Saturday, 25 January 2020

8



"8"-ன் சிறப்பு

*"எட்டு"* போடுகிறவனுக்கு *"நோய்"* எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...!
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்..

*உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, * 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு  அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்...! 
*"...இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்..."*

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்...!

*ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும்.*

ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து *21 நிமிடம்* நடக்கணும் .

பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று  இதேபோல் *21 நிமிடம்* கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் 
நடை பயிற்சி செய்யணும்,  *42 நிமிடம்*.

*1.* பயிற்சி தொடங்கிய 
        அன்றே மார்பு சளி
        கரைந்து வெளியேறுவதை    
        காணலாம்.
*2.* இந்த பயிற்சியைஇருவேளை
        செய்துவந்தால், உள்ளங்கை     
        கை விரல்கள்   
        சிவந்திருப்பதை காணலாம். 
        அதாவது ரத்த ஓட்டத்தை 
        சமன்படுத்துகிறது என்று
        அர்த்தம்.
*3.* நிச்சயம் நீரிழவு நோய் 
        (சர்க்கரை வியாதி) குறைந்து 
        முற்றிலும் குணமாகும்.
        (பின்னர் மாத்திரை, 
        மருந்துகள் தேவை இல்லை).
*4.* குளிர்ச்சியினால் ஏற்படும் 
        தலைவலி, மலச்சிக்கல் 
       போன்றவை தீரும்.
*5.* கண் பார்வை அதிகரிக்கும். 
       ஆரம்ப நிலை கண்ணாடி 
       அணிவதை தவிர்க்கலாம்.
*6.* கேட்கும் திறன் அதிகரிக்கும்.
*7.* உடல் சக்தி பெருகும்- ஆதார 
       சக்கரங்கள் சரியாக 
       செயல்படும்.
*8.* குடல் இறக்க நோய் 
       வருவதை தடுக்கும்.
*9.* ரத்த அழுத்தம் நிச்சயமாக 
       கட்டுப்பாட்டில் வரும்.
*10.* பாத வலி, மூட்டுவலி 
          மறையும்.
*11.* சுவாசம் சீராகும் அதனால் 
          உள் உருப்புக்கள் பலம் 
         பெரும்...!

*"8"* வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்...!

அந்த வடிவம் "முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள்.

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்...!  

நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த *8 வடிவ நடை* பயிற்சி செய்யலாம்,

*1வது 21 நாளில் -* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும்...!

*2 வது 21 நாளில் -*
மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்...!

*3 வது 21 நாளில் -*
தொடை பகுதி பலம் பெரும்...!

*4 வது 21 நாளில் -* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ...!

*5 வது 21 நாளில் -* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்...!

*6 வது 21 நாளில் -* இரத்த அழுத்தம், இதய நோய் , ஆஷ்துமா , காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்...!

*7 வது 21 நாளில் -* தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது...!

*8 வது 21 நாளில் -* அன்னாக்கு பகுதி விழிப்படையும், வாய் கண் காது  கருவிகள் நோய் தன்மை தாக்காது, 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும், மூளைப் பகுதி விழிப்படையும், மூளைப் பகுதி நோய் தீரும்...!

Friday, 24 January 2020

எதிர்மறை சிந்தனைகளை தகர்த்தெறிய சில வழிகள்

எதிர்மறை சிந்தனைகளை தகர்த்தெறிய சில வழிகள்.

உங்கள் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் பல கரங்கள் கைதட்டக் காத்திருக்கின்றன.  உங்களுக்கான பதக்கங்களை நீங்கள் வாங்கும் போது பெருமைப் படவும் மகிழ்ச்சி அடையவும் இங்கு பலர் உள்ளனர் என்ற எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

எதிர்மறை எண்ணங்களுக்கு உயிர் கிடையாது். அதை நீங்கள் தீண்டாமல் இருக்கும் வரை !

மனது துன்பப்படும் பொழுது ஒரு சாய்வு நாற்காலி கேட்கும்.  அப்பொழுது அதை நேர்மறை எண்ணங்கள் என்னும் நாற்காலியில் அமர வையுங்கள்.  எதிர்மறை எண்ணங்கள் என்னும் ஒளியை அணைத்து விடுங்கள்.

ஒவ்வொரு மனிதனின் நேர்மறை எண்ணங்கள் என்னும் நாற்காலி பல நரம்புகளால் பின்னப்பட்டிருக்கும்.  உங்களுக்கான நாற்காலியை நீங்களே தேர்வு செய்து அமருங்கள்.  சிலருக்கு ஊக்கம் தரும் பாடல்களாகவும், சிலருக்கு உறவுடன் உரையாடுதலாகவும், சிலருக்குப் பிடித்த செயலை செய்வது எனப் பல இருக்கலாம் .

ஆங்கிலத்தில் " Everything is a state of Mind " என்பார்கள்.  உங்கள் மனநிலையயே முடிவு செய்யும் எதை நீர்த்துப் போகச் செய்வது எதை நீண்டு வாழ செய்வது என்று.

எதிர்மறை எண்ணங்களுக்கான காரணிகளைக் கண்டு கொள்ளுங்கள்.

கிளையை வெட்டிப் பயனில்லை, வேரை ஆராயுங்கள் !

சில பொதுவான காரணங்கள்.

திட்டமிடுதலில் சிக்கல்.

ஒரு கட்டுக்குள் அடங்காமல் அலைப்பாயும் எண்ணங்களே பின் மாற்றம் அடைந்து நம்மால் முடியுமா சாத்தியமா என்ற வினாவாக உருமாறி எதிர்மறை எண்ணங்களுக்கு வழி வகுக்கும்.  அதைத் தவிருங்கள் !

திட்டமிடுதல் உங்களை ஒரு நேர் கோட்டில் பயணிக்க உதவும்.  இடர்பாடுகளுக்கு இடறி விட நீங்கள் என்ன காற்றில் பறக்கும் இலைகளா? இலக்குடன் இறுக்கப் பற்றி பயணியுங்கள்.

வீண் அச்சம்.

பல நேரங்களில் நம் அச்சமே பல எதிர்மறை எண்ணங்களைத் தூண்டி விடும், இப்படி ஆகிவிடுமோ, இப்படி நினைத்திருப்பாரோ என்ற எதிர்மறை எண்ணங்களைத் தள்ளி வையுங்கள்.

அச்சத்தைத் தவிர்க்க சரியான வழி அதை ஆயுதமாக மாற்றுவதே...

அச்சத்தை வாய்ப்புகளாகப் பாருங்கள்.   உங்களுக்கு எதையோ நினைவூட்டுகிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டுக்கு... தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவரா நீங்கள் ?உங்கள் உள்ளுணர்வு சொல்லும் அச்சத்தை எதிர்கொள்ளுங்கள்.  குறிப்பிட்ட பாடம் மறந்து விடுமோ என்று நினைப்பதை விட அதை வாய்ப்பாக எண்ணி அதை ஆழமாக புரிந்து வாசியுங்கள்.  பின்பு பாருங்கள் அச்சம் மறந்து விடும். பதில் நினைவில் வந்து விடும்.

குறுகிய சிந்தனை.

இது மிக முக்கியக் காரணியில் ஒன்று . ஒரு நிகழ்வுக்கு பல பார்வைகள் உண்டு என்பதை உணருங்கள். உங்கள் பிடியை தளர்த்திக் கொள்ளுங்கள்.  சில நேரங்களில் தளர்தல், வளர்தலுக்கு நல்ல ஊன்றுகோல்'.நீங்கள் நினைத்தது போலவே எல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவது மிகுந்த ஏமாற்றத்தையே பரிசளிக்கும்.

எதிர்பாரா அனுபவங்களை எதிர்பாருங்கள்.  பள்ளங்களில் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் !

அலுவலகம் செல்ல வேண்டிய முக்கியமான நாளில் திடீர் என்று பேருந்து தாமதமாக வந்தால் உடனே நொந்து கொள்ளாதீர்கள்.  அதை நீங்கள் முக்கியமானதாக கருதியிருந்தால் நீங்கள் முன்கூட்டியே வந்திருக்க வேண்டும்.

காரணிகள் இருக்கட்டும்.... வழிமுறைகளை காண்போம் !

1) நேர்மையைப் பழகுங்கள் !

சொல்லமைப்பு போலவே பொருளிலும் நேர்மைக்கும் நேர்மறை எண்ணங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு .

"நேர்மறை எண்ணம் என்னும் குழந்தை நேர்மை என்னும் தாயின் கருவில் தான் பிறக்கிறது "

எது நேர்மை ?

தெரியாததை தெரியாது என ஒப்புக் கொள்ளுங்கள்

புரியாததை புரியவில்லை என்று ஒப்புக் கொள்ளுங்கள்.

பின் அவற்றை அறிந்து கொண்டு அதில் கவனம் செலுத்துங்கள்.அறிந்து கொள்வது முதல் படி பின் அதை அணுகுவது இரண்டாம் படி !

நினைவில் கொள்ளுங்கள்.  எவன் ஒருவன் தன்னை திருத்திக் கொள்ள முனைகிறானோ அவனே வாழ்ந்து கொண்டிருக்கிறான் .  எல்லாம் பயிற்சியில் வந்து விடும்.  நம்புங்கள் !

2.பறவைப் பார்வை பாருங்கள்

ஒரு நிகழ்வை பல தளங்களில் வைத்து சிந்தியுங்கள்.பல புதிய வழி முறைகள் பிறக்கும்.  மாற்றங்களுக்கு வழி விடுங்கள்.

ஒரு செயலுக்கான வழிமுறைகளை புதுப் புது கோணங்களில் அணுகுங்கள். அயர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி பூக்கும்.

3) காத்திருக்கப் பழகுங்கள்

காலம் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் என்பதை நம்புங்கள், உடனடி தீர்வுகளை எதிர்பார்த்து பின் சோர்ந்து எதிர்மறை எண்ணங்களில் விழுந்து விடாதீர்கள்.  காலக் கப்பல் உங்கள் இலக்கையும் கொண்டு சேர்க்கும் என்று நம்புங்கள்.

புதிய இலக்குகளை அடைவோம்.

Sunday, 19 January 2020

மண்பானை fridge

மண்பானை fridge:

கரண்ட் வேண்டாம், அதிக விலை இல்லை, கெடுதிகள் இல்லை.

முயன்று பார்கலாமே...வெற்றி கண்டுள்ளார் நண்பர் ஒருவர்... அவரது அனுபவம் இது....

சாதாரண மண் பானை ஒன்று போதும்.

நிலத்திற்கு மேலேயும் கீழேயும் வளரும் அனைத்துக் காய்கறிகளும்...உள்ளே வைக்கலாம்.

இது குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

குளிர்சாதன பெட்டியிலிருந்து காய்கறிகள் அல்லது பழங்களை வெளியே எடுத்தவுடன், அரை நாளில் அது மோசமாகி விடும்,ஆனால் மன்பானையிலிருந்து வெளியே எடுத்தால், இன்னும் இரண்டு நாட்களுக்கு அது புதியதாக இருக்கும்.

மேலே உள்ள படத்தில், தக்காளி, கத்திரிக்காய் மற்றும் அவரக்காய் ஆகியவை எங்கள் வீட்டிலேயே வளர்க்கப்பட்டன.

பானைக்குள் தண்ணீர் விடக்கூடாது.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, தண்ணீர் வெளியே மட்டுமே தெளிக்கப்பட வேண்டும்.

பானை தரையில் மட்டுமே உள்ளது. மணலில் இல்லை.

வெயிற் காலங்களில் மணலின் மீது பானையை வைத்து மணலில் சிறிதளவு தண்ணீர் தெளித்து விட பானையும், உள்ளே காயும் குளுமையாக இருக்கும்.

Saturday, 18 January 2020

எல்லாம் மாயை

'' எல்லாமே மாயை..''

இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழும் வரை நமக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. பதவி,பட்டம்,அதிகாரம், பொருள், பணம், புகழ், மனைவி, மக்கள், வீடு, வாசல், தோட்டம், துரவு ஏனைய அனைத்துமே நிரந்தரம் இல்லை. ஏன் நமது பெயரும் கூட அப்படித்தான்.

இவை சில நாள்மட்டும் நம்மோடு.பின் வேறொருவரோடு. நம்மை விட்டு சொல்லாமல் சென்று விடும்.

நாட்கள் செல்ல செல்ல நம்மை இவ்வுலகம் மறந்து விடும். காற்று உள்ளே இருக்கும் வரைதான் உடல். காற்று வெளியே போய்விட்டால் நாம் பிணம் 

சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித் துளிகள்தான் நாம்..இந்த சொற்ப வாழ்வு நிரந்தரம் என்று மயங்காதீர்கள்.. 

சொத்து, சுதந்திரம், அதிகாரம், பேர், புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரைதான்.

சாவி கொடுத்தால்  குரங்கு பொம்மை. ஆடும்.. டமாரம் தட்டும்.. தலையை ஆட்டும்,விசை இருக்கும் வரைதான் வேலையே செய்யும்..

ஒரு காவல்காரன். வழக்கம்போல் தப்பட்டை அடித்து கொண்டு நடுநிசியில் ”ஜாக்கிரதை” ‘’ஜாக்கிரதை’’என்று கத்திக் கொண்டே போவான்…
ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போக வேண்டி இருந்ததால் அவன்வேலையை அவன் பிள்ளை செய்ய வேண்டியதாயிற்று….

அவன் பிள்ளை கொஞ்சம் வேள்வி ஞானம்உள்ளவன். இரவில் அவன் தப்பட்டைஅடித்துக்கொண்டு ''ஜாக்கிரதை,ஜாக்கிரதை'' என்று சொல்லிக் கொண்டு தகப்பன் வேலையை செய்தான்…
அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்.அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான்.

”ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ?, இங்கேயே தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவாரோ .? காவல்காரன் மிகவும் நடுங்கினான்….

ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக?.

முதல் நாள் இரவு பையன், ” ஜாக்கிரதை. ஜாக்கிரதை” என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை..

சில வார்த்தைகள் சொன்னதுதான் ராஜாவை மயக்கியது. அந்த வாக்யங்கள் இவைதான்……
.
*அடே தூங்கு மூஞ்சி, விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயும் என்னடா, அண்ணன் என்னடா, தம்பி என்னடா,காசும் பொய்,வீடும் பொய் சொந்தமும் இல்லை, பந்தமும் இல்லை,. எல்லாம் மாயை..

இதை எல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள்..பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், வாழ்வே சோகம், மாயம், விழித்துக் கொள் ஜாக்கிரதை….

ஆசையும், பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா . உன் உள்ளே இருக்கும் ஞானம் எனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள்.

விளக்கு எடுத்துக் கொண்டு வெளியே திருடர்களை தேடாதே..  உனக்கு உள்ளே ஒளிந்து இருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், 
ஜாக்கிரதை ஜாக்கிரதை…

மனக்கோட்டை கட்டுபவர்கள் நாம். நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள்,
இளமை, வாலிபம் நிரந்தரமல்ல..

நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிப் போய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, 

இதில் நீ என்ன? நான் என்ன?, எல்லாமே மாயை.. விழித்துக் கொள், ஜாக்கிரதை, ஜாக்கிரதை,.

ஆம்.,நண்பர்களே..

"உங்கள் புகழை, உங்கள் பதவியை, அதிகாரத்தை 
ஒரு போதும் நம்பாதீர்கள்"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது".

ஏற்றம் வரும் போதே மாற்றமும் நிகழும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Friday, 17 January 2020

முருங்கைகஞ்சிவைத்தியம்

L4, L5 முதுகுஎலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் அற்புத 
#முருங்கைகஞ்சிவைத்தியம்....!!
 
செய்முறை:
 
இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை நன்றாக கழுவி  எடுத்து ,மிக்ஸியில்  அரைத்து இரண்டு லிட்டர் வரும்படி சாறாக்கி 
கொள்ளவும்.

இந்த இரண்டு லிட்டர் முருங்கை சாற்றில் ஒரு கிலோ பச்சரிசி,ஐம்பது கிராம் மிளகு ,இருநூறு கிராம் பாசிபருப்பு,சிறிது,சுக்கு ,மற்றும் 
 ஏலக்காய் சேர்த்து, வெயிலில் காயவைக்கவேண்டும்....!!

முருங்கை சாறில் அரிசி மற்றும் இதர பொருட்கள் நன்றாக  ஊறவேண்டும்...!!

இவை அனைத்தும் நன்றாக ஊறியபின்பு மறுபடியும்  ஈரப்பதம் போகும் வரை  வெயிலில் காயவைத்து,சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி, தினந்தோறும்  தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,
கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!!

இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

 அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!!

இந்த  கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!! 

L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். 

பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது. 

இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது. 

அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ,உட்கார முடியாத நிலை , முதுகு வலி, இடுப்புவலி உண்டாகும். 

அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது,
L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய,
" disc prolapse " ஆவது ...
இவை அனைத்துக்குமே  முழுமையான மருந்து இந்த 
முருங்கைக்கீரை கஞ்சிதான் ....!!

அதிக இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்துகொண்டுள்ள இந்த 
 முருங்கைக்கீரைக் கஞ்சியை
48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..!!

இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,
உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.
இடுப்பு வலி, முதுகு வலி குணமாக வாய்புகள் அதிக அளவில் உள்ளது!!!

Monday, 13 January 2020

பொடுகு தொல்லைக்கு சமையலறையில் ஒளிந்திருக்கும்

பொடுகு தொல்லைக்கு சமையலறையில் ஒளிந்திருக்கும் 11 தீர்வுகள்.:

கூந்தலின் அழகை கெடுப்பதுடன் தலையில் அரிப்பை ஏற்படுத்தும் பொடுகு தொல்லையை தீர்க்கும் ஆற்றல், உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களுக்கு உண்டு.

தலையில் ஒருவகை ஃபங்கஸ் காரணமாக பொடுகு ஏற்படுகிறது. வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக காணப்படும் பொடுகு, கூந்தலின் அழகை கெடுப்பதுடன் தலையில் அரிப்பை ஏற்படுத்துகிறது. எண்ணெய் வடியும் தோல், வறண்ட தோல், தலை சுத்தம் செய்யாதல், தலைக்கு பயன்படுத்தும் அழகு சாதனங்கள் ஆகியவை காரணமாக பொடுகு ஏற்பட வாய்ப்புள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பொடுகு பாதிக்கிறது. அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால் கூட பொடுகு ஏற்படலாம். மன இறுக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை காரணமாகவும் பொடுகு தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.

பொடுகு இருப்பதற்கான முக்கிய அறிகுறி தலையில் அரிப்பு ஏற்படுவது தான். பொடுகானது தலையில் திட்டு திட்டாக காணப்படும். உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களுக்கு பொடுகை தீர்க்கும் ஆற்றல் உள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

எலுமிச்சை சாறு.: 
எலுமிச்சை சாறில் பஞ்சை நனைத்து தலையில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பொடுகை நீக்க உதவும்

தேங்காய் எண்ணெய்.: 
எலுமிச்சை சாறுடன் சுட வைத்த தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் தடவலாம்.

வேப்ப எண்ணெய்.: 
தேங்காய் எண்ணெயுடன் வேப்ப எண்ணெய் கலந்து தடவலாம். வேப்ப எண்ணெயில் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளதால் பொடுகை நீக்க உதவும்.

வெங்காய சாறு.: 
ஃபங்கஸ் கிருமிகளை அழிக்க வெங்காய சாறு பயன்படும். இருப்பினும், வெங்காய சாறு முடி உதிர்வை ஏற்படுத்தக் கூடும்.

எலுமிச்சை புல் எண்ணெய்.: ஆங்கிலத்தில் லெமன் கிராஸ் ஆயில் என அழைக்கப்படும் எலுமிச்சை சாறு எண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு கழுவினால், பொடுகு நீங்கும்.

சமையல் சோடா.: 
சமையல் சோடாவை பேஸ்ட் போல கறைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். இருப்பினும், அதிகமாக இதனை பயன்படுத்தினால் தோல் வறண்டு விடும்.

நெல்லிக்காய்.: 
தெல்லிக்காய் சாறை தலையில் தடவலாம், அல்லது நெல்லிக்காய் பொடியை ஷாம்பூக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

முட்டையின் மஞ்சள் கரு.: 
முட்டையின் மஞ்சள் கருவை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.

கற்றாழை.: 
கற்றாழை கூழை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.

பூண்டு பேஸ்ட்.: 
பூண்டு பேஸ்ட்டை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.

வெந்தயம்.: 
இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து தலையில் தடவலாம்.

Sunday, 12 January 2020

கல்லீரல்

"கல்லீரல்-LIVER"
மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். 
அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !
மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான்.
இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை.
மற்ற எந்த உடல் 
உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.
இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.
நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும்.
பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். 
அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.
இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. 
கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.
இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம்.
இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.
அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.
மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது.
கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.
கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.
கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல். 
அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.
கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.
கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !
இத்தகைய கல்லீரலை காப்பாற்ற
~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.~
~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~ அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.
உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும்.
நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
~முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.~
கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்
நன்றி. 🙏

நீர்க்கட்டி பிரச்சனை குணமாக மருத்துவம்

நீர்க்கட்டி பிரச்சனை குணமாக மருத்துவம் 
பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங்கிலத்தில் பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல சிறிய நீர் நிரம்பிய கட்டிகள்(Cysts) கர்ப்பப்பையில் உருவாகுவதே பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்ரோம் ஆகும். தற்போது குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த நீர்க்கட்டிகள் உள்ளன. பெண்களின் மாதவிடாயும் நீர்க்கட்டி பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நீர்க்கட்டிக்கு தீர்வு காண்பதற்கு முன்பு மாதவிடாய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும். மாதவிடாய் பெண்களுக்கு கர்ப்பப்பையில் சினை முட்டைகள் உருவாகி அவை ஹார்மொன்களினால் (Harmon) சுழற்சிக்கு(cycle) உட்பட்டு உடைவதே மாதவிடாய் ஆகும்.முதல் மாதவிடாய் பதிமூன்று முதல் பதினெட்டு வயதுள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது. ஹார்மோன்களின் வேறுபாடால் மாதவிடாய் சுழற்சி(Menstrual Cycle) ஏற்படுகிறது. இந்த சுழற்சியினால் கருப்பை புறணி திடமாக தொடங்குகிறது. கருப்பை புறணி திடத்தன்மை வயதிற்கேற்பவும் மாதவிடாய் சுழற்சியின் எந்த நிலையில் இருகிறார் என்பதை பொருத்தும் வேறுபடும். மாதவிடாய் சுழற்சியின் ஆரம்பகட்டத்தில் கருப்பை புறணி திடமடைய தொடங்கும் அதே நேரத்தில் கரு முட்டையும் வளர தொடங்கும். மாதவிடாய் சுழற்சியின் பதினான்காம் நாள் முழு வளர்ச்சியடைந்த முட்டை விடுவிக்கப்படுகிறது. இது ஒவுலேஷன் (Ovulation) எனப்படும். அந்த முட்டை ஆணின் விந்தணுவிற்காக காத்திருக்கும். ஆணின் விந்தணு கருமுட்டையை அடைந்தால் கருவுறுதல் நடைபெறுகிறது. அப்போது கருவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கருப்பை புறணி வழங்குகிறது. ஆணின் விந்தணு கருமுட்டையை அடையாத பட்சத்தில் கருப்பை புறணி இரத்தமாக வெளியேறுவதே மாதவிடாய் ஆகும். நீர்க்கட்டியினால் மாதவிடாய் பாதிப்பு நீர்க்கட்டியினால் மாதவிடாய் சுழற்சியில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பாளி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் உள்ளவர்களுக்கு அன்றோஜென் (Androgen insensitivity syndrome) எனப்படும் ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. அதனால் அவர்களுக்கு ஒவுலேஷன் எனப்படும் கருமுட்டையை விடுவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில்லை. அதனால் ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை அடைய முடிவதில்லை. அதனால் கருவுறுதல் நடைபெறாது. இந்த காலத்தில் பெரும்பான்மையான குழந்தையின்மை பிரச்சினைக்கு நீர்க் கட்டியே காரணம் ஆகும். பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் காரணங்கள்: பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோமின் முதன்மை காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அசாதாரணமான ஹார்மோன்களின் உற்பத்தியும் பரம்பரை காரணிகளும் முதன்மை காரணிகளாக நம்பப்படுகிறது. மற்றுமொரு காரணியாக ஆன்றோஜென் எனப்படும் ஆண் ஹார்மோன் உற்பத்தி கருதப்படுகிறது. ஆன்றோஜென் ஹார்மோன் பெண் உடலில் உற்பத்தி ஆவது இயல்பு என்றாலும் நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு இது அசாதாரணமாக அதிகமாக உற்பத்தி ஆகிறது. அதிகப்படியான இன்சுலின் ஹார்மோன் ஆன்றோஜென்னின் அளவை அதிகரிக்கிறது. அதனால் மருத்துவர்கள் மேட்போர்மின்(Metformin) எனப்படும் சுகர் மாத்திரைகளை நீர்க்கட்டிக்கு அறிவுறுத்துகிறார்கள். நீர்க்கட்டியின் அறிகுறிகள்: இதன் அறிகுறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. பெரும்பாலானவர்கள் கூறும் ஒரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி(Irregular Periods). இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண் ஹார்மோனான ஆன்றோஜென் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், மார்பகத்தின் அளவு குறைதல், முடி கொட்டுதல், குரலில் வேறுபாடு, முகப்பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படுகிறது. 

இனி நீர்க்கட்டிக்கான இயற்கை மருத்துவத்தை பார்ப்போம்.   நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கழற்சிக்காய், மிளகு, மோர் மருந்துக்கள் நீர்க்கட்டி பிரச்சனைக்கு கழற்சிக்காய் ஓர் அருமையான மருந்து ஆகும். வேறு எந்த மருத்துவத்தையும் எடுக்காமல் இந்த கழற்சிக்காய் மருத்துவத்தை மட்டும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் நீர்க்கட்டி பிரச்சனை கண்டிப்பாக குணமாகும். கழற்சிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கழற்சிக்காய் காயாகவும் கிடைக்கும், சில கடைகளில் பொடியாகவும் கிடைக்கும். கழற்சிக்காய் சிறிய கோலிகுண்டு அளவில் பச்சையாகவும் அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கழற்சிக்காயின் உள்ளே முந்திரிபருப்பு போன்று ஒரு பருப்பு இருக்கும். கழற்சிக்காயை உடைத்து இந்த பருப்பை எடுப்பது மிக மிக கடினம். கழற்சிக்காயின் வெளி ஓடு அவ்வளவு கடினத்தன்மை உடையதாகும். பெரிய சுத்தியல் வைத்து அடித்து உடைக்கலாம். கழற்சிக்காயை பக்கவாட்டில் அடித்து உடைத்தால் உள்ளிருக்கும் பருப்பு உடையாமல் எடுக்கலாம். காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 அல்லது 4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும். இது பச்சை பாகற்காயை மெல்வது போன்று அவ்வளவு கசப்பாக இருக்கும். மிகவும் கசப்பாக இருந்தால் நன்றாக மென்று முடித்ததும் மோர் குடிக்கலாம். முன்பே குறிப்பிட்டது போல் வேறு எந்த மருத்துவத்தையும் பார்க்காமல் ஒரு மாதம் ஒரு நாள் கூட கைவிடாமல் இந்த கழற்சிக்காய் மருந்தை உண்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை முற்றிலும் குணமாகும். 

  நீர்க்கட்டி பிரச்சனை குணமாக மோர், பச்சிலை மருந்துக்கள் வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள் மோர். இதனுடன் பச்சிலை எனப்படும் மூலிகையை கலந்து குடித்து வர நீர்க்கட்டி குணமாகும். பச்சிலை என்பது வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகை ஆகும். இது துளசியை ஒத்த மனமும் குணமும் கொண்டது. அன்றாடம் இந்த கலவையை அருந்தி வர நல்ல  வித்தியாசத்தை காணலாம்.   நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கச்சக்காய் மருந்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கச்சக்காயை உண்டு வர நீர்க்கட்டிகள் கரையும். இந்த காய்க்கு உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் குணம் உண்டு.   

நீர்கட்டி பிரச்சனை சரியாக வெந்தயம் மருந்து 
நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு கனையதால் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. வெந்தயமும் வெந்தய கீரையும் இன்சுலின் அளவை அளவாக வைக்க உதவுகின்றன. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். பின்பு மதிய உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் இரவு உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தய கீரையை சமைத்தும் உண்ணலாம்.   

நீர்க்கட்டி பிரச்சனை சரியாக இலவங்கப்பட்டை மருத்துவம் இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாகி கொண்டு தேவையான போது பயன்படுத்தலாம். காலையில் தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி கொள்ளலாம். இலவங்கப்பட்டை தூளை தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம்.   

நீர்க்கட்டி பிரச்சனை சரியாக ஆளி விதைகள் மருந்து இந்த விதைகளில் ஒமேகா சத்து மற்றும் புரத சத்து நிரம்பி உள்ளது. உடலில் உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. ஆளி விதிகளை பொடி செய்து கொண்டு நீரிலோ, பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம். உடல் பருமனுக்கும் இந்த ஆளிவிதைகள் பரிந்துரைக்கப்படுகிறது. 

  நீர்க்கட்டி பிரச்சனை குணமாக துளசி மருந்து 
நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் எனப்படும் ஆண்களின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்பதை அறிவோம். துளசி ஆன்றோஜென்களின் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டு துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அல்லது துளசியுடன் கொதிக்க வைத்த நீரையும் அருந்தலாம்.   

நீர்க்கட்டிக்கு தேன் மருத்துவம் உடற்பருமனும் பாலி சிஸ்டிக் ஓவரியன் ச்ய்ன்றோமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. உடல் எடையை குறைத்தால் நீர்க்கட்டி தானாக குறைந்து விடும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஒரு அருமையான மருந்து தேன். தேனை காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் சிறிது எலுமிச்சம்பழ சாறு கலந்து அருந்த உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் நீர்க்கட்டி தானாக மறைந்து விடும்.   

நீர்க்கட்டிக்கு நெல்லிக்காய் மருந்து நெல்லிக்காய் உடலின் இன்சுலின் அளவை கட்டுக்குலள் வைக்க உதவுவதோடு உடல் எடை குறையவும் பயன்படுகிறது. நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுக்குள் வரும்.   

நீர்க்கட்டிக்கு பாகற்காய் மருந்து பாகற்காய் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க பெரும்பங்கு வகிக்கிறது. இன்சுலின் அளவு கட்டுக்குள் இருந்தால் அன்றோஜென் அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதனால் நீர்க்கட்டி அறிகுறிகள் குறைய தொடங்கும். பாகற்காயை வாரத்தில் ஐந்து நாட்கள் சமைத்து உண்ண வேண்டும்

Wednesday, 8 January 2020

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?

சித்தர்கள் - Tamil Scientists
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.

நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

தலைவலி :

நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.

படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!

அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :

ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.

மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:

ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.

படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் :

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.

காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

நன்றிகளும்
பிரியங்களும்.

Monday, 6 January 2020

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!

1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும் 

2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்

4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .

5)கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .

6) கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .

7) நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .

8) உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .

9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும் 

1O) அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .

11)மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..

12) துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .

12)அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .

14) பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .

15) குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .

16) கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .

17) அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .

18) இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .

19) கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .

2O) அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .

21) நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .

22) அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..

23) என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...

24) காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .

24) பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது 

25)சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .

26) குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .

27) ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .

 28) சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .

29) அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .
எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .

3O) சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .

31) கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,

33) உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.

34) கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

35) தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .

36) பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .

♥இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .

♥மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .

♥நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..

♥மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....

♥கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....

♥நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .

♥இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .

♥(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.

♥தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.

♥சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .

♥உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

வணக்கம்

Friday, 3 January 2020

சர்க்கரை குறை!!

இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் இனிப்பு சார்ந்த பொருள்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.இனிப்பு உணவுகளில் அதிக அளவு சர்க்கரை பயன்படுத்துகின்றனர்.

டீ, காபி போன்ற அனைத்திற்கும் அதிக அளவு சர்க்கரையை சேர்த்து உண்டு வருகின்றனர். அப்படி அதிக அளவு சர்க்கரை உடலில் சேர்வதால் பல வகையான கேடு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிக சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் , மாரடைப்பு , வாந்தி ,சிறுநீர் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகிறது.

அந்தவகையில் தற்போது அதிக அளவு சர்க்கரை தவிர்ப்பதால் நம் சில பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

நன்மைகள்:

மாரடைப்பு பாதிப்பு குறையும்.

சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிக்கும் அபாயம் மிகவும் குறையும்.

கொழுப்பு சார்ந்த கல்லீரல் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது.

உடலின் சக்தி அதிகரிக்கும்.

மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

மன உளைச்சல் இருக்காது.

பசி குறைவாக இருக்கும்.