Monday, 26 November 2018

பூண்டுத்தேன்

பூண்டுத்தேன்...

#பண்டையக் காலத்தில் இருந்து #பூண்டு மற்றும் #தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது.
எகிப்து, இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர்.
இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகப்படியாக இவற்றை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதாக பல வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அருமருந்தாக திகழும் இந்த இரண்டின் கலவையும் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கூறப்படுகிறது…..
தேவையான பொருட்கள்;
தனித்தனியாக உரித்து எடுக்கப்பட்ட பூண்டு விழுதுகள் 20.
தூய்மையான தேன் ஓர் ஜாடி அளவு (பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு)
செய்முறை
பூண்டு விழுதுகளை அந்த ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள்.
நன்மைகள்:
உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கறைக்கிறது,
இதயத்திற்கு பலம் அளிக்கிறது...
சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.
உட்கொள்ளும் முறை
தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.
உட்கொள்ளும் முறை
உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. பிறகு நற்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.
பூண்டு;
பண்டைய காலம் முதலே பூண்டு வெறும் உணவாக இன்றி, மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தி வரப்படுகிறது. எகிப்தில் இருந்து நமது தமிழ் கலாச்சாரம் வரை பூண்டை ஓர் மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தியுள்ளனர்.
பண்டைய கிரேக்கம்
பண்டைய கிரேக்கத்தில் விளையாட்டு மற்றும் போர் வீரர்களின் உடற்திறனை மேம்படுத்து பூண்டை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பூண்டு இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேன்
உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.
பூண்டு, தேன்
நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.
*முதியோர்கள் உள்பட அனைவரும் சாப்பிடலாம்*

Friday, 23 November 2018

வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!!!

வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!!!

என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம்.

ஆனால் மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான்.

தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.

உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும்.

கடும் குளிர்காலத்தில் ஏற்படும்
மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது

. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.

அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.

மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

Thursday, 22 November 2018

உங்கள் உடலையும் மனதையும் பாதுகாக்க ஒரு சில வழிமுறைகள்

*உங்கள் உடலையும் மனதையும் பாதுகாக்க ஒரு சில வழிமுறைகள்:*

இதயத்தையும் உடலையும் பாதுகாப்பாக வைத்திருப்பது பெருமளவில் நமது அன்றாட வாழ்க்கை முறையைச் சார்ந்தது.

அதாவது, நமது உணவு, தூக்கம், உடல் சார்ந்த நடவடிக்கைகள், அன்றாடச் செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் எனப் பலப்பல அம்சங்களைப் பொறுத்தது.

நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பவை கீழே தரப்பட்டுள்ளன.

*** தண்ணீர் நிறைய குடியுங்கள். குறிப்பாக சுடு தண்ணீர் குடியுங்கள்.

*** இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்த்து விடுங்கள்.

*** தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும்
விளையாட்டுக்கு கண்டிப்பாக நேரம் ஒதுக்குங்கள்.

*** ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள். குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

*** எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

*** உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

*** நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள். அது உங்கள் மனதைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

*** அடுத்தவரைப் பார்த்துப் பொறாமை கொள்வது தேவையில்லாதது. காலம் நேரம் விரையம். உங்களுக்குத் தேவையானது அனைத்தும் உங்களிடம் உள்ளது.

*** கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தைச் சிதைத்து விடும்.

*** வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள். மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

*** எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

*** 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

*** அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள்.

*** நல்ல எண்ணங்களுடன் உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

*** எந்தச் சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும் என்பதில் உறுதியாக நம்பிக்கை வையுங்கள்.

ஆம். நண்பர்களே...

வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால் நம் மனமும், உடலும் என்றும் பாதுகாப்பாக அமையும்.

கவலை அற்ற மனமே இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது.

மேலே கண்டுள்ளதை அவசியம் கடைப் பிடியுங்கள்; கவலையற்ற வாழ்வை வாழுங்கள்.

வாழ்க வையகம்.
வாழ்க வளமுடன்

Wednesday, 21 November 2018

மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..

மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..

குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும்.

குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும்.

அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும்.

இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும்.

நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும்.

ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

🍏குறிப்பு 1 :

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

🍋குறிப்பு 2

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

🍍குறிப்பு 3 ;

ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

🍎குறிப்பு-4 :

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

🥛குறிப்பு- 5 :

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

🥗குறிப்பு- 6 :

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

🥙குறிப்பு- 7 :

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்

Tuesday, 20 November 2018

ஜாதிக்காய்

சாதனை  படைக்கும்
ஜாதிக்காய் ...!

நம்மவர்களை மட்டுமல்லாமல் உலகையே வசீகரித்த ஒரு மூலிகை ஜாதிக்காய்.

அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது.

மருத்துவக் குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் தரும் பலன்கள் எண்ணற்றவை!
.
மலேஷியாவில் பினாங்கிலும், நம் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் உற்பத்தியாகிறது ஜாதிக்காய்.

உலகெங்கும் செல்வாக்கு செலுத்திவரும் ஜாதிக்காய் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளம்.

இதற்குக் கிடைத்த அதீத வரவேற்பால், அரபுநாட்டு மாலுமிகள் இதை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதையே பல நூறு ஆண்டுகளாக பெரும் ரகசியமாக வைத்திருந்தார்களாம்.
.

ஜாதிக்காயின் கனி, ஊறுகாயாகப் பயன்படும், இதன் உள்ளே இருக்கும் விதைதான் ஜாதிக்காய்.

கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் ஜாதிபத்திரி.

இதில் விதையும் ஜாதிபத்திரி இதழும்தான் மணமும் மருத்துவக்குணமும் கொண்டவை.
.

"தாதுநட்டம்" எனும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு "சுவாசகாசம்" எனும் ஆஸ்துமா எனப் பல நோய்களுக்கு சித்த மருத்துவம் ஜாதிக்காயைப் பரிந்துரைக்கிறது. ஆனாலும் இது அதிகம் பயன்படுவது, ஆண்களுக்குக் காமப் பெருக்கத்துக்கும், குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான்.
.

ஜாதிக்காயில் நம்மை அடிமைப்படுத்தும் போதைப் பொருள், அதன் சத்துக்களில் உள்ளதோ என்கிற சந்தேகம் கூட இடையில் வந்தது. ஆனால் பல ஆய்வுகளைச் செய்து அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும், போதையூட்டும் வஸ்து அல்ல எனக் கண்டறிந்தனர்.
.
சாதனை படைக்கும் ஜாதிக்காய்
நரம்பு மண்டலத்தில் நற்பணி ஆற்றுவதால் மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும், ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம் என்கிறது இன்றைய அறிவியல்.
.
ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள்.
.
ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து, உணவுக்கு முன்னதாக மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும்.

மேலும் வைரஸ், பாக்டீரியா காரணமாக வரும் அத்தனை வயிற்றுப் போக்குகளுக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்து.
.
இனிப்புச் சுவையுடன் கூடிய தனித்துவ மணம் ஜாதிக்காயில் இருப்பதற்கு அதன் மைரிஸ்டிசின் (Myristicin) எனும் சத்துதான் காரணம். தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க, ஜாதிக்காயின் மைரிஸ்டிசின் சத்தை ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் சேர்க்கிறார்கள்.
.
ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும்போது சாப்பிடுவது, மனஅழுத்தத்தைப் போக்கி, நரம்பு வன்மையையும், சீரான தூக்கத்தையும் தரும்.
.
குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள்.
.
ஜாதிக்காய், சணல் விதை, ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம், வெண்கொடிவேலி வேர் (அத்தனையையும் முறையாகச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்) சம அளவு எடுத்துக் கொள்ளவும். இவற்றை நன்கு நுண்ணியமாகப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதை வயிற்றுவலி, மாதவிடாய் தீவிர வலி, மைக்ரேன் தலைவலி ஆகியவற்றுக்குக் கொடுக்கலாம். இவற்றுக்கு இந்த மருந்து உடனடி வலி நிவாரணி!
.
மொத்தத்தில் ஜாதிக்காய் நல்லன பலவற்றைச் சாதிக்கும் காய்.

வல்லாரை இலையிலுள்ள சில மருத்துவ நன்மைகள்!

வல்லாரை இலையிலுள்ள சில மருத்துவ நன்மைகள்!

தினமும் காலை, மாலையில் 5 மி.லி. வல்லாரை இலைச்சாறை சாப்பிட்டு வரவும். இதன் மூலம் யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் ஆகியவை குணமாகும்.

ஆமணக்கெண்ணையில் வல்லாரை இலையை வதக்கி மேலே பற்றிட கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச, புண்களும் ஆறும். வல்லாரை, உத்தாமணி, மிளகு சமமாக எடுத்து அரைத்து, குண்டுமணி அளவு மாத்திரை செய்து, காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க, அனைத்து வகையான காய்ச்சலும் தீரும்.

கீழாநெல்லி, வல்லாரை சம அளவு எடுத்து அரைத்து, சுண்டக்காய் அளவு காலை மட்டும் தயிரில் உள்கொள்ள நீர் எரிச்சல் தீரும். வல்லாரை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வந்தால், யானைக்கால் வீக்கம், குறையும்.

வல்லாரை இலைகளுடன் 2 மிளகு, ஒரு பூண்டு பல் சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காயளவு காலை, மாலை இரு வேளைகளும் வெறும் வயிற்றில் உண்டு வர, நாள்பட்ட புண்கள், சொறி, சிரங்குகள் முதலியவை குணமாகும். வல்லாரை இலை, தூதுவளை ஆகிய இரண்டையும் சம எடையளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர, காசநோயில் ஏற்படும் சளித்தேக்கம், தொண்டைக் கம்மல் நீங்கும். வல்லாரை இலையுடன், கீழாநெல்லி இலையைச் சம எடையளவு சேர்த்து அரைத்து, 5 கிராம் அளவு காலை வேளை மட்டும் தயிரில் கலந்து உண்டு வர, நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை இலையுடன் சம எடையளவு வேலிப்பருத்தி இலையைச் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதில் 3 கிராம் அளவு வெந்நீரில் கலந்து 4 நாள்கள் உட்கொண்டு வர, தடைப்பட்ட மாதவிடாய் வெளியாவதோடு, மாதவிடாயினால் ஏற்படும் வயிற்றுவலியும் குறையும்.

Sunday, 18 November 2018

ஒரு ஸ்பூன் சாப்பிட்ட 40 வகை நோய்கள் குணமாகுமாம்! ஆச்சரியமா இருக்க ஆனா உண்மை

ஒரு ஸ்பூன் சாப்பிட்ட 40 வகை நோய்கள் குணமாகுமாம்! ஆச்சரியமா இருக்க ஆனா உண்மை


சீரகம் = சீர்+அகம். எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர். இங்கே அகத்தைச் சீர் செய்வதால் சீரகம் என அழைக்கப்பட்டது. அகத்தைச் சீர்செய்யும் சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்

இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப்பட்ட வரலாற்றுச் சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons, Terpene, Thymol போன்ற எண்ணெய்ப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் – anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

சீரகத்திற்கு ஆங்கிலத்தில் cumin என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.

நற்சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், பிலப்பு சீரகம், நட்சத்திர சீரகம், செஞ்சீரகம் என ஏழு வகை உண்டு. சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

பொதுவாக சீரகம்

வெப்பமுண்டாக்கி- stimulant


பசிதூண்டி- stomachic


துவர்ப்பி- astringent


வாய்வு அகற்றி- carminative


சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்த மூலம் தீரும்.

சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம், மந்தம் நீங்கும்.

சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

கருஞ்சீரகம்

இஸ்லாமியர்களின் நபி மொழி:கருன்ஜீரகத்தில் மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்க்கும் மருந்து இருப்பதாக நபி( ஸல்) அவர்கள் சொன்னதாக உள்ள சஹிஹான ஹதீஸ் உள்ளது.

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும். கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.

கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரகக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் தடிமனுக்கு நல்லது.

தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.

கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால்தலைவலிக்கு நல்லது.

கருஞ்சீரகத்தை வினிகரில்(vineger) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.

கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.

நாய்க்கடி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்