Wednesday, 23 December 2020

பெண்களுக்கு அரை மணி நேர உடற்பயிற்சி தரும் ‘சூப்பர் பவர்’

பெண்கள் தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் அன்றாடம் அவர்களது உடலுக்கு தேவையான சூப்பர் பவர் கிடைத்துவிடும். முதியோர்கள் தளர்ந்துபோய் காணப்படுவார்கள். அவர்கள் நடக்கவே சிரமப்படுவார்கள். எதிர்காலத்தில் அப்படி தள்ளாடும் நிலையை தவிர்க்க வேண்டும் என்றால் இப்போதிருந்து பயிற்சி மூலம் உடலை வலுப்படுத்துங்கள்.

உடலை வலுப்படுத்துதல் என்றால் ஜிம் பயிற்சியாளர் போன்று தசைகளை வளர்த்து உடலை கட்டுறுதி செய்து காட்டுவது அல்ல. அப்படிப்பட்ட வலு சராசரியான பெண்களுக்கு தேவையில்லை. ஓடுவதற்கும், குதிப்பதற்கும், வேகமாக நடப்பதற்கும் தேவையான சக்தி எப்போதும் இருந்தால் அதுவே போதுமானது. அதை வைத்தே அன்றாடம் தேவையான சூப்பர் சக்தியை பெற்றுவிடலாம்.

உடல் குண்டாக இருப்பவர்கள் அதை நினைத்து கவலையடைய வேண்டியதில்லை. ஜிம்முக்கு சென்று பயிற்சி பெறவேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆரோக்கியமான உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவையால் உடல் எடையை குறைத்திட முடியும். ஆனால் அவைகளை தொடர்ச்சியாக கடைப்பிடித்திட வேண்டும். எப்போதுமே உணவில் சமச்சீரான சத்துணவு இடம்பெறுவது அவசியம். கார்போஹைட்ரேட், புரோட்டின், பைபர், கொழுப்பு போன்ற அனைத்து சத்துக்களும் தினசரி உணவில் இடம்பெறவேண்டும்.

தினமும் காலையில் எழுந்ததும் காலைக்கடன்களை முடிப்பதுபோல, பல் துலக்குவது போல உடற்பயிற்சியும் அவசியம். அன்றாடம் அதிக நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பதைவிட, அவசியமான பயிற்சிகளை குறைந்த நேரம் செய்தாலே போதுமானது. அரை மணிநேரம் அத்தியாவசியமான உடற்பயிற்சிகளை செய்தால் போதும்.

சாதாரண பயிற்சிகளை ஏரோபிக், அன்ஏரோபிக் என்று இருவகையாக பிரிக்கலாம். ஒரே தாளத்தில் தொடர்ச்சியாக செய்யும் பயிற்சிகள் ஏரோபிக் எனப்படுகிறது. ஓடுவது, நடப்பது, நீந்துவது போன்றவை அந்த வகையை சார்ந்தது.

குறைந்த நேரத்தில் கூடுதல் சக்தியை செலவிடும் அனைத்து உடற்பயிற்சிகளும் அன்ஏரோபிக் ஆகும். அதனை செய்யும்போது தலை முதல் பாதம் வரை அனைத்து பகுதிகளும் பலம்பெறும். எடையை தூக்குதல், படிகளில் ஏறி இறங்குதல் போன்றவைகளை அடிப்படையாக கொண்டவை இந்த வகை பயிற்சிகள்.

உடற்பயிற்சி செய்ய எந்த நேரம் ஏற்றது? என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். உடற்பயிற்சிக்கான குறிப்பிட்ட நேரம் என்று எதுவும் இல்லை. அவரவருக்கு சவுகரியமான நேரத்தில் மேற்கொள்ளலாம். காலையில் விழித்து அதிக சக்தியுடன் இருப்பதால் அந்த நேரத்தை பெரும்பாலானவர்கள் பயிற்சிக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்யலாமா?

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு குறைந்த அளவில் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு கலந்ததாக அந்த உணவு இருக்கவேண்டும். காலை உணவில் பழங்கள் சேர்த்துக்கொண்டால் அதில் இருந்து கார்போஹைட்ரேட்டும்- முட்டையின் வெள்ளைக்கருவில் இருந்து புரோட்டினும், உலர் பழங்களில் இருந்து நல்ல கொழுப்பும் கிடைக்கும்.

ஒருவர், ஒரு நாள் சாப்பிடவேண்டிய உணவை பல பாகங் களாக பிரிக்கவேண்டும். 7 கிராம் புரோட்டின், 9 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் கொழுப்பு போன்றவை ஒரு பாகம் உணவில் இருந்து கிடைக்கவேண்டும். அவ்வாறு நாள் ஒன்றுக்கு 12 பாகம் உணவு உடலுக்கு தேவை. உணவு சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்யலாம்.

முதலில் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளில் இருந்து தொடங்கவேண்டும். ‘வாம்அப்’பிற்கு பிறகு தசைகளை இலகுவாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். காலையில்தான் செய்யவேண்டும் என்பதில்லை. அவரவருக்கு சவுகரியமான நேரத்தில் மேற்கொள்ளலாம். முதியவர்கள் வாரத்தில் மூன்றரை முதல் நான்கு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

வெயில் நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

சூடான நேரத்தில் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அப்போது அதிகமாக வியர்வை வெளியாகி உடலில் நீர்ச்சத்து குறையும். அதனால் உடலில் சோடியம் இழப்பு ஏற்பட்டு சோர்வு தோன்றும். இத்தகைய நெருக்கடி ஏற்படாமல் இருக்க, உடற்பயிற்சி செய்யும்போது சிறிய அளவில் தண்ணீர் பருகிக்கொண்டே இருக்கவேண்டும். எலுமிச்சை அல்லது சாத்துக்குடி கலந்த நீரில் சிறிது உப்பும் கலந்து அவ்வப்போது பருகிவந்தால் சோர்வு விலகும். பயிற்சியின்போது ஒரே நேரத்தில் ஒரு கப் அளவுக்கு தண்ணீர் பருகிவிடக்கூடாது.

Monday, 21 December 2020

மகிழ்ச்சிக்கு பூட்டு போடாதீங்க...

மகிழ்ச்சி நிரந்தரமானது அல்ல. ஆனால் அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிலர் மகிழ்ச்சியான நபராக தங்களை வெளிக்காட்டிக்கொள்வார்கள். ஆனால் மனதுக்குள் நிம்மதி இன்றி தவிப்பார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் ஒருசில அறிகுறிகளை கொண்டே அவர்கள் மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

மகிழ்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு. உள் மனம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் எந்த விஷயத்தையும் ரசித்து, அனுபவித்து செய்ய முடியாது. வாழ்க்கையில் நிம்மதி நிலைத்திருக்காது. முகத்தில் எவ்வளவு புன்னகையை வெளிப்படுத்தினாலும் உண்மையிலே மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் துக்கம்தான் பின் தொடர்ந்து கொண்டிருக்கும். போலி புன்னகையால் மகிழ்ச்சியை ஒருபோதும் நிரந்தரமாக்க முடியாது.

மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பவர்கள், வாழ்க்கை எப்போதுமே கடினமானது அல்ல என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் மகிழ்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் கடுமையானதாகவே தோன்றும். எந்தவொரு காரியத்தையும் வெற்றிகரமாக முடிப்பதற்கு கடுமையாக முயற்சிக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். எவ்வளவு முயற்சி செய்தாலும் இறுதியில் சோகமும், ஏமாற்றமும்தான் நேரும் என்று தாங்களாகவே முடிவு செய்துவிடுவார்கள்.

மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருப்பவர்கள் யார் மீதும் எளிதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் நம்பிக்கையின்மை தலைதூக்கும். மற்றவர்களை நம்புவதற்கு பயப்படுவார்கள். அதிலும் புதிய நபர்களிடம் அதீத பயம் கொள்வார்கள். ஆனால் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தங்களை சந்திக்கும் நண்பர்களுடன் உறவை வளர்த்துக்கொள்வார்கள்.

மகிழ்ச்சியற்று இருப்பவர்கள் தங்களை சுற்றி நடக்கும் எதிர்மறையான விஷயங்கள் மீதுதான் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உலகில் நடந்த மோசமான நிகழ்வுகள், எதிர்மறையான விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். அவர்களிடம் நேர்மறையான விஷயங்களை பற்றி பேசினால் ஆர்வமாக கேட்கும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். அவை பற்றி பகிர்ந்துகொள்வதற்கு எந்த விஷயமும் அவர்களிடம் இருக்காது. மகிழ்ச்சியான மக்கள் உலகளாவிய பிரச்சினைகளில் நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் இரண்டையும் தெரிந்துவைத்திருப்பார்கள்.

மகிழ்ச்சி அற்றவர்கள், மற்றவர்களின் வெற்றியை பார்த்து மகிழ்ச்சி கொள்ளமாட்டார்கள். மற்றவர்களை தங்களுடன் ஒப்பிட்டு பார்த்து பொறாமை கொள்வார்கள். ஒரே நபருக்கு அதிர்ஷ்டமும், சூழ்நிலையும் மீண்டும் மீண்டும் சாதகமாக இருக்காது என்பதை மகிழ்ச்சியான மக்கள் புரிந்துகொள்வார்கள். தங்களின் அடையாளத்தையும், தனித்துவத்தையும் ரசித்து அனுபவிப்பார்கள். தோல்வியை சந்தித்தாலும் மற்றவர்களின் வெற்றியை மோசமாக விமர்சிக்க மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சியற்ற நபர்கள் தங்களை விட சிறந்துவிளங்குபவர்கள், சாதிப்பவர்கள் மீது வெறுப்பு கொள்வார்கள்.

மகிழ்ச்சியற்றவர்கள், எதிர்காலம் பற்றிய சிந்தனையை எதிர்மறையான எண்ணங்களால் நிரப்பி இருப்பார்கள். எதன் மீதும் நம்பிக்கை வைக்காததால் எந்தவொரு முடிவையும் அறிந்துகொள்வதற்கு பொறுமை இருக்காது. தாங்கள் விரும்பியபடி நடக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். எப்போதும் அவர்களிடம் ஒருவித கவலை சூழ்ந்திருக்கும்.

மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நிகழ்காலத்தை அனுபவித்து வாழ்வார்கள். சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்ப்பார்கள். அவர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் நேர்மறையான அதிர்வுகளையே வெளிப்படுத்தும். ஆனால் மகிழ்ச்சி அற்றவர்கள் நடந்து முடிந்ததை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.

குளிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்பு அதிகமா... மருத்துவம் சொல்வது என்ன?

கோடைக்காலத்தைக் காட்டிலும் குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்கின்றன சில ஆய்வுகள். இதயம் சம்பந்தப்பட்ட இதய வலி, இதயத்தில் பாரம் ஏற்பட்டதைப் போன்ற உணர்வு உள்ளிட்ட பிரச்னைகளோடு புறநோயாளிகளாக மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை குளிர்காலத்தில் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது. மேலும், தீவிர மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.

குளிர்காலத்துக்கும் மாரடைப்புக்கும் என்ன தொடர்பு, குளிர்காலத்தில் வரும் மாரடைப்புகளைத் தடுக்க முடியுமா என்று விளக்குகிறார் இதயநோய் மருத்துவர் கே.சையது அப்துல் காதர்.

``குளிர்காலத்தில் மாரடைப்புக்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாக மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அனுபவ ரீதியாகவும் அதைப் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மாரடைப்பு அறிகுறிகளோடும், மாரடைப்பு ஏற்பட்டும் வழக்கத்தைவிட அதிகமான நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர். குளிர் நேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

இதய ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பு படிமம் (Cholesterol Blocks) சிதைந்து பரவத் தொடங்கும். அவ்வாறு பரவும் கொழுப்பு ரத்தக்குழாய்களில் ரத்த உறவை ஏற்படுத்தும். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. குளிர்காலத்தில் குளிர்ச்சி அதிகரிக்கும்போது ரத்தக்குழாய்கள் சுருங்கும் தன்மை அதிகரிக்கும். அதனால் கொழுப்புப் படிமம் சிதைவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். அதனால்தான் குளிர்காலத்தில் மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

பொதுவாகவே குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் போன்ற ஃப்ளூ வகை நோய்த்தொற்றுகள் அதிகமாக ஏற்படும். அந்தத் தொற்றுகளுக்கு காரணமான சில வைரஸ்கள் ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்பு சிதைவதற்கு காரணமாக அமையும். அதனால் சிலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு மாரடைப்பு வரலாம்.

குளிர்காலத்தில் உடலுழைப்பு மிகவும் குறைந்துவிடும். குளிர் காற்று, குளிர்ந்த சுற்றுச்சூழலில் வேலை செய்யும்போது வழக்கத்தைவிட சற்று கடினப்பட்டு வேலைகளைச் செய்ய வேண்டி வரும். இவை இரண்டுமே மாரடைப்புக்கான காரணமாக இருக்கின்றனர். சில ஆய்வுகளிலும் இவை நிரூபிக்கப்பட்டுள்ளன.

45 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்குப் பொதுவாகவே மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதன் காரணமாகக் குளிர்காலத்திலும் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ரிஸ்க் சற்று அதிகமே. ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கும் அவர்களின் இதய ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் அவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றுவோருக்கு வேலை தொடர்பான அழுத்தம் அதிகரிக்கிறது. நீண்ட நேர வேலை, தூங்காமல் வேலை பார்ப்பது ஆகியவற்றால் தூக்கமின்மை ஏற்படும். தூக்கமின்மையால் மனஅழுத்தத்தைக் கொடுக்கும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். அதன் காரணமாக ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புப் படிமம் சிதைந்து, ரத்த உறைவை உண்டாக்கி, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றுவதால் உடலுழைப்பு முற்றிலும் பாதிக்கப்படும்.

வேலைக்குச் செல்வது, வருவது, மாடிப்படி ஏறுவது போன்ற சிறிய சிறிய நடவடிக்கைகள்கூட குறைந்துவிடும். வீட்டிலிருக்கும்போது பெரும்பாலானவர்களால் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தையும் பின்பற்ற முடிவதில்லை. நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டு உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் என்னுடைய நோயாளிகள் பலருக்கு உடல் எடை அதிகரிப்பு, கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் மாரடைப்புக்கான காரணிகளாக அமைகின்றன. கோவிட்-19 தொற்றினாலும் இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

அதிக ரிஸ்க் பட்டியலில் இருப்பவர்கள் தங்களின் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கொலஸ்ட்ரால் இருந்தால் அதற்கான சிகிச்சைகள், மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

வழக்கமாகச் செய்வதைக் காட்டிலும் குளிர்காலத்தில் அதிக கடின வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற விஷயங்களை குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டும். புகைப்பழக்கம் இருப்பவர்கள் அதைக் கைவிட வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க வாய்ப்புள்ளது.

நடு நெஞ்சுப் பகுதியிலோ வலது, இடது பக்க நெஞ்சிலோ வலி ஏற்படலாம். நெஞ்செரிச்சல், நெஞ்சுப் பகுதி கனமாக இருப்பது போன்று உணர்தல், நெஞ்சு வலியுடன் வியர்த்தல், மூச்சுத்திணறல், நடந்தால் நெஞ்சு வலி அதிகரித்தல். கீழ்த்தாடையிலிருந்து தொப்புள் வரை எந்த இடத்தில் வலி ஏற்பட்டாலும் மாரடைப்பாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அறிகுறிகள் தோன்றும் பட்சத்தில் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்றார்.

Thursday, 10 December 2020

கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க...

கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமானது. அதுதான் கூந்தல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்க உதவும். நிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். உச்சந்தலையிலும் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். ஏனெனில் உச்சந்தலையில் எண்ணெய் தடவினால்தான் முடிக்கு ஊட்டம் கிடைக்கும். கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி கூந்தலில் தடவுவது நல்லது. குளிப்பதற்கு முன்பு தலையில் எண்ணெய் தடவுவதற்கு நிறைய பேர் விரும்புவார்கள். ஆனால் கூந்தலில் அழுக்கு படிந்திருந்தால் எண்ணெய் தடவுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்பு, சிகைக்காய் போன்றவற்றை கொண்டு நன்றாக கழுவி சுத்தப்படுத்தியபிறகு எண்ணெய் தேய்ப்பதுதான் முடியின் வளர்ச்சிக்கு நல்லது. உள்ளங்கையில் எண்ணெய்யை ஊற்றி உச்சந்தலையில் வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு முடியின் வேர்ப்பகுதிகளில் லேசாக எண்ணெய் தடவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

தலைமுடியில் நீண்ட நேரம் எண்ணெய் இருந்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அது தவறானது. தலைமுடியில் அதிக நேரமோ, அதிக அளவிலோ எண்ணெய் இருக்கக் கூடாது. குளிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊறவைத்துவிட்டு பிறகு குளிக்கலாம்.

தலைமுடியில் எண்ணெய் தேய்த்த பிறகு கூந்தல் சார்ந்த மற்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தலைமுடிக்கு குறைவான அளவிலேயே எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தடவும்போதெல்லாம் மென்மையாக மசாஜ் செய்துவிடுவதும் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.

தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வைத்துக்கொள்வதற்கு வீட்டு உபயோக பொருட்களை கொண்டு கிரீம் கலந்த ‘ஹேர் மாஸ்க்’ தயார் செய்வது நல்லது. கறிவேப்பிலை, வேப்ப இலை, வெந்தயம், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு ஹேர் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம்.

குளித்ததும் தலைமுடியை உலர்த்துவதற்கு மென்மையான காட்டன் டவல்களை பயன்படுத்த வேண்டும். கனமான, அடர்த்தியான டவல்களை பயன்படுத்தக்கூடாது. அதுபோல் ஈரமான தலையில் சீப்பு கொண்டு சீவக்கூடாது. அது முடி உடைந்துபோவதற்கு வழிவகுத்துவிடும். இளம் வயதிலேயே ரசாயனம் கலந்த ‘ஹேர் டை’களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அது தலைமுடியை விரைவில் சேதப்படுத்திவிடும்.

தேங்காய் எண்ணெய்யை நிறைய பேர் கூந்தலுக்கு மட்டும்தான் உபயோகிப்பார்கள். அதனை சருமத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் அழகும் ஜொலிக்கும். தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முடிகள், திட்டுகள் நீங்கி முகம் பளிச்சென்று பிரகாசிக்கும்.

குழந்தைகளை குளிப்பாட்டியதும் தலைக்கு மட்டுமின்றி கழுத்து, முதுகு பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தடவி வருவது நல்லது. ஒவ்வாமை பிரச்சினை காரணமாக சிலரது சருமம் பாதிப்புக்குள்ளாகும். தேங்காய் எண்ணெய் அதற்கு நிவாரணம் தரும். அதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் சரும அழகை மேம்படுத்தும் தன்மை கொண்டவை.

தேங்காய் எண்ணெய் பூஞ்சை தொற்று கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் கிருமிகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும். வியர்வை, நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர்ச்சத்தை மீட்டெடுத்து சருமத்திற்கு நலம் சேர்க்கும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் முகம் கழுவுவதற்கு பதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவலாம். முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

Thursday, 29 October 2020

அத்திப் பூத்தது போல் என்று தமிழில், ஒரு பழமொழி

அத்திப் பூத்தது போல் என்று தமிழில், ஒரு பழமொழி சொல்வார்கள்.அத்தி மரம் பூக்காது என்றால் அத்திப்பழம் நமக்கு எப்படிக் கிடைக்கும்பூ பூத்தால் தான் கனி.பூ பூக்காமல் நமக்கு காயோ கனியோ கிடைக்காது .இதற்கு அத்திமரமும் விலக்கல்ல .அத்திமரமும் பூக்கத் தான் செய்கிறது.ஆனால்....அந்தப் பூக்கள் நம் பார்வைக்கு தட்டுப்படாத அளவுக்குமிக மிகச் சிறியதாக இருக்கும்.அதுவும் இல்லாமல் பூக்கள் கிளைகளில் காய்க்காமல்அடிமரத்தில் இருந்து உச்சி வரைக்கும் மரத்தை ஒட்டியே மறைவாய்ப் பூத்துக் காயாக, கனியாக மாறும் போது மட்டுமே, நம் பார்வைக்குக் கிடைக்கும்.அத்திப் பூத்து இருப்பதைப் பார்க்க வேண்டுமானால்,மரத்துக்கு மிக அருகில் சென்று பார்க்க வேண்டும் .பூ பூத்த சில மணி நேரங்களில் அது காயாக மாறி விடுவதால் பூ பார்வைக்கு கிடைப்பது அரிது.

சிந்தனைக் களம் வேண்டாம் நடைப்பிண வாழ்க்கை

சிந்தனைக் களம்

வாழ்க்கை இன்பமயமானது. எப்படி பூமியானது பெரும்பங்கு இயற்கையால் சூழபட்டிருக்கிறதோ, அதுபோல வாழ்க்கையும் இன்பங்களால் சூழபட்டிருக்கிறது. ஆனால், அவற்றைக் கண்டுபிடிப்பதில் தான் நம்முடைய திறமை அடங்கி இருக்கிறது. முதலில் தீமைகளை எவ்வாறு நன்மைகளாக மாற்றிக் கொள்வது என்று ஆராய்ந்து, அதன்படி செயல்படுங்கள். பின்னர் வாழ்க்கை முழுவதும் இன்பம் தான்.

காலை முதல் மாலை வரை அலுவலகத்திற்குள் அடைந்து கிடப்பது, மாலையில் அலுவலகம் முடிந்ததும் வீட்டுக்குச் சென்று அடைந்து கொள்வது என எப்போதும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறை வேண்டாம். இது தொடர்ந்தால் நாளடைவில் நீங்கள் ஒரு நடைபிணம் போல் ஆகிவிடுவீர்கள். மகிழ்ச்சி உங்களை விட்டு வெகுதூரத்திற்குச் சென்று விடும். எனவே, சிறிதுநேரத்தை நண்பர்களுடன் செலவழியுங்கள். வீட்டுக்குச் சென்றால் மனைவி, குழந்தைகளை அல்லது பெற்றோர்களை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள கோவில் அல்லது பூங்காவிற்குச் சென்று வாருங்கள். (கொரானா விழிப்புணர்வுடன்)

எல்லா காலகட்டத்திலும், எல்லோராலும் வித்தியாசங்கள் விரும்பப்படுகின்றன. வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டவர்கள் தான் இன்றைக்கு உலக அளவில் புகழ் பெற்றுத் திகழ்கிறார்கள். எனவே, வாழ்க்கையை வித்தியாசமாக வாழப் பழகுங்கள். நீங்கள் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகள் தான் உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். பெரும்பாலும் அது நன்மையாகவே முடியும்; சில நேரங்களில் தீமையாகவும் முடியலாம். ஆனால் முயற்சியே செய்யாமல் அது நன்மையாக முடியுமா அல்லது தீமையாக முடியுமா என்று ஆருடம் பார்பது நல்லதல்ல.

உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, எதை உங்களால் சிறபாகச் செய்ய முடிமோ அதை லட்சியமாகத் தேர்ந்தெடுங்கள். அந்த லட்சியத்தை அடைவதற்காகக் கடுமையாக உழைங்கள். அதிகமான உழைப்பிற்கு இடையே வரும் சிறுபகுதி தான் புகழ். அது எப்போதுமே நிலைத்திருக்க இன்னும் கடுமையான உழைப்பு தேவை. உழைப்பில் மட்டும் எப்போதும் திருப்தி கொள்ளக் கூடாது. வெற்றி மீது ஆசை வைத்து உழைத்தால் தான் நினைத்தது கிடைக்கும்.

வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பொருளாதாரம் பெரும்பங்கு வகிப்பது உண்மை தான். அதற்காக இறக்கும் வரை பணம் பணம் என்று அலையக் கூடாது. இன்று நீங்கள் தவற விடும் ஒரு நிமிட சந்தோஷத்தை அறுபது விநாடிகளாகக் கணக்கிட்டு பாருங்கள். பின்னர் எந்த தருணத்திலும் சந்தோஷத்தை இழக்க மாட்டீர்கள். அவ்வப்போது கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை பிறகு அனுபவித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல், உடனுக்குடன் அனுபவித்து விடுங்கள். நீங்கள் வரும்வரை அந்த சந்தோஷம் உங்களுக்காகக் காத்திருக்காது.

படிப்படியாய் திட்டமிட்டு, நல்ல பாதையில் பயணித்தால் நீங்கள் வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது.

Monday, 5 October 2020

மனஅழுத்தம் இன்றி வாழ சில வழி முறைகள்

மனஅழுத்தம் இன்றி வாழ சில வழி முறைகள்.

காலையில் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்த பின் செய்வதைத் தவிருங்கள்.

வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப்படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப்போவதில்லை.

தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத் தொந்தரவும இன்றி.

செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

எளிமையாக வாழுங்கள்.

உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தைத் தரும்.

ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

தினமும் உங்கள் மனதை மகிழச் செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

பிறருக்காக எதையேனும செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

உங்கள் உடை, நடை பாவனைகளினால் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

இன்றையப் பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை வாழலாம்!

Sunday, 4 October 2020

நம்பிக்கை

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...

எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்

சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்...

ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை...

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...

நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...

தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே

எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்

முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்...

அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...

பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..

வேதனைகளை ஜெயித்துவிட்டால்
அதுவே ஒரு சாதனைதான்...

உன்னால் முடியும்
என்று நம்பு...
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே...

எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்......

குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி......

ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு...

தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு

உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு...

எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்...

நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்...

முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை...

புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்

தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...

தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்...

எல்லோரிடமும் உதைபடும்
கால்பந்தாய் இருக்காதே
சுவரில் எறிந்தால்
திரும்பிவந்து முகத்தில்
அடிக்கும் கைபந்தாயிரு...

எண்ணங்களிலுள்ள தாழ்வு
மனப்பான்மையால் திறமைக்கு
தடை போடாதீர்கள்....
முடியும் என்ற சொல்லே
மந்திரமாய்....
( நம்பிக்கை )

மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,
தோல்வி பல கடந்து வென்றவர்களே...

தனியே நின்றாலும்
தன் மானத்தோடு...
சுமையான பயணமும்
சுகமாக....
(நம்பிக்கை)

Tuesday, 29 September 2020

ஆயில் சருமத்திற்கு நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் காரணம்

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் உங்கள் முகத்தை மீண்டும் மீண்டும் கழுவுவதால் உங்கள் சருமம் எண்ணெய் குறைவாக இருப்பதை எளிதாக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, நீங்கள் தேவையை உணரும்போது மட்டுமே அதைக் கழுவவும், அதனுடன் நீங்கள் அதிகமாக முகம் கழுவும்போது, அது உங்கள் சருமத்தை மேலும் சேதப்படுத்தும்.

உங்கள் முகத்தை ஈரப்பதமாக்காதது உங்கள் எண்ணெய் சருமத்திற்கு உதவும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். மாய்ஸ்சரைசரைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எண்ணெய் கட்டுப்படுத்தும் ஃபேஸ் வாஷ் அல்லது டோனரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஹைட்ரேட்டரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். லேசான நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தை அதிகமாக உலர்த்துவதைத் தடுக்க நன்றாக வேலை செய்கிறது.

பல மேக்கப் தயாரிப்புகளை அடிக்கடி பயன்படுத்துவது அல்லது கனமான கிரீம் அடிப்படையிலான தயாரிப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் துளைகளை அதிகமாக அடைத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும். அதே மூலப்பொருளைக் கொண்டு உங்கள் முகம் கழுவும் அல்லது டோனரில் ஒரு சாலிசிலிக் அமிலத்தைப் பயன்படுத்துங்கள். இது எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. திறந்த துளைகளுடன் நீங்கள் மிகவும் எண்ணெய் சருமம் இருந்தால், எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுவதால் அடாபலீன் அல்லது அசெலிக் அமிலம் கொண்ட ஒரு நைட் கிரீம் பயன்படுத்தலாம்.

உங்கள் உடலில் எண்ணெயை உற்பத்தி செய்வதற்கு காரணமான ஹார்மோன்கள் கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம் அல்லது பருவமடையும் போது கூட மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கும். மன அழுத்தம் இந்த நிலைகளை அதிகரிக்கும் மற்றும் கார்டிசோலுடன் இணைந்தால், அது சரும உற்பத்தியை ஏற்படுத்தும். இது வியர்வை அதிகரிக்க காரணமாகிறது மற்றும் இரத்த ஓட்டம் தோலை விட்டு வெளியேறி உள் உறுப்புகள் மற்றும் மூளைக்குச் செல்வதால் செயல்பாடு குறைகிறது. இது இறுதியில் அதிக சருமத்தில் எண்ணெய் பசையை அதிகமாக்குகிறது.

Monday, 28 September 2020

தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்...!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்...!

1. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது, என்னால் முடியாது, எனக்கு தெரியாது என்று என்று உங்களை நீங்களே தாழ்வு படுத்தாதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை உலகில் எவருக்கும் அமைந்ததில்லை. மனித வாழ்க்கையே போராட்டங்கள் நிறைந்தது தான்.

2. எந்த மொழி உங்களால் சரளமாகப் பேச முடியுமோ அந்த மொழியில் பேசுங்கள், அரைகுறையாக பேச தெரிந்த மொழியை உபயோகிக்கும்போது சில தடுமாற்றங்கள், உளறல்கள் உங்கள் தன்னம்பிக்கையை சிதைத்து விடும். 

3.  சிலருக்கு பேச்சாற்றலால் தான் சொல்ல வந்த விஷயத்தை ஒருவருக்கு புரிய வைக்க முடியும், பலருக்கு  பேச்சாற்றல் இருக்காது ஆனால் எழுத்துமூலமாகத் தான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லும் திறமை படைத்தவர்களாக இருப்பார்கள். உங்கள் திறமை எது என்று புரிந்து அதன்படி செயல்படுங்கள், பெரும்பாலும் பேச்சைக் காட்டிலும் எழுத்து மிகவும் வலு வாய்ந்தது, 

3.  ஒரு விசயத்தைக் கற்றுக் கொள்ள சிலருக்குப் படித்தால் புரிந்து விடும், சிலருக்கு அனுபவப்பூர்வமாக பார்த்தால் புரியும், சிலருக்கு யாராவது அதை எடுத்துச் சொன்னால் புரியும், உங்களுக்கு எது பிடிக்கும் என்பதை தேர்ந்தெடுத்து அதன்படி செய்யுங்கள், குறிப்பாக மாணவர்களுக்கு இது பொருந்தும்.

4. மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் அழகு தான், முதலில் உங்களை நீங்களே ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எந்த உடை அணிந்தால் தன்னம்பிக்கையாக உணர்வீர்களோ அந்த மாதிரி உடை அணியுங்கள்.

5. எதிரே இருப்பவர்கள் அறிவாளிகள் அவர்களுக்கு எல்லாம் தெரியும் நமக்கு ஒன்றுமே தெரியாதே என்று ஒருபோதும் நினைக்காதீர்கள், உங்களுக்குத் தெரிந்த விஷயம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

6. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை செயல்படுத்துங்கள், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை யோசிக்காதீர்கள், சில உன்னதமான கண்டுபிடிப்புகள் முதலில் அபத்தமாக மக்கள் நினைத்து எள்ளிநகையாடியது தான், பின்னாளில் பெரிய கண்டுபிடிப்பாக மாறியது.

7. சிரிக்கும் போது அனைவரும்  சிரிப்பார்கள், அழும்போது எவரும் உங்களுடன் அழுவதில்லை, எனவே சந்தோசமான விஷயங்களை அனைவரிடமும் பகிருங்கள், சோகமான நிகழ்வுகள், தோல்விகள், மனதிலுள்ள குறைகளை உங்களின் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும் தெரிவித்து ஆலோசனை பெறுங்கள்.

8. நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள், உங்களை ஒதுக்கி வைக்கிறார்கள், உங்களை பற்றி மற்றவர்கள் தவறாக பேசுகிறார்களோ என்று எப்பொழுதும் நினைக்காதீர்கள், ஒரு விஷயத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது நல்ல விஷயங்கள் கூட தவறாகவே தோன்றும்.

9. சிறிய ஒரு விஷத்தை கற்பனை செய்து பெரிய விசயமாக பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்காதீர்கள்,  பிரச்சனைகளைக் கண்டு ஓடாதீர்கள் அப்படி ஓடினால் வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பீர்கள்.  நீங்கள் எதிர்த்து நின்றால் அனைத்துப் பிரச்சனைகளும் முடிவிற்கு வந்து விடும்.

10.  உங்கள் பிரச்சனைகளை நீங்கள் தான் தீர்க்க முடியும், உங்கள் பிரச்சனைகளை அடுத்தவர்கள் தீர்ப்பார்கள் என்று ஒருபோதும் நினைக்காதீர்

Tuesday, 15 September 2020

மூளை_முதல்_மலக்குடல்_வரை

#மூளை_முதல்_மலக்குடல்_வரை... 🌝 🚶‍♂ 
உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்

🌝 மூளை .கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.ஷ...ரு🌳 

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

👀#கண்கள் பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

😁#பற்கள் 🌝மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

🍁#நரம்புகள் .சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

🌹#ரத்தம் வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

💃#சருமம்🚶‍♂தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

💓நுரையீரல் & இதயம் 🌺🌸 

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

🚶‍♂வயிறு காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
வறுத்துப் பொடித்த #சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

🍊வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.

சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்

🍅கல்லீரல் & மண்ணீரல் . கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

🚶‍♂மலக்குடல் அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

👣#பாதம் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

#உணவே_மருந்து_ஆரோக்கியமே அறுசுவை ...மகிழ்ச்சியுடன் வாழ பழகு.

Saturday, 29 August 2020

இந்த 26 வார்த்தைகள்!



இந்த 26 வார்த்தைகள்! 

எவ்வளவு அழகு

A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக் கொள்ளுங்கள்.

D - Depression
மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

E - Ego
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

F - Forgive
கண்டிக்கக் கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

G - Genuineness
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

N - Neutral
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்து விட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

O - Over Expectation
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

P - Patience
சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவது தான். கூடுமான வரை பேசாமலே இருந்து விடுங்கள்.

R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

V - Voluntary
அடுத்தவர் இறங்கி வர வேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும் போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

W - Wound
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

X - Xerox
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

Y - Yield
முடிந்த வரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

Z - Zero
இவை அனைத்தையும் கடைப் னபிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

Wednesday, 22 July 2020

எலுமிச்சை


எலுமிச்சை - எல்லா பழங்களையும்
எலி கடித்து விடும் .. ஆனால் ., எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது .

எலி மிச்சம் வைத்ததால் தான்
எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம்
என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம்.

இது சிட்ரஸ் லிமன் (Citruslimon) என்னும் அறிவியல் பெயர் கொண்டது.

எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.

இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன் படுத்துகிறார்கள்.

இதன் தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.

100 கிராம் எலுமிச்சை பழத்தில்
உள்ள சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி

இதிலுள்ள அதிகமான வைட்டமின்
'சி' சத்தும்,

ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.

எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.

வாந்தியா? எலுமிச்சைச் சாறுடன்,
இஞ்சி சாறு, சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல்,
ஏப்பம், வயிறு உப்புசம் குறையும்.
ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.

கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த
டானிக் எலுமிச்சை.

பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.

சருமப் புண்களுககு ஆன்டிசெப்டிக்காக
பயன்படுகிறது. எலுமிச்சைச் சாற்றை
முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.

பாலேட்டுடன் எலுமிச்சைச் சாறு
கலந்து முகத்தில் தடவினால் சரும
நிறம் பளிச்சிடும்.

தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.

பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.

இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.

மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.

இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.

காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின்
போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை
நீக்கப்பெரிதும் உதவுகிறது.

சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.

தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.

சிறிய பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.

இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.

தேள் கொட்டினால், அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக
நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க
விஷம் இறங்கும்.

தலைவலிக்கு கடுங்காபியில்
எலுமிச்சையின் சாற்றை கலந்து
கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.

எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.

அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,

மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி, அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில்
2 நாள் ஊற வைத்து, பின் அந்த
சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும்.

நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.

நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த
அழுத்தம் சீராகும்.

ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.

முக்கிய வைட்டமின் சத்தான
வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில்
நிறைய இருக்கிறது.

எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.

எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.

எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும். உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.

இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக
எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில்
உள்ளது. உயர் இரத்த அன்பர்கள்
எலுமிச்சையால் நலம் பெறலாம்.

சிறுநீர் அடைப்பு விலகும். உடல்
நச்சுக்களை வெளியேற்றும். உடலின்
தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.

கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.

எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன் படுத்தக்கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த
வேண்டும்.

எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.

இவ்வளவு பயன் தரும் தேவகனி .

(எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு
மிக்கது என்றால் அது மிகையல்ல..

Monday, 20 July 2020

தாங்க முடியாத தலைவலிக்கு இயற்கை வீட்டு மருந்துகள்


தாங்க முடியாத தலைவலிக்கு இயற்கை வீட்டு மருந்துகள்

தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.

அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறை யில் குணமாக்குங்கள்.

கிராம்பும் உப்பும் கலந்த கலவை :

கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.

வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு :

ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் :

தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.

சூடான பால் அருந்துதல் :

சூடான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உண வில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

பட்டையை அரைத்துத் தடவுதல் :

தலைவலிக்கு மற்றுமொரு சிறப்பான மருத்துவமாகக் கருதப்படுவது, வீட்டில் மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்து விடுவதை உணரலாம்.

மல்லியும் சர்க்கரையும் கலந்து குடித்தல் :

சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை சளிபிடித்ததால் ஏற்பட்ட தலைவலியாக இருந் தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

சந்தனத்தை அரைத்துத் தடவுதல் :

சந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போல மென்மையாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :

நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

சிறிது பூண்டு ஜுஸ் அருந்துதல் :

சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து, இந்த ஜுஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும். இதனால் குடித்த பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாகக் குறைக்கும்.

கால்களை வெந்நீரில் வைத்திருத்தல் :

ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பது, தலைவலிக்கு மற்றொரு வீட்டு மருத்துவமாக செய்யப்பட்டு வருகிறது. இரவு படுக்கப்போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இதனைச் செய்ய வேண்டும்.

சைனஸினால் பாதிக்கப்பட்டு தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், நீண்டகாலமாக தலைவலியினால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், இம்முறையை குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது செய்து வரவேண்டும். இதனால் நல்லதொரு முன்னேற்றத்தினை உணரக் கூடும்.

ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுதல் :

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :

தலைவலிக்கு நல்ல நிவார ணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

இஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் அருந்துதல் :

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமாப அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலையை அரைத்துத் தடவுதல் :

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சீஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் :

தலைவலியினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சீஸ், சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்து விட வேண்டும். இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும்.

அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலியிலிருந்து விடு படவேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

நன்றாக தூங்குதல் :

பெரும்பாலான மக்கள் தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாதது தான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

அதிலும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தலைவலி குறையும். மேலே குறிப்பிட்டுள்ளவை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் தலைவலிக்கான கை மருத்துவங்கள்.

இவற்றை நீங்களும் பின்பற்றி, தலை வலியிலிருந்து நிவாரணம் பெறுங்கள்.

Sunday, 19 July 2020

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்.

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்.

எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில் ஒரு நல்ல மருந்துப் பொருளாக இருக்கிறது. சில சமயம், அது அழகுக் கலையிலும் வெகுவாகப் பயன்பட்டு வருகிறது.

எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் பல அற்புதமான நன்மைகளில் ஐந்தை மட்டும் இப்போது நாம் பார்க்கலாம்.

வைட்டமின் சி.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

சமமான பி.எச். அளவுகள்.

நம் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.

உடல் எடையைக் குறைக்க...

உடல் மற்றும் மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். அல்கலைன் அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம். உடல் எடையும் குறைந்து விடும்.

செரிமானம்.

நம் உடலில் செரிமானம் மட்டும் ஒழுங்காக இல்லையென்றால், அது பலவிதமான உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும். எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய் விடும்.

காபிக்கு குட்பை.

காபி குடிப்பதால் அவ்வப்போது ருசியும் மணமும் கிடைத்து வந்தாலும், அது நரம்பு மண்டலத்தையும் செரிமானத்தையும் பாதிக்கக் கூடியது. ஆனால், எலுமிச்சையின் பலனை அறிந்து, எலுமிச்சை ஜூஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காபிக்கு விரைவில் தலை முழுகி விடலாம்.

Saturday, 11 July 2020

நோய் எதிர்ப்பு சக்தி பெற

நோய் எதிர்ப்பு சக்தி பெற

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளியை தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

உடலில் உள்ள அதிக கொழுப்பைக் குறைக்கும் சக்தி பப்பாளிக்கு உள்ளது.

தோளில் ஏற்படும் தொற்றுக்களுக்கும், காயங்களுக்கும் பப்பாளி சிறந்த மருந்தாக உள்ளது. அடிபட்ட இடத்தில் பப்பாளிப் பழச் சாறை தடவினால், வீக்கத்தைக் குறைக்கலாம்.

5 மாதத்தைக் கடந்த கர்ப்பிணிப் பெண்கள், சிறிய துண்டு பாப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மந்தத் தன்மை குணமடையும்.

வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் படிந்துள்ள கழிவுகளை அகற்ற பப்பாளி அருமருந்தாகும். வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு பப்பாளி சாப்பிட்டால், குடலில் உள்ள அனைத்துக் கழிவுகளும் அகற்றப்படும்.

அடிக்கடி சளி, இரும்பல், காய்ச்சல் வந்து அவதிப்படுபவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால், இயற்கையாகவே உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

Friday, 3 July 2020

பெரிய கற்கள்


*பெரிய கற்கள்*

வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப் பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர். ''மாணவர்களே,  இன்று நாம் செய்முறை விளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.''

வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக் கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச் செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீது வைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்துவரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன்மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‌‎ன்றாக எடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார்.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ''ஜாடி நிறைந்து விட்டதா?'  அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்..ஸார்!''

சலனமில்லாமல் ''நல்லது''  எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போட ஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில் ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட,ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்பு செய்தன.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''

வகுப்பறையில் நிசப்தம். ஒரு மாணவர் மட்டும்''அப்படி நிச்சயமாக சொல்லிவிட முடியாது'' எ‎ன்றார்.

மெல்லிய பு‎ன்னகையுடன் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர்,  பி‎ன் ஒரு வாளி நிறைய ஆற்று மணலைக் கொண்டு வரச் செய்தார். மணலை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் போடப் போட, கிடைத்த இடைவெளிகளில் மணல் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தது. ஜாடியைக் குலுக்கி விட, மேலும் மணலை அள்ளிப் போட முடிந்தது.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''
இப்பொழுது,  வகுப்பறை முழுவதும் கோரஸாக, ''நிச்சயமாக ‏இல்லை!''

சிரித்த பேராசிரியர் ''நல்லது''  எ‎ன்றவாறே, ஒரு வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வரச் செய்தார். தண்ணீரை ஊற்ற ஊற்ற மணலைக் கரைத்துக் கொண்டு தண்ணீர் நிறைந்தது ஜாடியினுள்.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துச் பேச ஆரம்பிக்கிறார் பேராசிரியர். ''ஜாடி நிறைந்து விட்டதா எ‎ன்று ‏இப்போது நான் கேட்கப் போவதில்லை. ‏இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டபாடம் எ‎ன்ன?''

ஒரு மாணவர் எழுந்தார். ''நமது நேர நிர்வாகம்எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல;  எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில சிறிய வேலைகளையும் முடிக்க முடியும்''
''இல்லை.. அதுவல்ல பாடம்''

பேராசிரியர்
பதிலுரைத்தார்:
பெரிய கற்களை நீங்கள் முதலில் ஜாடிக்குள் போடாவிடில்,  பி‎ன்னர் எப்போதுமே அவற்றை நீங்கள்போட முடியாது;  ஜல்லிகளும் மணற்துகள்களும் அடைத்துக் கொண்டிருக்கும். வாழ்க்கையை ஒரு ஜாடியாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பெரியகற்கள் எ‎ன்பவை இ‏ங்கே உங்கள் அ‎ன்பிற்குரியவர்களை,  உங்கள் த‎ன்னம்பிக்கையை, உங்கள் கல்வியை,  உங்கள் எதிர்காலக் கனவுகளை, குறிக்கோள்களைக் குறிக்கி‎ன்றன. இவற்றை அந்தந்தக் கால நேரங்களில் சரியாக உள்ளிடாவிட்டால் பி‎ன்னர் அவற்றை உள்ளிட முடியாது. விளைவு?''

''ஆகவே, ‏ இன்று வீட்டுக்குச் செல்லுங்கள். ந‎ன்றாகத் தூங்குங்கள். காலையில் எழுந்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், 'பெரிய கற்கள் என்பவை எ‎ன் வாழ்க்கையில் யாவை'  எ‎ன்று''

Friday, 26 June 2020

இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள்..!!

இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள்..!!

உங்கள் வீட்டில் செல்லப் பிராணியாக ஒரு பெரிய யானை வளர்க்கிறீர்கள். அந்த யானையைக் கட்டிப் போடுவதற்கு எதைப் பயன்படுத்துவீர்கள்? 

தோல் பட்டை? தாம்புக் கயிறு? இரும்புச் சங்கிலி?... இவை எதுவும் தேவையில்லை, யானையை ஒரு சின்னக் குச்சியில் கட்டிப் போட்டு வைத்தாலே போதும். இது என்ன கூத்து? அத்தனை பெரிய மிருகத்தைக் கட்டிப் போடுவதற்குத் தக்கனூண்டு குச்சியா? யானை நினைத்தால் அரை நொடியில் அறுத்துக் கொண்டு ஓடிவிடுமே. உண்மை தான். ஆனால், அந்த யானை ‘நினைக்க’ வேண்டுமே, அதான் மேட்டர்!

சின்ன வயதில், அந்த யானைக் குட்டியை ஒரு கனமான இரும்புச் சங்கிலியில் பிணைத்து நன்றாகக் கட்டிப் போட்டிருப்பார்கள். யானைக் குட்டி அதிலிருந்து விடுபடுவதற்கு எவ்வளவோ போராடிப் பார்க்கும். இழுக்கும், தள்ளும், முட்டும், மோதும், ஒரு பலனும் இருக்காது. இப்படிக் கொஞ்ச நாள் போராடித் தோற்கிற யானைக்குட்டி, ஒரு கட்டத்தில் தன்னால் இந்தப் பிணைப்பிலிருந்து விடுபட முடியாது என்று முடிவு செய்து விடுகிறது. விடுதலைக்கு முயற்சி செய்வதையே நிறுத்தி விடுகிறது.

இப்போது அந்த யானை பல நூறு கிலோ எடை கொண்ட பிரமாண்ட மலை போல நிற்கிறது. ஆனால், இப்போதும் நம்முடைய யானை தப்பி ஓட முயற்சி செய்வதே இல்லை. தன்னைக் கட்டிப் போட்டிருப்பது ஒரு சாதாரணக் குச்சி தான், லேசாக இழுத்தாலே அது விடுபட்டு விடும் என்பது கூட அந்த யானைக்குப் புரிவதில்லை. நம்மில் பலரும் இந்த யானையைப் போல் தான். நமது திறமைகள் என்னென்ன, நம்மால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளாமல், அதிசாதாரணமான மனத் தடைகளுக்கெல்லாம் பயந்து ஒதுங்கி நிற்கிறோம். அவற்றை உடைத்துக் கொண்டு வெளியே வரத் தயங்குகிறோம்.

இந்த யானைக் கதையை மையமாக வைத்து ‘The Elephant And The Twig’ என்ற பிரமாதமான பாஸிட்டிவ் சிந்தனைப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஜெஃப் தாம்ஸன்.

ஜெஃப் தாம்ஸனைப் பொறுத்த வரை, நாம் ஒவ்வொருவரும் யானை பலம் கொண்டவர்கள். நம்மைச் சில சின்னக் குச்சிகள் சிறைப் படுத்தி வைத்திருக்கின்றன. அவற்றை முறித்து எறிந்து விட்டு வெளியேறும் போது தான் நமது முழு பலமும் முழுத் திறமையும் உலகிற்குத் தெரிகிறது. அதிவேக முன்னேற்றம் சாத்தியப்படுகிறது.

இதற்காக, ஜெஃப் தாம்ஸன் 14 முக்கியமான விதிமுறைகளைச் சொல்லித்தருகிறார். அவை இங்கே சுருக்கமாக:

1 எதையும் அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம், இதோ, இந்த விநாடி தான்!

2 நம்முடைய உலகத்தில் நாம் தான் கடவுள். அந்த சக்தியை உணர்ந்து, பொறுப்போடு முடிவெடுங்கள்.

3 நாம் நம்மை என்னவாகக் கற்பனை செய்து கொள்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். நீங்கள் என்ன நினைக்கப் போகிறீர்கள்?

4 உங்களுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செயல் படுத்துவதற்கான பயணத்திற்கு எரிபொருள் தேவை. அந்த ‘எனர்ஜி’யை எங்கிருந்து, எப்படிப் பெற்றுக் கொள்வது என்று யோசியுங்கள்.

5 வாழ்க்கை நெடுகிலும் நாம் பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அதை வேறு யாரும் செய்ய மாட்டார்கள். நமக்காக முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் மட்டுமே உள்ளது.

6 சுறுசுறுப்போடு தொடர்ந்து செயல்படுவதற்கு ஏற்ற மனநிலை அவசியம். உற்சாகமான மனத்தை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

7 உங்களுக்கென்று சில இலக்குகளைக் கற்பனை செய்யுங்கள். அவற்றை நோக்கிப் பயணம் புறப்படுங்கள். உங்கள் செயல்வேகம் ஜிவ்வென்று எகிறும்.

8 இலக்கை அடையும்வரை விடுவதில்லை என்கிற பிடிவாதம் வேண்டும். நடுவில் வேறு எந்த இலக்கையும் பார்த்து மயங்குவதில்லை என்கிற மன உறுதியும் வேண்டும்.

9 உங்களுடைய நேரத்தை எப்படிப் பயன் படுத்துகிறீர்கள் என்பதை அடிக்கடி கவனியுங்கள். அநாவசியமான நேரக் கொல்லிகளை விரட்டியடியுங்கள்.

10 நதியைப் போல் ஓடிக்கொண்டிருக்க, நம் திறமைகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

11 தேவை தான் நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. உங்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.

12 நேர்மை முக்கியம். இலக்கை அடையக் குறுக்கு வழிகளைப் பின் பற்றாதீர்கள்.

13 நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். அவற்றைப் போலச் சிறந்த ஆசிரியர்கள் எங்கும் கிடையாது.

14 அடுத்தவர் உங்கள் மீது குறை சொன்னால் கோபப்படாதீர்கள். தவறு செய்யாத மனிதர் யார்? அவர்கள் சுட்டிக் காட்டுவதில் உண்மை இருந்தால் அதை மதித்து நம்மைத் திருத்திக் கொள்வது தான் புத்திசாலித் தனம். அது நம் வளர்ச்சியைத் தடுக்காது, வேகப்படுத்தும்..!!

💗வாழ்க வளமுடன்💗

ஐந்து வில்லன்கள்


ஐந்து வில்லன்கள்''*
.......................................
நாம் முன்னேறிவிட முடியாதபடி தடுக்கக்கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள்.
யார் ஐந்து வில்லன்கள்..?அந்த ஐந்து வில்லன்கள்: ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி..
இப்போது, சினிமாவில் வருவது போல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம்.
அவர்களை வெல்லக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
ஊக்கமின்மை:
................................
நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள். ஆழ்ந்து யோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்து விடுங்கள்..,
மாற்றம்:
....................
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும்.. அதைப் புரிந்து கொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள்...
மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனதில் வையுங்கள்.
பிரச்சனைகள்:
............................
பிரச்சனைகள் நிகழ்ந்தே தீரும். தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள்,.
ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்து வையுங்கள். அத்தனைப் பிரச்னைகளுக்குள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்து இருக்கும், தேடிப் பிடித்து பயன்படுத்துங்கள்.
'பயம்:
................
பயம் இல்லாதது போல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக் கொள்கிறவன் கோழை அல்ல.. 
பயத்தை ஏற்றுக் கொள்கிறவனால் தான் அந்தப் பயத்தை வெல்ல முடியும்.. உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எது என்று யோசியுங்கள், அங்கே அடியுங்கள்.
தோல்வி:
......................
சறுக்கல்கள் வரும் போது, மாத்தி யோசியுங்கள். தோல்வியும் வெற்றியாக்கலாம். சில செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும்,
மற்ற பல செயல்கள் நம் கையில் இல்லை. நம்மால் முடிந்ததை மட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்.
*ஆம்.,நண்பர்களே.,*
மேலேகண்ட 5 வில்லன்களான, ’’ஊக்கமின்மை, மாற்றம், பிரச்சனைகள், பயம் மற்றும் தோல்வி ’’இவற்றை சாதுரியமாகக் கையாண்டால் வாழ்க்கைப் பயணம் இனிதே நடைபெறும்... வாழ்க்கையில் வெற்றி அடையலாம்..,🌹🙏🏻

Thursday, 25 June 2020

வலி....

முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.
சாப்பிடும் விதம் முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.
சுத்தம் செய்தபின் தண்­ணீர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸ்ஸீயில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும். நன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை உட்கொண்டால் மீண்டும் வலி வராது.
தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.

குறுக்கு வலி நீங்க ...
நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் குறுக்கு வலி குணமாகும்.
யோகாசனங்களில் தனுராசனம் என்ற ஆசனம் இருக்கிறது. இந்த தனுராசனம் செய்யும் பயிற்சியை பழகிக் கொள்ள வேண்டும். இது குறுக்கு வலியை குணப்படுத்தும்.
நல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்து விட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்கு வலி குணமாகும்.
சாப்பிடும் விதம்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
எலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு போட்டு தினமும் குடித்து வந்தால் குணமாகும்.
பச்சை உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர வேண்டும். வலிக்கும் இடத்தில் பச்சை உருளைக் கிழங்கை அரைத்துப் பற்று போடவேண்டும்.
குறுக்கு வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், சாலட் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையும் சாப்பிடலாம்.

முழங்கால் வலி நீங்க ...

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் முழங்கால் வலி குணமாகும்.
சாப்பிடும் விதம்
பச்சை உருளைக்கிழங்கை 4 விரல்கள் அளவு சாப்பிடலாம்.
ஒரு சிறிய உருளைக்கிழங்கை கழுவி மிக்ஸ்ஸீயில் போட்டு சாறு எடுத்துக் குடிக்கலாம்.
ஒரு உருளைக்கிழங்கை சாலட் செய்து சாப்பிடலாம்.
லச்சக்கொட்டைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, குறுக்கு வலி குணமாகும்.
இந்தக்கீரையை கழுவி, நறுக்கி, பருப்பு போட்டு பொரியல் செய்து சாப்பிடலாம். பொடியாக நறுக்கி கொத்துக்கறியுடன் போட்டு சமைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாற்றை அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில் புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.

தலைவலி நீங்க ...

பாத்திரத்தில் தண்ணீ­ர் கொதிக்க வைத்து அரை தேக்கரண்டி விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு, பெட்ஷீட்டால் மூடி ஆவி பிடித்தால் தலைவலி பறந்துவிடும்.
சாப்பிடும் விதம்
அரை டம்ளர் வெந்நீரில், அரை எலுமிச்சம்பழம் பிழிந்து 2 கல் உப்பு போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.
காய்ச்சலும் தலைவலியும் சேர்த்து வந்தால் கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் தலைவலி, காய்ச்சல் நீங்கி விடும்.
நீண்ட நாட்களாக ஒற்றைத் தலைவலி தொல்லை இருந்தால் தினமும் 1 அவுன்ஸ் திராட்சை பழரசம் (50 மில்லி) குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
நொச்சி இலையை வதக்கி அதில் சிறிதளவு உப்பைத் தூவி இளஞ்சூட்டில் நெற்றியில் பற்றுப் போட்டால் குணமாகும்.

காலில் வீக்கம் நீங்க ...

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் காலில் வீக்கம் குணமாகும்.
சாப்பிடும் விதம்
தூதுவளை இலைகளையும், நற்சுங்கள் இலைகளையும் எடுத்து, சிறிது தண்­ணீர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண்டக்காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைகளை 1 டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2 வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்.

Sunday, 14 June 2020

முருங்கை


*முருங்கை*
————--

*எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும்.  எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை* 

நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.

பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.

முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட அதிகமாக உள்ளது.

முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்-ல் உள்ளதை விட அதிகமாக உள்ளது.

முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட அதிகமாக உள்ளது.

 வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட அதிகமாக உள்ளது.

முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட அதிகமாக உள்ளது.

முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட அதிகமாக உள்ளது.

முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட அதிகமாக உள்ளது.

முருங்கையில் இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட அதிகமாக உள்ளது.

முருங்கையில் பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதை விட அதிகமாக உள்ளது.

முருங்கை உண்ட கிழவன் கிழவி கூட வெறும் கையோடு தான் நடப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்வோம்.

தேனும் லவங்கப் பட்டையும்

தேனும் லவங்கப் பட்டையும் சேர்த்து இப்படி பயன்படுத்துங்கள்! ஓடிப்போகும் நோய்கள் எவை தெரியுமா!

உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்!அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும். தேனை சூடு படுத்தக்கூடாது தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன். தேனின் அற்புத உணவு தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

தேனும் லவங்கப் பட்டையும்!

இதய நோய்: இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

அற்புத மருந்து இதோ!

தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை மீண்டும் அனுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.

இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு வசப்பிரசாதம். 1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவை கொடுத்து வருகிறார்க்ள. அதிசயத்தக்க மாற்றங்களை பதவு செய்துள்ளார்கள். அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.
செலவு குறைச்சல் தானே! முயற்சி செய்யுங்களேன்!

ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்!

மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள். ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும். எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம் என்று அடித்து சொல்கிறார்கள் கோபன் ஹேகன் பல்கலைகழக ஆய்வு மையத்தினர்.

200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை 1 தேக்கரண்டி தேனும் 1/2 தேக்கரண்டி லவங்க பொடியும் கலந்து கொடுத்து வந்தனர். ஒரே வாரத்தில் 73 நோயாளிகள் வலி நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர். இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியை குறைத்துக் கொள்வோம்!

சிறுநீர்குழாய் கிருமிகள்!

2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக்கலத்தில் இது அரு மருந்து.

கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து

2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணியுடன் கலந்து குடியுங்கள். 2 மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும். ஒரு நாளில் 3 முறை 2 கரண்டி தேன், 1 கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும். சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

ஜலதோஷம்!

சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன 1/4 தேக்கரண்டி லவங்க பொடியை குறைத்து 3 நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.

வயிற்று அல்சர்!

2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கபவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

வாயு தொல்லை!

இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீருமாம்!

எதிர்ப்பு சக்தி வளரும்!

தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்க பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

அஜீரணம்!

சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமபடுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் 2 தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும்.

நீண்ட ஆயுள்!

நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும் வயதான தோற்றம் மறைந்தே போகும். 100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பை காணலாம். சருமம் மிருதுவாக இருக்கும் ஆயுள் நீடிக்கும்.

தொண்டையில் கிச் கிச்!

1 தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள். 3 மணிக்கு ஒரு தரம் இப்படி செய்து வாருங்கள். தொண்டையில் கிச்கிச் முதல் அல்லது 2 தேக்கரண்டியில் போய்விடும்.

முகப்படுக்கள் அடியோடு மறைய!

3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடி இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து 2 வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.

சரும நோய் தீர!

சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும் தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.

எடை குறைய வேண்டுமா?

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.
அதிசயம் ஆனால் உண்மை. இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.

புற்று நோய்க்கு அருமருந்து!

ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரியவந்துள்ளது. ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.

அயர்ச்சி!

உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விட சிறந்தது இல்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள சர்க்கரை அபாயகரமானது இல்லை. உடலுக்கு உதவ கூடியது. வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி தேனில் லவங்க பொடியை நன்று தூவி குடிக்க வேண்டும். அதே போல மதியம் 3 மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை பெறுவார்கள்.

வாய் துர்நாற்றத்தை போக்க!

தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்க பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.

காது கேளாதவர்களுக்கு நற்செய்தி!

தேனையும், லவங்க பொடியையும் சம அளவில் கலந்து காலை மாலை என 2 வேளையிலும் எடுத்து காமந்தம் போய்விடுமாம்.

Tuesday, 26 May 2020

ஸ்வஸ்திக்

#அஷ்டலட்சுமிகளில்_அருள்பெற_1_ரூபாய்_மதிப்புள்ள_இந்த_ஒரு_சின்னம்_இருந்தால்_போதும்_தெரியுமா?

நாம் எந்த ஒரு பொருளை அடிக்கடி பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறதோ, அந்தப் பொருளின் தாக்கம் நமக்குல் ஏற்படும் என்பது பொதுவான கருத்து. அந்த வரிசையில் மங்களகரமான பல பொருட்கள் இருந்தாலும், ஸ்வஸ்திக் சின்னத்திற்கு முதலிடம் உண்டு என்று சொன்னால் அது பொய்யாகாது. காலையில் எழுந்தவுடன் மட்டும் இல்லாமல், நீங்கள் எந்த இடங்களை, அதிகமாக பார்க்கின்றீர்களோ, அந்த இடத்தில் இந்தச் சின்னத்தை ஒட்டிக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக மொபைல் ஃபோனை அடிக்கடி பார்ப்பவர்களாக இருந்தால், அதில் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை ஒட்டி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதிலிருந்தே, உங்களுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும், நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய, சின்னம் சுவஸ்திக் சின்னம் என்பது. இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வீட்டில் வைத்தால், நல்லது என்பது பலபேருக்கு தெரிந்திருந்தாலும், சுவஸ்திக் சின்னத்துக்கான முழு அர்த்தம் என்ன என்பது சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை பற்றிய முழு விளக்கத்தையும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பெண்களாக இருந்தால் வீட்டு சமையல் அறையில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த சின்னத்தை ஒட்டி வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்களது வாகனங்களில் இந்த சின்னத்தை ஒட்டி வைத்துக் கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கையானது தோல்வி இல்லாத வாழ்க்கையாக மாறும் என்பதும், தடையில்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த ஸ்வஸ்திக் சின்னமானது உறுதுணையாக இருக்கும் என்பதும், வெற்றியை விரைவாக நமக்கு தேடித்தரும் சின்னமாக இருக்கும் என்பதும் உண்மையான ஒன்று.

இதனால்தான் இந்த சின்னத்தை, வியாபார கணக்கு எழுதும் புத்தகத்தில் குங்குமத்திலோ அல்லது மஞ்சளிலோ வரைந்து வைப்பார்கள். சிலபேரது பூஜை அறையிலும் இந்த சின்னம் இருக்கும். சிலபேரது வாசல் கதவிலும் இந்த சின்னம் ஒட்டி இருப்பதை நாம் கண்டிருப்போம். இதற்கு காரணம் வெற்றியைத் தரக்கூடிய இந்த சின்னத்தை அடிக்கடி பார்க்கும் போது நமக்குள் ஏற்படும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பதால் தான்.

விநாயகரின் அம்சமாக கருதப்படும் இந்த சின்னம், விநாயகரின் கையில் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. செங்கோண வடிவைக் கொண்ட இந்த ஸ்வஸ்திக் சின்னம், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் போடப்படும் ஒரு சின்னம் ஆகும். இதில் இருக்கும் எட்டு கோடுகள் எட்டு திசைகளை குறிக்கின்றது. இந்த சின்னத்தில் நான்கு மூலைகளிலும் வைக்கப் படும் புள்ளியானது, மனிதர்களின் ஆன்மாவைக் குறிக்கிறது. இந்த ஆன்மா எப்போதுமே, எட்டுத்திக்கிலும் இருக்கும் இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பதாக ஒரு அர்த்தமும் சொல்லப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் இந்த சின்னத்தில், இருக்கும் நான்கு கோணங்கள் 4 வேதத்தையும், 4 திசைகளையும், 4 யுகங்களையும், 4 மூலங்களையும், 4 பருவங்களையும் குறிப்பிடுவதாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சின்னத்தை இரவு நேரத்தில் பார்ப்பது மிகவும் சிறந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பாக, 10 நிமிடங்களுக்கு முன்பு, இந்த சின்னத்தை உற்றுப் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஸ்வஸ்திக் சின்னமானது, உங்கள் மனதில் பதிய வேண்டும். குறிப்பாக இந்த சின்னம் சிவப்பு நிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் இருந்தால் நல்லது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதாவது நீங்கள் தூங்குவதற்காக கண்களை மூடினாலும், நீங்கள் பார்த்த இந்த ஸ்வஸ்திக் சின்னம் உங்கள் கண்முன்னே நிற்கும் அளவிற்கு மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். அந்த சமயம் உங்களது வாழ்க்கையை வெற்றிப் பாதையில், கொண்டு செல்வது போல் நினைத்து கொள்ள வேண்டும். நீங்கள் செயல்படுத்தும் காரியமானது நிச்சயம் வெற்றியில் தான் போய் முடியும். வெற்றியை நீங்கள் விரைவாக அடையப் போகிறீர்கள்! வெற்றி! வெற்றி! வெற்றி! என்ற எண்ணத்தை மனதில் நன்றாக விதைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

வெற்றி உங்களுக்கு மிக அருகில்தான் இருக்கின்றது என்பதை உணர்த்தும் அளவிற்கு இந்த சின்னம், உங்களது மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும். உங்களால் கூடிய விரைவில் இதை உணரமுடியும். தினந்தோறும் இந்த பயிற்சியை எடுத்துப்பாருங்கள். வெற்றியை தாண்டி உங்கள் வாழ்க்கையில் வேறு எதுவும் குறுக்கிடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Sunday, 24 May 2020

குப்பையில் வீசப்படும் பேரீட்சம்பழ கொட்டை….

குப்பையில் வீசப்படும் பேரீட்சம்பழ கொட்டை…. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய பழம். ஆப்ரிக்கா, அரபு நாடுகளில் மட்டும் அதிகம் விளையக்கூடிய பழம் பேரிச்சை.ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவத்தில் பேரிச்சை பழம் முக்கியமான பங்கு வகிக்கிறது. சூரிய சக்தி அனைத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள பழம் பேரிச்சை. பழங்காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருக்கக் கூடிய ஒரு பழம் பேரிச்சம்.

பேரிச்சம் பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் B12, வைட்டமின் E போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இத்தனை சத்துக்களை தனக்குள் வைத்திருக்கும் பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவதினால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

இரத்த சோகை பிரச்சனை உடையவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விரித்தி அடைந்து இரத்த சோகை விரைவில் குணமாகும். பேரிச்சம் பழத்தை ஒரு கிளாஸ் பாலில் ஊற வைத்து குடித்து வரும்போது கர்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரத்தில் பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து அதனை காலையில் சாப்பிட்டு வருவதினால் சுலபமாக மலம் கழிக்க உதவும். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலை சீராக இயக்கி செரிமானத்தை சரி செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.

பார்வை கோளாறு உள்ளவர்கள் பேரிச்சம் பழத்தை எடுத்து வரலாம். கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் A பேரிச்சையில் நிறைந்துள்ளதாலும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் கொண்ட பழம் இது என்பதால் கண் சம்பந்தமான பிரச்சனை விரைவாக குணமடையும். அது மட்டும் இல்லாமல் மாலை கண் நோய் ஏற்படாமல் பாதுகாக்க கூடியது பேரிச்சை.

கால்சியம் குறைப்பாட்டினால் ஏற்படும் ஆஸ்டியோபோரிஸ், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய வல்லது இந்த பேரிச்சம் பழம். தினமும் மூன்று அல்லது நான்கு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும். இதனால் எலும்பு சம்மந்தமான பிரச்சனைஙனகள் வராமல் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

குடல் கோளாறுகளை சரி செய்ய கூடியது பேரிச்சை. பேரிச்சம் பழத்தில் உள்ள கால்சியம், வைட்டமின் B5, வைட்டமின் B3, நார்ச்சத்து, காப்பர், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கொண்ட இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வர குடலில் உள்ள பிரச்சனைகள் கூடிய விரைவில் குணமாகும்.

பற்சொத்தை உடையவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை எடுத்து வந்தால் பற்கள் சம்மந்தமான எந்த பிரச்சனையும் உங்களை நெருங்காது. பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃப்ளோரின் அதிக அளவில் உள்ளது.

வெண் குஷ்டம் கொண்டவர்கள் பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதோடு வெண் குஷ்டமும் நாளடைவில் குணமடையும்.

பேரிச்சம் பழத்தை போலவே அதன் கொட்டையிலும் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே அதனை வறுத்து பொடி செய்து வாரத்தில் ஒரு முறை பாலில் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்

Sunday, 17 May 2020

117 வகையான (#பாரம்பரிய) பாட்டிவைத்திய குறிப்புகள்....!!!!

117 வகையான (#பாரம்பரிய) பாட்டிவைத்திய குறிப்புகள்....!!!!

1) பொன்மேனி தரும் குப்பைமேனி...
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு..
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி..
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை...
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு..
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு..
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி..
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8)குழந்தையை காப்பான் கரிப்பான்..
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்..
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்...
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?...
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு...
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி..
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி...
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு..
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு..
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு...
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல...
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு...
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு..
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்...
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை...
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால்
சுரக்கும்.

23) அரையாப்பு தீர..
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை...
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்...
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக....
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்.
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்...
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு...
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ...
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி..
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர..
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு...
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு...
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு..
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க..
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர...
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு..
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்...
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ...
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை..
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது....
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்...
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர...
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர..
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர..
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு..
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு...
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு...
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய...
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு..
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற..
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க...
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய...
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு...
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக....
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு...
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக...
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக...
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க...
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு....
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு..
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு...
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர..
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்....
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்...
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக...
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு.....
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக....
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்துபாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி...
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய..
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய...
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய..
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு...
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க...
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு...
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக..
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு...
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர...
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு.....
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு...
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக... 
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக.. .
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக...
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய....
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட.....
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க....
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய....
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய....
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு...
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க....
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க....
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய.....
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க....
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர,நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்....
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல..
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

98)நெஞ்சு சளி.....
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

99)தலைவலி......
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

100)தொண்டை கரகரப்பு..
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

101)தொடர் விக்கல்....
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

102)வாய் நாற்றம்....
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

103)உதட்டு வெடிப்பு..
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

104)அஜீரணம்...
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

105)குடல்புண்....
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

106)வாயு தொல்லை....
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

107)வயிற்று வலி....
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

108)மலச்சிக்கல்.... 
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

109)சீதபேதி....
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

110)பித்த வெடிப்பு...
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

111)மூச்சுப்பிடிப்பு...
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

112)சரும நோய்...
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

113)தேமல்.
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

114)மூலம்...
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

115)தீப்புண்.....
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

116)மூக்கடைப்பு....
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

117)வரட்டு இருமல்...
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்...