தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்...!
1. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது, என்னால் முடியாது, எனக்கு தெரியாது என்று என்று உங்களை நீங்களே தாழ்வு படுத்தாதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை உலகில் எவருக்கும் அமைந்ததில்லை. மனித வாழ்க்கையே போராட்டங்கள் நிறைந்தது தான்.
2. எந்த மொழி உங்களால் சரளமாகப் பேச முடியுமோ அந்த மொழியில் பேசுங்கள், அரைகுறையாக பேச தெரிந்த மொழியை உபயோகிக்கும்போது சில தடுமாற்றங்கள், உளறல்கள் உங்கள் தன்னம்பிக்கையை சிதைத்து விடும்.
3. சிலருக்கு பேச்சாற்றலால் தான் சொல்ல வந்த விஷயத்தை ஒருவருக்கு புரிய வைக்க முடியும், பலருக்கு பேச்சாற்றல் இருக்காது ஆனால் எழுத்துமூலமாகத் தான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லும் திறமை படைத்தவர்களாக இருப்பார்கள். உங்கள் திறமை எது என்று புரிந்து அதன்படி செயல்படுங்கள், பெரும்பாலும் பேச்சைக் காட்டிலும் எழுத்து மிகவும் வலு வாய்ந்தது,
3. ஒரு விசயத்தைக் கற்றுக் கொள்ள சிலருக்குப் படித்தால் புரிந்து விடும், சிலருக்கு அனுபவப்பூர்வமாக பார்த்தால் புரியும், சிலருக்கு யாராவது அதை எடுத்துச் சொன்னால் புரியும், உங்களுக்கு எது பிடிக்கும் என்பதை தேர்ந்தெடுத்து அதன்படி செய்யுங்கள், குறிப்பாக மாணவர்களுக்கு இது பொருந்தும்.
4. மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் அழகு தான், முதலில் உங்களை நீங்களே ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எந்த உடை அணிந்தால் தன்னம்பிக்கையாக உணர்வீர்களோ அந்த மாதிரி உடை அணியுங்கள்.
5. எதிரே இருப்பவர்கள் அறிவாளிகள் அவர்களுக்கு எல்லாம் தெரியும் நமக்கு ஒன்றுமே தெரியாதே என்று ஒருபோதும் நினைக்காதீர்கள், உங்களுக்குத் தெரிந்த விஷயம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
6. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை செயல்படுத்துங்கள், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை யோசிக்காதீர்கள், சில உன்னதமான கண்டுபிடிப்புகள் முதலில் அபத்தமாக மக்கள் நினைத்து எள்ளிநகையாடியது தான், பின்னாளில் பெரிய கண்டுபிடிப்பாக மாறியது.
7. சிரிக்கும் போது அனைவரும் சிரிப்பார்கள், அழும்போது எவரும் உங்களுடன் அழுவதில்லை, எனவே சந்தோசமான விஷயங்களை அனைவரிடமும் பகிருங்கள், சோகமான நிகழ்வுகள், தோல்விகள், மனதிலுள்ள குறைகளை உங்களின் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும் தெரிவித்து ஆலோசனை பெறுங்கள்.
8. நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள், உங்களை ஒதுக்கி வைக்கிறார்கள், உங்களை பற்றி மற்றவர்கள் தவறாக பேசுகிறார்களோ என்று எப்பொழுதும் நினைக்காதீர்கள், ஒரு விஷயத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது நல்ல விஷயங்கள் கூட தவறாகவே தோன்றும்.
9. சிறிய ஒரு விஷத்தை கற்பனை செய்து பெரிய விசயமாக பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்காதீர்கள், பிரச்சனைகளைக் கண்டு ஓடாதீர்கள் அப்படி ஓடினால் வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பீர்கள். நீங்கள் எதிர்த்து நின்றால் அனைத்துப் பிரச்சனைகளும் முடிவிற்கு வந்து விடும்.
10. உங்கள் பிரச்சனைகளை நீங்கள் தான் தீர்க்க முடியும், உங்கள் பிரச்சனைகளை அடுத்தவர்கள் தீர்ப்பார்கள் என்று ஒருபோதும் நினைக்காதீர்
No comments:
Post a Comment