உடல் சூட்டைக் குறைக்க நீர் மோர்!
வெயில் மண்டையைப் பொளப்பதால் வீட்டை விட்டு வெளியே வர பயமாக இருக்கும். அவ்வாறு வெளியில் சென்று வந்தால் நெருப்பில் இருப்பது போல் இருக்கும். அந்த வெப்ப சலனத்தையும், உடல் சூட்டையும் தணிப்பதற்கு குளுமையான நீர் மோர் அருந்தலாம்.
தேவையான பொருட்கள் :
தயிர் - 1கப்
தண்ணீர் - 2 கப்
பச்சை மிளகாய் -1 ( நறுக்கவும்)
இஞ்சி- சிறிய துண்டு
கொத்தமல்லி தழை - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
வறுத்த சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
•• தயிரை நன்கு மோராக அடித்துக் கொள்ளவும். மத்துல சிலிப்பினால் வெண்ணெய் எடுத்து சுவையாக மோர் இருக்கும்.
•• அதனுடன், நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, கறி வேப்பிலை, வறுத்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
•• அதன் மேலாக எலுமிச்சை சாற்றை பிழந்துவிட்டு கலந்து கிளாஸில் ஊற்றி வெயிலுக்கு இதமாகப் பருகலாம்.
குளுமையான நீர் மோர் ரெடி!
No comments:
Post a Comment