Saturday, 28 September 2019

அத்திப்பழம்

அத்திப்பழம்
------------------------

உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
அத்தி நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். அவற்றை நீக்கி  பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்துவெண் புள்ளிகள் மீது பூசலாம்.மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் நல்லது.

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு
பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.
இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.
வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,
மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.
பயன்கள்: அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

அத்திப் பழத்தின் சத்துகள்
அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில்  ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.

அத்தியின் மருத்துவப் பயன்கள்

அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.
உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.
அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.
நீரழிவு குணமாகும்: அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.
அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும்.நாட்டு அத்தியின் பால் மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும்.
அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை போன்றவற்றில் பாளையில் பால் சுரக்கும். அத்தி வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.
அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

நன்றிகளும்
பிரியங்களும்.

Tuesday, 24 September 2019

கொசு குறித்து ஸ்பெஷல் ரிப்போர்ட்.

கொசு குறித்து ஸ்பெஷல் ரிப்போர்ட்.

Vitamin B --- கொசுவின் எதிரி.
      
உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.

2.5 மில்லி கிராம் எடை கொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.

மழை கொட்டும் போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.

ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அது தான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.

சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.

கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்.

ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம்,5 நாட்கள் மட்டுமே

முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரிய முனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. கொசுவின் துணையுறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்டதும் கொசு தான்.

ஆண் கொசுவை விடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளிலேயே அது உணவு உட்கொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும் பெண் கொசு தான்.

கடிக்கும் போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.
' ஏடிஸ் ' வகை கொசு தான் டெங்கு பரப்புகிறது.

ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும் போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.
டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.

கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்புக் குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்.நுளம்பு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் நுளம்பினத்தின் பெண் நுளம்புகளே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றது

கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்(alletrin) சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள் விளைகின்றன.

உடலில் தேங்காய் எண்ணை அல்லது விளக்கெண்னை பூசிக்கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில் பூச்சிகளும் நம்மை கடிக்காது.

கொசுக்கள் பெண்களைத் தான் அதிகமாக கடிக்கும் காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ் கொசுக்களை கவருகின்றன ஆக பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே

Vitamin B --- கொசுவின் எதிரி...,
இந்த வைட்டமின் B அதிகமாக இருப்பவர்களை கொசு அண்டுவதில்லை...

வைட்டமின் B எவ்வளவு நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகளை வாங்குவது நல்லது.

வாழ்க்கை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல வேண்டிய 25

வாழ்க்கை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல வேண்டிய 25
!

1. இன்று தான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்... இவர்களைப் பாருங்கள்! வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, 'பாசிடிவ்'வாக இருக்கும்.
"அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!" என்று எதையும் தள்ளிப் போட மாட்டார்கள். எங்கேயாவது போக வேண்டுமா... ஒரு நண்பரைப் பார்க்க வேண்டுமா... ? உடனே, செய்து விடுவார்கள். அவர்களிடம், 'பிறகு' என்ற வார்த்தையே இருக்காது.

2. நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதுங்கள். பேச ஆரம்பிக்கும் போது, உங்கள் அருமை குழந்தை என்ன என்ன வார்த்தைகள் பேசினாள் என்பதையும் எழுதி வையுங்கள். அவற்றையெல்லாம் எழுதி வைக்காவிட்டால், பிறகு ஞாபகம் இருக்காது. பிரச்னைகளை எழுத ஆரம்பியுங்கள்; தீர்வு கிடைக்கும்.

3. உங்கள் வாழ்க்கையைப் பற்றி உங்கள் பேரக் குழந்தைகளிடம் என்ன நினைவுக் கூற விரும்புகிறீர்கள்? எப்படி உங்களை மற்றவர்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவை தவிர்த்து, ஆபீஸ் மீட்டிங் தான் முக்கியம் என்று செல்வதும்... பெட்ஷீட் வாரா வாரம் மாற்றப்பட வேண்டும், தரை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதும் தான் மற்றவற்றை விட முக்கியம் என்பது போன்று நீங்கள் நடந்து கொண்டது தான் அவர்களின் நினைவில் நிற்க வேண்டுமா...?

4. சின்னச், சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள். ஓவர் டேக் செய்ய, உங்களை அனுமதிக்காத டிரைவரின் மீது ஏன் கோபம்? புன்சிரிப்பு செய்யுங்கள்; உங்கள் மீது அவருக்குக் கோபமாக இருந்தால் அது அவர் பிரச்னை. ரயிலை தவற விட்டு விட்டீர்களா? போகட்டுமே! அதற்கு ஏன் டென்ஷன், ஸ்டேஷனில் ஒரு காபி குடித்து விட்டு, அடுத்த ரயிலில் போகலாமே!

5. பிடிக்காத வேலை, கஷ்டமான வேலை என்றால் ஏன் தள்ளிப் போடுகிறீர்கள்? தள்ளிப் போடுவது, நம் சக்தியைத் தான் விழுங்குகிறது; வீணாக்குகிறது. கூடவே, 'இந்த வேலையை இன்னும் பண்ணவில்லையே...' என்ற கவலை வேறு. எனவே அந்த வேலையை உடனே செய்து முடிப்பதே நல்லது.

6. புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் நிறைய தூங்கி லேட்டாகதான் எழ வேண்டுமா? சீக்கிரம் எழுந்து, அருகே உள்ள பூங்காவில் காலை ப்ரேக் ஃபாஸ்ட்டை ஏன் சாப்பிடக் கூடாது? மற்றவர்கள் வருவதற்கு முன் திரும்பி விடலாம். அன்றைய நாள் நீண்டதாக இருக்கும். மத்தியானம் எப்போதும் தூங்காதவரா? ஒரு,"ஞாயிறு' நன்றாகத் தூங்குங்கள்.

7. அடுத்த வீட்டுக்காரர் புது கார், புது ஸ்டீரியோ சிஸ்டம் வாங்கினால் என்ன? நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர் சனி, ஞாயிற்றுக் கிழமையிலும் ஆபீசுக்கு போக வேண்டியிருக்கும். உங்களை மாதிரி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் இருக்கிறாரா...? உங்களை மாதிரி, நண்பர்களை அவர் சந்திக்கிறாரா? இருக்காது.

8. அணியாத டிரஸ், வெளியே எடுக்காத கிச்சன் பாத்திரங்கள், பயன்படுத்தாத படுக்கை, பொம்மைகள், புத்தகங்கள், மரச்சாமான்கள் இவற்றை தர்ம ஸ்தாபனத்திற்கோ, ஏழை, எளியவருக்கோ தானமாகக் கொடுத்து விடுங்கள்! நிறைய மகிழ்ச்சி கிடைக்கும்; வீட்டிலும் நிறைய இடம் மிஞ்சும்.

9. 'நோ' சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே மிகவும், 'பிசி'யாக இருக்கிறீர்கள் என்றால், இன்னும் அதிக வேலை என்றால், 'நோ' சொல்லுங்கள். உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

10. சில ஆண்டுகள் தொடர்ந்து ஓடினால், மெஷினுக்கும் ரிப்பேர் பார்க்க வேண்டும்; அதே போலத்தான் மனித உறவுகளும். காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள், முன் மாதிரி இன்னும் காதலிக்கிறீர்களா? கணவர், மனைவி, பார்ட்னர் எல்லா உறவுக்கும் ரிப்பேர் தேவை; நேரம் ஒதுக்குங்கள்.

11. நண்பர்களுக்கு கொடுக்கும் நேரத்தில், கொஞ்சம் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் நேரம் கண்டிப்பாகத் தேவை.

12. உங்கள் குடும்பத்தினர், பார்ட்னர், நண்பர்கள் இவர்களிடம் நீங்கள் விரும்பும், பாராட்டும் நல்ல குணங்களைப் பற்றிச் சொல்லுங்கள். நன்றாக ஒரு விஷயத்தை செய்தால், அவர்களை வாய்விட்டு பாராட்டுங்கள்; நல்ல டானிக் போன்று அது உதவும். நீங்கள் செய்யும் பல காரியங்களை அவர்களும் பாராட்டக் கூடும்.

13. எல்லா பிரச்னைகளையும் உங்கள் மீது போட்டு விடுகின்றனரா உங்கள் நண்பர்கள்? அது தவறு. அதற்கு, இனி மேலும் இடம் கொடுக்காதீர்கள். அவர்கள் பிரச்னைகள் உங்களையும் பாதிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் ஒதுங்குங்கள். தங்கள் பிரச்னையை சந்திக்க, தீர்த்துக் கொள்ள அவர்கள் ஆரம்பித்துக் கொள்ளட்டும்.

14. நண்பர்கள், தூரத்து உறவினர்கள் - இவர்களுடன், "டச்' விட்டுப் போய் விட்டதா? பரவாயில்லை... இன்று துவங்குங்கள்... போனில் பேசலாம், இ-மெயில் அனுப்பலாம், லெட்டர் எழுதலாம். அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவர்.

15. உங்கள் மனதுக்கு பசுமை ல்லது. தோட்டத்திலிருந்து புதுப் பூக்களை பறித்து வையுங்கள். விடியற்காலையில் எழுந்து மார்கெட்டிற்குச் சென்று, காய்கறி பழங்களை வாங்கி வாருங்கள். தொட்டிகளில் செடி வளர்ப்பது கூட, வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

16. நிறைய அலைகள், கடல் மணல், வெறும் கால்கள் இவை எல்லாம் உடலுக்கும், உள்ளத்திற்கும், மகிழ்ச்சி அளிப்பவை. கடற்கரைக்குச் செல்லுங்கள்; முடியாதவர்கள், நதிக்கரை செல்லுங்கள். இயற்கை மிகவும் சிறப்பானது.

17. ஏதாவது புதியதாக உருவாக்குங்களேன்... சித்திரம் வரைவது, தைப்பது, கேக் செய்வது, தோட்டத்தில் செடி வளர்ப்பது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

18. வீட்டுக்கு வெளியே சென்று, நிறைய சுத்தமான காற்றை சுவாசியுங்கள். நுரையீரலின் அடித்தளத்திலிருந்து நிறைய காற்றை உட்கொள்ளுங்கள். பழைய காற்றெல்லாம் போவதை சுகமாக உணர்வீர்கள்.

19. வாக்கிங் செல்லுங்கள் - மெதுவான, ஆனால், நிச்சயம் பயனுள்ள எக்சர்சைஸ். உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. ரெகுலராக வாக்கிங் செல்வதால் தினமும் நன்றாக இருப்பதை உணருவீர்கள்.

20. நல்ல, பழைய - புதிய நகைச்சுவை வீடியோக்கள், திரைப்படங்களை வீட்டில் போட்டுப் பார்த்து, குடும்பம் முழுவதும் நிறைய சிரித்து மகிழுங்கள்.

21. வீட்டில் பர்னிச்சர், பொருட்களை இடம் மாற்றி வையுங்கள்; அந்த மாதிரி வீட்டை மாற்றி அமைப்பதே ஒரு நல்ல ஹாலிடே தான்!

22. நல்ல மகிழ்ச்சியான விஷயத்தை விரும்பி, காத்திருந்து அனுபவியுங்கள். விடுமுறையில் ஒரு சுற்றுலாப் பயணம்; வெளியே சென்று சாப்பிடுவது போல!

23. உங்கள் வீட்டுக்கு, டின்னருக்கு நண்பர்களைக் கூப்பிடுங்கள். சாப்பிடும் அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்யுங்கள். விசேஷ மெனு தயாரித்து, அதற்காகப் பொருட்கள் வாங்குவதும், டின்னரை தயாரிப்பதுமே மகிழ்ச்சியான 'சுமை'. வருபவர்களும் மகிழ்ந்து பாராட்டுவர். அன்று இரவு எல்லாருக்கும் மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

24. சிரியுங்கள். சிரிப்பு ஒரு தொற்று வியாதி! அனைவருக்கும் பிடிக்கும்.

25. யாராவது ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குங்கள். சமயம் கிடைக்கும் போது ஏதாவது நல்ல, தர்ம காரியத்திற்கு உங்கள் நேரத்தை செலவழியுங்கள். குழாயில் தண்ணீர் வரவில்லை, குழந்தையை ஸ்கூலுக்கு அழைத்துப் போக ஆட்டோக்காரர் வரவில்லை, பணிப்பெண் வரவில்லை, பஸ் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையில் பல கஷ்டங்கள்; இவற்றையெல்லாம் மீறி மகிழ்ச்சியாக இருப்போம்.

Sunday, 15 September 2019

தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்

*important modified govt G.o. s*
தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்

(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும்,
பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)

(2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)

(3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)

(4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)

(5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)

(6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)

(7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)

(8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)

(9)- அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)

(10)- பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள்
[14/09 4:13 pm] ‪+91 94426 43238‬: அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசாணை எண் 39
அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.

இந்த தகவலை முடிந்த வரை பிறருக்கு தெரியப்படுத்துங்கள்.

நன்றி