Friday, 29 March 2019

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள்

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :-

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே சில மருத்துவ குணங்கள் உண்டு. அதை அறியாமல், அந்தப் பொருட்களின் மருத்துவ குணங்கள் தெரியாமல் கிடைக்கும்போது மட்டுமே பயன்படுத்துகிறோம். அதைத் தேடிப்போவதை நாம் விரும்புவதில்லை. அதற்கு நமது அவசரக் காலம் ஒரு காரணமாகிறது. சில நோய்களை உணவாலேயே சரிப்படுத்திவிட முடியும். இவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.

•தினமும் சாப்பாட்டிற்குப் பின் ஒரு தக்காளிப்பழம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி உண்டாகும். உண்ட உணவு எளிதில் செமிக்கும். மேலும், வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லையும் கட்டுப்படும்.
•வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடற்சூடு கட்டுப்படுத்தப்படுகிறது. வறட்டு இருமலுக்கு மிகவும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வெண்டைக்காயில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

•சிறிய வெங்காயம் நான்கு எடுத்து, அவற்றின் தோலை உரித்துவிட்டு, நன்கு மென்று சாப்பிட்டுவிட்டு, சூடாக ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எத்தகைய ஜலதோஷமும் நீங்கிவிடும்.

• பொன்னாங்கண்ணிக் கீரையைப் பூண்டு போட்டு வேகவைத்து, கடைந்து சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால், மூலநோயால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கிக் குணமடைவார்கள்.

•புதினா இலையினை அரைத்துச் சாறெடுத்து இரவில் படுக்கப்போகுமுன் முகத்தில் தேய்த்து, காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். வேறு எந்தக் கிறீமோ, லோஷனோ முகத்திற்குத் தேவையில்லை. பருக்களும் முகத்தில் ஏற்படாது.

•நீரில் சிறிதளவு டெட்டாலுடன் சிறிதளவு உப்பையும் கலந்துவிட்டு, பிறகு அத் தண்ணீரினால் குழந்தைகளைக் குளிப்பாட்டினால் எந்தவிதமான தோல்வியாதியும் குழந்தைகளை நெருங்காது.

•பச்சை வெங்காயத்தை அரிந்து தயிரில் போட்டு இரவு படுக்கப்போகுமுன் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும்.

•அன்னாசிப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் ஏற்படும் வலிகளும் மற்றும் கை, கால்களில் ஏற்படும் மூட்டுவலியும் நீங்கிவிடும்.

•இரண்டு வெற்றிலையுடன், இரண்டு கராம்பு, ஒரு துண்டு சுக்கு வைத்து பால் தெளித்து நைஸாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலி நீங்கும்.

•அறுகம்புல் சாற்றை அடிக்கடி பருகி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். வயிற்றுப்புண், குடல்புண் குணமாகும்.

•சிறு குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வேப்பங்கொழுந்தை உப்பு சேர்த்து அரைத்து உண்ணக் கொடுத்தால் வயிற்றில் பூச்சித் தொல்லை இராது.

•இரவில் தூங்காமல் தொந்தரவு செய்யும் குழந்தைகளுக்குப் படுக்கப் போகுமுன் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் தேன் கொடுத்தால் நன்றாகத் தூங்குவார்கள்.

•தினமும் 50 கிராம் அளவு அல்லது ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். மலம் நன்றாக வெளியேறி வயிறு சுத்தமாகும்.

•பழவகைகளுள் பேரிக்காயை யாரும் அவ்வளவாக விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். ஆனால், பேரிக்காய் இதயத்துக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை உண்டாக்கும். நிறைமாதக் கர்ப்பிணிகள் பேரிக்காயைச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.

•முள்ளங்கியை அடிக்கடி சமையல் செய்தோ பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் வாதநோய் நீங்கும். இருமல், கபம், குடல் சம்பந்தமான நோய்களுக்கும் முள்ளங்கி ஒரு சிறந்த மருந்தாகும்.

•இரவு படுக்கும் முன் சிறிதளவு விளக்கெண்ணெயைக் கண் இமைகளில் தடவி வந்தால், கண்கள் கவர்ச்சிகரமாய் மாறிப் பளீரென்று ஒளியுடன் திகழும், சுருக்கம் விழாமலிருக்கும்.

•சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து, அரைத்து, தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின் குளித்தால், முடி உதிர்வது நின்றுவிடும்.

• பாசிப்பயறு மாவுடன் சந்தனத்தைக் கலந்து தினமும் இரவில் முகத்தில் பூசிக்கொண்டு படுத்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

•எலுமிச்சம்பழத்தின் தோலைக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது சிறிதளவு ரசத்தில் சேர்த்தால் ரசம் மணக்கும். மேலும் இப்பொடியுடன், உப்பு, புதினாப்பொடி சேர்த்துப் பல் பொடியாகவும் பயன்படுத்தலாம். ஈறுகளுக்கு மிகவும் நல்லது.

•ஆரஞ்சுப் பழத்தின் தோலை நன்றாய்க் காயவைத்து எடுத்துக்கொண்டு தினமும் இரவில் கொசுவத்தி போல் கொளுத்தி வைத்தால் கொசுக்கள் நம் வீட்டிற்குள் வாராது

Monday, 18 March 2019

பெற்றேன் பிள்ளை என்று இல்லாமல் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப நற்சொற்படி வளருங்கள்.

பெற்றேன் பிள்ளை என்று இல்லாமல் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப
நற்சொற்படி வளருங்கள்.

பெற்றோர்கள் கவனத்திற்கு.

1.உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்பாட்டுவதற்கு ஐந்து  நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து  அவர்களைத் தொட்டு எழுப்பாட்டுங்கள்.

2.அவர்கள் தூங்குமிடத்திற்குச் சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களைக் குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடனும் எழும்புவதற்குத் துணை புரியும்.

3.உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப்படுகிறேன் உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்துத் தர வேண்டுமா? நீ நல்ல ஒரு திறமைசாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள். அவர்களை அன்பாக அணைத்து முத்தமிடுங்கள்.

4.காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒரு காலமும் அனுமதித்து விடாதீர்கள். ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணி விடும்.

5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகைத் தடவி விடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமிடையில் ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும். சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செமிபாடடைவதற்கும் காரணமாய் அமைந்து விடும்.

6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள். அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை மனக் கவலைகளை நீக்கி உங்கள் மீது அவர்களையறியாத ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.

7.குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.

8.உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.

9.பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளர விடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

10.பாதை ஒழுங்குகளைக் கற்றுக் கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன் மாதிரியாக நடந்து அவர்களை வழி நடத்துங்கள்.

11.குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். கல்வியின் முக்கியத்துவம், ஏன் கற்க வேண்டும் என எடுத்துரைங்கள்.

12.பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள். பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள். அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

13.அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்.

14.பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

15.குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்ள உதவுங்கள்; கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்து கொள்ளவும், அதன் மூலம் பயன் பெறவும் வழி காட்டுங்கள்.

16.சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

17.அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

18.இயற்கை உபாதைகளை அடக்கி வைக்கக் கூடாது என்பதை கற்றுக் கொடுங்கள். குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது (பயந்த சுபாவத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டு பண்ணும், சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதைப் புரிய வையுங்கள்.

இப்படித் தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

குறிப்பு:நம் தவறான வாழ்கை முறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவ முறைகளாலும் நிரந்தரமான தீர்வைத் தர இயலாது.

Wednesday, 6 March 2019

இரவில் படுத்த உடனேயே தூக்கத்தைப் பெற இயற்கை வழிகள்.*

*இரவில் படுத்த உடனேயே தூக்கத்தைப் பெற இயற்கை வழிகள்.*

ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. தூக்கத்தின் மூலம் தான் நாள் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்யும் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது. தூக்கம் சரியான அளவில் கிடைத்தால், உடல் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறை, தொழில்நுட்பம், வேலைப்பளு போன்றவைகளால் ஏராளமானோர் தூக்கத்தைத் தொலைத்துள்ளனர். போதிய அளவு தூக்கம் கிடைக்காததால், எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல், எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் அவஸ்தைப்பட நேரிடும்.
அதுமட்டுமின்றி, தூக்கமின்மை நோயெதிர்ப்பு சக்தியை பலவீனமடையச் செய்வதோடு, சர்க்கரை நோய் மற்றும் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே தூக்கமின்மையின் தீவிர தாக்கத்தில் இருந்து விடுபட, தூக்க மாத்திரைகளை அதிகம் எடுக்காமல், ஒருசில எளிய இயற்கை வழிகளின் மூலம் தூக்கத்தைப் பெற முயலுங்கள்.
இக்கட்டுரையில் படுத்த உடனேயே தூக்கத்தைப் பெற ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.

வெங்காயம்
பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கத்தை பெறலாம்

வான்கோழி அல்லது சிக்கன்
இரவில் படுக்கும் முன் சிறிது சிக்கன் அல்லது வான்கோழியை சாப்பிடுங்கள். இதில் உள்ள ட்ரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம், தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் உற்பத்தியை தூண்டி, நிம்மதியான தூக்கத்தை கிடைக்கச் செய்யும்.

பாலில் தேன்
பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இது மூளையில் மெலடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து தூக்கத்தைப் பெற உதவும். ஆகவே இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்க வேண்டுமானால், வெதுவெதுப்பான ஒரு டம்ளர் பாலில் தேன் கலந்து குடியுங்கள்.

நறுமண எண்ணெய்
படுக்கும் முன் மணிக்கட்டுப் பகுதியில் சிறிது மல்லிகைப் பூ எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். இது ஒருவித மயக்க உணர்வை ஏற்படுத்தி, நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.

செர்ரி ஜூஸ்
தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், செர்ரி ஜூஸை குடிப்பது நல்லது. ஏனென்றால் இதில் ட்ரிப்டோபேன் அதிகம் உள்ளது. எனவே நிம்மதியான தூக்கம் கிடைக்க செர்ரி ஜூஸ் குடியுங்கள்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் ட்ரிப்டோபேன், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. எனவே இரவில் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல தூக்கத்தைக் கிடைக்கச் செய்யும்.

கார்போஹைட்ரேட்
இரவில் படுப்பதற்கு 15 நிமிடத்திற்கு முன் பிரட் அல்லது செரில் போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதன் மூலமும் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

அக்குபஞ்சர்
அக்குபஞ்சர் செயல்முறையை மேற்கொள்வதன் மூலம், ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் நியூரோஎண்டோகிரைன் என்னும் கெமிக்கல் வெளிவந்து, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

உடற்பயிற்சி
ஒருவர் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். அதற்காக தூங்கும் முன் உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. காலை அல்லது மாலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். அதிலும் ஏரோபிக் உடற்பயிற்சியை தினமும் மேற்கொண்டால், நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

சுரைக்காய்
சுரைக்காயை சாறு எடுத்து, அத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி சிறிது மசாஜ் செய்வதன் மூலம், நல்ல தூக்கம் கிடைக்கும்.

கசகசா
இரவில் படுக்கும் முன் 1 டீஸ்பூன் கசகசாவை சாப்பிடுவதால் நல்ல தூக்கம் கிடைக்கும். இல்லாவிட்டால், 1 டீஸ்பூன் தேங்காய் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் கசகசாவை சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் சிறிது வெண்ணெய் போட்டு, அதில் 1 சிட்டிகை சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து இறக்கி, கசகசா பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, இரவில் தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

தயிர்
தினமும் தயிரை சாப்பிடுவதன் மூலமோ அல்லது அவ்வப்போது தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலமோ, நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

சோம்பு
1 டீஸ்பூன் சோம்புவை 375 மிலி நீரில் போட்டு 12-15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் பால் மற்றும் தேன் கலந்து இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும்.

குங்குமப்பூ
குங்குமப்பூவில் உள்ள மயக்க பண்புகள், நல்ல தூக்கத்தைத் தூண்டும். அதற்கு சிறிது குங்குமப்பூவை 1 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்து குடிக்க வேண்டும்.

க்ரீன் டீ
இரவில் தூங்குவதற்கு 1-2 மணிநேரத்திற்கு முன் 1 கப் க்ரீன் டீ குடிப்பதால், அதில் உள்ள அமினோ அமிலம் மற்றும் தியனைன், மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்து, நிம்மதியான தூக்கத்தைக் கிடைக்கச் செய்யும்

Friday, 1 March 2019

கீரை இல்லா சமையல் வேண்டாமே!

கீரை இல்லா சமையல் வேண்டாமே!

“காய்கறிகள் வாங்கச் செல்லும் நம்மை முதலில் கவர்ந்து இழுப்பது பச்சைப்பசேல் கீரைகள்தான். கீரை வளர்ப்பது மிக எளிது. மிகக்குறுகிய காலத்தில் அறுவடை செய்து விற்பனை செய்துவிடலாம். இதில் ஓர் அதிர்ச்சிச் செய்தியும் உண்டு. தமிழகத்தின் பல புறநகர் பகுதிகளில், கழிவுநீரில் சுகாதாரமே இல்லாமல் கீரை வளர்த்து, விற்பனை செய்து காசு பார்க்கிறார்கள்.

இதனால், நன்மை செய்ய வேண்டிய கீரையே பல நேரங்களில் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற பாதகங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இப்பிரச்னையைத் தவிர்க்கும் வகையில், கீரைகளை நம் வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். தானியக்கீரை போன்றவற்றை பெரிய பைகள் அல்லது தொட்டிகளிலும், அரைக்கீரை போன்றவற்றை கீரை படுகைகளிலும், பாலக் கீரையை உயரமான பைகளிலும் வளர்க்கலாம்.

கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சிறிய பைகளில் வளர்க்கலாம். கீரை விதைகளை நர்சரியில் வாங்கி விதைக்கலாம். அதிகபட்சம் 15 தினங்களில் கூட அறுவடை செய்யும் கீரை வகைகள் உள்ளன. உயிர்ச் சத்தான வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், இவை தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. அதனால் கீரை ‘பாதுகாக்கும் உணவு’ (Protective Food) என்றழைக்கப்படுகிறது.

கீரை மகத்துவம்

அரைக்கீரை: தாது விருத்தி செய்யும். ரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத நோய் தணிக்கும்.

அகத்திக்கீரை: பித்தம் குணமாகும். ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். மலத்தை இளக்கி வெளியேற்றும். வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண் பார்வை தெளிவையும், எலும்பு பலமும் கொடுக்கும்.

தவசு முருங்கை: மூக்கு நீர்பாய்தல், இரைப்பு, இருமல் நீங்கும். கோழை அகற்றும் குணமுடையது.

லஜ்ஜை கெட்ட கீரை: சித்தர்கள் இக்கீரையை ‘வாத மடக்கி‘ என்று கூறுகிறார்கள். மூட்டுவலியும் மூட்டுவீக்கமும் நீங்கும். வாயுத் தொந்தரவுகள் குறையும்.

ஆரைக்கீரை: அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும். பித்தக் கோளாறுகளையும் போக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை (பச்சை): மேனி பிரகாசிக்கும். தினசரி இக்கீரையை சூப் வைத்து அருந்தினால் உடல் வலு பெறும்.

மணத்தக்காளி கீரை: குடல்புண், வாய்ப்புண் ஆற்றும் சக்தி உள்ளது. சிறிய வெங்காயத்துடன் சமைத்து சாப்பிட்டால் புண்கள் விரைவில் ஆறும்.

முளைக்கீரை: அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுடி நரைக்காமல் இருக்கும்.

கறிவேப்பிலை: நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் இளமைத்தோற்றம் நிலைத்து நிற்கும்.

பொன்னாங்கண்ணி கீரை(சிவப்பு): பூண்டு சேர்த்து வதக்கி உணவுடன் உண்டால் மூலநோய், வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.

புதினா: இரும்புச்சத்து இருப்பதால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, புதிய ரத்தத்தையும் உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும். எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கிப் போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். 1/2 சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும்.

முழங்கால் வலி

முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.
              பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்.
            
             கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.

                 பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.

                    அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது. 
                    
                      குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

                      பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது.

                  சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...

                  பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் .
                   பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..
               மூலம் நோய் உள்ளவர்களுக்கு
உரிய  மருந்தாகவும், ஏற்ற உணவாகவும்
பயன்படுகிறது.
                 இந்த மூலிகையை "குத ரோக நாசினி" என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

                    இவ்விதமாக நிறைய வயிறு சம்மந்தப்பட்ட  குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது.
மற்றும் இயற்கை கால்சியம்  அதிகம் உள்ளது  .
                   இவ்வாறு இருக்க  நாம்  ஏன் அனாவசியமாக  கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும். யோசிங்க.....

                 வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
                  உலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

               தேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால்தானோ என்னவோ
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" எனப்படுகிறது. 
                  
                 இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல்  அணைவரும் உபயோகித்து பயன்   அடைந்தால்  நான் மிகவும் மகிழ்வேன்.