் சுரப்பதால் பலவீனம், தசைகள் இயக்கம் குறைதல், வாந்தி, மனக்கோளாறுகள் ஏற்படுவதுடன் மற்றும் சிறுநீர் அதிகமாகக்கழியும்.
யோகா செயல்படும் விதம் :
========================
யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.
பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.
உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.
நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.
மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.
இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.
யோகா பற்றிய குறிப்புகள் :
=======================
• யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.
• ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.
• ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.
• கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.
யோகாவின் இன்றைய அவசியங்கள் :
================================
இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.
பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.
இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும்.
எல்லோரும் இன்புற்று வாழலாம்.

No comments:

Post a Comment