Monday, 5 June 2017

கோரைக் கிழங்கு

கோரைக் கிழங்கு ஒரு பங்கும், வெள்ளைப் பூண்டு இரண்டு பங்குமாக வைத்து நசுக்கி, எலுமிச்சை பழ அளவு எடுத்து, பாலில் போட்டுக் காய்ச்சி, காலை மாலை சாப்பிடவும்.

1. கோரைக் கிழங்கு ஒரு பங்கும், வெள்ளைப் பூண்டு இரண்டு பங்குமாக வைத்து நசுக்கி, எலுமிச்சை பழ அளவு எடுத்து, பாலில் போட்டுக் காய்ச்சி, காலை மாலை சாப்பிடவும்.

2. மூலப் புண் ஆறுவதற்கு பாவட்டை இலையை அவித்துக் கட்டுவதே போதுமானது. இரண்டே வேளையில் குணம் காணலாம்.

3. மூலநோய் உள்ளவர்கள், இப்போது காப்பிக் குடிப்பவர்களாக இருந்தால், அதை உடனே நிறுத்திவிட்டு காலையில் குளித்தவுடன் பழைய சோறு,  தயிர், சுண்டை வற்றல், சிறிய வெங்காயம், நீராகாரம் ஆகியயவைகளைச் சாப்பிட வேண்டும்.

4. நெல்லி முள்ளியும், வெந்தயமும் வறுத்துப் பொடி செய்து தயிரில் கலக்கி உண்டால், மூலக் கடுப்பு உடனே விலகும். இரண்டு வேளைக்கு மேல் மருந்து தேவையிராது. காலை நேரத்தில் மட்டும் அருந்தவும்.

5. அறுகம்புல்லைத் தளிராக மூன்று அல்லது ஐந்து இலையுள்ளதாக எடுத்து வந்து அரைத்துப் பசுவின் பாலில் கரைத்துக் குடிக்க மூலக்கடுப்பு, இரத்தம் விழுதல், மூல முளை, தேகக காங்கை முதலியவை தீரும்.  ஐந்து நாளைக்கு மேல் சாப்பிட வேண்டியதில்லை. காலையில் ஒரு வேளையே போதுமானது. நல்லெண்ணெய், புகையிலை, புளி, மிளகாய் கூடாது.

6. பால்துத்தி இலையைக் கொண்டு வந்து, பசுவின் பாலைத் தெளித்து வதக்கிக் கட்ட, மூலக் கடுப்பு உடனே தீரும்.

7. துத்தி இலையைக் கொண்டு வந்து, ஆமணக்கு எண்ணெய் ஊற்றி இரும்புக் கரண்டியில் வதக்கிக் கட்ட மூலநோய் நீங்கும். கட்டி, ரணம் முளைகளும் நீங்கும்.

No comments:

Post a Comment