Saturday, 1 August 2015

வெங்காயம் பாதம் வைத்தியம் :-

வெங்காயம் பாதம் வைத்தியம் :-
நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல்
சோர்வு போக்கலாம். வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.
இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்த போது, காற்றில்
இருக்கும் நச்சுக்களை எடுக்கவும். அந்த நோயிலிருந்து விடுபடவும் வெங்காயத்தை அதிகம்
உபயோகின்தனர்.
வெங்காயத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்கதிர்கள். அதில் உள்ள அனைத்து நட்சுக்களையும் வெங்காயம் உறிஞ்சிக்கொள்ளும்.
மேலும் அதனை நீங்கள் உட்கொண்டால்
நச்சுக்களை உண்பதற்கு சமம். நறுக்கிய வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்து கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும்
காற்று சுத்தமானதாக இருக்கும்.
உடல் நலம் இல்லாதவர்கள் விரைவில் குணமடைவார்கள் வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு ஒரு சிறந்த நுண்ணுயிர் கொல்லியாகவும், பாக்டீரியா எதிர்ப்பாகவும் செயல்படுகிறது.
நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில்
மற்றும் நடுவினில் வைத்து படுத்து தூங்கும்போது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும். உங்கள்
இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள்
வயற்றில் இருக்கும் நட்சுக்களையும் உறிஞ்சிவிடும்.
(வெள்ளைபூண்டயும் இது போல் உபயோகிக்கலாம்)
நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்
நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !

சினங்கொண்ட முனிவர்


தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,
''நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார்.
பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து,
''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான்.
எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,
'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றி வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன்.
அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான்.
பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான்.
பெண் பன்றி கர்ப்பமானது. ஒரு மாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,
'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள
என் மனைவி ஆதரவற்றுவிடுவாள்.
குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான்.
மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,
'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது.
சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது.
இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால்,
உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.
நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.
முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது.
அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.
இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம்.
பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.
பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை.
எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே!
மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!
பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர்,
கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர்,
புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர்,
மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் -
இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..
''உனக்கு ஏழரை நாட்டுச்சனி.
ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன்.
பாதிக்கப்பட்டவன் எப்படியெனக் கேட்டதற்கு,
'' ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும்.
மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம்.
துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.
தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று,
தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.
1. 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன்
அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.
2.விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன்
அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்
கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.
3.தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல்,
கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்து விட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு
ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.
4.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
போது,
அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வந்தி பரவத்தொடங்கியதை அறிந்து,
தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே.
இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதி நாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.
5. பிரிட்டனில் 21 வயது இளைஞர் ஒருவர் ,
முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு
பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும்,
ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும்,
அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.
நீதி: பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும்
அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும்,
பொறுமையும் வளர்த்துக் கொண்டால் பிரச்சனைகளைச் சுலபமாக முறியடித்துச்
சாதனைகள் பல படைக்கலாம்.
இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.

கோபப்பட கூடாதாம்.....!! ஆபத்தாம்...!!

தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்.....!! ஆபத்தாம்...!!
கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால்
அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி,
குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம்.
எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கோபம் என்பது ஒரு உணர்வு.
எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள்.
கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்
தான் அதேசமயம் எதற்கு எடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது.
கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழக வேண்டும்.
கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி
கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு
சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது.
கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது.
கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கி விடுமாம்.
கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது.
நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது.
உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன.
எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றி கொள்ளவும்.
தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும்
கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும்.
மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால்
கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும்
என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம்
சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

 நன்றி லைவ் லைப் ஹாப்பி

தேவை சவால்

புதுமைக்குத் தேவை சவால்
நம்மிடம் உலகத்திலேயே சிறப்பான கருத்து, கற்பனை, சிந்தனை, எண்ணம் இருக்கலாம்;
ஆனால் அதிலேயே நாம் ஒரு புதுமையானவர் ஆகிவிட முடியாது.
புதுமைக்கு முதல் தேவை புத்தம் புதிய கருத்து. கருத்தோடு மட்டும் புதுமையை அடைய முடியாது!
ஆனால் உண்மையில் புதுமைக்குத் தேவைப்படுவது, ஒரு சவால்தான்.
நாம் காலம் காலமாகப் போய் வந்த பாதையை ஒரேடியாக மாற்றச் செய்யும் ஒரு சவால்!
டென்மார்க் நாட்டில், ஆர்லாஃபுட்ஸ் என்ற ஒரு நிறுவனம் பால் பொருட்கள் தயாரித்து விற்று வந்தார்கள்.
புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை.
எனவே அவர்களுடைய புதுமை படைக்கும் துறையின் இயக்குனர் மைக்கேல் ஸ்டீவன்ஸ், ஒரு சவாலைத் தேடிப் புறப்பட்டார்.
அதுவரை நிறுவனம் சுற்றிக் கொண்டிருக்கும் பாதையைவிட்டு அப்படியே தூக்கிப்போய் வேறு எங்கோ வீசிவிடப் போகும் சவால் அது!
‘பால் மற்றும் பால் பொருட்களை விண்வெளியில் அனுப்பிய முதல் ஆள் நாமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார் அவர்.
இதுவரை யாரும் இதைச் செய்ததில்லை. விண்வெளி வீரர்கள் பால் எடுத்துக் கொள்வதால் நன்மைகள் ஏராளம்;
இருந்தும் ஏவுகணையில் போகும் போது யாரும் பால் சாப்பிட்டதே இல்லை’.
இந்த ஒரு சவால் மட்டுமே – ஆர்லாஃபுட்ஸின் ஆராய்ச்சிப் பிரிவையும், தயாரிப்பு வளர்ச்சித் துறையையும் அவர்களுடைய பழகிய பாதையை விட்டு தூக்கிவிட்டது.
அவர்கள் வேறு ஏதோ திசையில் எங்கோ வெளியே வந்தபோது,
மிகமிகப் புதுமையான தயாரிப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டுவந்தார்கள்.
விண்வெளில் மட்டும் இல்லாமல் அவற்றை பூமியிலும் சாப்பிட முடியும்!
உதாரணமாக, குளர்சாதன பெட்டியில் வைக்காமலேயே இரண்டு வருடம் வரை கெடாமல் இருக்கும் தயிரைப் பார்த்தீர்களா?
பூமியிலேயே கால் பதித்து நின்றியிருந்தால் அவர்கள் இந்த மாதிரியான பொருட்களைத் தயாரிப்பது பற்றி கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள்.
இவர்கள் மட்டுமல்ல. புதுமையுடன் சவாலையும் சேர்த்துக் கொள்ளும் எந்த ஒரு தனிமனிதனும்
அல்லது நிறுவனமும்
ரஜினி படத்தின் பாடல் வரிகள் போல“சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்பன
போல உலகஅளவில் தன் வெற்றியை கால் பதிக்கின்றனர்.
போகிற பாதை மிகவும் பயங்கரமானது!
அதன் ஒவ்வொரு அடியிலும் புதிய புதிய சிந்தனைகள் தேவைப்படும்.
புதுமை செய்கிறேன் என்று புறப்படும் நிறுவனத்தின் பாதை,
ஒரு கடினமான மலைப் பாதையைப் போல அணியின் உற்சாகமும் ஈடுபாடும் அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அடிக்கடி நம் இதயம் சோர்ந்து போய், “கிழே போய்விடலாம்” என்று சொல்லும்;
அதைமீறி மேலே போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு சாகசப் பயணம் என்றால் வழியில் நூற்றுக்கணக்கான புயல்கள் வீசும்,
சவால்கள் மறிக்கும். கடைசியாக பயணத்தின்
நோக்கம் சிகரத்தை அடைவது மட்டுமே அல்ல;
இன்னும் பல சிகரங்களை எட்டுவதற்கான வல்லமைளை வளர்த்துக் கொள்வதும்தான்!
சிகரத்தை அடைவோம்!
வானத்தைத் தொடுவோம்!!


Live Life Happy

முயற்சியை தீவிரமாக்குங்கள்.

* தொடக்கத்தில் கறையான் சிறிதாகவே தோன்றும். சிறுகச்சிறுக பெருகி,
நாளடைவில் மரக்கட்டை முழுவதும் செல்லரித்துப் போகும்.
அதுபோல, தீய சிந்தனைகள் சிறிதாகவே தொடங்கும். ஆனால், முடிவில் ஒருவனை முற்றிலும் அழித்துவிடும்.
* உணவு உடனே ஜீரணமாக வேண்டும்.
அதுபோல ஒவ்வொரு நாளும் கேட்கின்றநல்லசிந்தனைகளை அன்றைக்கே நடைமுறைப்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால்அச்சிந்தனையைக் கேட்டதில் பயனில்லை.
* சேற்றுநிலத்தை மெதுவாகப் பாயும் நீரோட்டத்தால் சரிசெய்ய முடியாது.
வேகமாகவும், முழுமையாகவும், மூலை முடுக்கெல்லாம் அடித்துச் செல்லும் வெள்ளம் போல தண்ணீர் பாயவேண்டும்.
அதுபோல, ஆன்மிகத்தில் சாதனை செய்ய நினைத்தால் அரை மனதுடன் இறங்கக்கூடாது. இது ஆபத்தானது.
* கிணற்றுக்கோ, ஏரிக்கோ அல்லது பரந்த சமுத்திரத்திற்கோ கூட நீர் எடுத்து வரச்
சென்றாலும்,
நம் கையில் இருக்கும் பாத்திரத்தின் அளவுக்குத்
தான் தண்ணீரை எடுக்க முடியும்.
அதுபோல, நம் செய்யும் செயலில் நம் முயற்சிக்கு தகுந்தவாறே பலன் கிடைக்கும்.
எனவே முயற்சியை தீவிரமாக்குங்கள்.

நன்றி லைவ் லைப் ஹாப்பி
சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்
--------------------------------------------------
மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.
நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும். தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும்.பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும்.தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.
அரிசியையும் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.
துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும்.
அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.
இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.
கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.
தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.
சித்தரத்தையைச் சிறிதளவு எடுத் துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.
எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும்.
இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.
வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.
தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.

விமானம் பறப்பது எப்படி....? தெரிந்து கொள்வோம் !

பொதுவாக விமானங்கள் இருவகை:
ஒன்று நாம் அதிகம் பயன்படுத்தும் fixed-wing விமானங்கள்.
மற்றது ஹெலிகாப்ட்டர் போன்ற rotary-wing
விமானங்கள் (rotor-craft).
இங்கு நாம் fixed-wing விமானங்களை மட்டும் கவனிப்போம்.
Fixed-wing விமானங்களின் பறத்தல் செயல்பாட்டில் பங்கு வகிக்கும் பாகங்களில்
இறக்கை (wing), இயந்திரம் (engine), வால் இறக்கைகள் (tail wings) ஆகிய மூன்றும் மிக முக்கியம்.
முதலில் விமான இயந்திரங்களை எடுத்துக்கொள்வோம்.
இவை ஒரேயொரு செயல்ப்பாட்டைத்தான் செய்கின்றன. அச்செயல்பாடு விமானத்தை முன்நோக்கி
அதி விரைவாக தள்ளுவது.
இந்த இயந்திரங்கள் தமக்கு முன் உள்ள வளியை உள்ளிழுத்து அதிவிரைவாக (பொறியியல் முறை மூலம்
அல்லது இரசயான தாக்குதலின் மூலம்) பின்
தள்ளும்.
அதனால் அந்த இயந்திரமும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள விமானமும் மிக வேகமாக முன் தள்ளப்படும்.
இரண்டாவதாக இறக்கைகளை எடுத்துக்
கொள்வோம். இறக்கைகள் விமானத்தை புவியீர்ப்புக்கு எதிராக மேல் எழுப்புவதற்கு மட்டுமே
பயன்படுகின்றன.
இயற்கையின் இரகசியங்களில் ஒன்றை அறிந்த
போதே மனிதன் விமானங்களில் பறக்க
ஆரம்பித்தான்.
அந்த இரகசியம் இந்த இறக்கைகளுள் பதிந்துள்ளது. அந்த இரகசியம் என்ன?
நெதர்லாந்தில் பிறந்த சுவிஸ் விஞ்ஞானியான Daniel Bernoulli என்பவரே (1700:02:08 – 1782:03:17) இந்த இரகசியத்துக்கு முதலில் வெளிச்சம் தந்தவர்.
இயற்கையின் நியதிப்படி ஒரு மேற்பரப்பை தழுவி செல்லும் ஒரு பதார்த்தம் (உதாரணம் வளி) அந்த மேற்பரப்பில் ஏற்படுத்தும் அமுக்கமானது
அந்த பதார்த்தத்தின் வேகத்திற்கு எதிர்மறை
ஆகும்.
சுருங்க கூறின் ஒரு பதார்த்தத்தின் வேகம் கூட அது ஏற்படுத்தும் அமுக்கம் குறையும்.
உதாரணமாக விமான இறக்கைகளின் கீழால் ஓடும் வளியை விட மேலால் ஓடும் வளியின் வேகத்தை அதிகரித்தபோது,
வேகம் கூடிய வளி குறைந்த அமுக்கத்தை ஏற்படுத்தியது.
இறக்கையின் மேலே குறைந்த அமுக்கமும், கீழே கூடிய அமுக்கமும் உருவான போது விமானம் மேலே தள்ளப்பட்டது.
அது சரி எப்படி ஒரே வளியை இறக்கைக்கு மேலே வேகமாகவும், கீழே வேகம் குறைவாகவும் செலுத்துவது?
அங்குதான் விமான இறக்கை வடிவமைப்பு முக்கியமாகிறது.
இந்த இறக்கைகளின் அமைப்பும் பறவைகளின் இறக்கை அமைப்பை ஒத்தன.
விமான இறக்கைகளின் மேல் பரப்பு மேலே வளைந்து காணப்படும். அதனால் அந்த இறக்கையின் முன் நுனியில் இருந்து
பின் நுனி வரையான நீளத்தை அளந்து பார்த்தால் மேல்பகுதி நீளம் கூடியதாக இருக்கும்.
ஒரே வளியின் மேல்கற்றை நீளம் கூடிய பாதையினூடு ஒரே அளவு நேரத்தில் செல்லவதாயின்
அது கீழே சென்ற வளியைவிட வேகமாக சென்றிருக்கவேண்டும்.
அது இறக்கையின் மேல் பக்கத்தில் உள்ள அமுக்கத்தை குறைக்கும்.
அதாவது இயந்திரங்கள் இறக்கையை வேகமாக முன் இழுக்க,
அது மிக வேகமான வளி ஓட்டத்தை இறக்கைகளின் மேலேயும் கீழேயும் உருவாக்க,
இறக்கையின் அமைப்பு காரணமாக மேல்பரப்பை
தழுவி செல்லும் வளியின் வேகம் கீழ் பரப்பை தழுவி செல்லும் வளியைவிட அதிகமாக்க,
இறக்கையின் மேல் பகுதி அமுக்கம் குறைய, இறக்கையும் அத்துடன் பொருத்தப்பட விமானமும் மேலே செல்லும். இயந்திர வேகம் குறைய அவை கீழே வரும்.
மூன்றாவதாக வால் இறக்கைகள்
எடுத்துக்கொள்வோம்.
இவை விமானத்தை மேல்/கீழ் நோக்கி திருப்பவும் (nose up/nose down, இது pitch என அழைக்கப்படும்),
இடம்/வலம் திருப்பவும் (left/right, இது yaw என அழைக்கப்படும்) விமானியால் பயன்படுத்தப்படும். இவ்வாறே விமானி விமானத்தை கட்டுப்படுத்துவார்.
கிடையாவுள்ள வால் இறக்கைகள் மேல்/கீழ் நோக்கி விரைவாக விமானத்தை திருப்பவும்,
நிலைக்குத்து வாலில் உள்ள பாகங்கள் இடம்/வலம் திரும்பவும் பயன்படும்.
அவைதான் விமானம்கள் பறப்பதற்கான இரகசியம். இவ்வாறே 90 அல்லது 95% விமானங்கள் செயல்படும்.
ஆனால் மிக சிறு எண்ணிக்கையிலான விமானங்கள் குறிப்பாக சில யுத்த விமானக்கள் மேல் கூறியவற்றுக்கு முரணாகவும் செயல்படும்.
அமெரிக்காவின் Osprey விமானம் மேல் எழும்போது தனது இயந்திரத்தை மேல்நோக்கி திருப்பி செங்குத்தாக மேல் எழும்.
பிரித்தானியாவின் Harrier யுத்த விமானம் இயந்திரத்தி பின்னே வெளியேறும் எரிக்கப்பட்ட வளியை கீழே திருப்பிவிட்டு மேல் எழும்.
மேலும் சில உண்மைகள்:
1. பொதுவாக விமானக்கள் தாமாக பின் நோக்கி செல்ல மாட்டா.
அதனால் தான் விமான நிலையங்களில் இவை tug களினால் பின்தள்ளி விடப்படும்.
2. உராய்வை குறைக்க, பறக்கும் போது சக்கரங்கள் உள்ளே இழுக்கப்படும்.
3. அதிபெரிய விமானமான Airbus 380 அதிகூடிய அளவில் 320,000 litres எரிபொருளை கொண்டிருக்கும்.
அறிவியல் இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும்,
பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்.
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.
சரி… எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
how-airplane-landing
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு
A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில், நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமனாக இருக்க வேண்டும்
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்.
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்
விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும் போது விமானம் மேல் எழும்பும் சரி…
பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று,
அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள்,
இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்).
ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது,
வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம்,
காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான்.
அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான்.
இது சற்று சுவாரஸ்யமானது
ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேலிருக்கும் விசிறியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள்,
விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்.
உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சின்தான் , சற்று மறைமுகமாக
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் .
இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது.
அதாவது இறக்கைஇல்லாவிட்டாலும் பறக்க
முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது,
காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால்
ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்).
விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும்.
கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை
சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட
கண்ணுக்கு எளிதாக தெரியாது,
அதை தொட்டுப்பார்த்தால் தான் தெரியும் இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்கு தான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது,
விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது,
கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது,
குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி
(Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்).
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும்,
இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்.
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது?
சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது?
விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது,
அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது.
(எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால்
அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது).
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது.
ஓடுதளம்..
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும்
(அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும்.
கடும் புயல் அடிகும் போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது,
அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும்.
அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும்.
மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான்.
பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது

கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…

1. தினமும் அரை நாள் கடுமையாய் உழையுங்கள்.
2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு தான்.
3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்.
4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியில் தான் ஏற வேண்டும்.
5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.
ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது.
6. வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது.
7. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை னமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
8. “முடியாது” “நடக்காது” போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.
9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.
10. வெற்றிக்குத் தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு.
11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்.
12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.
13. மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் இருக்கிறது.
14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
15. எதையும் நாளை என்று தள்ளிப் போடக் கூடாது
16. கைக்கடிகாரத்தைக் கொடுத்து விட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.
17. மற்றவர்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது.
19. சந்தோசத்தை கொடுப்பது பணம் மட்டும் அல்ல.
20. கடவுளை நம்புங்கள்.

நன்றி   லைவ் லைப் ஹாப்பி

பொன்மொழிகள்....!

* ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட.
விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் வெற்றி பெறுவான்.
* வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,
தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.
* பணம் என்ற ஒன்று நுழையாத வரை எல்லா உறவுகளும் மேன்மையாகத்தான் இருக்கின்றன.
* மனிதனின் அத்தனை கோர முகங்களையும் அறிந்த உயிரற்ற பொருள்-பணம்.
* குழந்தை பிறந்த முதல் ஆண்டு,அது பேசவும்,நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த ஓர் ஆண்டு அது ஒரே இடத்தில் இருக்கவும்,வாயைப் பொத்தவும் கத்துகிறோம்.
* நாம் யாராலோ நிராகரிக்கப் படும்போதுதான்,
நம்மால் நிராகரிக்கப்பட்டவரின் வலியை உணர முடிகிறது.
* அனுபவம் ஒரு ஜன்னல்;அதன் மூலம் தெருவைப் பார்க்கலாம்.ஜன்னலே தெருவாகி விடக்கூடாது.
* பொதுக் காரியங்களில் நாம் சில சமயம் நம் அறிவை மட்டுமல்ல,
பகுத்தறிவையும் இழக்கத் தயாராகி விடுகிறோம்.
* நம்பிக்கையின் கை உடையும்போது சந்தேகம் காலூன்றத் தொடங்குகிறது.
* இயல்பாய் ஏற்படும் மாற்றம்,சுகம். வலிய ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றம்,சுமை.

 நன்றி Live Life Happy