Tuesday, 2 July 2019

மருந்தாக மாறுகிறது

சமைக்காமல் உண்பதால், உணவுப் பொருள்களின் உயிர்ச்சத்துகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மருந்தாக மாறுகிறது.

** கழிவுகளின் தேக்கமே நோய். இயற்கை உணவு உண்பதால், உடலில் உள்ள கழிவுகள் தேங்காமல் முற்றிலும் நீக்கப்படும். இதனால் நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.

** உமிழ்நீரை, `உயிர் நீர்’ என்பர். இயற்கை உணவை நன்கு மென்று உமிழ்நீரோடு சேர்த்துச் சாப்பிடுவதால் எளிதில் செரிமானமாகும்.

** உணவுக்கும் குணத்துக்கும் நெருங்கிய நேரடித் தொடர்பு உண்டு. இயற்கை உணவு நாளடைவில் நம்முள் சாத்வீக குணத்தை மேலோங்கச் செய்யும். மனம் அமைதி பெறும். செயல்களில் நிதானம் கைகூடும். நிதானம், பலவிதங்களில் நம்மைப் பண்படுத்தும்.

** எண்ணெயில்லாமல் சமைக்கப்படுவதால், இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்புக் குறையும். இதய நோய் இருந்தால், இந்த இயற்கை உணவே மருந்தாகிக் காக்கும்.

** சமைத்து உண்ணும் உணவின் அளவைவிட, சமைக்காமல் உண்ணும் உணவின் அளவு மிகக் குறைவாக இருக்கும். இது உடல் எடை அதிகரிக்காமல், சீராகப் பராமரிக்க உதவும்.

** நாள்பட்ட நோய்களான நீரிழிவு, ஆஸ்துமா போன்ற நோய்களும் உயிர்கொல்லி நோய்களான புற்றுநோய் போன்ற நோய்களும் குணமாக இயற்கை உணவு துணைநிற்கும்.

** உடல் பருமன், மாதவிடாய்ப் பிரச்னைகள், சிறுநீரகக் கோளாறு, செரிமானமின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இயற்கை உணவின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம்.

No comments:

Post a Comment