Tuesday, 30 July 2019

உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன...?

உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன...?

உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் காரணம் சமையல் உப்புதான். பல வழிகளில் உடலில் சேரும் உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் கூடினால், அடுத்தடுத்து பல பிரச்னைகள் வரும்.

#காரணங்கள்:

உயர் ரத்த அழுத்தத்துக்குப் பல காரணங்கள் உள்ளன. உடலில் சேருகிற நீர், உடலில் சேருகிற உப்பு, சிறுநீரகம், நரம்பு மண்டலம், ரத்த நாளங்கள் வேலை செய்கிற விதம், ஹார்மோன்கள் வேலை செய்கிற விதம் போன்றவை முக்கியமானவை.

உயர் ரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பக்கவாதம், அதனால் பேச்சுத் தடை, மாரடைப்பு, இதயப் பலவீனம், சிறுநீரக நோய், ஏன் மரணம்கூட ஏற்படலாம்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உப்பு, ஊறுகாய், வடகம், வத்தல் போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரலாம்.

சிலருக்கு எந்தக் காரணத்தால் வருகிறது என்பது தெரியாது. இதை எசன்சியல் ஹைபர்டென்ஷன் என்று குறிப்பிடுவார்கள். சில நேரம் மற்ற உறுப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்பால் ரத்த அழுத்தம் அதிகமாகும்.

ஒருவருக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றரை தேக்கரண்டி உப்பு போதுமானது. நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி. கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தை பாதிக்கும்.

கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். உணவில் அதிகளவு கறிவேப்பிலை, கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அகத்திக் கீரை, சுண்ட வத்தல் ஆகியவற்றைச் சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

எலுமிச்சம்பழம், புதினா, கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டால், உப்பின் தேவை குறையும். பசும் பாலில் 2 பல் பூண்டை நசுக்கிப் போட்டுக் காய்ச்சி இரவில் குடித்து வந்தால் ரத்தக் கொதிப்பும், கொழுப்பும் குறையும்.

எலும்பின் வலிமையை அதிகரிக்க..... சில குறிப்புகள்:

எலும்பின் வலிமையை அதிகரிக்க.....
சில குறிப்புகள்:

எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமானவை கால்சியம் ஊட்டச்சத்தும் மற்றும் சரியான உடல் வேலை.

அதிகாலை சூரிய உதயம்

சூரிய உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருக்க வேண்டும். இது, நமது உடலில் இருக்கும் வைட்டமின் டி சத்தை தூண்ட உதவும். இது, எலும்பின் வலிமைக்கு நல்லது என கூறுகிறார்கள்.

பூண்டு மற்றும் வெங்காயம்

உங்களது தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும். இதில் இருக்கும் சல்ஃபர் தான் இதற்கு காரணம்.
அதிகப்படியான புரதம் வேண்டாம்
இறைச்சி உணவுகளின் மூலம் கிடைக்கப் பெறும் அதிகப்படியான புரதம், கால்சியம் சத்தை வெளியேற்றிவிடுகிறது. இது, எலும்பின் வலிமை குறைய காரணமாகிறது. எனவே, புரதம் அதிகமுள்ள இறைச்சி உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம்.

அளவான டீ, காபி

சிலர் ஓர் நாளுக்கு பல முறை டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது, எலும்பின் வலிமைக்கு நல்லதல்ல. எனவே, இவற்றின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால், இதற்கு மாற்றாக பால் குடிக்கலாம்.

உடற்பயிற்சி அவசியம்

எலும்பின் வலிமை அதிகரிக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இதற்கு நீங்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நடைப்பயிற்சி, ஜாக்கிங், சிட்-அப்ஸ் அல்லது உங்கள் மாடி படிகளை அரை மணிநேரம் ஏறி, இறங்கினால் கூட போதும்.
உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள்
ஃபுட் பால், பாஸ்கெட்பால், பேட்-மிட்டன் என எந்த விளையாட்டு உங்களுக்கு பிடிக்கிறதோ அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுங்கள். இது, தசை மற்றும் எலும்பின் வலிமை அதிகரிக்க உதவும்.

சோடா மற்றும் கோலா பானங்கள்

சோடா மற்றும் கோலா பானங்களில் உங்கள் பல்லை போட்டால் கரைந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இவற்றில் இருக்கும் பாஸ்பரஸ், கால்சியம் சத்தை போக்கிவிடுகிறது. இதனால் தான் பெரும்பாலானவர்களுக்கு அதிகம் எலும்பு சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது.

பால் உணவுகள் அவசியம்

பால், தயிர், மோர் போன்ற பால் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் கால்சியம் உங்கள் எலும்பிற்கு வலிமையை தரும்.

ஆரோக்கியமான உணவு

உங்களது உணவுப் பழக்கத்தில், கீரை, தானிய உணவுகள் போன்ற சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, நீங்கள் வேக வைத்த காய்கறிகள் அல்லது தானிய உணவுகள் சாப்பிடலாம்.

புகை, மது

காலம், காலமாக நாம் கூறுவது தான். புகை மற்றும் மதுவை விட்டொழித்துவிடுங்கள். குறைந்த பட்சம், முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள்.

மதுவின் வாடை போக்க:-

மதுவின் வாடை போக்க:-

மது அருந்துவதை விடவேண்டும் ஆனால் முடியவில்லையே என்று தவிப்பவா்கள் தாங்களே இம்மருந்தை தயாா் செய்து அருந்தலாம். இதன் பெயா் “கேழ்வரகு பற்பம்”. ஒரு நாட்டுக்கோழியை பிடித்து சுத்தமான இடத்தில் அதை கட்டி வைத்து மூன்று நாளைக்கு வெறும் தண்ணீரை மட்டும் உணவாகத் தரவேண்டும், அப்பொழுது கோழி வெளியேற்றும் மலத்தை அகற்றி அந்த இடத்தை நன்றாகக் கழுவி விடவேண்டும்.

நான்காம் நாள் கோழிக்கு வெறும் கேழ்வரகை மட்டும் உணவாகத் தரவேண்டும், மறுநாள் கோழி வெளியேற்றும் மலத்தை சேகாித்து உலா்த்த வேண்டும், அதன் மலம் வெள்ளையாக இருக்கும், அதை பவுடா் செய்தால் பற்பம் போலவே இருக்கும், தேவையான அளவு சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த பற்பத்தை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அவா் குடிக்கும் மதுவில் கலந்து குடிக்க வேண்டும், குடித்ததும் வாந்தி வரும். மறுபடி மதுவை குடித்தால் வாய் ஒக்காளத்துடன் வாந்தி வரும், மதுவை ஒரு மிடறு கூட குடிக்க முடியாது, மெல்ல மெல்ல மதுவின் வாசனை பட்டாலே தூர ஓடும் நிலைமை ஏற்படும்.
குடிகாரா்களுக்குத் தொியாமலும் இதை கொடுப்பாா்கள், சிலா் ஒரு முறை கொடுத்த போதே மதுவிலிருந்து மீண்டாா்கள், வேறு சிலா் இரண்டு மூன்று நாட்கள் பற்பம் அருந்தி மதுவை மறந்தாா்கள்,

இந்த மருந்தால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை, மதுவை மறந்ததும் நல்ல சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். கல்லீரல் தேற்றிகளான முதலியவற்றை தொடா்ந்து சாப்பிட மதுவினால் இழந்த உடல் ஆரோக்கியத்தை திரும்பபெறலாம்

Wednesday, 17 July 2019

கருப்பை கட்டிகளை கரைக்கும் வெண்கடுகு

கருப்பை கட்டிகளை கரைக்கும் வெண்கடுகு

உள் உறுப்புகளை தூண்டக் கூடிய தன்மை கொண்டதும், வீக்கம் மற்றும் வலியை போக்க கூடியதும், கருப்பை கட்டிகளை கரைக்கவல்லதும், செரிமானத்தை தூண்டக் கூடியதும், இருமல், விக்கலை சரிசெய்ய கூடியதும், ரத்த ஓட்டத்துக்கு மருந்தாக பயன்படுவதுமான வெண்கடுகு பல மருத்துவ பலன்களை கொண்டது.

கடுகை போன்று பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வெண்கடுகு. கடுகு வகையை சேர்ந்த இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெண்கடுகை பயன்படுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். வெண் கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக்கொண்டால், இது செரிமானத்தை தூண்டும். கருப்பை கோளாறுகளை சரிசெய்யும். வெண்கடுகு உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. இரையறை கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. சிறுகுடலில் உள்ள மென் திசுக்களை தூண்டக் கூடியது. மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும். கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து, கருப்பைக்கு பலம் தரக்கூடியது.

வெண் கடுகை பயன்படுத்தி கெண்டைக்கால் தசையில் வீக்கம், வாயுக்கான மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யில், ஒரு ஸ்பூன் வெண்கடுகு பொடியை வறுக்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவு சேர்த்து களி பதத்தில் தயாரிக்கவும். இந்த களியை மெல்லிய துணியில் தடவி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும். இதனால் வலி, வீக்கம் சரியாகும்.

வெண்கடுகை பயன்படுத்தி விக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். அரை டம்ளர் அளவுக்கு நீர் எடுத்து கொதிக்க வைக்கவும். தனியாக ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் அளவுக்கு வெண்கடுகு பொடியை எடுத்துக்கொள்ளவும். இதில் வெந்நீரை ஊற்றி நன்றாக கலந்து 15 நிமிடம் வைத்திருந்தால் நீர் தெளிந்துவிடும். மேலே இருக்கும் தெளிந்த நீரை குடித்தால் விக்கல் சரியாகும்.விக்கலால் மது அருந்துபவர்கள், வயிற்று புண் இருப்பவர்கள் மிகவும் அவதிப்படுவார்கள்.

விக்கலை போக்க வெண்கடுகு மருந்தாகிறது. வெண்கடுகை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வெண்கடுகு பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட இருமல் கட்டுப்படும். சுவாச பாதையில் ஏற்படும் அழற்சி, வீக்கத்தை குறைக்கும்.வெண்கடுகு, ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், சளியை போக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் தன்மைகொண்டது. வலி நிவாரணியாகிறது. ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் தன்மை கொண்டது.

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க நண்பர்களே)

சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ இருக்கிறோம். அது கடுக்காய்!

கடுக்காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.

1. கண் பார்வைக் கோளாறுகள்
2. காது கேளாமை
3. சுவையின்மை
4. பித்த நோய்கள்
5. வாய்ப்புண்
6. நாக்குப்புண்
7. மூக்குப்புண்
8. தொண்டைப்புண்
9. இரைப்பைப்புண்
10. குடற்புண்
11. ஆசனப்புண்
12. அக்கி, தேமல், படை
13. பிற தோல் நோய்கள்
14. உடல் உஷ்ணம்
15. வெள்ளைப்படுதல்
16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு
18. சதையடைப்பு, நீரடைப்பு
19. பாத எரிச்சல், மூல எரிச்சல்
20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி
21. ரத்தபேதி
22. சர்க்கரை நோய், இதய நோய்
23. மூட்டு வலி, உடல் பலவீனம்
24. உடல் பருமன்
25. ரத்தக் கோளாறுகள்
26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்
மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த‍ மருத்துவ த்தில் மட்டுமே உண்டு. இது ரொம்ப எளிமைதானுங்க.

நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, மேற்கண்ட 26 நோய்களில் இருந்துமுற்றிலும் விடுபட்டு, பிணி இல்லா பெருவாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள். வாழ்க வளமுடன்!

நரம்புத் தளர்ச்சி நீக்கும் அமுக்கிரா

நரம்புத் தளர்ச்சி நீக்கும் அமுக்கிரா

அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து அதிகாலையில் சாப்பிட உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் பெறலாம்.

அமுக்கிரா கிழங்கை எடுத்து பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம்.

அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும்.
கிழங்கை பாலில் வேக வைத்து உலர்த்தி பின் பொடி செய்து, இரவு வேளை உணவுக்குப்பின் 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வன்மை தரும்.

அமுக்கிரா கிழங்கு பொடி – 1 பங்கு, கற்கண்டு – 3 பங்கு என சேர்த்து காலையும் இரவு உணவுக்குபின் பசுவின்பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்.

சளி, இருமல், காசநோய் நீங்க

சளி, இருமல், காசநோய் நீங்க

சளித் தொல்லை நீங்க: ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

கபம் நீங்கி உடல் தேற: காரிசலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.

இளைப்பு, இருமல் குணமாக: விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.
தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.

சளிகபம் ஏற்படாமல் தடுக்க: சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.

காசநோய் குணமாக: செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மையாக அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.

புளி அல்ல... மாணிக்கம்!

புளி அல்ல... மாணிக்கம்!

புளி... உணவு மட்டுமல்ல; மருந்தும்கூட என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நம் வீட்டு பொக்கை வாய்ப் பாட்டி இப்படிச் சொல்வார்... `நறுக்கின காய்கறித் துண்டுகளை புளியில கொஞ்சம் ஊறவிட்டு வேகவிடும்மா... மல்லித்தழையையும் பெருங்காயத்தையும் இறக்கும்போதுதான் போடணும்; காயவிடக் கூடாது. அப்புறம் அதுல மணம் இருக்காது.’ இந்த வார்த்தைகளை அதன் முக்கியத்துவம் தெரியாமல் அலட்சியப்படுத்தித்தான் வருகிறோம்.

சமீபகாலமாக புளியில் ஊறாத காய், ஏலக்காய் இல்லாத லட்டு, பட்டை போடாத பிரியாணி, மல்லித்தழை இல்லாத ரசம், கறிவேப்பிலை இல்லாமல் தாளிக்கப்படும் சட்னி... என தமிழர்களின் சமையல் பழக்கத்தில் பெரும் மாற்றம்! `ஏம்ப்பா... இப்படி உயிரே இல்லாம சமைக்கிறீங்க?’ என்று பதறிப்போய் கேட்டால், ‘எப்படியும் அது எல்லாத்தையும் சாப்பிடுறப்போ எடுத்து தூரப் போடப் போறோம்... அதை எதுக்கு வேஸ்ட்டா போட்டுக்கிட்டு?!’ என விவரமாக பதில் சொல்கிறது இன்றைய இளைய தலைமுறை.

`சுவை, மணம், காரம் தூக்கலாக இருப்பதற்காகவே இந்த சமையல் அலங்காரங்கள்’ என்றே நம் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால், அது உண்மை அல்ல.

ஆங்கிலத்தில் ஸ்பைசஸ் (Spices) என்றால் காரம் என அரைகுறையாகப் புரிந்துகொண்டது முதல் சிக்கல். மல்லி, கறிவேப்பிலை என நீளும் மணமூட்டிகள் உணவை மருந்தாக்கும் அத்தியாவசியப் பொருட்கள் என்பதை மறந்துவிட்டது இரண்டாவது சிக்கல்.

புளி... மகிமை!

* ‘புளிக்குழம்பா?’ என அலர்ஜி காட்டும் குழந்தைகளில் பலரும் அதன் சுவையால் அதை ஒதுக்குவது இல்லை. அந்தக் குழம்பின் வண்ணம்தான் அவர்களுக்கு அலர்ஜியை வரவழைத்துவிடுகிறது. கறுப்பு என்றால் அழுக்கு, பழுப்பு என்பது பரவாயில்லாத அழுக்கு என்கிற விஷமத்தனமாகப் பழக்கப்படுத்தப்பட்ட மனநிலை காரணமாகவே புளிக்குழம்பைப் பழிக்கிறார்கள். ஆனால், இது மகத்தான மருத்துவக் குணம் கொண்டது என்பதை ஆப்பிரிக்க அப்பத்தாக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். பல்வேறு வகையான காய்ச்சல், அஜீரணம், சுவாச நோய்கள் ஆகியவற்றுக்கும் புண்ணை ஆற்றும் தன்மைக்கும் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் இதைத்தான் நம்பியிருக்கின்றன. இதை, `ஜர்னல் ஆஃப் எத்னோபார்மகாலஜி’ (Journal of Ethnopharmacology) எனும் மருத்துவ நூல் ஆவணப்படுத்தியுள்ளது.

* புளிக்கரைசலில் ஊறவைத்து வேகவிடுவதாலேயே, காய்கறிகளின் புரதச்சத்து, பல கனிமச் சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன என்ற தேசிய உணவியல் கழகத்தின் ஆய்வு முடிவுகள், நம் முன்னோர்களின் பழக்கத்துக்குக் கிடைத்த அறிவியல் அங்கீகாரம்.

* இதில் அதிகம் இருப்பது, ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையுள்ள டார்டாரிக் அமிலம். அதோடு வைட்டமின் பி வகைச் சத்துக்கள், கால்சியம், இன்னும் மருத்துவக் குணமுள்ள கூறுகள் (Phytonutrients) நிறையவே உள்ளன. பார்வைத்திறனில் பாதிப்பு உண்டாக்கும் சாதாரணக் கிருமித் தொற்று முதல் வயோதிகம் உண்டாக்கும் பிரச்னைகள் வரை தீர்ப்பதற்கு புளிக்கரைசைலைப் பயன்படுத்தலாமா என ஆய்வாளர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதிக சர்க்கரைக்கும், அதிக ரத்தக் கொழுப்புக்கும்கூட புளி வேலை செய்வதில் புலியா?’ என பாகிஸ்தானில் ஆராய்ந்துவருகிறார்கள்.

* `மருத்துவக் குணமும், பட்டையைக் கிளப்பும் ருசியும் கொண்டது’ என உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் ஐரோப்பாவின் `வோர்செஸ்டெர்ஷைர் சாஸ்’ (Worcestershire sauce), ஜமைக்காவின் பிக்காபெப்பா சாஸ் (Pickapeppa sauce) இரண்டிலும் நாம் இளக்காரமாக நினைக்கும் புளிக்கரைசல்தான் மிக முக்கியப் பொருள்.

* நம் ஊர் அம்மன் கோயில் பானகத்தின் ருசிக்கு ஈடு ஏது? அதற்கு யாராவது ஒரு ஆங்கில சாஸ் பெயரை வைத்தால், இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சாப்பிடுவார்களோ, என்னவோ!

`தாவரக் கூட்டத்தின் மாணிக்கங்கள்’ என்றால் அவை `ஸ்பைசஸ்’ எனப்படும் மணமூட்டிகள்தான். அவற்றில் புளி, நம் ஆரோக்கியம் காக்கும் அற்புதமான மாணிக்கம்!

Wednesday, 3 July 2019

கால்வீக்கம்

மருத்துவம் கால்வீக்கம்

மனிதர்களாகிய நாம் இயங்குவதற்கும் ஒரு இடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு நடப்பதற்கும் உதவும் உடலின் அங்கங்கள் கால்கள். இகால்களில் எவ்வித பாதிப்புகளும் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். இந்த கால்களில் ஏற்படும் ஒரு குறைபாடு தான் கால் வீக்கம் ஆகும். இக்கால்வீக்கத்திற்கான காரணம் மற்றும் சித்த மருத்துவ குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

கால் வீக்கம் ஏற்பட காரணம்

கால் வீக்கம் ஏற்பட ஒரு முதன்மை காரணமாக இருப்பது சிறுநீரகங்களில் ஏற்படும் கோளாறுகள் ஆகும். இப்பிரச்னையால் அவதியுறுபவர்களுக்கு அவ்வப்போது கால்களில் வீக்கம் ஏற்படும். வயதின் மூப்பின் காரணமாகவும் சிலருக்கு கால் வீக்கம் ஏற்படும்.

கால் வீக்கம் குறைய ஆவாரம் பட்டை, சுக்கு

ஆவாரம் பூ, மரப்பட்டை போன்றவை சிறந்த மருத்துவ குணங்களை கொண்டவையாகும். இந்த ஆவாரம் பட்டையுடன் சுக்கு சிறிது சேர்த்து, தண்ணீர் விட்டு காய்ச்சி குடிக்க கால் வீக்கம் குணமாகும்.

கால் வீக்கம் குணமாக – ஓமம்

ஓமத்தை தண்ணீர் விட்டு அரைத்து, சூடான நீரில் கலந்து வீக்கமுள்ள இடங்களில் பற்று போட்டு வர கால் வீக்கம் குணமாகும்.

கால் வீக்கம் குறைய வெற்றிலை

ஒரு வெற்றிலையை எடுத்து அதில் விளக்கெண்ணெய் தடவி, நெய் தீபத்தின் தணலில் காட்டி, கால் வீக்கம் உள்ள இடங்களில் அவ்வப்போது வைத்து வர கால் வீக்கம் குறையும்.

ஒத்தடம்

வெறும் வாணலியை சூடேற்றி ஒரு வெள்ளை துணியில் சிறிது மஞ்சளை தடவி, அந்த வாணலியில் வைத்து வீக்கமுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வர சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

உடற்பயிற்சி

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உடலியக்கமின்றி இருப்பதாலும் கால்களில் வீக்கம் ஏற்படும். எனவே அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

கால் வீக்கம்

கால் வீக்கம் இருந்தால், நல்லெண்ணெய், சாம்பிராணி, எலுமிச்சம் பழச்சாறு இவற்றைச்சேர்த்துச் சூடாக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கால் வீக்கம் குறையும். பச்சரிசி மாவை வேக வைத்து வீக்கத்தில் கட்டினாலும் வீக்கம் குறைந்துவிடும்.

டிப்ஸ்... டிப்ஸ்.. டிப்ஸ்...

இட்லி, தோசை மாவு புளித்துவிட்டதா...? கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, இத்துடன் மாவையும் கலந்து, கெட்டியான தோசைகளாக வார்த்து, மேலே பொடியாக அரிந்த வெங்காயம் தூவி சுட்டெடுத்தால்... பசுமையான, சுவையான ஊத்தப்பம் தயார்.

மாங்காயைத் துருவி பொரித்த குழம்பு மற்றும் கூட்டு வகைகளில் கடைசியாகப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால், சுவை கூடும் (மாங்காய் சீஸனில் மாங்காய்கள் வாங்கி, துருவி, வெயிலில் காயவைத்து, பொடித்து, ஆம்சூர் பொடியாக்கி வைத்துக் கொண்டு இப்படி உபயோகித்துக் கொள்ளலாம்).

உப்புமா வகைகள், கலந்த சாத வகைகள், வெண் பொங்கல் முதலியவற்றைப் பரிமாறும்போது, மேலே ஓமப்பொடி, காராபூந்தி, மிக்ஸர் போன்ற ஏதாவதொன்றைத் தூவிப் பரிமாறினால், அந்த டிபனில் கரகரப்பு கூடி, ரசித்துச் சாப்பிட வைக்கும்.

சாம்பார் செய்யும்போது, புளியின் அளவைக் குறைத்து அல்லது புளியை முற்றிலும் தவிர்த்து, தக்காளிப் பழங்களைச் சேர்த்துக் கொதிக்கவிட்டால், சுவை கூடுவதுடன், எல்லாவித டிபன் வகைகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ்ஷாகவும் அமையும்.

போண்டா, வடை முதலியவற்றுக்கு உளுந்து மாவு அரைக்கும்போது, வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். இந்த மாவில் போண்டா அல்லது வடை பொரித்தெடுத்தால், மேலே கரகரவென்றும், உள்ளே மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

ரவை, கோதுமை மாவு, அரிசி மாவு போன்றவற்றை கலந்து கரைத்த தோசை செய்யும்போது சுவையைக் கூட்ட இதோ ஐடியா! மிளகாய், கறிவேப்பிலை (விருப்பப் பட்டால் ஒரு துண்டு வெங்காயம்) ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொண்டு, அதில் கடுகு தாளித்து, மாவு வகைகளை சேர்த்துக் கரைத்து, தோசை வார்த்தால்... அருமையான சுவையுடன் இருக்கும்.

வெங்காயம் நறுக்கும் போது மின்விசிறியின் கீழ் அமர்வதைத் தவிர்க்கவும். இல்லையென்றால் வீடு முழுக்க அதன் நெடி பரவி, வீட்டையே கண்ணீரில் ஆழ்த்திவிடும்

வெண்டக்காயின் இருமுனைகளையும் வெட்டிவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாப்போம். அதேபோலவே பீன்ஸ், அவரைக்காய் போன்றவை முற்றிவிடாமல் இருக்க... நார் நீக்கிவிட்டு, பைகளில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்

பீட்ரூட், கேரட், குடமிளகாய் போன்ற வண்ண வண்ணக் காய்களில் சத்தும் சுவையும் அதிகம். அவற்றை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளலாம். அவற்றைத் துருவி, தாளித்து சாலட் போல சாப்பிடலாம்.