Wednesday, 13 December 2017

🔹கடுகு மருத்துவக் குணங்கள்

🔹*கடுகு மருத்துவக் குணங்கள்:

1. கடுகை அரைத்து நீரில் கலந்து விஷம் சாப்பிட்டவர்களுக்குக் கொடுக்க விஷம் வாந்தியாகி வெளியே வந்து விடும்.

2. கடுகை அரைத்து கீழ் வாத வலி உள்ள இடத்தில் தடவ வலி தீரும்.

3. கால் ஸ்பூன் கடுகு, சிறு துண்டு சுக்கு, 5 கிராம் சாம்பிராணி இவைகளை இடித்து சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் விட்டு குழைத்துப் பூச தலைவலி தீரும்.

4. 5 கிராம் கடுகு, கடுக்காய் ஒன்று. கருஞ்சீரகம் 5 கிராம். திப்பிலி இவைகளை இடித்து காலை, மாலை உணவுக்குப்பின் அரை ஸ்பூன் தின்று வெந்நீர் குடித்து வர மூலவாயு தீரும்.

5. சிறிதளவு கடுகு, ஒரு துண்டு பெருங்காயம், சிறிதளவு முருங்கைப்பட்டை மூன்றையும் சேர்த்தரைத்து கால் மூட்டு வீக்கம் உள்ளஇடத்தில் பற்றுப் போட வீக்கம் வடிந்து விடும்.

6. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும் . பின்னர் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். உண்ட உணவு சீரணமாகும்.

7. அடிபட்டு ரத்தக்கட்டு ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறையும்.

8. கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும்.

9. கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.

10.  கடுகை அரைத்து தேனில் கொடுக்க ஆஸ்துமா, கபம் குணமடையும்.

11. கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி ஆறிய பின் வடிகட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment