Thursday, 28 November 2019

வெண்ணீரின்_பயன்கள்

*வெண்ணீரின்_பயன்கள்*

இதை அதிக அளவில் பகிர்தல் அனைவரும் பயன் பெற உதவும்

ஒரு ஜப்பானிய  மருத்துவர் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.
  
1 மைக்கிரேன்
 
2 உயர் இரத்த அழுத்தம்
 
3 குறைந்த இரத்த அழுத்தம்
 
4 மூட்டு வலி
 
5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்
 
6 கால்-கை வலிப்பு
 
7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்
 
8 .இருமல்
 
9 .உடல் அசௌகரியம்
 
10. கொலு வலி
 
11 ஆஸ்துமா
 
12 ஹூப்பிங் இருமல்
 
13 .நரம்புகள் தடுப்பு
 
14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான 
 நோய்கள்
 
15.வயிற்று பிரச்சினைகள்
 
16 .குறைந்த பசியின்மை
 
17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

*சுடு நீர் பயன்படுத்துவது எப்படி?*
 
காலையில் எழுந்து, வெரும் வயிற்றில்  சுமார் 2 தம்ளர் சூடான நீர் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர்  குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள். 

*குறிப்பு:*

 *தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும்  சாப்பிட வேண்டாம்.*

*சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்*

30 நாட்களில் நீரிழிவு நோய்

30 நாட்களில் இரத்த அழுத்தம்

10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

10 நாட்களில் ஏராளமான பசி

10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

✔ மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

30 நாட்களில் இதய நோய்கள்

✔ 3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

✔ 4 மாதங்களில் கொழுப்பு

✔ 9 மாதங்களில்    கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் 

4 மாதங்களில் ஆஸ்துமா

* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!
குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

* குளிர் நீர்  இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. *இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்*

*இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது* கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

* குளிர்ந்த நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.

Tuesday, 26 November 2019

ஆரஞ்சு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!

ஆரஞ்சு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!

ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். 

இது புற்றுநோயைத் தடுக்கக் கூடிய மிக முக்கியக் காரணியாகும். மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக் கூடிய மிக முக்கியப் பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
 
ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக் கூடிய பொருள் இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
 
சிலருக்குப் படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்கூடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.
 
பலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.
 
இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும். 
 
புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்குக் கொண்டு வரும். இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.
 
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
 
மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். 
 
இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்.
 
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்

சில தத்துவங்கள்

🌼 சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும். 
சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும்.

🌼 " *ஆடம்பரம்* " அழிவைத்தரும். " *ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும்.

🌼 மனிதனுக்கு " *பிரச்சனை* " அதனால்,
கடவுளுக்கு " *அர்ச்சனை* ".

🌼 " *வறுமை* " வந்தால் வாடக்கூடாது. 
" *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.

🌼 " *வீரன்* " சாவதே இல்லை. 
" *கோழை* " வாழ்வதே இல்லை.

🌼 தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட. 
சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள்.

🌼 நீ " *ரசிக்க* " என்னிடம் அழகு இல்லை. ஆனால், 
நீ " *வசிக்க* " என் இதயத்தில் இடம் இருக்கிறது.

🌼 மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனா *"Q"* ல போகத் "தெரியாது".
எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* ல போகத் "தெரியும்".

🌼 ஆயிரம் பேரைக்கூட " *எதிர்த்து* " நில். 
ஒருவரையும் " *எதிர்பார்த்து* " நிற்காதே.

🌼 தேவைக்காக கடன் " *வாங்கு* ". 
கிடைக்கிறதே என்பதற்காக " *வாங்காதே* ".

🌼 உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது. 
பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது.

🌼 " *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான். 
" *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான். 

🌼 நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறது " *ஆசை* ". ஆனால், 
அதுக்கு பிறகும் சந்தோஷமா இருக்கனும்னு நெனைச்சா அது " *பேராசை* ".

🌼 " *கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை. 
" *கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

🌼 வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால், 
அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும். 

🌼 " *கடனாக* " இருந்தாலும்சரி,
" *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு. 
 
🌼 " *செலவு* " போக மீதியை சேமிக்காதே. 
" *சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.
 
🌼 உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி.

🌼 " *உயிருள்ள* " உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " *உயிரற்ற* " பணமே முடிவு செய்கிறது.

🌼 கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " *முட்டாள்* " என்று தெரியும். 
கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
" *புத்திசாலி* " என்பது புரியும். 

🌼 பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " *போற்றும்* ".
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி
" *தூற்றும்* ".

🌼 பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " *பொய்* ". 
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " *உண்மை* ".

🌼 மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் " *புத்திசாலி* ".
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " *திறமைசாலி* ".


🌼 " *பாதி* " கவலைகள் கற்பனையானவை.
" *மீதி* " தற்காலிகமானவை.


🌼 குறைகளை " *தன்னிடம்* " தேடுபவன் தெளிவடைகிறான். 
குறைகளை " *பிறரிடம்* " தேடுபவன் களங்கப்படுகிறான்.

🌼 அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " *உண்டு* ".
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " *இல்லை* ".


🌼 விழுதல் என்பது " *வேதனை* ". 
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *சாதனை*".

Sunday, 17 November 2019

பிடிவாதக் குணம்

‘’பிடிவாதக் குணம்’’..

பிடிவாதம் மனநோயா? என்றால் “இல்லை” என்றும் சொல்ல முடியாது, “ஆம்” என்றும் சொல்ல முடியாது? அது ஒருவரின் வாழ்க்கை சூழலைப் பொறுத்தே அமைந்தே இருக்கும்.

“மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும்” என்று சொல்கிறார் உளவியல் நிபுணர் வில்லியம் ஜேம்ஸ்..

பிடிவாத குணம் என்பது,ஒரு வலிமையான மனோபவம். தன் பிடிவாத குணத்தை வைத்துக் கொண்டு தான்
பலமுறை தோற்ற பின்பும்,வெற்றியை விரட்டிப் பிடித்தார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.

’’எத்தனை துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் அகிம்சையை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்ற மோகன்தாசின் பிடிவாத குணம் தான் அவரை மகாத்மா காந்தி ஆக்கியது..

ஆராய்ச்சிக் கூடமே எரிந்து சாம்பலான நிலையிலும் இரவைப் பகலாக்கும் முயற்சியை ஒருபோதும் கைவிட மாட்டேன் எனும் பிடிவாத குணம் தான் தாமஸ் ஆல்வா எடிசனை, 1600 கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது..

என்றாவது ஒரு நாள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நாம் மிதிப்பேன்’’எனும் பிடிவாதம் தான் ‘’யாக்’’ எருமைகளை மேய்த்துக் கொண்டு இருந்த டென்சிங்கை உலக வரலாற்றில் இடம் பெற வைத்தது..

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி ஒவ்வொரு சாதாரண மனிதரின் லட்சியம் மீதான உறுதியான, கொள்கைப் பிடிப்புடன் கூடிய, தளராத முயற்சியின் பிடிவாத குணம் தான் அவர்கள் அனைவரையும் இன்னும் இந்த உலகத்தில் சிறந்தவர்களாக நிலை நிறுத்தியுள்ளது.

ஹிட்லர் போல, முசோலினி போல, இடி அமீன் போல, வியட்நாமில் அமெரிக்கா வாங்கிய அடிபோல, வீண் பிடிவாதத்திற்காகவும், வறட்டு கௌரவத்துக்காகவும் ஒரு சிலர் வரலாற்றில் இடம் பிடித்திருக்கலாம், 

ஆனால் அவை எல்லாம் வெறும் கருப்புப் பக்கங்களே!. எப்படி இருக்கக் கூடாது என்பதின் உதாரணம் மட்டுமே அவர்களும், அவர்களின் செயல்களும்.

சுயநல லாபத்திற்கும், வீணான கவுரவ செயலுக்கும், ஆணவப் பிடிப்பிலும் ஒருவர் தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை மாற்றித் திருத்திக் கொள்ளாமல் வீண் பிடிவாதம் பிடிப்பவர்கள் நிச்சயம் அடையாளம் தெரியாமல் அழிவார்கள்..

எதார்த்த மனித வாழ்க்கையில் இயல்பான மனநிலையை பெற்று வளமோடு வாழ்வோம்.

வாழ்க நலமுடன்.

டயாபட்டீஸ்

டயாபட்டீஸ்...

கவலைப்பட ஒன்றும் இல்லை. ‘நீரிழிவின் தலைநகரமாகிறது இந்தியா’ என்று ஆராய்ச்சிகள் ஒருபுறம் அதிர்ச்சி தருகின்றன தான். ஆனாலும் நீரிழிவு பற்றிய விழிப்புணர்வும் அதைவிட அதிகமாகவே பொதுமக்களிடம் ஏற்பட்டு வருகிறது. ஒரு நோய் சமூகத்தில் பரவுவதற்கும், அதைக் கட்டுப்படுத்தி வெற்றி கொள்வதற்கும் விழிப்புணர்வே முக்கியமானது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் நீரிழிவு பற்றி இப்போது பலருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.

ஆரம்ப காலத்தில் சர்க்கரை நோய் என்றால், சர்க்கரை சாப்பிட்டால் வரும் நோய் என்று அப்பாவியாகப் புரிந்து வைத்திருந்தவர்கள் பலர். ஆனால், இன்று Diabetes Mellitus என்ற மருத்துவ வார்த்தையையே சுருக்கமாக டயாபட்டீஸ் என்று சாதாரணமாகப் பேச ஆரம்பித்திருக்கிறோம். இந்த விழிப்புணர்வு தொடரும் பட்சத்தில் இந்தியாவை விட்டு நீரிழிவை விரட்டவும் நம்மால் முடியும். டயாபட்டீஸ் பற்றிய சில அடிப்படை விழிப்புணர்வுத் தகவல்களையும், அதன் முக்கியமான நான்கு வகைகளையும் இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்வோம்…

நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க செய்யக்கூடிய ‘வளர்சிதை மாற்றங்களின் (Metabolism) சீர்குலைவு தொகுப்பு’ என மருத்துவ உலகினரால் குறிக்கப்படுகிறது. நமது உடல் தேவையான இன்சுலினை உற்பத்தி செய்யாமல் விடுதல் அல்லது உடலில் தயாரான சர்க்கரையை முறையான வழியில் பயன்படுத்தாமல் இருத்தல் ஆகிய இரண்டு நிலைகளே நீரிழிவு என முடிவாகிறது. இதன் அடிப்படையில் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு, ஆரோக்கியமான நீரிழிவு இல்லாத மனிதரின் குளுக்கோஸ் அளவை விடக் கூடுதலாகக் காணப்படும்.  
   
ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு சீரான நிலையில் இருந்து இப்படி மாறுபடுவதால், சமச்சீரற்ற நிலைமை, உடலின் சீர்குலைவு (Physical Disorder) என
சொல்லப்படுகிறது. நீரிழிவு நோயின் வகைகள், அதற்கான காரணங்கள், யார்யாரெல்லாம் இந்நோயால் பாதிக்கப்படுவார்கள்? என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? அவற்றிற்கான சிகிச்சை முறைகள் போன்றவை குறித்து, இனி காண்போம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசியுணர்வு மற்றும் அடிக்கடி தாகம் ஏற்படுதல், மிகுந்த களைப்புடன் காணப்படல் ஆகியவை இதன் முக்கியமான அறிகுறிகளாக இருக்கிறது.

முதலாம் வகை நீரிழிவு நோய்...

சர்க்கரை நோயில் Type 1 என முதலாவது வகையாக சுட்டப்படுகிற இந்த வகை இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் (Insulin Dependent Diabetes Mellitus) என குறிப்பிடப்படுகிறது. இந்த முதலாம் வகை நீரிழிவு மழலைப் பருவத்திலேயே தொடங்கி விடுகிறது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மற்றும் இளம்வயதினர் ஆகியோரைப் பெருமளவில் பாதிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களுடைய இன்சுலின் சுரப்பிகள் செயல்படும் தன்மை சிறிதளவு கூட இல்லாமல் காணப்படும்.

டைப் 1....

நீரிழிவு நோய் மரபணு காரணமாக குழந்தைப் பருவத்திலேயே ஏற்பட்டு விடுவதால், ‘இளம் வயது டயாபட்டீஸ்’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பிரச்னை காரணமாக கணையம் செயல் இழத்தல், இன்சுலின் சுரக்காமை போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதோடு கண்கள், சிறுநீரகம் மற்றும் நரம்புகளும் பாதிப்புக்குள்ளாகும். மேலும், இதயம் தொடர்பான நோய்கள், பக்கவாதம் வரவும் வாய்ப்பு உள்ளது. இன்சுலின் மருந்தைத் தொடர்ந்து எடுத்து கொள்வது தான் இதற்கான ஒரே சிகிச்சை முறையாகும்.
   
இரண்டாம் வகை நீரிழிவு நோய்....

Non Insulin Dependent Diabetes Mellitus என குறிப்பிடப்படுகிற இந்த இரண்டாம் வகை நீரிழிவு முதியவர்களிடம் அதிகம் ஏற்படுகிறது. நம்முடைய உடலில் போதுமான அளவிற்கு இன்சுலின் சுரக்காமல் இருத்தல் அல்லது சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிராக மாற்று வினை உண்டாகுதல் ஆகியவற்றின் காரணமாக இந்த வகை சர்க்கரை நோய் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கை முறை மாற்றங்கள், தவறான உணவுப்பழக்கம் போன்றவற்றால் மிதமிஞ்சிய உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த நீரிழிவு நோயின் தாக்கத்திற்குப் பெருமளவில் ஆளாகுகின்றனர். உடல் எடையைக் குறைத்தல், உணவு கட்டுப்பாடு மற்றும் முறையான உடற்பயிற்சிகள் ஆகியவற்றால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கர்ப்ப கால சர்க்கரை நோய்....

பெண்கள் கருவுற்ற காலத்தில் ஏற்படுகிற Gestational Diabetes Mellitus நீரிழிவு நோய் மூன்றாவது வகையாக கருதப்படுகிறது. GDM எனச் சுருக்கமாக குறிப்பிடப்படுகிற தாய்மை அடைந்த போது ஏற்படுகிற சர்க்கரை நோயால் 7 சதவீத பெண்கள் அவதிப்படுவதாகவும், இக்கட்டான நிலைக்கு ஆளாவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கருவுற்ற காலத்தில் ஏற்படுகிற இந்நோயின் தாக்கம் 14 சதவீதம் வரை இருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்னதாகவே இந்த வகை சர்க்கரை நோயால் வருகிற பாதிப்புகள் எத்தகைய தன்மை உடையதாக இருக்கும் என்பது மதிப்பீடு செய்யப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் தானாகவே இந்த வகை நோய் வந்த சுவடு எதுவும் தெரியாமல் மறைந்து விடுகிறது. ஆனாலும், எதிர்வரும் காலங்களில் தாய் மற்றும் குழந்தைக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நான்காம் வகை நீரிழிவு நோய்....

சர்க்கரை நோய் வகைகளில் நான்காவது மற்றும் இறுதி வகையாக மருத்துவ நிபுணர்களால் அழைக்கப்படுகிறது. சேய்க் இன்ஸ்டியூட் லேபை(Saik Institute Lab) சேர்ந்த அறிவியல் வல்லுனர்கள் ரொனால்ட் ஈவான்ஸ், ஹி செங் ஆகியோர் இந்நோயைக் கண்டறிந்துள்ளனர். இந்த வகை நீரிழிவு நோய் உடல் எடையை விட முதுமைப் பருவத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக இவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நோய் தொடர்பாக, ஆய்வு மேற்கொண்ட இந்த இரட்டையர் நோய் எதிர்ப்புத் திறனுக்குக் காரணமான செல்களின் அளவுகடந்த செயல்பாடு தான் நான்காம் வகை நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைகிறது என்றும், பெரும்பாலானோர், ஒல்லியான உடல்வாகு கொண்டிருந்தால் இந்தவகை நீரிழிவு தங்களுக்கு வராது என நினைப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்..

பகிர்வு

Saturday, 16 November 2019

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது..