Saturday, 30 July 2016

ஷாம்பு பயன்படுத்தி பார்த்தாச்சு

எத்தனையோ ஷாம்பு பயன்படுத்தி பார்த்தாச்சு. ஒன்றும் பயன்படவில்லை என்று புலம்புபவர்களா நீங்கள்? அப்படியானால் இந்த இயற்கையான ஷாம்பு முறை உங்களுக்குத்தான். 1. வெந்தயம் 1 கிலோ, முழு துவரை 1 கிலோ, புங்கங்கொட்டை 250 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம் இவற்றை காய வைத்து, ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். 2. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது ஷாம்புக்குப் பதிலாக இந்தப் பொடியை உபயோகியுங்கள். 3. அழுக்கை நீக்குவதோடு, அட்டகாசமான கண்டிஷனராகவும் செயல்பட்டு முடியை இந்தப் பொடி பாதுகாக்கும்.

ரத்த அழுத்தம் சீரடைய

ரத்த அழுத்தம் சீரடைய...
பன்னீர் ரோஜா பூ தெரியும்தானே..! அதுல நாலு பூவோட இதழ்களை மட்டும் தனியா எடுத்து, ஒரு டம்ளர் தண்ணி விட்டு நல்லா காய்ச்சணும். அரை டம்ளரா சுண்டினதும் இறக்கி வெச்சிரணும். காலையில வெறும் வயித்துல அதைக் குடிச்சிட்டு வந்தா... ரத்த அழுத்தம் சரியா போயிரும்.
இதே நோய்க்கு கைவசம் இன்னொரு வைத்தியமும் இருக்கு. அரை டம்ளர் வாழைத்தண்டு சாறு, அரை டம்ளர் மோர் ரெண்டையும் கலந்துக்கிடணும். இதை 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து குடிச்சிட்டு வந்தோம்னா ரத்த அழுத்தம் குணமாயிரும்.
திரிபலா (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) 50 கிராம், திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி) 50 கிராம், அதோட 100 கிராம் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கணும். இதை காலையிலயும் - சாயங்காலமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு வெறும் வயித்துல ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தா ரத்த அழுத்தம் சரியாயிரும். தேவைப்பட்டா சில நாள் இடைவெளி விட்டு திரும்பவும் சாப்பிடலாம்.
ரத்த அழுத்தத்தால வரும் மயக்கம் சரியாக...
சிலருக்கு ரத்த அழுத்தத்துனால தலை சுத்தல், மயக்கம்னு வந்து படுத்த படுக்கையாக்கிடும். அந்த நேரத்துல ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில போட்டு வறுத்துக்கணும். தேன் பதத்தில் பாகுமாதிரி வந்ததும், 3 இன்ச் அளவுள்ள இஞ்சித்துண்டை நல்லா அரைச்சி வடிகட்டி, ஒரு டம்ளர் தண்ணிய சேர்க்கணும். இதுகூட 25 கிராம் காஞ்ச திராட்சையைப் போட்டு கொதிக்க வைக்கணும். இது அரை டம்ளரானதும் இறக்கி வெச்சி ஆறினதும் பழத்தை சாப்பிட்டு தண்ணியையும் குடிக்கணும். காலைல, சாயந்தரம்னு மூணு நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா மயக்கம் தெளிஞ்சி, ரத்த அழுத்தமும் குணமாயிரும்.

தைலம்... தேய்க்க அல்ல

தடவத்தான் தைலம்... தேய்க்க அல்ல! இய‌ற்கை வைத்தியம்!!

தலையணைக்கு அருகில் தலைவலித் தைலத்தை வைத்துத் தூங்கும் பழக்கம் இப்போதும்கூட பலருக்கு இருக்கிறது.

குழந்தைக்கு ஏதேனும் சளி, மூக்கடைப்பு இருந்தால் உடனே நாம் தேடுவதும் தைலத்தைதான். மூக்கிலும், தலையிலும், நெஞ்சிலும் தேய்த்துவிட, சிறிது நேரத்திலேயே சுவாசம் சீராகிவிடும். 

தைலத்தை யார் யார் பயன்படுத்தலாம், எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது போன்ற சந்தேகங்களை சேலம் அரசு மருத்துவமனையின் பொது மருத்துவர் ப.அருளிடம் கேட்டோம்.

'மூட்டு வலி, இடுப்பு வலி, சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகளுக்குப் பயன்படுத்தும் தைலம், வலி நிவாரணித் தைலம். இதில் எரிச்சல் அதிகமாக இருக்கும் என்பதால்,  குழந்தைகளுக்குத் தடவக் கூடாது. மிளகாய்ப் பழம் போல் மூக்கு சிவந்து, தைலம் தடவிய இடத்தில் எரிச்சலும் கொப்பளங்களும் ஏற்படலாம். தைலத்தைப் பயன்படுத்தும்போது 'கான்டாக்ட் டெர்மெடிட்ஸ்' (contact dermatitis) என்னும் தோல் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படலாம். ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக தைலம் தடவும்போது தோலின் நிறமே கருத்துப்போகவும் வாய்ப்புகள் அதிகம்.'' 

''தைலங்களில் சேர்க்கப்படும் மூலப் பொருட்கள் என்ன?''
மீதைல் சாலிசிலேட் (Methyl salicylate), மென்தால் (Menthol),  கற்பூரம் (Camphor) போன்றவை சேர்க்கப்படுகின்றன. இவை, எதிர்ப்பு மருந்தாகச் செயல்பட்டு, குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் வலியைக் குறைத்து நிவாரணம் தருகின்றன!

சாலிசிலேட், மென்தால், கற்பூரம் இவற்றுடன் மர எண்ணெய், லவங்கம், மிளகாய் (capsaicin), ஓமம் கலந்து செய்யப்படும் தைலம்... சளி, இருமல், மூக்கடைப்பு, தலைவலிக்கு நல்ல நிவாரணம் தரும். அமிர்தாஞ்சன், விக்ஸ் போன்ற தைலங்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.

வலி நிவாரணி தைலங்களிலேயே அதிக வீரியம்மிக்க 'டைகுலோபினாக் அமிலம்' உள்ள தைலங்கள் மூட்டுவலி, கால்வலி, தசைப்பிடிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், இந்தத் தைலத்தை மிகக் குறைந்த அளவே பயன்படுத்தவேண்டும். தலைவலிக்குப் பயன்படுத்தவே கூடாது.''

''எந்தத் தைலம் பெஸ்ட்?''
''தைலங்கள் வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வைத் தராது. பொதுவாக நீலகிரி தைலம்தான் பெஸ்ட். பக்க விளைவே இருக்காது.''

''தைலம் வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?''
''சித்த மருத்துவத்தில் கற்பூராதி வீட்டில் தயாரிக்கப்பட்டு வந்த தைலம்தான்.  சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது.

500 கிராம் தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் 5 நிமிடம் காய்ச்ச வேண்டும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, இதனுடன் 50 கிராம் கற்பூராதி சேர்த்து, நன்கு கலக்கவேண்டும்.  50 கிராம் சாம்பிராணி கட்டியைச் சேர்த்துக் கலக்கவேண்டும்.

இந்தத் தைலத்துக்கு ஆவியாகும் தன்மை அதிகம் இருப்பதால், இறுக்கமாக மூடி போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

இதைத் தலைவலி, சளி, இருமல், மூட்டு வலி போன்ற அனைத்துக்கும் உடலின் மேல்பகுதியில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.''

எச்சரிக்கை டிப்ஸ்
12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தைலம் தடவுவதைத் தவிர்க்க வேண்டும். 

ஒரு முறை அலர்ஜி ஏற்பட்டால், அந்தத் தைலத்தை மறுமுறை உபயோகிக்கக் கூடாது!

கண்களில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புண், வெடிப்பு, தோல் நோய், அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

எப்போதும் தைலத்தைச் சூடுபறக்கத் தேய்க்கவே கூடாது. லேசாகத் தடவினாலே போதும்.

புன்னை

மூலிகையின் பெயர் :- புன்னை.

2.     தாவரப்பெயர் :- CALOPHYLLUM INOPHYLLUM.

3.     தாவரக்குடும்பம் :- CLUSIACEAE.

4.     பயன் தரும் பாகங்கள் :- இலை, பூ, விதை, பட்டை மற்றும் எண்ணெய் ஆகியன.

5.     வளரியல்பு :- புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. மணற்பாங்கான இடம், வளமான ஈரமான இடங்களில்  நன்கு வளரும். கழிமண் நிலத்திலும், உப்புத் தண்ணீரிலும் வளரும். இது சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பளபளப்பான இலைகளையும்  உருண்டையான உள் ஓடு உள்ள  சதைக் கனிகளையும் உடைய பசுமையான மரம். இது சுமார் 5 அடிக்குமேல் 12 அடிவரை உயரம் வளரும். இதன் பூக்கள் அழகாக இருக்கும். பூவின் அகலம் 25 எம். எம். ஆகும். ஒரு கொத்தில் 4 - 15 பூக்கள் இருக்கும். இதன் காய்கள் முதலில் மஞ்சளாகவும் பின் முற்றிய பின் மரக்கலராகவும் மாரும். ஒரு மரத்தின் காய் 100 கிலோ கிடைக்கும். அதில் 18 கிலோ எண்ணெய் கிடைக்கும்.  புன்னை மரத்திற்கு ஆங்கிலத்தில் 'Ballnut' என்று சொல்வார்கள். இதன் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்கா, பின் இந்தியாவின் தென் கடற்கரையோரங்கமளிலும், மலேசியாவிற்கும், மாலத்தீவிற்கும்,  ஆஸ்த்திரேலியாவுக்கும், அவாய் தீவுகள், புயூஜி தீவு, பிலிப்பன்ஸ், அமரிக்கா, உகந்தா போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இந்தியாவில் தமிழ் நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. பழங்கால இலக்கியங்களில் புன்னை மரம் பற்றிக் காணப்படுகிறது.
  புன்னை மரம் அழகிற்காகவும் வளர்க்கப்படுகிறது.
  சோதிடத்தில் ஆயில்ய நட்சத்திரத்தின் மரம் புன்னை.
  இது நோயைகுணமாக்கும் மரமாக விளங்கியுள்ளது. புன்னை கோயில்கள், சர்ச்சுகளிலும் வளர்க்கப்படுகிறது. கேரளம் தமிழ்நாட்டில் கோயில்களில் காணப்படுகிறது. புன்னை மரம் வலுவானது. இந்த மரத்தில் படகுகள் செய்வார்கள். வீடுகள் கட்டவும் பயன்படுத்துவார்கள்.  இதன் எண்ணெயில் ஆதிகாலத்தில் விளக்குக்குப் பயன் படுத்தினார்கள்.  தற்போது இதை பயோடீசல் தயார் செய்து டீசலுக்ககுப் பதிலாகப்பயன் படுத்துகிறார்கள்.. காட்டாமணக்கு, புங்கன், சொர்க்கமரம், வேம்பு மற்றும் இலுப்பை மரங்களில் கிடைக்கும் விதை போன்று இதன் விதையும் பயன் படுகிறது. புன்னை விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

6.     மருத்துவப் பயன்கள் :- புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசைவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். இது சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம்  ஆகியவைகளைக் குணப்படுத்தும்.

பூவை அரைத்துச் சிரங்கிற்குப் போடலாம்.

இலையை ஊரவைத நீரில் குளித்து வர மேகரணம், சொறி, சிரங்கு யாவும் மறையும்.

பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு தீரும்.

புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம் முன் இசைவு, பின் இசைவு, கிருமி ரணம் சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும்.

புன்னை எண்ணெய் 10, 15 துளி சர்கரையில் கொடுத்து உப்பில்லா பத்தியம் இருக்க கொனேரியா என்ற வெள்ளை மேகரணம் தீரும்.

புன்னை மரம் கோயில்களில் உள்ளதை ஆயில்யம் நட்சரத்தில் பிறந்தவர்கள் அந்த மரத்தைச் சுற்றி வந்து கட்டிப் பிடித்துத் தழுவும் போது அந்த மரத்தின் கதிர் வீச்சுக்கள் உடலில் படும் போது நோய்கள் குணமடைகிறது. முக்கியமாக பெண்களுக்கான இதய நோய்கள், மார்பக நோய்கள் குணமடைவதாகச் சொல்கிறார்கள்.

புன்னை விதையை அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட முடக்கு வாதம், கீல்வாயு, வாதவலிகள் தீரும்.

பட்டைக் குடிநீரால் புண்களைக் கழுவலாம்.

புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும் பட்டையை அரைத்துப் பவுடராக்கி தினம் ஒரு வேளை கொடுக்க மூட்டுவலி, சொறி, சிரங்கு குஷ்டம் மேகம் ஆகியவை குணமாகும்.

ஆயுள் அதிகரிக்க வேண்டுமா

ஆயுள் அதிகரிக்க வேண்டுமா?

தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, "டிவி' பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும். மாறாக, தினமும், 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், அவரது ஆயுள், மூன்று ஆண்டுகள் கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, "டிவி!' "டிவி' நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகள் மூலம் புரிந்து கொள்ள இயலும். ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் மக்கள் தொகை நலன் குறித்தான பள்ளி ஆய்வு மாணவர்கள், 2000ம் ஆண்டு, 11 ஆயிரம் பேரிடம், "டிவி' பார்ப்பது குறித்த ஆய்வு நடத்தினர். இவர்கள் அனைவரும், 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆய்வு நடத்தினர். ஆய்வில் இருந்து அவர்கள் எட்டு ஆண்டுகளில், 9.8 பில்லியன் மணி நேரம், "டிவி' பார்த்துள்ளதும், அதன் மூலம், இரண்டு லட்சத்து, 86 ஆயிரம் மணி நேரம் அவர்களது ஆயுள் குறைந்து விட்டதும் தெரிந்தது. இவ்வாறு ஒரு மணி நேரம், "டிவி' பார்த்ததால், 22 நிமிடங்கள் ஆயுள் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. இது ஒரு மணி நேரத்தில், இரண்டு சிகரெட்டுக்கள் புகைத்தால் ஏற்படும் பின் விளைவிற்கு ஒப்பானது. மேலும், அவர்களுக்கு இதயநோய், நீரிழிவு, உடல் எடை அதிகரித்தல் போன்ற பல்வேறு உடல் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிந்தது. இது தவிர, உரிய காலத்திற்கு முன்பாகவே இறப்பதற்கான வாய்ப்பு, 8 சதவீதம் அதிகரிப்பதும் தெரிய வந்தது. ஆய்வு நடத்தப்பட்ட ஆண்டுகளுக்கு இடையே, புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை சரிவு அடைந்துள்ளதும், "டிவி' பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை என்பதும் தெரிய வந்தது. ஆஸ்திரேலியாவில் அப்படிப்பட்ட ஆய்வு என்றால், தைவான் நாட்டின் தேசிய ஆரோக்கிய ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் சீ பாங்க் வென் கூறுகையில், "நானும், என் சக மாணவர்களும், 13 ஆண்டுகளில் நான்கு லட்சத்து, 16 ஆயிரம் பேரை தீவிரமாக ஆய்வு செய்தோம். ஒவ்வொரு ஆண்டும் அவர்களது உடல் நலம் பரிசோதிக்கப்பட்டது. "இதில், ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள், ஆரோக்கியமானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் என பலரையும் கண்காணித்தோம். அதன் அடிப்படையில் தினமும், 15 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடை பயணம் செய்தால், அவர்களது ஆயுள் மூன்று ஆண்டுகள் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது…' என்றார்

பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி  எதற்கு பயன்படும்..?*

*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

நேற்று என்பது வரலாறு நாளை என்பது புதிர்

நேற்று என்பது வரலாறு
நாளை என்பது புதிர்
ஆனால் இன்று ஒரு பரிசு
அதை இழக்காதே.

* முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.

* முடியும் என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்.

* இருட்டை குறை கூறி உட்கார்ந்திருப்பதால், என்ன பயன்? விளக்கு ஒன்றை ஏற்றுவதல்லவா விவேகம்.

* நம் முன்னோர் மரம் நட்டனர்; நாம் அனுபவிக்கிறோம். நாம் யாருக்குமே முன்னோர் இல்லையா? நாம் எதையாவது சாதிக்க வேண்டாமா?

* எல்லாவற்றையும் முயன்று பார்த்தாகி விட்டது என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா? பொறுங்கள்... இன்னும் சில வழிகள் இருக்கின்றன; தேடுங்கள்.

* ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும், ஓராயிரம் தோல்விகள், துயரங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் இருக்கத்தான் செய்யும்.

* சாதித்தே தீருவேன் என்று சபதம் போடு. குறைகளும், தடைகளும் கூட கொடுக்கும் ஒத்துழைப்பு.

* மாற்ற முடியாததை மாற்ற நினைக்காதே; மாற்ற முடிந்ததை மாற்றாமல் விடாதே! மாற்றக்கூடியது எது, மாற்ற முடியாதது எது என்பதில் விவேகம் காட்டு.

* வேலைகளை ஒத்திப் போடுபவன், வெற்றிகளை ஒத்திப் போடுகிறான்; விதைப்பதை ஒத்திப் போடுபவன், விளைச்சலை ஒத்திப் போடுகிறான்.

* அறிவும், பணமும்தான் உலகை ஆளும். அறிவை வளர்ப்பதிலும், பணத்தைச் சேர்ப்பதிலும் அக்கறை காட்டு.

* ஆரம்பித்தால் அரை வெற்றி, தொடர்ந்தால் முக்கால் வெற்றி, முடிந்தால் முழு வெற்றி.

* லட்சியம், திட்டம், உழைப்பு, விடா முயற்சி இவையே வெற்றி மாளிகையின் நான்கு தூண்கள்.

* உன்னால் என்ன முடியும் என்பதைக் கொண்டு, உன்னை நீ மதிப்பிடுகிறாய். நீ என்ன சாதித்திருக்கிறாய் என்பதை கொண்டு தான், உலகம் உன்னை மதிப்பிடுகிறது.

* நீ சும்மா இருக்கலாம்; ஆனால், காலமும், நேரமும் சும்மா இருப்பதில்லை. உன் ஆயுளில் ஒரு நாளைக் குறைத்து விட்டுத்தான் செல்கிறது.

*தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல. உழைத்தது சரியில்லை என்று தான் பொருள்.

* நேரம் நிற்பதில்லை; காலம் காத்திருப்பதில்லை. நீ நிற்கிறாய். காத்திருக்கிறாய். காலத்தை இழக்கிறாய். கண்ணைத் திற.

* ஒவ்வொரு துயரத்திற்கும் உட்கார்ந்து நீ ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் நேரங்களில், வெற்றி தேவதை உன்னை விட்டு வெகுதூரம் விலகிப் போகிறாள்.

* காத்திருக்கும் கடமைகளுக்கே காலம் போதவில்லை. நேற்றைய கவலைகளும், நாளைய பயங்களுமா நம் நேரத்தை விழுங்குவது?

* நேற்றைய இழப்புகளை ஈடு செய்யத் தான், இன்று பிறந்திருக்கிறது. இன்றுமா உறக்கம்? இன்னுமா சோம்பல்?

* முடியும் என்பது தன்னம்பிக்கை. முடியுமா என்பது அவநம்பிக்கை. முடியாது என்பது மூட நம்பிக்கை.

தக்காளியின் மருத்துவப் பயன்கள்

தக்காளியின் மருத்துவப் பயன்கள்:        
கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது.சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது.தொண்டைப் புண்ணை ஆற்றும்.இரத்தத்தை சுத்தமாக்கும்.எலும்பை பலமாக்கும்.                   நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்தோலை பளபளப்பாக்கும்இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்.மலச்சிக்கலை நீக்கும்.குடற்புண்களை ஆற்றும்.களைப்பைப் போக்கும்.ஜீரண சக்தியைத் தரும்.சொறி, சிரங்கு, சரும நோய்களைப் போக்கும்.தொற்று நோய்களைத் தவிர்க்கும்.வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும்.கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும்.உடலின் கனத்தைக் குறைக்கும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு இது.
தக்காளியில் உள்ள சத்துக்கள் :
இரும்புச் சத்து - 0.1 மி.கிராம்சுண்ணாம்புச் சத்து - 3.0 மி.கிராம்வைட்டமின் ஏ - 61 மி.கிராம்
உடல் சோர்வு நீங்க :
தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.
தோல் நோய் குணமாக :
நன்கு பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
மலச்சிக்கல் நீங்க :
காலை, மாலை இரு வேளைகள், இப்பழங்களை சாப்பிட்டு வாருங்கள், மலச்சிக்கல் அகன்று விடும்.

முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற உதவும் 6 பொருட்கள் – இயற்கை மருத்துவம்.!!!

முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற உதவும் 6 பொருட்கள் – இயற்கை மருத்துவம்.!!!

அழகான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெறுவது கஷ்டமான விஷயம் ஒன்றும் அல்ல. தினமும் ஒரு 10-20 நிமிடம் செலவழித்தாலே போதுமானது.facial

பொதுவாக முகம் பொலிவிழந்து அசிங்கமாக காணப்படுவதற்கு காரணம், முகத்தில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருப்பது தான். இத்தகைய அழுக்குகளை அன்றாடம் சுத்தம் செய்து வந்தாலே, முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ளலாம்.

முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய உதவும் பொருட்கள் என்ன என்று நீங்கள் கேட்கலாம். எனவே தமிழ் போல்ட் ஸ்கை தினமும் முகத்தில் படியும் அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற உதவும் சில சமையலறைப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் முகம் பொலிவோடு இருக்கும்.

பாதாம் பேஸ்ட் :-

பாதாமில் சருமத்திற்கு வேண்டிய வைட்டமின் ஈ ஏராளமாக நிறைந்துள்ளது. அத்தகைய பாதாமை பொடி செய்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு, கடலை மாவு மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து கழுவி வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, சருமத்திற்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

உளுத்தம் பருப்பு :-

உளுத்தம் பருப்பில் கனிமச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே 1/2 கப் உளுத்தம் பருப்பை நீரிடல் ஊற வைத்து அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வாரத்திற்கு மூன்று முறை இதைக் கொண்டு 15 நிமிடம் ஸ்கரப் செய்து கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பொலிவோடு காணப்படும்.

பச்சை பயறு :-

பச்சை பயறில் வைட்டமின் ஏ, சி அதிகம் உள்ளது. மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றக்கூடியதும் கூட. எனவே அத்தகைய பச்சை பயறை பொடி செய்து, அதில் தேன் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அரிசி மாவு :-

அரிசி மாவில் வைட்டமின் ஈ, கே மற்றும் பி6 உள்ளது. இது சோர்வடைந்து காணப்படும் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும். அதற்கு அரிசி மாவை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி முகம் மற்றும் கை, கால்களிலும் தடவி ஸ்கரப் செய்தால், அழுக்குகள், இறந்த செல்களுக்கு முழுவதும் வெளிவந்து, முகம் பிரகாசமாக இருக்கும்.

ஜவ்வரிசி :-

1 டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கி, நன்கு வெந்த ஜவ்வரிசியை ஒரு பௌலில் போட்டு, அதில் 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் மூல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்ச்சரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்மு, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வர, உங்கள் முகம் அழகாக காட்சியளிக்கும்.

கல் உப்பு :-

கல் உப்பில் கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இத்தகைய கல் உப்பை ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி மென்மையாக 10 நிமிடம் ஸ்கரப் செய்து வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சரும செல்கள் புத்துணர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.

முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முகத்தில் உள்ள கருமையைப் போக்குவது எப்படி?

முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முகத்தில் உள்ள கருமையைப் போக்குவது எப்படி?

சருமத்திற்கு நல்ல ஊட்டத்தை வழங்கும் உணவுப் பொருட்களில் ஒன்று முட்டையின் வெள்ளைக்கரு. இதற்கு முட்டையில் உள்ள புரோட்டீன் தான் காரணம். இந்த புரோட்டீன் நல்ல மாய்ஸ்சுரைசராகவும், சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கவும் செய்யும்.

முதல் முறை
ஒரு பௌலில் 2 முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து முகத்தின் மேல் தடவ வேண்டும். பின் 5 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு தேய்த்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிப்பதைக் காணலாம். முக்கியமாக இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

இரண்டாம் முறை
2 முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தக்காளி சாறு மற்றும் 1 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையினால் தக்காளியில் உள்ள லைகோபைன் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுத்து, சருமத்தை வெள்ளையாக்கும்.

மூன்றாம் முறை
ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அதோடு 4 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1 ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் நனைத்த காட்டன் துணியால் துடைத்து எடுத்த பின், கலந்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

நான்காம் முறை
1 முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் சிறிது கடலை மாவு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

ஐந்தாம் முறை
ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் சிறிது கேரட்டை துருவி போட்டு, பால் சிறிது ஊற்றி நன்கு கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, முகத்தில் உள்ள முதுமைக் கோடுகள் அனைத்தும் நீங்கி, இளமைத் தோற்றம் தக்கவைக்கப்படும்.

ஆறாம் முறை
முட்டையின் வெள்ளைக்கருவுடன் முல்தானி மெட்டி சேர்த்து நன்கு ஒருசேர கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, முகத்தில் இருந்து எண்ணெய் வழிவது தடுக்கப்பட்டு, முகப்பொலிவு இன்னும் மேம்படும்.

ஏழாம் முறை
வாரத்திற்கு 2-3 முறை வெறும் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தாலே, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.

Friday, 29 July 2016

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?
என்கிற தேடல் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தினம் ஒன்றாக சந்தைக்கு வரும் ஒவ்வொரு புது எண்ணெயுமே 'ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்' என விளம்பரப்படுத்திக் கொள்ள, மக்களின் குழப்பம் இன்னும் அதிகமானதுதான் மிச்சம்.இந்தக் குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், எண்ணெய் நல்லதா, கெட்டதா, அது ஏன் அவசியம் என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் என்பது கொழுப்பு... கொழுப்பு ஏன் தேவை?

உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க, செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்பதற்கு, உள் உறுப்புகளைப்

பாதுகாப்பதற்கு...

புரதத்திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள் என்றால் அதே அளவு கொழுப்பிலோ 9 கலோரிகள்! கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரியாதது என கொழுப்பில் 2 வகை. எண்ணெய், நெய், வெண்ணெய் என எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து நாம் எடுத்துக்கொள்கிற கொழுப்பு. அரிசி, பருப்பு, முட்டை, மீன், இறைச்சி, எண்ணெய் வித்துகள் போன்ற உணவுகளின் மூலம் உடலுக்குள் சேர்வது கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு. இது தவிர, சாச்சுரேட்டட் மற்றும் அன்சாச்சுரேட்டட் என கொழுப்பை இன்னும் 2 வகைகளாகப் பிரிக்கலாம். விலங்குக் கொழுப்பில் சாச்சுரேட்டட் வகை மிக அதிகம். இந்த வகைகொழுப்பு உடல்நலத்துக்கு நல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ மற்றும் டி-யை நம் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கும் வேலையை இந்த வகைக் கொழுப்புகளே செய்கின்றன. அன்சாச்சுரேட்டட் அல்லது பாலி அன்சாச்சுரேட்டட் வகையை நல்ல கொழுப்பு என்கிறோம். ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் செய்வது இதுவே. தாவரக் கொழுப்பு எல்லாமே அன்சாச்சுரேட்டட் வகையறாதான். வனஸ்பதி மட்டும் விதிவிலக்கு. அதனால், அதை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வனஸ்பதி மட்டுமல்ல... அறை வெப்ப நிலையில் கெட்டியாகக் கூடிய எந்த வகை எண்ணெய் வகைகளும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.

எந்த எண்ணெயில் என்ன இருக்கிறது?

பாமாயில்

1 கிராம் பாமாயிலில், 800 µg அல்லது mcg பீட்டா கேரட்டின் (வைட்டமின் ஏ) உள்ளது. ஆனாலும், அந்த எண்ணெயில் உள்ளது சாச்சுரேட்டட் கொழுப்பு என்பதால் தொடர்ந்து உபயோகிக்க முடியாது.

சூரியகாந்தி எண்ணெய்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் என்பதால், இது உபயோகத்துக்கு ஏற்றது.

கடலை எண்ணெய்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மிதமாக உள்ளது. ஆனாலும், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியச் செய்வதில் இதற்கும் பங்குண்டு. பாமாயில் அளவுக்குக் கெடுதலானது அல்ல.

தவிட்டு எண்ணெய்
ரைஸ் பிரான் எண்ணெய் எனக் கேள்விப்படுகிறோமே... அதுதான் தவிட்டு எண்ணெய். இதய நோயாளிகளுக்கு மிக நல்லது.

நல்லெண்ணெய்

இதுவும் பாலி அன்சாச்சுரேட்டட் வகையைச் சேர்ந்தது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பாக மாற்றும் தன்மை கொண்டது.

ஆலிவ் ஆயில்

இதய நோயாளிகளுக்கு ஏற்றது. இதை சூடுபடுத்தக் கூடாது. பொரிக்க, வறுக்கப் பயன்படுத்த முடியாது. சாலட்டுக்கு உபயோகிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமுள்ளதால், ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

கடுகு எண்ணெய்

ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையும் கொண்டது. இதயத்துக்கு நல்லது. கடுமையான வாசம் காரணமாக, நம்மூர் மக்களுக்கு இந்த எண்ணெய் பிடிப்பதில்லை. வட இந்திய மக்கள், கடுகு எண்ணெயை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும் நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்தை மிஞ்சாமலிருப்பதுதான் சரி.

உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால், 'டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்' அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால், கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம். பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்கவும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக் கேட்டை விலைக்கு வாங்க வேண்டாம்!

எப்படி உபயோகிக்க வேண்டும்?

நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லது 2 மாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம். நான்ஸ்டிக் கடாயில் செய்தால் எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது.

எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு
மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.

தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும்.தோசை ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டாலும் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.

சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

அக்காலத்தில் நம் முன்னோர்கள் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கண்டு வந்தார்கள். ஆனால் தற்போது மருத்துவத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியினால் பலரும் தங்களது உடலில் ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்கும் மருத்துவரை சந்தித்து பணம் செலவழித்து சிகிச்சை எடுக்கின்றனர். அதுமட்டுமின்றி, இக்கால தலைமுறையினருக்கு நாட்டு வைத்தியத்தின் மீது அதிக நம்பிக்கை இல்லை என்று கூட சொல்லலாம்.

ஆனால், உண்மையில் நாட்டு வைத்தியத்தை விட சிறந்த வைத்தியம் வேறு எதுவும் இல்லை. இருப்பினும் நம் முன்னோர்களின் பழக்கவழக்கங்களை இக்கால தலைமுறையினருக்கு எடுத்துரைப்பது நமது கடமை. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நம் முன்னோர்கள் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க எலுமிச்சை, மிளகு மற்றும் உப்பை எப்படி பயன்படுத்தி வந்தனர் என்பது குறித்தும், அவை எந்தெந்த பிரச்சனைகளைக் குணப்படுத்தும் என்றும் கொடுத்துள்ளது.

மூக்கடைப்பு: வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதால், உடலினுள் வெப்பம் தூண்டப்பட்டு, சுவாசக் குழாய்களில் உள்ள அழற்சிகள் நீக்கப்பட்டு, மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தொண்டைப்புண்: தொண்டைப்புண் அல்லது தொண்டை கரகரப்பு இருக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பித்தக்கற்கள்: பித்தக்கற்கள் இருப்பவர்கள், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சையுடன், சிறிது ஆலிவ் ஆயில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், பித்தக்கற்கள் கரையும்.

எடை குறையும்: தினமும் காலையில் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்களை கரைக்கும் செயல் வேகப்படுத்தப்பட்டு, உடல் எடையும் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.

பல் வலி: பல் வலியால் கஷ்டப்படுபவர்கள், இந்த கலவையால் தினமும் வாயைக் கொப்பளித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை கிருமிகளை அழித்து, பல் வலியில் இருந்து நிவாரணம் தரும்

காய்ச்சல்: காய்ச்சல் இருக்கும் போது, சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சையுடன், தேன் சேர்த்து கலந்து குடித்து வர, உடலைத் தாக்கிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரித்து, காய்ச்சலில் இருந்து விரைவில் குணமாகலாம்.

குமட்டல்: உப்பு மற்றும் மிளகுத் தூள் வயிற்றில் உள்ள அமிலங்களை நீர்க்கச் செய்யும், எலுமிச்சையின் மணம் குமட்டலைக் குறைக்கும். மொத்தத்தில் இந்த கலவையை எடுத்து வர வயிற்றுப் பிரச்சனைகள் தடுக்கப்படும்.

Thursday, 28 July 2016

448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி.

தினமும் வெறும் வயிற்றில். செம்பு பாத்திரத்தில் நிரப்பிய  துளசி நீரை குடியுங்கள். என்று எனக்கு தெரிந்த. புற்று நோய்க்கான சிறந்த மருத்துவத்தையும் அவங்களுக்கு சொல்லி விட்டு வந்தேன். மேலும் அங்கு ஒரு கொலையும் செய்தேன். நான் கொன்றது யாரை தெரியுமா. உலகின் மிக கொடிய நோயான பயத்தை.
மரபணு மாற்றப்பட்ட காய்கள், பழங்களை தெரிந்தோ, தெரியாமலோ நாம் உண்பது புற்று நோய் வருவதற்கான முக்கிய காரணம். வடக்கே பல இடங்களில் புற்று நோயாளிகளுக்கு என்று தனியாக சிறப்பு ரயில் விடும் அளவு புற்று நோயாளிகள்  அங்கு இருக்கிறார்கள்.

புற்று நோய் என்று அல்ல. 448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி.

துளசியின் மகத்துவம் பாப்போம்.

ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம்   ஊர வைக்க  வேண்டும். பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். ஆரம்ப  நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய்  மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். துளசியின் மருத்துவ பண்புகள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட  உண்மை.

சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம். ஏன்? செம்பு பாத்திரம்.

தாமிர சக்த்து  [செம்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு  சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குனப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி  செய்யும் சக்தி தாமிரத்திர்க்கு  உண்டு. தாமிர பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே.  உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர்.

  துளசி நீர், புற்று நோயை குணபடுத்தும் என்று சித்த மருத்துவமோ, ஆயுர் வேத மருத்துவமோ. சொல்லியிருக்கா என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீ சொல்லும் இந்த செய்தி. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா? கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பண்ணி சரி பண்ண. புற்று நோய் ஒன்னும் bp, சுகர்  அல்ல. அது ஆட் கொல்லி நோய். என்று. உங்களில் பலர்  கேட்பது புரிகிறது. உங்களது கேள்வி. மிக நியாயமானதும் கூட. துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று. NDTV இதை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வு சம்பந்தமாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் லிங்க் கீழே.

http://www.ndtv.com/india-news/tulsi-enters-us-lab-to-fight-cancer-548197

Tulsi  Cures  Cancer  என்று google ளில் டைப் செய்து பாருங்கள். இதே போல். பல ஆய்வுகளின் முடிவை google  சொல்லும்.

வியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்பளர் துளசி நீரை பருகுங்கள். மண் பானை நீரை விட தாமிர பாத்திர நீர் உடல் ஆரோக்யத்திற்கு அவ்வளவு நல்லது.

பெருமாள் கோவில்களில். தாமிர பாத்திரத்தில் துளசி நீர் பன்னெடுங்காலமாக கொடுக்கும் ஆன்மிக சடங்கினுள் ஒரு மிக பெரிய அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது உங்களுக்கு புரிகிறதா.

இந்த உலகிலேயே. மிக சிறந்த புண்ணிய  நதி. தாமிர சக்து அதிகம் உள்ள தாமிரபரணி ஆறு தான்.

  திராட்ஷையின் விதைகளும் புற்று நோயை குணப்படுத்த கூடிய மருந்தாக இருக்கிறது. வேர்கடலையில் அதிக அளவு ஒமேகா 3 இருப்பதால் அதுவும் புற்று நோய் வரும் ஆபத்தை குறைக்கும். மேலும் நல்ல உடல் வலுவை தருவதுடன். IQ  லெவலையும் அதிகரிக்கும் சக்தி ஒமேகா 3 க்கு இருக்கிறது...🙏

துரியன் பழம்

தற்போது துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடைய துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது.

இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதிலும் பழங்கள் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.

அதே சமயம் சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால் உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை.

ஏனெனில் துரியன் பழம் சாப்பிடுவதால் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதால் தான் அவ்வாறு கூறுகின்றனர்.

இருப்பினும் போதிய அளவு துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

ஏனெனில் துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உட்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

மேலும் வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. சரி, இப்போது துரியன் பழத்தால், உடலுக்கு கிடைக்கும் சில நன்மைகளைப் பார்ப்போம்.

துரியன் பழத்தின் சதைப் பகுதியை சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தலாம்.

நகங்களில் பிரச்சனை இருக்கும் போது துரியன் பழத்தின் வேர்களைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அதனைச் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.

துரியன் மரத்தின் வேர் மற்றம் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால், காய்ச்சலில் இருந்து குணம் பெறலாம்.

துரியன் பழத்தில் உள்ள வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். துரியன் பழத்தின் தோல், கொசுக்கடியைத் தடுக்க உதவும்.

துரியன் பழத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால், இதனைச் சாப்பிட இரத்த சோகையை குணமாகும்.

இளமையிலேயே முதுமை தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சத்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.

மன அழுத்தம் மற்றும மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துரியன் பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் ஃபைரிடாக்ஸின் என்னும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.

இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது அதிகரிக்கும்.

ஒற்றைத் தலைவலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, துரியன் பழம் ஒரு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். ஏனெனில் இதில் ஒற்றைத் தலைவலியைப் போக்கும் ரிபோஃப்ளேவின் அதிகம் நிறைந்துள்ளது.

துரியன் பழத்தில் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்திருப்பதால், அதனைச் சாப்பிட பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

துரியன் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

பொதுவாக கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்க முடியாது. ஒருவேளை கருத்தரித்தாலும், சில நாட்களில் கலைந்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால் கருப்பை பலமாகி ஆரோக்கியமாக ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

ஆண்கள் துரியன் பழத்தை சாப்பிட்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பசியின்மை பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள தயமின் மற்றும் நியாசின் பசியைத் தூண்டும். சொறி சிரங்கு பிரச்சனை இருந்தால், துரியன் பழத்தின் தோலை அரைத்து தடவினால் குணமாகும்

6 மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு எந்த வகை உணவுகளை கொடுக்கலாம்

6 மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு எந்த வகை உணவுகளை கொடுக்கலாம்

Captureகுறைந்தது 6 மாத காலம் வரைக்கும் குழந்தைக்கு தாய் பாலினை கொடுக்க வேண்டும். அதன் பிறகு சில மாற்று உணவு வகைகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அவ்வாறு 6 மாதங்களின் பின்னர் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு எப்படியானதாக இருக்க வேண்டும்? என்னென்ன வகையான உணவுகளை அவர்களுக்கு வழங்கலாம்? எதனை தவிர்க்கலாம்? இனிப்புகளை வழங்குவது சரியா? சாப்பிட மறுக்கும் குழந்தைகளை எவ்வாறு சாப்பிட வைக்கலாம? என எம்மில் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழுவது இயல்பான ஒன்று. நாம் குழந்தைகளுக்கு வழங்கும் உணவு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பதை பார்ப்போம்.

அவர்களுக்கு வழங்கும் உணவில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கி இருக்க வேண்டும். அத்துடன் சக்தி செறிவு மிக்கதாகவும் இருத்தல் அவசியம். மேலும் இலகுவில் விழுங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பெரும்பாலும் திரவத்தன்மையான உணவு வகைகளை முதலில் கொடுத்து பழக்குவது மிகவும் சிறந்தது.

மீன் போன்ற உணவு வகைகளைக் கொடுக்கும் போது அவற்றை வேக வைத்து கைகளிலே நன்றாக மசித்துக் கொடுக்க வேண்டும். மீன்களை வழங்கும் போது பெரும்பாலும் முள்ளில்லாத சிறிய ரக மீன்களை கொடுப்பது சிறந்தது. அத்துடன் சுத்தமான பழவகைகளை சாறு பிழிந்தும் அல்லது அரைத்தும் மசித்தும் கொடுக்கலாம்.

ஆனால் இவைகளை ஓர் அளவுக்குத் தான் கொடுக்க வேண்டும். குழந்தை குறித்த ஓர் உணவினை விருப்பவில்லையென்றால் அதனைக் கொடுப்பதை தவிர்த்துக் கொண்டு வேறு உணவுகளை கொடுக்கலாம். அதனை தொடர்ந்து இரு வாரங்களுக்குப் பின்னர் முதலில் குழந்தை உண்ண மறுத்த உணவினை மீண்டும் ஒரு புதிய வடிவில் சமைத்துக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு கொடுக்க கூடாத உணவுகள் என்று பார்க்கும் போது மிகவும் முக்கியமாக இனிப்பு சுவையுள்ள உணவுகளை வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தது கொழுப்புச் சத்துள்ள உணவுகள். இவ்வகையான உணவுகள் உங்களின் குழந்தைகளை குண்டாக்கச் செய்யும். குழந்தைகள் குண்டாக இருப்பது உண்மையாகவே அவர்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்றதொன்றல்ல. வயதுக்கேற்ற நிறையும் உடல் அளவும் கொண்டிருப்பது தான் மிகவும் சிறந்தது.

காரணம் குழந்தைகள் பெரும்பாலும் 1 வயதில் எழுந்து நடப்பதற்கு முயற்சிக்கும். அவ்வாறு 1 வயதில் எழுந்து நடக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு இருதயம் பலமிக்கதாக இருக்கும். எதிர்காலத்தில் அக்குழந்தைகளுக்கு இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு.

எனவே நாங்கள் அளவுக்கதிமாக இனிப்பு மற்றும் கொழுப்புச் சுவையுடைய உணவுகளை வழங்குவதால் அவர்களின் உடற்பருமன் அதிகரித்து அவர்களால் இயல்பாக எழுந்திருப்பதோ அல்லது ஏனைய செயற்பாடுகளை செய்வதோ மிகவும் கடினமாக அமைந்து விடும் அல்லவா.

மேலும் ஐஸ்கிரீம், கோதுமை மாவிலான உணவுகளை முடிந்தளவு தவிர்த்துக் கொள்வது குழந்தைகளின் நீண்டகால ஆராக்கியத்துக்கு ஏற்ற ஒன்றாகும். அத்துடன் கடல் உணவுகளில் இறால், நண்டு, கணவாய் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

காரணம் இவ்வகையான உணவுகளால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை போன்ற சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அத்துடன் செயற்கை சுவையூட்டிகளோ, நிறமூட்டிகளோ, வாசைனையூட்டப்பட்ட உணவு வகைகளையோ கொடுக்க கூடாது.

இவ்வாறான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வந்தால் உங்கள் குழந்தைகளும் ஆரோக்கியமான குழந்தைகளாக வளரும்.
எனவே ஒரே தடவையில் நாம் அதிகளவான உணவுகளை வழங்குவதுடன் அவர்கள் கேட்கின்ற தருணங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வழங்குவதில் தப்பில்லை. அத்துடன் அவர்களின் வளர்ச்சி வேகத்திற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு சக்தி மிக்க உணவுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Wednesday, 27 July 2016

குழந்தைகளை குறிவைக்கும் போதை சாக்லெட்…உஷார்..

குழந்தைகளை குறிவைக்கும் போதை சாக்லெட்…உஷார்..

குழந்தைகளுக்கு சாக்லெட் போன்ற இனிப்பு பண்டங்களை வாங்கிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.

ஒரு சிட்டுக்குருவியின் முன்னால் நாலைந்து தங்க மோதிரங்களையும், சிறிது தானியங்களையும் வீசி எறிந்தால், அது தானியங்களின் பக்கம்தான் திரும்பும்.

நமக்கு வேண்டுமானால் தங்க மோதிரம் பெரிதாக இருக்கலாம். ஆனால் சிட்டுக்குருவிக்கு தங்க மோதிரம் ஒரு பொருட்டே அல்ல; அதற்கு தேவை தானியம். அதுதான் அதற்கு உணவு.

இதேபோல் தேவைகள், விருப்பங்கள் என்பது உயிரினங்களுக்கு இடையே மட்டுமின்றி, மனிதர்களுக்கு இடையேயும் மாறுபடக்கூடியது.

குறிப்பாக வயதுக்கு ஏற்ப தேவைகளும், விருப்பங்களும் மாறுபடுகின்றன. 8 வயது சிறுமியை கடைக்கு அழைத்துச் சென்று உனக்கு தேவையானதை வாங்கிக் கொள் என்றால், அவளுடைய முதல் தேர்வு சாக்லெட் ஆகத்தான் இருக்கும்.

ஏனெனில் சாக்லெட் குழந்தைகளின் விருப்பமான தின்பண்டம். சாக்லெட்டை பிடிக்காத சிறுவர்-சிறுமிகளே கிடையாது. இதனால்தான் உணவுப்பண்ட தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான சாக்லெட்டுகளை விதவிதமான வடிவங்களிலும் வண்ணங்களிலும், சுவைகளிலும் தயாரிக்கின்றன.

சாக்லெட்டுகள் மீதான குழந்தைகளின் இந்த மோகத்தை சிலர் தங்கள் வியாபார உத்திக்காக தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்.

சாக்லெட்டுகளில் கஞ்சா போன்ற போதை வஸ்துகளை கலந்து விற்பனை செய்து, சிறுவர்களை அதற்கு அடிமை ஆக்குகிறார்கள்; நாட்டின் வருங்கால தூண்களை நாசமாக்குகிறார்கள்.

இந்த போதை சாக்லெட் விவகாரம் சமீபத்தில் தமிழகத்தை உலுக்கி எடுத்துவிட்டது. பள்ளிக்கூட மாணவர்களை குறி வைத்தே இந்த வகை சாக்லெட்டுகள் விற்கப்படுகின்றன.

சென்னை நகரில் சில பள்ளிக்கூடங்களின் அருகே உள்ள கடைகளில் கஞ்சா அல்லது போதை மருந்து கலந்த சாக்லெட்டுகள் விற்கப்பட்டதும், அவற்றை மாணவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததும் சமீபத்தில் அம்பலமானது.

கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் மூளை நரம்புகளை கடுமையாக பாதிக்கும். போதை பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், அதில் இருந்து மீள்வது கடினம். எனவே இந்த விஷயத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவேண்டும்.

குழந்தைகள் நாட்டின் வருங்கால தூண்கள். அவர்கள் சாக்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கலந்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை அரசாங்கம் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது.

இந்த போதை சாக்லெட்டுகள் பற்றி குழந்தைகளுக்கு சரிவர தெரிவதில்லை. வழக்கமாக சாப்பிடும் தின்பண்டம் போல் இந்த சாக்லெட்டுகளையும் வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால் இவை வீட்டில் பயன்படுத்தப்படும் சர்க்கரை மற்றும் மென்டால், குளுக்கோஸ், கலர் பொடி ஆகியவற்றுடன் போதை வாஸ்துகள் சேர்க்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது.

இதுபோன்று போதை தரக்கூடிய சாக்லெட்டுகளை வாங்கி சாப்பிடுவதால் மாணவ-மாணவிகளுக்கு ஒருவித மந்த நிலை ஏற்படும். சில சமயங்களில் மயக்கம் ஏற்பட்டு வாந்தி, பேதியும் ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் மனவளர்ச்சி குன்றவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுவதோடு அவர்கள் தவறான வழிகளில் செல்ல நேரிடும்.

எனவே பெற்றோர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது பணம் கொடுப்பதை (பாக்கெட் மணி) முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்தே நல்ல சத்தான தின்பண்டங்களை பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்பவேண்டும். கூடுமானவரை சாக்லெட் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் அழுது அடம்பிடித்து கேட்கும்பட்சத்தில் நல்ல தரம்வாய்ந்த கம்பெனியின் சாக்லெட்டுகளை வாங்கிக்கொடுங்கள். அவ்வாறு சாக்லெட் வாங்கும்போது தயாரிப்பு தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை கவனமாக பார்த்து வாங்குங்கள். அதற்கும் மேலாக சாக்லெட்டுகளில் அதிக நிறமேற்றப்பட்டிருந்தால் அதை வாங்காதீர்கள்.

சில வகை சாக்லெட்டுகளில் ஆங்கிலத்தில் 'பான்கேன்டி' என எழுதப்பட்டு இருக்கும். அப்படி எழுதப்பட்டு இருந்தால் அது போதை சாக்லெட் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அப்படி இல்லையெனில், அந்த சாக்லெட்டை நுகர்ந்து பார்க்கும்போது போதை பாக்கு வாசனை தெரியும். அதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம். இதுபற்றியெல்லாம் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருந்து தங்கள் பிள்ளைகளுக்கு புரியும்படி எடுத்துச்சொல்ல வேண்டும்.

பொதுவாக குழந்தைகள் சாக்லெட்டுகளை விரும்பி கேட்கும்போது பெற்றோர்களும், உறவினர்களும் அந்த சாக்லெட்டின் காலாவதி காலம், அந்த சாக்லெட் தரமானதுதானா? என்பதையெல்லாம் பார்க்காமல் வாங்கிக் கொடுக்கின்றனர்.

காலாவதியான சாக்லெட்டை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அது தெரியாமல் குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவத்துக்காக பணத்தை வீணாக செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இனிப்பான எல்லா பண்டங்களும் குழந்தைகளுக்கு பிடிக்கும். அது உடலுக்கு நல்லதா? அல்லது தீங்கு விளைவிக்கக்கூடியதா? என்று அவர்களுக்கு தெரியாது. எனவே குழந்தைகளுக்கு சாக்லெட் போன்ற இனிப்பு பண்டங்களை வாங்கிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டில் கட்டுமானப்பணி, ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என பல இடங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். வட மாநில தொழிலாளர்களின் வருகைக்கு பிறகு நகரங்களில் கிட்டத்தட்ட எல்லா கடைகளிலும் புகையிலை பொருட்கள் கிடைக்கின்றன.

கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் வரும் புகையிலை பொருட்கள் தெருக்களில் உள்ள சாதாரண பெட்டிக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் கிடைப்பதால் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் புகையிலை பழக்கத்திற்கு மட்டுமில்லாமல் கஞ்சா, போதை சாக்லெட் போன்றவற்றுக்கும் அடிமையாவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

குழந்தைக்கு சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு இயற்கை மருத்துவம்

குழந்தைக்கு சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு இயற்கை மருத்துவம்

பிறந்த குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எதற்காக குழந்தை அழுகின்றது என கண்டுபிடிப்பது தாய்மார்களுக்கு சிரமமான விஷயமாகும். பொதுவாக குழந்தை அழுவதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்கும் ஒன்று பசி மற்றொன்று வயிறு வலி அல்லது வயிற்று சூடு.

பொதுவாக குழந்தையின் வயிற்று பகுதி மிகவும் சூடாக உணரப்பட்டால், வயிற்று வலியினால் தான் குழந்தை அழுகிறது என்று எளிதாக கண்டுபிடித்துவிடலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே செயற்கை மருந்து கொடுத்து பழக்குவது தவறான அணுகுமுறை ஆகும். இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியமும், பாட்டி வைத்தியமும் செய்தாலே போதுமானது.

* பெருங்காயத்தை சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து பசைப் போன்று ஆக்கிக் கொள்ளவும். பின்பு குழந்தையின் வயிற்று பகுதியில் மென்மையாக சுழற்சி முறையில் தடவி மசாஜ் போல செய்யவும். இது, குழந்தையின் உடல் சூட்டை தனித்து வயிற்று வலியை உடனடியாக குறைக்க உதவும்.

* சிறுதளவு ஓமத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கும் அளவு காய்ச்சிய பின், நன்கு குளிர வைக்கவும். அந்த நீரை காற்று புகாத வண்ணம் பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு வயிற்று வலி என்று தெரியும் போது டீ ஸ்பூன் அளவில் கொடுத்து வந்தால் வலி குறையும்.

* பெருஞ்சீரகத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கும் அளவு காய்ச்சிய பின், நன்கு குளிர வைக்கவும். அந்த நீரை காற்று புகாத வண்ணம் பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். இது, வயிற்று சூட்டை குறைத்து குளுமை அடைய செய்யும். வயிற்று வலி மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் குறைக்கவும் உதவும். இந்த நீரை காற்று புகாதபடி பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டுவது மிகவும் முக்கியமானது ஆகும்.

* சிறிதளவு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் போல குலைத்துக் கொள்ளவும். பின் அந்த பேஸ்ட்டை உங்கள் குழந்தையின் வயிற்று பகுதியில் மெல்ல மென்மையாக சுழற்சி முறையில் மசாஜ் போல செய்து வந்தால், வயிற்று வலி குறையும்.

Tuesday, 26 July 2016

உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும் ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தலைவலி (Migraine)

உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும்  ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும்.

குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது.

இந்த ஒற்றைத் தலைவலியை தூண்டி விடும் காரணிகளை கண்டறிந்து தடுப்பது என்பது மிகவும் இயலாத காரியம் ஆகும். உங்களை அறியாமலே, ஒற்றை தலைவலியானது உங்களை ஆட்கொண்டு, நேரம் செல்லச் செல்ல அதிகரிப்பதை நீங்கள் சில சமயங்களில் உணரலாம்.

பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.

1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

2. கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

3. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

4. அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

5. 200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு, 8. 100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு ஆகிய கலவைகளின் சாறுகளை சம அளவு எடுத்து தினமும் பருக வேண்டும்.

6. வாசனை எண்ணெய்யால் தலைக்கு ஒத்தடம் தரலாம். தேய்த்து விடலாம்.

7. பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறின பிறகு தலையில் தேய்த்து குளித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

8. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!
சமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, சாப்பிட்டவுடன், அவர் கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார்.  'இத்தனை மாத்திரைகள் எதற்கு?' என்றதும், அவர் தந்த பதில் நம்மைத் திடுக்கிட வைத்தது. 'லேசா முடி நரைச்சிருக்கேனு, 'டை' யூஸ் பண்ணினேன். நல்ல பிராண்ட் தான். ஆனா, தொடர்ந்து யூஸ் பண்ணப் பண்ண, தலைக்குள்ள லேசா ஊறல் எடுத்துச்சு... அப்புறம் தலை முழுக்க பயங்கரமான அரிப்பு. பயந்துபோய், தோல் டாக்டர்கிட்ட போனப்ப, அவர், உடனே 'ஹேர் டை' போடறதை நிறுத்தச் சொன்னார். 'டை'யில் இருக்கிற ரசாயனம் ஏற்படுத்திய பக்க விளைவுதான் காரணமாம்!' என்றார் பரிதாபமாக.

'நடுத்தர வயதை நெருங்கும் பெரும்பாலானவர்கள் கண்ணாடி முன் நிற்கும்போதெல்லாம் அனிச்சையாக முடி நரைத்திருக்கிறதா, சருமத்தில் சுருக்கம் தெரிகிறதா எனப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். நரைத்த முடி, முதிய தோற்றத்தைத் தருமோ என்று அதனைக் கறுப்பாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிடுவர். அதை, இயற்கை வழியிலேயே செய்துகொள்வதன் மூலம் பக்கவிளைவுகளையும் பின்விளைவுகளையும் தடுக்கலாம்' என்கின்றனர் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மணவாளன் மற்றும் உதவி விரிவுரையாளர் டாக்டர் கனிமொழி. செயற்கைச் சாயங்களால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இயற்கைச் சாய முறைகள் பற்றி விரிவாக விளக்குகின்றனர்.

' 'மெலனின்' என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை 'டிரையோஸின்' என்ற என்ஸைம் கட்டுப்படுத்தித் தடைசெய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான். கண்டதைச் சாப்பிடுவது, சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்குக் காரணம். அதிக வெயிலில் வெளியில் அலைந்தால், புற ஊதாக் கதிர்கள், முடியின் ஈரத்தன்மையை உறிஞ்சி, முடியை வறண்டுபோகச்செய்யும். இதனாலும் முடி நரைக்கலாம். மேலும், தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பூ, கண்டீஷனர் போன்ற பொருட்களில் கலக்கப்படும் ரசாயனப் பொருட்களும் நரை ஏற்படக் காரணம்.

ஹேர் டையில் உள்ள வேதிப்பொருட்கள் - பக்க விளைவுகள்
செயற்கைச் சாயங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கியமாக, அம்மோனியா, சோடியம் பைகார்பனேட், லெட் அசிட்டேட், ஹைட்ரஜன் பெராக்ஸைடு இவற்றுடன், 'டைஅமினோட்டோலீன்' மற்றும் 'டைஅமினோபென்ஸின்' என்ற இரண்டு ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதில் இருக்கும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய 'கார்சினோஜென்' என்ற பொருளால் பாதிப்பு அதிகம். தொடர்ந்து ரசாயனம் கலந்த ஹேர்டையைப் பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம். சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும்.  மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய், ஹைப்பர் சென்சிட்விட்டி போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.   

இயற்கை ஹேர் டை
அவுரித் தூளைக் குழைத்து, சிறு வில்லைகளாகத் தட்டிக் காயவைத்து, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.

பீட்ரூட் சாறு, கறிவேப்பிலைச் சாறு... இரண்டையுமே தலையில் தடவினாலும் உணவாக எடுத்துக்கொண்டாலும் நல்ல பலன் தரும்.

வெற்றிலை, பாக்கு, வெட்டிவேர், மருதாணி - இவை நான்கையும் அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து அலசவேண்டும்.

மருதாணித் தூள், டீ டிகாக்ஷன் இரண்டையும் கலந்து, தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து நீரில் அலசலாம்.

சோற்றுக் கற்றாழை ஜெல், ஹென்னா தூள், டீ டிகாஷன் - இவை மூன்றையும் கலந்து தலையில் தடவி, ஊறவைத்து  நீரில் அலசலாம்.

இதோ... இயற்கை டை!
''டை, கலரிங் என்று கெமிக்கல்களுடன் போராடி, உயிருக்கு உலை வைத்துக் கொள்வதைவிட, இயற்கையாகவே சாயத்தைத் தரும் அவுரிச் செடி இலைகளைப் பயன்படுத்தினால்... எந்தக் கவலையும் இல்லாமல், கருகரு முடியோடு கலக்கலாமே!'' என்று சொல்லும் கடலூர் அன்னமேரி பாட்டி, அவுரி சாயம் தயாரிக்கும் முறையையும் அழகாக எடுத்து வைத்தார். இதோ அவர் சொல்லும் இயற்கை டெக்னிக்!

அவுரி இலை - 50 கிராம்,
மருதாணி இலை - 50 கிராம்,
வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம்,
கறிவேப்பிலை - 50 கிராம்,
பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை...
இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து (சிறுசிறு துண்டுகளாகவும் வெட்டி சேர்க்கலாம்).
அரைத்து வைத்திருக்கும் அவுரி கலவையுடன் சேர்த்து, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.
கொதி நிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும்.
இதை பத்திரப் படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம்.
நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.

இளநரையைத் தவிர்க்க...
சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியம். எல்லா வகையான நட்ஸ் வகைகளையும், இரவே ஊறவைத்து, மறுநாள் சாப்பிடவேண்டும். அவற்றில் வைட்டமின் இ இருப்பதால், சருமத்துக்கும் முடிக்கும் மிகவும் நல்லது. தண்ணீர் நிறையக் குடிக்கவேண்டும். முளைக்கட்டிய பயறு, பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்கள், காய்கறிகள், பழங்கள் அதிகமாகச் சாப்பிடவேண்டும்.

ஹெட் மசாஜ்
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை இளஞ்சூடாகக் காய்ச்சி, இரு கைவிரல்களாலும் எண்ணெயைத் தொட்டு, முடியின் வேர்க்கால்களில் படுவது போலச் சிறுசிறு வட்டங்களாகத் தேய்க்கவும். விரல்களால் தலையின் எல்லாப் பகுதிகளையும் லேசாக அழுத்திவிடவும். இதனால், தலையின் எல்லாப் பகுதிக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும். முடி நன்றாக வளர்வதுடன் நரைப்பதும் தள்ளிப் போகும்.

சோற்றுக் கற்றாழை
சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தனியே எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.  இதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடவும். அல்லது, கற்றாழை ஜெல்லை தலையில் தடவி, சிறிது நேரம் ஊறியதும் சீயக்காய்த்தூள் போட்டு அலசவும்.

செய்யவேண்டியவை
'ஹேர் டை' உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், டை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய ஹேர் டை பாக்கெட்டுடன் டாக்டரைச் சந்திக்கவேண்டியது அவசியம். 

உடனடியாக நிறம் மாற்றும் 'இன்ஸ்டன்ட் டை' வகைகளைப் பயன்படுத்தாதீர்கள். 

'பக்கத்து வீட்டில் சொன்னாங்க, ஃப்ரெண்ட் யூஸ் பண்ணினாங்க' என்றெல்லாம் தாமாகப் போய் ஹேர் டை வாங்கி உபயோகிக்கவே கூடாது. ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளும் பிராண்டு, மற்றவருக்கு ஏற்காமல் போகலாம். 

உபயோகிக்காமல் இருக்கும் 'ஹேர் டை'யை, 'வீணாகப் போகுதே' என்று எடுத்துத் தலையில் தடவிக்கொள்வதும் ஆபத்தானது. அதனால் மோசமான பின்விளைவுகள் உண்டாகலாம்.

தலையில் பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எப்போதுமே தலைக்குச் சாதாரணத் தண்ணீரையே ஊற்றலாம். வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்.

முடிந்தவரை ஷாம்பூ வகைகளைத் தவிர்த்து, சீயக்காய், அரப்புத்தூள் போட்டுக் குளிக்கவும்.

இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது ஏன்?

இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது ஏன்?
மனிதர்களின் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் அள்ளித்தரும் இள நீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. காரணம் நாம் தூங்கி எழுந்த வுடன்
நமது வயிறு சற்று சூடாக இருக்கும் காரணத்தினால், நாம் குடிக்கும் இளநீரில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் ஆறாத‌ புண்களை உருவாக்கி விடும்.
உணவு ஏதாவது சாப்பிட்ட பிறகே நாம் இளநீரைப் பருகவேண்டும். அல்லது உணவு இடைவேளையில்தான் இள நீர் பருகவேண்டும். அதுவும் வெட்டியஉடன் இளநீரைக்குடித்து விட வேண்டும், இல்லையெனில் 'புட்பாய்சன்' ஏற்பட்டு ஆரோக்கிய சீர்க்கேடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

முருங்கைக்காய்

முருங்கைக்காய், யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
இந்த முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி. சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன• இது ஆரோக்கிய மானது என்றாலும்
சிலர் இந்த முருங்கைக்காய் சாப்பிட்டால், உடல்ரீதியான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

1. முதியவர்கள் சாப்பிடக்கூடாது.
2. இதய நோயாளிகள் சாப்பிடக் கூடாது.
3. மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது.
4. வாயுத் தொல்லை இருப்ப‍வர்கள் சாப்பிட்டால் வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

தேனை எதனோடு சேர்த்து சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும்!

தேனை எதனோடு சேர்த்து சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும்!

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபதுவகையான உடலு க்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின் களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்து க்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டுவிடுகிற து.

கண் பார்வைக்கு:

தேனை கேரட்சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு
ஒருமணி நேரத்திற்குமுன் பருகினா ல் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு:

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொ ண்டை வலி, மார்புசளி, மூக்கு ஒழு குதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவார ணம் கிடைக்கும்.

ஆஸ்துமா:

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமா கும்.

இரத்த கொதிப்பு:

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு:

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமு ம் காலைக்கடன்களுக்குமுன் பருகவும். இது இரத்த சுத்திக ரிப்பிற்கும், உடல் கொழுப்பை கு றைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும்உதவும்

இதயத்திற்கு டானிக்:
அனைஸ் பொடியுடன் (Anise Powder / Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கு ம்.

வாட்டம் போக்கும் வெட்டி வேர்!

அழகு குறிப்புகள்., நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம்,
வாட்டம் போக்கும் வெட்டி வேர்! பெயர் என்னவோ 'வெட்டி' வேர்தான். ஆனால், ஒரு சதவீதம்கூட வெட்டி ஆகாமல், முழுக்க முழுக்க அழகு பலன்களை அள்ளித் தருகிற வேர் இது. வந்த முகப் பருக்களை விரட்டியடிப்பதிலும், பரு வராமலே தடுப்பதிலும் ஒரு எக்ஸ்பர்ட் வெட்டிவேர்! முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது... சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் \ ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கியகடுக்காய் - 1... இந்த இரண்டையும் முந்தின தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்! பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும். அதற்கான நிவாரணம் இதோ... ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத் தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி,பிழிந்துமுகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும். சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப் பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் 'பேக்' இது... வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை... இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள். வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய்பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது. சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும்பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண் களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.

இந்த இரு பிரச்னைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது. பச்சைப் பயறு - 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - 50 கிராம்... இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள். தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறுகட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும். அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும். வெட்டிவேர் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம்... இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு, உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்! கேள்வி - பதில் ஜலதோஷம் பிடிக்காத மருதாணி 'பேக்'...? ''எனக்கு 35 வயதாகிறது. தலையில் கால்வாசி நரைத்துவிட்டது. டை போட விருப்பமில்லை. வீட்டிலேயே மருதாணி போட்டுக் கொள்கிறேன். இதனால், அடிக்கடி உடல் குளிர்ச்சியாகி ஜலதோஷம் பிடித்து விடுகிறது. ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கவும், சில மாதங்களுக்கு சேர்த்து மருதாணி 'பேக்'கை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளவும் சொல்லித் தாருங்களேன்.''

''மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும். மருதாணி யுடன் மேலும் சில அயிட்டங்களை சேர்த்தால் கூந்தல் மிருதுவாகும். சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம். இந்த மருதாணி பேஸ்ட்டை இரண்டு முறைகளில் தயாரிக்கலாம். மருதாணி பவுடர் - கால் கிலோ, கடுக்காய் பவுடர் - 25 கிராம், துளசி பவுடர் - 25 கிராம், நெல்லிக்காய் - 50 கிராம், டீத்தூள் டிகாஷன் - 50 கிராம், 2 எலுமிச்சம்பழங்களின் சாறு, யூகலிப்டஸ் ஆயில் - 4 துளி, ஆலீவ் ஆயில் - 4 டீஸ்பூன்... இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கிரைண்டரில் அரைத்து பேஸ்ட்டாக்குங்கள். இதை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். மூன்று அல்லது நான்கு மாதம் வரை கெடாது. இந்த 'பேக்'கை வாரம் ஒரு முறை தலைக்குப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். மருதாணி இலை - 250 கிராம், கொட்டை நீக்கிய கடுக்காய் - 25 கிராம், சுத்தம் செய்யப்பட்ட துளசி இலை - 25 கிராம், கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் - 25 கிராம்... இவற்றை நன்றாக நசுக்கி கிரைண்டரில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் யூகலிப்டஸ் ஆயில் - 10 துளி, ஆலீவ் ஆயில் - 4 டீஸ்பூன், 2 எலுமிச்சம்பழங்களின் சாறு, டீத்தூள் டீகாஷன் - 100 கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இந்த 'பேக்' இரண்டு மாதம் வரை கெடாது.''

காட்டிக் கொடுக்கும் நம்பர் டூ!

நோயைக் காட்டிக் கொடுக்கும் நம்பர் டூ!
நாம் சாப்பிட்ட உணவு நன்றாக செரித்திருக்கிறதா? ஆரோக்கியமாகத்தான் சாப்பிட்டோமா என்பதை மலம் காட்டும் அறிகுறிகள் மூலமாகவே கண்டுபிடித்து விடலாம்.  மலம், தண்ணீரில் மிதந்தால், நன்றாக செரிமானம் ஆகியிருக்கிறது, ஆரோக்கியமான உணவைத்தான் உண்டோம் என்று அர்த்தம்.

மலம், தண்ணீரில் மூழ்கினால் கபம் அதிகமாகி விட்டது என்று அர்த்தம். அதாவது, நமது செரிமான சக்தியைத் தாண்டி அதிகமாக வேலை கொடுத்திருக்கிறோம். அதற்கு சீரகம், மிளகு, புளி சேர்த்த ரசம் குடித்தால் சரியாகி விடும். நாம் சாப்பிடும் ஹெவி மீல்ஸில் ரசம் இடம் பெறுவதற்கு  இதுதான்  காரணம்.

வாதம் ஜாஸ்தியானால், மலம் மிகவும் டைட்டாக போகும். அப்படியானால் உடலில் வறட்சி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். நிறைய தண்ணீர் குடிக்கலாம், உணவில் பசு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
பித்தம் ஜாஸ்தியாக இருந்தால் மிகவும் தளர போகும். எரிச்சல், வலி அதிகமாக இருக்கும். அப்படி இருந்தால் நீர் மோர் அதிகம் குடித்து வர சரியாகும்.

Monday, 25 July 2016

வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது

தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.

நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,

மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours)
5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.
இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது மேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்
வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்
சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி – 30 நாட்கள்
மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) – 10 நாட்கள்
புற்றுநோய் – 180 நாட்கள்
காச நோய் – 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.

கலப்பட உணவை கண்டறிவது எப்படி?

கலப்பட உணவை கண்டறிவது எப்படி?
கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை  காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க  மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது? இதோ பட்டியல்

பெருங்காயத்தில்  பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற  பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.

சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள்  இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.

மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

மிளகாய் தூளில் மரப்பொடி ,செங்கல் பொடி,Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும்.செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.
 
காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.

கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்

கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்

சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.

நெய்யில் மசித்த உருளக்கிழங்கு,  வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.

வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்

பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்

பாலில்,நெய்யில்  மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும்.       பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 mlபாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம்       பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான  செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும்  கலப்பட பால்  எந்த அடையாளமும் ஏற்படுத்தாது  உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.

தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு,பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்

சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக  ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.

குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.

ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.

நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.

தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்

"கம்பு "வில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.

இலவங்கப்பட்டையுடன் (தால்சினி) தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.

சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள்,சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.

தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள். தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்

கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய்  கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ்  நிறமுண்டாகும்.

ஐஸ் கிரீமில்  வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.

முட்டையில்  டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.

மாத்திரைகள் மருந்து பொருட்களில் போலி மருந்துகள் நிறைய புழக்கத்தில் உள்ளது நீங்கள் வாங்கும் மருத்தினை http://verifymymedicine.com/
என்ற தளத்தில் சென்று ஒரிஜினல் தானா,காலாவதியானதா என சோதிக்கலாம்
விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.

Sunday, 24 July 2016

நிலக்கடலை

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் மற்றும் போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

Saturday, 23 July 2016

தோப்புக்கரணம்

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்:

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

Friday, 22 July 2016

பல வகையான இனிப்புப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்ட வயிற்றுக்கு இதமளிக்கும் எளிய மருத்துவங்கள் இங்கே..

பல வகையான இனிப்புப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்ட வயிற்றுக்கு இதமளிக்கும் எளிய மருத்துவங்கள் இங்கே...

நெஞ்சு எரிச்சலுக்கு..
.
சீரகம், தனியா, பெருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து, நீரில் கொதிக்கவிட்டு, கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.
புதினா இலைகள், சீரகம், இந்து உப்பு போட்டு, தண்ணீரைக் கொதிக்கவிட்டு குடித்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கிவிடும்.

பலகாரங்களைச் சாப்பிட்ட பின்...

சுண்டை வற்றல் - 1 கைப்பிடி, சிறிதளவு கறிவேப்பிலை, ஓமம் - 1 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன் ஆகியவற்றை வறுத்துப் பொடியாக்கி, உப்பு சேர்த்து, மோருடன் குடித்தால், அசௌகரிய உணர்வு நீங்கும். வயிற்றுப்போக்கும் நிற்கும்.

வாயுத் தொல்லைக்கு...

மிளகு, சீரகம், சுக்கு, ஓமம், கருஞ்சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்கவிட்டு இந்துப்பு கலந்து அருந்தலாம்.

விளாம்பழம்

தினம் ஒரு விளாம்பழம்னு 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தா,
பித்தக் கோளாறுகள் அத்தனையும் குணமாகறதோட,
உடம்புல புதுரத்தம் ஊத்தெடுக்கும்!
இ ந்தக் காலத்து குழந்தைங்க பூஸ்ட், போர்ன்விட்டானு குடிச்சு வளர்ந்தாலும், எப்போ வேலைக்குப் போக ஆரம்பிக் கறாங்களோ... அப்பவே அடிக் கொருதரம் காபி, டீ குடிக்கற பழக்கம் ஆரம்பிச்சுடுது! விளைவு - சின்ன வயசுலயே பித்தம் தலைக்கேறி தலை நரைச்சுடுது.
பித்தம் ஜாஸ்தியானா, வாய் கசந்து சாப்பாடு பிடிக்காம போயிடும். உடம்புக்குத் தேவையான ஊட்டம் இல்லேன்னா, சலிப்பு மனப்பான்மை தானாவே வந்துடும்.
இதுக்கு அருமையான ஒரு மருந்து என்ன தெரியுமா? தினம் ஒரு விளாம்பழத்தை பச்சடி பண்ணி சாப்பிடறதுதான்!
விளாம்பழ சதைப் பகுதியில, வெல்லம் போட்டு பிசைஞ்சு, கொஞ்சமா தண்ணி விட்டு அடுப்புல வச்சு, ஜாம் மாதிரி ஆனதும் இறக்கிடுங்க. விருப்பப்பட்டா, ஒரு காய்ஞ்ச மிளகாயை தாளிச்சுக் கொட்டலாம். அவ்வளவுதான், விளாம்பழ பச்சடி ரெடி! இனிப்பும் புளிப்புமா வாய்க்கு அவ்ளோ ருசியா இருக்கும்.
பித்த சம்பந்தமான எல்லா வியாதியையும் குணப்படுத்தற மருத்துவத் தன்மை விளாம்பழத்துல இருக்கு! தினம் ஒரு பழம்னு 21 நாள் தொடர்ந்து இதைச் சாப்பிட்டா, பித்தக் கோளாறுகள் அத்தனையும் குணமாகறதோட, உடம்புல புது ரத்தம் ஊத்தெடுக்கும்.
வ ளர்ற குழந்தைகளுக்கும் விளாம்பழம் ரொம்ப நல்லது. அப்பப்போ விளாம்பழத்தை அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ரெடி பண்ணிக் கொடுத்து, சாப்பிட வச்சா, உறுதியான எலும்புகள் அமையும்.. ஞாபக சக்தி அபாரமா இருக்கும்.. நோய்களும் சட்டுனு தாக்காது! வயசானவங்களுக்கு விளாம்பழ பச்சடியை சாப்பிடக் குடுங்க. அது ஒரு டானிக் மாதிரி செயல்படுறதால, அவங்க புதுத் தெம்போட உலா வருவாங்க. பற்கள் பலப்படும்.
அடை, தோசைக்குத் தொட்டுக் கிட்டு சாப்பிட, விளாம்பழ பச்சடி ஜோரான ஜோடி. செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.

குழந்தைகள்

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும். 
சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.
தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.
பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.
குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

உலகில் உயிர்கள் வாழ மிக அவசியமானது உணவு.  அது, அறுசுவையும் கலந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில், அவைதான் நம் உடலுக்கும் உயிருக்கும் ஆதாரமான தாதுக்களாகிய பித்தம், கபம், வாதம் ஆகியவற்றைச் சமநிலையில் வைத்து, நம் உடல் நலத்தைக் காப்பவை. அதே நேரம், எல்லா உணவுகளையும் எல்லா நேரத்திலும் எடுத்துக்கொள்வதும் தவறானது.
ஒரு நாளின் தொடக்கத்துக்கான பூஸ்ட்டராக இருப்பது, காலைஉணவுதான். காலை உணவே நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சுறுசுறுப்பைத் தரும். காலை உணவைத் தவிர்த்தால், நமது மூளை சோர்வடையும். தேவை இல்லாமல் சாப்பிடத் தூண்டும். இது உடல் எடையை அதிகரிக்கும். காலை உணவில் எவற்றை எல்லாம் எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்...

பருத்திப்பால்
காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, பருத்திப்பால் குடிக்கலாம். முதல் நாள் இரவிலேயே பருத்தி விதைகளைத் தேவையான அளவு எடுத்து, ஊறவைத்து, காலையில் அதில் இருந்து பால் எடுத்து (ஒரு டம்ளர்), தேங்காய்ப் பால் (ஒரு டம்ளர்), பசும்பால் (ஒரு டம்ளர்) கலந்து குடிக்கலாம். கடின உடல் உழைப்பு  செய்பவர்கள்,  இதனுடன் சம்பா அவல், கருப்பட்டி சேர்த்து, கஞ்சிபோல் காய்ச்சிக் குடிக்க, அன்றைய காலை உணவு அபாரம்!
பூண்டுக் கஞ்சி
பூண்டு ஒரு கை அளவு, சாரணைவேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), சுக்கு (சிறிதளவு), முருங்கை இலை (ஒரு கைப்பிடி), புழுங்கல் அரிசி (தேவையான அளவு) மற்றும் பசும்பால் அல்லது தேங்காய்ப் பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கஞ்சி காய்ச்சி, வாரம் ஒரு முறை காலை வேளையில் குடித்துவர, வாயுத்தொல்லைகள் அறவே நீங்கும்.
காலையில் டிபன் வகைகளுக்குச் சட்னி சாப்பிட்டுச் சலிப்படைந்தவர்கள், பயறு, கடலை, காராமணி, துவரை, உளுந்து, மொச்சை ஆகியவற்றை கடுகு, மிளகு, பெருங்காயம், சுக்குடன் சேர்த்து, கறியாகச் சமைத்து, இட்லி, புட்டு, தோசை, இடியாப்பம், ஆப்பம் ஆகியவற்றுடன் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் சிறுதானியங்களில் சமைத்த உணவுகளுடன் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

பழைய சோறு
இரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீரூற்றி வைக்கலாம். நீரூற்றிய சோறு அதாவது, பழைய சோற்றை நீருடன் காலை வேளையில் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இதனோடு, சிறிய வெங்காயம் இரண்டு சேர்த்துச் சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாகப் பெருகும். பழைய சோற்றுடன் மோர் சேர்த்தும் சாப்பிடலாம். பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 முதலான சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், பழைய சோறு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், சைனஸ் முதலான தொந்தரவு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது. நிசிநீர் எனப்படும் பழைய சோற்று நீர் அருந்த, நாவறட்சி நீங்கி, உடல் வெப்பம் தணியும்.

இஞ்சி - தேன்
இஞ்சியைத் தோல் நீக்கி, அரைத்து, சாறு எடுத்து, அதனுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடலாம். இதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும். மேலும், இஞ்சியானது உமிழ் நீரைப் பெருக்கி, பசியைத் தூண்டும். செரிமானத்திறன் மேம்படும். வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமன் உள்ளவர்கள், நீரில் தேன் கலந்து பருகலாம்.

வெந்தய நீர்
வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.

வெந்தயக் களி
100 கிராம் பச்சரிசி, 10 கிராம் வெந்தயத்தைத் தனித்தனியாக மாவு போல பொடித்துக்கொள்ள வேண்டும். இதை, வாரத்துக்கு ஒருமுறை காலையில், களியாகச் செய்து சாப்பிட, உடல் வெப்பம் தணியும். அரிசியில் மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை அதிகரிக்கும். பெண்களுக்கு இது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்றது.

உளுந்தங்களி
பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.

காலையில் அருந்தக்கூடிய எளிய பானங்கள்
விழித்தவுடன் சுத்தமான நீர் இரண்டு டம்ளர் அருந்த மலம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். வெந்நீர் அருந்த மந்தம் நீங்கும்.
குழந்தைகளுக்குப் பல தானியங்கள் கலந்த சத்து மாவுக் கஞ்சி பால், வெல்லம், நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கலாம். கேழ்வரகை முளைக்கட்டி அரைத்து, பால் எடுத்துக் கஞ்சி காய்ச்சி அருந்தலாம். இதில் கால்சியம் நிறைவாக உள்ளதால், எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த பானம்.
பாதாம், சோயா போன்றவற்றை நீரில் ஊறவைத்து அரைத்து, பால் எடுத்து, கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால், உடல் பலம் பெறும். இதனுடன், வெல்லம், ஏலப்பொடி, நாட்டுச்சர்க்கரை முதலானவற்றைச் சேர்த்துப் பருகலாம்.
வெயில் காலங்களில் கம்பங்கஞ்சியை மோருடன் கலந்து குடிக்க, உடல் வெப்பம் நீங்கும்.
தேங்காய்ப் பாலை வெறும் வயிற்றில் குடிக்க, வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும்.
எதைத் தவிர்க்க வேண்டும்?
காலையில், மிகவும் புளிப்பு உணவுகளான எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், வாழைப்பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், மாமிச உணவு, இளநீர் முதலானவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக் கூடாது.
இவை பித்தம், வாதம் முதலானவற்றை அதிகப்படுத்தி, வயிற்று நோய்கள், குடல் நோய்களை உண்டாக்கும். வாழைப்பழத்தை உணவுக்குப் பின் எடுத்துக்கொள்ளலாம்.
அதே போல் டீ, காபி முதலானவற்றை காலையில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை, வயிற்றுக்கோளாறு, குடல்புண், செரிமானக் குறைபாடு முதலானவற்றை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் இலகுவானதும், எளிதில் சக்திதர வல்லதும், எளிதில் ஜீரணமாகக்கூடியதுமான உணவுகளையும், நீர்ச்சத்து உடையதுமான உணவுகளை எடுத்துக்கொள்வதுதான் நம் போன்ற வெப்ப மண்டல நாட்டு மக்களுக்குப் பொருந்தும்.

Thursday, 21 July 2016

வெற்றிலையின் முக்கியத்துவங்களும் மகிமைகளும்


வெற்றிலையின் முக்கியத்துவங்களும் மகிமைகளும் ;

வெற்றிலயானது ஒரு மூலிகையாக பயன்படுவது யாருக்குத்தெரியும் அது ஒரு கர்ப்ப மூலிகையாம்

நரை,
திரை,
மூப்பு,
சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை.
கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று.

வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது.

திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

வெற்றிலையை உபயோகிக்கும் முறை
வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு  நுனி  நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

தற்போதைய ஆராய்ச்சியில்  வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால்  என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.

வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண் வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

நுரையீரல் பலப்பட
வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.

இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

வயிற்றுவலி நீங்க
2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து 5 வெற்றிலை எடுத்து காம்பு நுனி நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மந்தம் குறையும்.

சர்க்கரையின் அளவு கட்டுப்பட
வெற்றிலை – 4

வேப்பிலை – ஒரு கைப்பிடி

அருகம் புல் – ஒரு கைப்பிடி

சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

விஷக்கடி குணமாக
உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும்.

சாதாரணமான வண்டுக்கடி பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

இருமல் குறைய
வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு இருமல் மூச்சுத் திணறல் குணமாகும்.

அஜீரணக் கோளாறு அகல
வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும்.

வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும்இ உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

தோல் வியாதிக்கு
100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால் எளிதில் குணமாகும்.

தலைவலி நீங்க
வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு.

மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

தீப்புண் ஆற
தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

#பிற_உபயோகங்கள்;-

வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல் மூச்சுத் திணறல் கடினமான சுவாசம்இ குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.

வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.

தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும்  கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும்.

இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.

வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.

Thanks to உயர் கணித தேவ சார ஜோதிடம்
Pandit Anand Bharathi.

தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி ( மாரடைப்பு ) வந்தால்

நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை:-

தனியாக இருக்கும்
போது நெஞ்சுவலி ( மாரடைப்பு )
வந்தால்

உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

மாலை மணி 6:30,வழக்கம் போல்
அலுவலகப்
பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக
சென்று கொண்டிருக்கிறீர்கள் .

அலுவலகத்தில் வேலை பளுவின்
காரணமாக, மற்றும் இதர சில
பிரச்சனைகள் காரணமாக
உங்கள் மனம்
மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும்,
தொய்வாகவும் உள்ளீர்கள் ,

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக
வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல்
தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,

உங்கள் வீட்டில்
இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல்
தூரத்தில் இருப்பதாக
வைத்துக்கொள்வோம்,

ஆனால்
உங்களால் அந்த ஐந்து மையில்
தூரத்தை கடக்க முடியாது என

உங்கள்
மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த
நேரத்தில் நம் உயிரை நாமே காக்க
என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக
மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம்
இறப்பவர்கள் அதிகமாக தனியாக
இருந்திருப்பவராக உள்ளனர் !

உங்கள்
இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10
நொடிகள் தான் உள்ளது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது.
தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக
இரும வேண்டும்,

ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு
முன்னரும் மூச்சை இழுத்து விட
வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக
இருக்க வேண்டும். இருதயம்
இயல்பு நிலை திரும்பும்
வரையிலோ அல்லது வேறொருவர்
உதவிக்கு வரும்
வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும்
மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே
இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால்
நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல
வழி வகுக்கிறது இருமுவதால்
இருதயம் நிற்பதில்
இருந்து தொடர்ச்சியாக
துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால்
இதயம் சீராக துடிக்கும்.

பின்னர் இருதயம் சீரடைந்ததும்
அருகில் உள்ள மருத்துவமனைக்கு
செல்லலாம். உயிரை காக்கும்
இது போன்ற
விசயங்களை குறைந்தது
உங்களின் நண்பர்களிடமாவது
பகிர்ந்து கொள்ளூங்கள்