*உங்கள் உடலையும் மனதையும் பாதுகாக்க ஒரு சில வழிமுறைகள்:*
இதயத்தையும் உடலையும் பாதுகாப்பாக வைத்திருப்பது பெருமளவில் நமது அன்றாட வாழ்க்கை முறையைச் சார்ந்தது.
அதாவது, நமது உணவு, தூக்கம், உடல் சார்ந்த நடவடிக்கைகள், அன்றாடச் செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் எனப் பலப்பல அம்சங்களைப் பொறுத்தது.
நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பவை கீழே தரப்பட்டுள்ளன.
*** தண்ணீர் நிறைய குடியுங்கள். குறிப்பாக சுடு தண்ணீர் குடியுங்கள்.
*** இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்த்து விடுங்கள்.
*** தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும்
விளையாட்டுக்கு கண்டிப்பாக நேரம் ஒதுக்குங்கள்.
*** ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள். குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
*** எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
*** உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
*** நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள். அது உங்கள் மனதைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
*** அடுத்தவரைப் பார்த்துப் பொறாமை கொள்வது தேவையில்லாதது. காலம் நேரம் விரையம். உங்களுக்குத் தேவையானது அனைத்தும் உங்களிடம் உள்ளது.
*** கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தைச் சிதைத்து விடும்.
*** வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள். மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
*** எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
*** 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
*** அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள்.
*** நல்ல எண்ணங்களுடன் உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
*** எந்தச் சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும் என்பதில் உறுதியாக நம்பிக்கை வையுங்கள்.
ஆம். நண்பர்களே...
வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால் நம் மனமும், உடலும் என்றும் பாதுகாப்பாக அமையும்.
கவலை அற்ற மனமே இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது.
மேலே கண்டுள்ளதை அவசியம் கடைப் பிடியுங்கள்; கவலையற்ற வாழ்வை வாழுங்கள்.
வாழ்க வையகம்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment