பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிந்துகொள்வோம்*
1; பொதுவாக பாய் தரையில் விரிப்பதால்...நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"
2; பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எழும்பு நேர்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்க்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகு வலி வராமலும் தடுக்கும்,]
3; கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும், [பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எழும்பு விரிகிறது, இடுப்பு எழும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்]
4; மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு,
5; பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து ஞாபக சக்தியை தருகிறது, [பாயில் தலையணி இல்லாமல் உறங்குவதே சிறந்தது,]
6; ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்,
7; பாய் உடல் சூட்டை உள் வாங்கக்கூடியது,
8; பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசை கிடையாது,
9; ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது,
10; கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்...
*உடல் உஷ்ணம்,வதையும்...
*உடலின் வளர்ச்சி,யும்...
*ஞாபக சக்தி,யையும்...
*மன அமைதி,யும்...
*நீண்ட உடல்/மன ஆரோக்கியத்தையும் தருகிறது,
Friday, 30 June 2017
பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும்
Thursday, 22 June 2017
காலைக் கடன்
காலைக் கடன்’... இந்த வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை. உடனே இந்தக் கடனை பைசல் செய்யாவிட்டால், வட்டியைக் குட்டியாகப் போட்டு வாழ்வையே சிதைத்துவிடும். மலச்சிக்கல், கடன் சுமையைப்போல பல நோய்களைப் பிரசவித்து, நம் நல்வாழ்வுக்கே சிக்கலைத் தந்துவிடும். இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அலங்காரமாக விற்கப்படும் `ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை, நம் ஜீரண நலத்துக்குச் சிக்கலை ஏற்படுத்துபவை. காலை எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை.
நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகியவலியுடன் கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் ‘மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பர்ய மருத்துவம் அனைத்துமே, எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகின்றன. ‘கட்டளைக் கலித்துறை’ நூல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்கிறது. சித்த மருத்துவ, `நோய் அணுகா விதி’, மலத்தை அடக்கினால் ஏற்படும் பின் விளைவுகளைச் சொல்கிறது...
`முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும்
தலைவலி மிக உண்டாகும்
சத்தமானபான வாயு பெலமது குறையும்
வந்து பெருத்திடும் வியாதிதானே...’ என்கிறது.
மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை, நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான் முக்கியமான முதல் படியாக சித்த மருத்துவமும், தமிழர் வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன.
இனி, மலச்சிக்கல் தீர கவனிக்கவேண்டிய விஷயங்கள்...
*வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம் எனும் மனோபாவம் எல்லோரிடமும் வலுத்து வருகிறது. இது தவறு. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்வோர் வரை பலருக்கும் காலைக் கடன் கழிப்பது கடைசிபட்சமாகிவிட்டது. பின்னாளில் இதுவே பழக்கமாகி, காலைக்கடன் பலருக்கும் மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது. இப்படி, `அதுதான் போகுதே... அப்புறமென்ன?’ என அலட்சியப்படுத்துவதுதான் பல நோய்களுக்கும் ஆரம்பம். காலைக் கடனை காலையிலேயே தீர்த்துவிடுவதே சிறந்தது.
* அதிகாலையில் மலம் கழிப்போருக்குத்தான், பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்; வாயுத்தொல்லை இருக்காது; அறிவு துலங்கும்.
* `சாப்பிட்ட சாப்பாட்டுல கொஞ்சம் துவர்ப்பு கூடிருச்சோ... அதனாலதான் மலச்சிக்கலோ...’ என வீட்டிலுள்ள பெரியவர்கள் யோசிப்பார்கள். அடுத்த முறை வாழைப்பூ சமைக்கும்போது, அளவைக் குறைத்து சமைப்பார்கள். இந்தச் சமையல் சாமர்த்தியம், `டூ மினிட்ஸ்’ சமையலில் கைகூடாது. எனவே, துரித உணவை கொஞ்சம் ஓரமாக வைப்பதே நல்லது.
வாழைப்பூ
* பாரம்பர்யப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத `அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே சங்கடப்படுத்தும். எனவே, வாயுவையும் அடக்கக் கூடாது.
* பள்ளிவிட்டு வந்ததும், புத்தகக் கட்டோடு நேரே கழிப்பறைக்கு ஓடும் குழந்தைக்கு, மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசியெடுக்கும். பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திரும்பக்கொண்டு வந்துவிடுவார்கள். எனவே, குழந்தைகளை காலைக்கடனைப் பின்பற்றச் செய்யவேண்டியது அவசியம்.
* நாள்பட்ட மூட்டுவலி, பக்கவாதம், தோல் நோய்கள் அனைத்துக்கும் உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி கொடுப்பார்கள். இது பல ஆயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு வருடத்துக்கு இரண்டு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வது நல்லது. அதற்காக அதைக் கடையில் வாங்கி எடுத்துக்கொள்ளக் கூடாது. குடும்ப மருத்துவரிடம் சென்று, நாடி பார்த்து, உடல் வலிமை பார்த்து, உடலுக்கு ஏற்ற பேதி மருந்தை எடுப்பதே நல்லது.
* இரவில் படுக்கப்போவதற்கு முன்னர் இளஞ்சூடான நீர் இரண்டு டம்ளர் அருந்துவதும், காலை எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு டம்ளர் சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.
கிஸ்மிஸ்
* குழந்தைகளுக்கு 5-10 உலர் திராட்சைகளை (கிஸ்மிஸ், அங்கூர் திராட்சை) 2-3 மணி நேரம் மாலையில் ஊறவைத்து, பின் அதை நீருடன் நன்கு பிசைந்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* கடுக்காய் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுத்து, பொடித்த பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு முதியோர் சாப்பிடலாம். மலம் கழிப்பது எளிதாகும்.
* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த தூள் (விதை நீக்கிய பின்), ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய மிக முக்கிய மருந்து; உன்னதமான உணவு. மாலையில் இந்தப் பொடியை மாலையில் ஒரு டீஸ்பூன் வரை சாப்பிட்டால், காலையில் மலத்தை எளிதாகக் கழியவைக்கும். பல ஆரோக்கியங்களை உடலுக்குத் தரும். இதை `திரிபலா பொடி’ என்றும் சொல்வார்கள்.
உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் பிரச்னையைத் தீர்க்க முடியும்
காய்ச்சல், தலைவலியில் இருந்து ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் வரை, நோயை விரட்ட உணவு ஒரு முக்கிய அம்சம். ஆஸ்துமா சிகிச்சையில் உணவு ஒரு மருந்தும்கூட! ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், சில உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் பிரச்னையைத் தீர்க்க முடியும்.
* காலையில் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பல் துலக்கியதும், முதலில் இரண்டு அல்லது மூன்று குவளை வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லது. அதன் பிறகு, பால் கலக்காத தேநீர் சிறந்தது. வெளுத்த பாலைவிட கறுத்த தேநீரும் காபியும் எவ்வளவோ மேல்!
* இரவு நேரத்தில் மூச்சிரைப்பால் (Wheezing) சிரமப்படுகிறீர்களா? கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை உதிர்த்துப் போட்டுக் கஷாயமாக வைக்கவும். இனிப்புச் சுவைக்கு தேன் சேர்த்து அருந்தவும். இரவில் நெஞ்சில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி, உடனடியாக சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஓரிரு மாதங்களுக்குத் தொடர்ந்து இந்தக் கஷாயத்தைக் காலை பானமாகக் குடித்துவந்தால், இரைப்பு கண்டிப்பாகக் கட்டுப்படும். கூடவே தும்மல் இருந்தால், முசுமுசுக்கை இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
* இரவில் மூச்சிரைப்பால் அவதிப்படுபவருக்குக் காலை உணவு சாப்பிடப் பிடிக்காது. பசியும் இருக்காது. எளிதில் செரிக்கக்கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல் உப்புமா, மிளகு ரச சாதம், இட்லி இவற்றில் ஏதாவதொன்றைச் சாப்பிடலாம். ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் அரை வயிற்றுக்குச் சாப்பிடுவது நல்லது. இடையிடையே பால் கலக்காத தேநீர் அருந்தலாம்.
* மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரைக்காய், புடலங்காய், சௌசௌ போன்றவற்றைத் தவிர்த்துவிடலாம். மிளகு, தூதுவளை ரசத்துடன் நிறைய கீரை, காய்கறிகள் சேர்த்துச் சாப்பிட வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், ஜீரணத்தை வேகப்படுத்தி எளிதில் மலம் கழிக்கவைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வாயுவை உண்டாக்கும், செரிக்கத் தாமதமாகும் கிழங்கு வகைகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள் நல்லதல்ல. மோர் சேர்ப்பது தவறல்ல. தயிரைத் தவிர்க்கலாம்.
* சில வகைக் காய்கள் சிலருக்கு அலர்ஜியாக இருக்கலாம். அவரவர்கள் அதை அடையாளம் காண வேண்டும். அதே நேரம், தன் நாவுக்குப் பிடிக்காததை எல்லாம், `அய்யோ... எனக்கு பாகற்காய் அலர்ஜி! வெண்டைக்காய் சேராது’ என ஒதுக்கத் தொடங்கினால், இழப்பு கூடும்; இழுப்பும் கூடும்.
* மாலையில் தேநீரோ, சுக்கு-தனியா கஷாயமோ அருந்துவது இரவில் படும் மூச்சிரைப்பு சிரமத்தைப் பெருவாரியாகக் குறைக்கும். இரவு உணவை ஏழரை மணிக்கு முன்னதாகச் சாப்பிட்டுவிடுவது நல்லது. இரவுக்கு கோதுமை ரவை கஞ்சி, இட்லி நல்லது. பரோட்டா, பிரியாணி... கூடவே கூடாது! காலி வயிற்றோடு தூங்கச் செல்வது ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.
* தினமும் மாலை வேளையில் நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம் சாப்பிடலாம். மருந்து எடுக்கும் காலங்களில் ஆரஞ்சு, திராட்சைப் பழங்களைத் தவிர்க்கவும். பகல் நேரத்தில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாசித் துண்டுகளில் சிறிது மிளகுத் தூள் தூவி சாப்பிடலாம்.
* இனிப்புப் பண்டங்கள் ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல. குளிர்காலத்தில் இனிப்பு கூடவே கூடாது. பெரியவர்கள், மதிய உணவுக்குப் பின்னர் இரண்டு வெற்றிலைகளைச் சுவைப்பது ஆஸ்துமாவுக்கு நல்லது. ஆனால், அதில் புகையிலையை சேர்க்கக் கூடாது.
* ஆஸ்துமா உள்ளவர்களின் மெனு கார்டில் கட்டாயம் இடம்பிடிக்க வேண்டியவை... சிவப்பரிசி அவல் உப்புமா, புழுங்கல் அரிசிக் கஞ்சி, திப்பிலி ரசம், தூதுவளை ரசம், முசுமுசுக்கை அடை, முருங்கைக்கீரைப் பொரியல், மணத்தக்காளி வற்றல், லவங்கப்பட்டைத் தேநீர்..!
கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம்
கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம்
குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்றுக்கொள்வது பெரிய விஷய அல்ல. அந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்குதான் மிகவும் கஷட்ப்பட வேண்டியதாகிவிடும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு வயசு ஆகும்வரை சொல்லவே வேண்டாம்... எதுக்கு அழகிறது, பசிக்கிறதா அல்லது ஏதேனும் கடித்து விட்டதானு தெரியாம தாய்மார்கள்
முழிவேண்டியதுதான்ஐந்து மாதக் குழந்தை வயிறு வலியால் அழுதால் கடுக்காயை சந்தனம் மாதிரி உரசி குழந்தையோட வயித்துல பூசி விடவேண்டும்.. ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடலாம்.. இரண்டு நிமிடங்களில் குழந்தையின் வயிற்று வலி நீங்கி குழந்தை சிரிக்கும். சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, உரசிய விழுதை குழந்தையோட நாக்குல தடவினால் பிரச்னை சரியாகிடும்.
சின்னக் குழந்தைகள் வாந்தி பண்ணினால், வசம்பை சுட்டு பொடி செய்து ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினால் உடனே குணம் கிடைக்கும். கிராமங்களில் வசம்புக்கு ‘பிள்ளை வளர்ப்பான்’ என்றொரு பெயரே உண்டு. சூடு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போகுதா கவலைப்பட வேண்டாம். ஜாதிக்காயை கல்லில் உரைச்சு தாய்ப்பால்ல கலந்து குடுத்து பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூன்று வேளையும் இப்படிக் கொடுத்து வந்தால் மழுவதும் குணமாகிடும். ஆனால், ஜாக்கிரதை! ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது. ஜாஸ்தியாகிடுச்சினா குழந்தைக்கு மயக்கம் வரவும் வாய்ப்பு இருக்கு.
கைக்குழந்தைகளுக்கு மாந்தம், உப்புசம் வராமல் தடுக்கும் உரை மருந்து
ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவைத்து, அதை எடுத்து வெயிலில் சுக்கா காய வைக்கவேண்டும். குழந்தையை தலைக்கு குளிப்பாட்டுகிறபோது இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும்.
ஆறு மாசக் குழந்தைகளுக்கு பத்து நாளுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு குடிக்க வைத்தால் குழந்தையின் வயிற்றில் வாயு சேராமல்
இருக்கும். பிறந்த குழந்தைகளுக்கு தலையில நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது! தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தையின் தலையிலும், உடம்பிலும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வைத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விட்டு அது கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.
குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். குளிக்க வைக்கும் போது எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்த்து குளிப்பாட்டணும். இப்படி செய்து வந்தால் குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராது, மேனி பட்டு போல இருக்கும். மார்கழி பனியில் கைக்குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில், 2 பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா... சளி அனைத்தும் மலத்தில் வெளியாகிவிடும்.
அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவுகள், பானங்கள்!
அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவுகள், பானங்கள்!
மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, விதவிதமான நோய்களைக் கரம்பிடித்து அழைத்து வந்து நம்மிடம் சேர்க்கிறது. அவற்றில் முக்கியமான ஒன்று, `பெப்டிக் அல்சர்’ எனச் சொல்லப்படும் வயிற்றுப்புண்.
அல்சர்
‘அனுபவித்தவர்களுக்குத்தான் அல்சரின் வேதனை புரியும்’. சாப்பிட வேண்டும் என ஆசை இருந்தாலும், சரியாகச் சாப்பிட முடியாது. வலி படுத்தி எடுத்துவிடும். இது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகைப் புண். இது பாதிக்கப்பட்டவரைப் பலவிதத் தொந்தரவுகளுக்கு ஆளாக்கும். ஆன்டாசிட்கள் (Antacids) அல்லது ஆன்டிபயாட்டிக்ஸ்களைப் (Antibiotics) பயன்படுத்தி இதன் வீரியத்தைக் குறைக்கலாம்; அல்சர் வருவதற்கான அறிகுறிகள் தெரியும்போதே தடுக்கலாம்.
அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளைச் சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். உணவுப் பழக்கத்தில் கவனமாக இருந்தாலே அல்சர் பிரச்னையில் இருந்து எளிதாக விடுபட்டுவிடலாம். உணவுகளில் கவனமாக இருந்தால், செரிமானமின்மை, வாயுத்தொல்லை, வாந்தி எடுத்தல், உணவைப் பார்த்தாலே அருவருப்பாக உணர்தல் ஆகியவை தவிர்க்கப்படும். வயிற்றில் ஏற்படும் கடுமையான எரிச்சல் உணர்வையும் இதனால் தடுத்துவிடலாம். அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவுகள், பானங்கள் என்னென்ன?
ஆல்கஹால்
‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பது குழந்தைக்குக்கூடத் தெரியும். இன்றைக்கு அந்த அளவுக்கு நம்மிடையே குடிப்பழக்கம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து மதுப்பழக்கம் உள்ள ஒருவருக்கு, பலவகை நோய்களுடன் அல்சரும் வந்து சேரும். ஏற்கெனவே அல்சர் இருப்பவர்கள் மது இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது. குடிப்பழக்கத்தால் நம் வயிற்றில் அமிலம் மேலும் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.
காரமான உணவுகள்
அல்சருக்கு ஆகவே ஆகாதது காரம். காரமான உணவுகளும் அதிக மசாலா சேர்த்த உணவுகளும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எதுக்களிப்பை ஏற்படுத்தும். அதனால் வயிற்றின் ஓரங்கள் எல்லாம் பாழாகும். ஏற்கெனவே அல்சர் இருப்பவர்களின் நிலை இன்னும் மோசமாக மாறிவிடும். எனவே, அதிகம் மிளகாய்த்தூள், மிளகாய் சேர்த்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
காபி
காபி
நீங்கள் ஒரு காபி பிரியரா? கண்டிப்பாக நீங்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘தொடர்ந்து காபி குடிப்பதாலும் பெப்டிக் அல்சர் ஏற்படும்’ என்கிறது நவீன மருத்துவம். காபிக்குப் பதிலாக, வயிற்றுக்கு இதம் தரும் மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்ற வேறு ஏதேனும் பானங்களை அருந்தலாம். இவற்றால் வயிற்றுப் புண் ஆறவும் வாய்ப்புள்ளது.
சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சி வயிற்றுப் புண்ணுக்கு பெரிய காரணமாக இருக்காது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. இந்த இறைச்சி, வயிற்று ஓரங்களைப் பழுதடையச் செய்யும். இதில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்றிலேயே அதிக நேரம் இறைச்சி உணவு தங்கிவிடும். இதனாலும் வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்க நேரிடும். இதுவும் அல்சரை அதிகரிக்கச் செய்யும்.
குளிர்பானங்கள்
சோடா, குளிர்பானங்கள்
காபி குடிப்பவராய் இல்லாமல் இருந்தாலும், அதற்குப் பதிலாக விதவிதமான குளிர்பானங்கள் குடிப்பவராக இருந்தாலும் அதுவும் பிரச்னையே. சோடாவிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் சிட்ரிக் அமிலம், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கக்கூடியது. இது செரிமானத்திலும் பிரச்னையை ஏற்படுத்தும். அல்சர் இருப்பவர்கள் சோடாவையோ, குளிர்பானங்களையோ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பால்
பால்
அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலர் பாலைக் குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால், பாலில் இருக்கும் புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் வயிற்றுப் புண்ணுக்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். பால், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
எவற்றை எல்லாம் சாப்பிடக் கூடாது என்று பார்க்கும்போதே, எந்த உணவையெல்லாம் அதிகமாக உட்கொள்ளலாம் என்பதையும் பார்க்க வேண்டும். முதலில் அல்சர் உள்ளவர்கள் நேரத்துக்குச் சாப்பிடவேண்டியது அவசியம். நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் செரிமானத்தை சீராக வைத்திருந்து, அல்சரில் இருந்து காக்கும். முட்டை, தயிர், மீன், பீன்ஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளலாம். உணவில் புதினாவைச் சேர்த்துக்கொள்ளலாம். தேங்காய்ப்பால், மணத்தக்காளிக்கீரை ஆகியவை வயிற்றுப் புண்ணை ஆற்றும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். தேவையற்ற உணவுகளைத் தவிர்ப்பது விரைவில் அல்சர் பிரச்னையிலிருந்து மீள உதவும்.
ஃபுட் ஸ்டெயிலிங், ஃபுட் காம்பினேஷன், ஃபுட் டெகரேஷன் என்ற பெயரில் புதுப் புது யுக்திகளை பயன்படுத்தி புதுமையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
ஃபுட் ஸ்டெயிலிங், ஃபுட் காம்பினேஷன், ஃபுட் டெகரேஷன் என்ற பெயரில் புதுப் புது யுக்திகளை பயன்படுத்தி புதுமையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. பார்க்க அழகாகவும், நாவிற்குச் சுவையாகவும் இருந்தால் மட்டும் போதும் என நினைத்து தயாரிக்கப்படும் உணவுகள் நம் ஆரோக்கியத்தை பதம் பார்க்கின்றன.
ஒரு வாரமாகச் சேர்த்து வைக்கப்பட்ட சிக்கனில் கலரும், வினிகரும் சேர்த்தால் பழைய சிக்கன் கூடப் புதிய சிக்கனாக நமது ப்ளேட்களில் பரிமாறப்படுகிறது. புதிய பரிணாமத்தில் உணவுகளாகி இன்றைய தலைமுறையை ஈர்த்தாலும்க் இது சரியான உணவு முறையா என்பது கேள்விக்குறியே. ஆனால் இது நமக்கு உணவா விஷமா? என்பதற்கு விளக்கமளிக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால்.
ரச (சுவை), குண (செயல்பாடு), வீரிய (தன்மை), விபாக (செரிமானம்) மற்றும் பிரபாவம் (சிறப்பான செயல்பாடு) போன்ற குணங்கள் கொண்டவைதான் நாம் சாப்பிடும் உணவுகள். இவ்வைந்து குணங்களும் சேர்ந்துதான் உடலில் உணவுகளைச் செரிக்க உதவுகின்றன.
காலத்திற்கேற்ப உணவுகள்
அந்தந்த காலத்தில் உணவுகளைச் சாப்பிட வேண்டும். காலம் கடந்து சாப்பிடுதல் தவறு. இரவில் தயிர் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்னை அதிகரிக்கும். தயிரை இரவில் சாப்பிட்டால், ஒரு மைக்ரோ அளவிற்குக் கூடச் செரிக்காது. இரவில் அவசியம் தவிர்க்க வேண்டிய உணவுகளில் தயிரும், கீரைகளும் உள்ளன.
கோடை காலம்
இக்காலத்தில் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. சூழலும் வெப்பமாக இருப்பதால் எளிதில் செரிக்கக் கூடிய உணவை உண்ணுவது அவசியம்.
மழை காலம்
அடிக்கடி பசி எடுக்கும் காலம் இது. ஆகையால் நீண்ட நேரம் செரிமானம் ஆகும்படியான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
நிலத்திற்கேற்ப உணவுகள்
ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு சுவை இருக்கும். அந்தந்த இடங்களைப் பொறுத்து அங்கு விளையும் பொருட்களின் சுவை மாறுபடும். அதுபோல நம் நாட்டில் விளையும் காய், கனிகளை உண்ணுவதே நல்லது. வெளிநாட்டில் விளைய கூடியவைகளைச் சாப்பிடுவதால் உடலுக்குப் பெரிய நன்மைகள் எதுவும் சேராது. நாட்டுப் பழங்கள், நாட்டுக் காய்கறிகள், கீரை வகைகள், பருப்புகள், எண்ணெய் வகைகள் என அனைத்தும் நம் நாட்டில் விளையக் கூடியதாகவும், தயாரிக்கப்படுவதாகவும் இருப்பதே ஆரோக்கியத்தை அளிக்கும்.
எதிர் எதிர் குணங்கள் கொண்ட உணவுகள்
குளிர்ச்சியும் சூடும் போன்ற எதிரெதிர் குணங்கள் கொண்ட உணவுகளைச் சேர்த்து சாப்பிடுதல். பால் மற்றும் கொள்ளு, தேன் மற்றும் நெய் போன்ற இரு குணங்கள் கொண்ட உணவு ஸ்லோ பாய்சன் (slow poison) ஆகும். சில மூலிகை மருத்துவத்தில் தேனும் நெய்யும் சேர்க்கப்பட்டுச் சாப்பிடுவது வழக்கம். அவர்கள் கூடச் சம அளவு தேனையும் நெய்யையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இரண்டில் ஒன்றின் அளவை (2:1) குறைத்து சாப்பிடுவது அவசியம். இல்லையெனில் இதற்கு ஒரு தனி மருத்துவம் செய்ய வேண்டியிருக்கும்.
கெட்டுபோன உணவுகள்
சமையலில் தயிர் சேர்க்கப்படுவதைப் பல டிவி சேனல்களில் வரும் சமையல் கலை வல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர். அதை மக்களுக்கும் எடுத்துரைகின்றனர். சுவைக்காகவும், மென்மைக்காகவும் எனப் பரிந்துரைக்கின்றனர். உண்மையில் இது தவறு. தயிரை சூடுபடுத்தக் கூடாது அது சூடாகும் போது திரியும். திரியப்படும் தயிர் அலர்ஜிகளை ஏற்படுத்தும். உடலில் சில ப்ளாக்கேஜ்களை (blockage) உண்டு பண்ணும். மோர் குழம்பு சாப்பிடுவது நமது பாரம்பரிய பழக்கம். ஆனால், ஸ்டவ்வை அனைத்த பின்பே மோரை ஊற்றுவோம். அடுப்பிலிருக்கும் போதே ஊற்ற மாட்டோம், அப்படிச் செய்யவும் கூடாது. அவ்வுணவு கெட்டு போன உணவாக மாறிவிடும். மோரை தாளித்துச் சாப்பிடுவது நல்லது இஞ்சி, கடுகு, கொத்தமல்லி, பெருங்காயம் எனத் தாளித்துக் குடித்தல் உடலுக்கு நன்மையைச் செய்யும்.
மில்க் ஷேக்குகள்
இனிப்பு சுவை கொண்ட பழங்களுடன் (ஆப்பிள், வாழை) பால் சேர்ப்பது ஒரளவிற்குப் பரவாயில்லை. அதாவது கல்லை கூடச் செரிமான சக்தியால் கரைக்கக் கூடிய ஆரோக்கியமான உடலுடையோர் தாராளமாகச் சாப்பிடலாம்.
பழங்களுடன் பால் சேர்க்கும் மில்க் ஷேக்கிற்குத் தனி வரவேற்பு உண்டு. சிட்ரஸ் (எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு) பழங்களுடன் பால், மெலான் பழங்களுடன் பால் (கற்பூரப்பழம் (muskmelon), தர்ப்பூசணி, பப்பாளி, கிர்ணி) போன்றவற்றைச் சேர்க்கவே கூடாது. புளிப்பு சுவை கொண்ட மாதுளை பழத்துடன் பால் சேர்த்து மில்க் ஷேக்காகக் குடிக்கக் கூடாது.
செய்ய வேண்டியவை
நல்லெண்ணெய், பசு நெய் போன்றவை உடலுக்கு நன்மையைச் செய்யும். ரீபைண்டு எண்ணெய்யை அளவோடு பயன்படுத்துதல் நன்மையை அளிக்கும்.
பிரியாணி, ஹெவியான உணவுகள் சாப்பிட்ட பின் சூடான டீ குடிக்கலாம். கூல் டிரிங்ஸ் கூடாது.
மாவுச் சத்துடன் பருப்பைச் சேர்க்கலாம். பருப்பை வேக வைக்கும் போது மஞ்சள், நல்லெண்ணெய், வெந்தயம், பூண்டு தட்டிப் போட்டு வேக வைக்க வேண்டும்.
மாவுச் சத்துகளும், காய்கறிகளும், ப்ரவுன் அரிசியும் சேர்த்துச் சாப்பிடலாம். புரதச் சத்து உணவையும் காய்கறிகளையும் சேர்க்கலாம்.
கஞ்சி குடிப்பதற்கு முன்னரும் பின்னரும் நீர் அருந்துதலை தவிர்க்கலாம்.
காலையில் எழுந்தவுடன் பருவகால (seasonal fruits) பழவகைகளை ஒரு கப் அளவிற்குச் சாப்பிட்டு வரலாம்.
பழச்சாறாகவோ, மில்க் ஷேக்காகவோ சாப்பிடுவதை விட பழங்களை தனியாக சாப்பிடுவதே நல்லது.