Saturday, 3 June 2017

பாசிப்பயறு மாவு!!!

பாசிப்பயறு மாவு!!!

பாசிபயறு மாவை அவர்கள் குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக தேய்த்துக் குளிப்பார்கள்.

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் மறையும்
பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும்.

புத்துணர்ச்சியான சருமம்
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களின் முகம் எப்போதும் பொலிவிழந்து புத்துணர்ச்சியின்றி இருக்கும். அத்தகையவர்கள், பாசிப்பயறு மாவை அன்றாடம் பயன்படுத்தினால், அழகு அதிகரித்து காணப்படும்.

மென்மையான சருமம்
பாசிப்பயறு மாவை தினமும் உடல் முழுவதும் பூசிக் குளித்து வந்தால், சருமம் மென்மையாக இருப்பதோடு, உடல் சூடு குறையும்.

சரும சுருக்கம் நீங்கும்
அன்றாடம் பாசிப்பயறு மாவை முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.

கருமை நீங்கும்
வெயிலால் கருமையடைந்த சருமத்தை வெள்ளையாக்க, பாசிப்பயறு மாவுடன், பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, மாஸ்க் போட்டு வந்தால், கருமை நீங்கும்

No comments:

Post a Comment