Friday, 6 September 2019

ஊளை சதை மற்றும் எடை குறைய

*ஊளை சதை மற்றும் எடை குறைய*

பூண்டில் மருத்துவ குணங்கள் மிக அதிகமாய் உள்ளது. இது நல்ல கொழுப்பினை  அதிகரித்து இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தினந்தோறும் பூண்டை நாம் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைப்பில் நல்ல மாற்றம் தெரியும். வெறும் வயிற்றில் பாலில் வேக வைத்து எடுத்துச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

*தேவையான பொருட்கள்:*

தோல் உறிக்கப்பட்ட பூண்டு~20.

சுத்தமான தேன்~தேவையான அளவு.

*செய்முறை:*

ஒரு சிறிய அளவு கொள்கலனில் 20 தோல் உறிக்கப்பட்ட‌ பூண்டுகளைப் போட்டு அவற்றில் சுத்தமான தேனை ஊற்றி ஊற வைக்க வேண்டும். 20 முதல் 40 நாட்கள் கழித்துப் பார்த்தால் அவை தேனில் நன்றாக ஊறியிருக்கும் அவற்றில் இரண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வர மிக விரைவில், உங்கள் இரத்ததில் உள்ள கெட்ட கொழுப்புகள் (cholesterol) நீங்குவது மட்டுமல்லாமல், வயிற்றில் உள்ள தொப்பையையும் குறைக்கிறது.

*குறிப்பு:*

*தயவுசெய்து பூண்டை பச்சையாக உண்ண வேண்டாம்.*

*பச்சையாக உண்டால் அதன் காரம் நமது குடல் மற்றும் வயிற்றுப்பகுதியை புண்ணாக்கிவிடும்.*

பூண்டைச் சாப்பிடும் முறை பற்றி அறிய, உங்களுக்கு அருகில் உள்ள “தமிழ்ச் சித்த மருத்துவரை” அணுகுவது நல்லது.

*எலுமிச்சை சாறு:*

உடல் நாள் முழுவதும் மிளிர்ப்புடனும், ஆற்றலுடன் இருக்க வேண்டுமென்றால் தினமும் ஒரு குவளை எலுமிச்சைச் சாறு அருந்துவது மிகவும் நல்லது. 

அது மட்டுமல்லாமல் எலுமிச்சை சாறு நமக்கே தெரியாதப் பல மருத்துவச் செயல்களை உடலில் நிகழ்த்துகிறது. உடலில் உள்ள கெட்ட நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், வளர்சிதை மாற்றத்தைத் (Metabolism) தூண்டவும் எலுமிச்சை சாறு உதவுகிறது.

வளர்சிதை மாற்றம் (Metabolism) அதிகரித்து, உடல் சுறுசுறுப்படைந்து தேவையற்ற நச்சுப்பொருட்களை நீக்கித் தொப்பையைக் குறைக்கிறது.

*தேவையான பொருட்கள்:*

எலுமிச்சை பழம்: 6 (தேவையான அளவு சாறாக்கிக் கொள்ளவும்)

தண்ணீர்: 7 குவளைகள். (தேவையான அளவு)

தேன்: 1/2 குவளை அல்லது ஒரு குவளை.

புதினா: 10 இலைகள்.

*செய்முறை:*

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும்,இளம் சூட்டில் எலுமிச்சை சாறு, புதினா மற்றும் தேனைச் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை கிளரிவிடவும்.

பின்பு அதை இறக்கி அதன் சூடு தணியும் வரை நன்றாகக் குளிர வைக்க வேண்டும். பின்னர் இதை மண்பானையிலோ அல்லது குளிர் தானப் பெட்டியிலோ (கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ள் வேண்டும்)
வைத்து, தினமும் ஒரு குவளை குடித்து வர வேண்டும். இவற்றில் பனிக்கட்டிகளைப் போட்டுப் பருகலாம். ஏனெனில் பனிக்கட்டிகளைப் போட்டுப் பருகும் போது அவற்றின் குளிர்த்தன்மையை வெதுவெதுப்பாக்க, உடல் மிக அதிகமான சக்தியைப் வெளிப்படுத்தும். இவ்வாறு 7 முதல் 10 நாட்களுக்குச் செய்து வர உடல் எடைக் குறைப்பில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

*குறிப்பு:*

பனிக்கட்டிகளை உபயோகிக்கும் முறை சளித் தொல்லையுடன் இருப்பவர்களுக்குச் பொருந்தாது. அதற்குச் சரியான வழி, மண்பானையில் வைத்திருந்து அருந்துவது தான் நல்லது.

- *அகத்தியம்*

No comments:

Post a Comment