Wednesday, 19 July 2017

எப்போதெல்லாம் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்?

எப்போதெல்லாம் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்?

• கழிவறைக்கு சென்று திரும்பும் போது.
• செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளை தொட நேர்ந்த பின்பு.
• தும்மல், இருமல் சமயங்களிலும், மூக்கு ஒழுகுவதை துடைக்கும் சமயங்களிலும் கைகழுவுவது அவசியம்.
• வெளியே பயணங்கள் சென்று திரும்பிய உடன் கைகளை சுத்தம் செய்தபின் மற்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.
• கழிவுகளை சுத்தம் செய்தால் நிச்சயம் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
• சாப்பிடும் முன்பும், பின்பும் அவசியம் கைகழுவுங்கள்.

• காயங்களுக்கு மருந்திடும் முன்பும், பின்பும், நோய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும் முன்பும், பின்பும் கைகால்களை சுத்தம் செய்வது நல்ல பழக்கம்.
• காண்டாக்ட் லென்ஸ் கழற்றி மாட்டினாலும், பொது இடங்களில் கழிவறைகளை பயன்படுத்தினாலும், குழந்தைகளை எடுக்கும் முன்பாகவும் கை கழுவுவது அவசியம்.
• கை கழுவியவுடன் உலர்ந்த துண்டால் கைகளை துடைப்பது முக்கியம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது ஒரு வழி

ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம்.

உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை, சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ரத்தமும் அதிகமாக ஊறும். பேரீச்சம்பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த, 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவின் நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுற்றி உள்ள இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து, 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும். வாத நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்து போகும்.

பசலைக் கீரை, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக் கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் ரத்த அணுக்களையும் அதிகரிக்கும்.

கீரைகள், செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும். உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து இரும்புசத்தாகும். இந்த சத்து, எலும்புகளை வலுவாக்குவதுடன், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை வினியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால், ரத்த அணுக்கள் குறைந்து, அனீமியா நோய் ஏற்படுகிறது.

அதனால் இரும்புச்சத்துக்கள் நிறைந்த இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரீச்சம்பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு சத்துள்ள உணவுபொருட்களை உட்கொண்ட பின்னர், அவை செரிமானம் ஆகும் வகையில் உடல் உறுப்புகளை செயல்பட செய்வதும் அவசியம்.

இரத்தம் சுத்தமில்லாமல்

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

வாழைத்தண்டை

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். வாழைத்தண்டு தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கொழுப்பை கரைக்கும் வாழை தண்டு தயிர் பச்சடி
தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு – ஒரு பெரிய துண்டு
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – கால் டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்
தயிர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வாழைத்தண்டை நாரை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வாழைத்தண்டை வேக வைத்துக் கொள்ளவும்.

* கடலைப்பருப்பை ஊற வைக்கவும்.

* உளுத்தம்பருப்பை சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

* ஊற வைத்த கடலைப்பருப்புடன், வறுத்த உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல், பச்சைமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து, வேக வைத்துள்ள வாழைத்தண்டில் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

* தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

* கடைசியில் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

* இப்போது வாழை தண்டு தயிர் பச்சடி ரெடி.

விரலை_வெட்ட_வேண்டாம்

#விரலை_வெட்ட_வேண்டாம்

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை எனில்

#ஆவாரம்_இலை,

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

 இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.
 
இதை அதிகம் பகிா்ந்து பலாின்
கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.!

Friday, 14 July 2017

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்

இன்றைய தொழில்நுட்பங்கள் நம் பண்டைய மரபின் நீட்சியை ஓரங்கட்டி, நமக்கு நல்வாழ்வு தரும் சில நல்ல விஷயங்களை மறக்கடிக்கச் செய்துவிட்டன. அவற்றில் ஒன்று, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக நம்மிடையே இருந்த சில தடுப்பு முறைகள்!

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரூசல் ஃபாஸ்டர் சமீபத்தில் தன் ஆய்வு முடிவை இப்படி ஒற்றைவரியில் கூறியிருக்கிறார்... ‘நான்கு மில்லியன் வருட மரபை மதிக்காத திமிர் உள்ள ஒரே உயிரினம், மனித இனம்தான்.’ கூடவே, தன் ஆய்வில், இரவில் சரியாகத் தூங்காமல் இருப்பவருக்கும், வேலை நிமித்தமாக இரவில் பணிபுரியும் ஊழியருக்கும் சாதாரண வயிற்று உபாதை முதல் மார்பகப் புற்றுநோய் வரை உருவாகும் ஆபத்துக்களையும் விவரித்திருக்கிறார். அதோடு, `குறைந்த ஆற்றலை எடுத்துக்கொண்டு ஒளியை உமிழும் எல்.இ.டி விளக்கு உள்ள ஸ்மார்ட்போன், டேப்லெட் வகையறாக்கள், தன் ஒளிக்கற்றையில் அதிகபட்ச நீல ஒளியைத் தந்து, இரவில் நெடுநேரம் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

போர்வைக்குள் ஒளிந்துகொண்டு ஸ்மார்ட்போனில் நடுநிசியையும் தாண்டி சாட் செய்தால், காதல் வருமா..? தெரியாது. ஆனால், கேன்சர் வரக்கூடும். இது போன்ற எத்தனையோ பிரச்னைகள் பிற்காலத்தில் வராமல் இருக்க, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது.

நோய் எதிர்ப்பாற்றல்

கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது.

மதுரை மாவட்டப் பகுதிகளில், பிறந்த குழந்தைக்கு, தாய்மாமன் `சேனை வைத்தல்’ என ஒரு சடங்கு இன்றளவும் நடைபெறுகிறது. அதில் சிலர், `சர்க்கரைக் (சீனி) கரைசலை’ இப்போது கொடுக்கிறார்கள். `சேனை வைத்தல்’ என்பது குழந்தைக்கு வெறுமனே இனிப்பு ருசியைப் பழக்கும் வெறும் சர்க்கரை மருந்து கொடுக்கும் மரபு அல்ல; `சேய் நெய்’ கொடுத்தல் என்பதே காலப்போக்கில், `சேனை கொடுப்பது’ என்றாகி, அதுவும் பின்னாளில் மேலும் மருவி, `சீனி கொடுப்பது’ எனச் சிதைந்துவிட்டது. `சேய் நெய்’ என்பது, குழந்தைகளுக்காக வீட்டிலேயே செய்யப்படும் மிகச் சிறந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து.

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகள் இரு வகைப்படும். ஒன்று... சளி, இருமலைத் தருவது. இன்னொன்று... வயிற்றுப்போக்கைத் தருவது. இந்த இரு வகைகளுக்கும் காரணமான நுண்ணுயிரிகளைச் செயல் இழக்கச் செய்யும் பல மூலிகைகளைக்கொண்டே இந்தச் `சேய் நெய்’ தயாரிக்கப்பட்டது. ஆடுதொடா, தூதுவளை, இண்டு, வேப்பங்கொழுந்து, கண்டங்கத்திரி... முதலான 57 வகை மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் மருந்து அது.

`57 வகை மூலிகைகளைத் தேடி காடு, மலையெல்லாம் அலைய வேண்டுமா?’... வேண்டியதில்லை. இன்னும் சில கிராம மக்களிடையே `உரை மருந்து’ எனும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழக்கத்தில் இருக்கிறது. இதை, சுக்கு, திப்பிலி, மாசிக்காய், அக்கரகாரம், அதிமதுரம், பூண்டு, கடுக்காய், நெல்லிக்காய், வசம்பு ஆகிய ஒன்பது மூலிகைகளைக்கொண்டு எளிதாகத் தயாரிக்கலாம்.

உரை மருந்து எப்படிச் செய்வது?

சுக்கின் மேல் தோலைச் சீவியும், கடுக்காய், நெல்லிக்காயை அவற்றின் விதைகளை நீக்கியும் வைத்துக்கொள்ள வேண்டும். வசம்பை அதன் மேல் தோல் கருகும் வரை சுட்டு எடுக்க வேண்டும். பிறகு, அனைத்தையும் சேர்த்து வறுத்து, பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை, அதிமதுரக் கஷாயத்துடன் சேர்த்து அரைத்து சிறுசிறு குச்சிகளாகச் செய்து காயவைத்துக்கொண்டால், உரை மருந்து தயார்.

இதைத் தாய்ப்பாலில் இழைத்து, குழந்தை பிறந்த மூன்றாம் நாளில் இருந்து கொடுக்கலாம். முதலில் ஓர் இழைப்பு, பிறகு இரண்டு இழைப்பு எனத் தொடங்கி, குழந்தை வளர வளர இழைப்பை அதிகமாக்கிக்கொள்ள வேண்டும். ஜீரண சக்தியையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கும் இந்த உரை மருந்து, அரசு சித்த மருத்துவமனைகளில் இலவசமாகவே கிடைக்கும்.

வசம்பு

வசம்பில் உள்ள நறுமண எண்ணெயில், `பீட்டா ஆசரோன்’ (Beta Asarone) எனும் நச்சுப்பொருள் இருப்பதாகச் சிலர் வாதிடுகிறார்கள். அது தவறு. எப்படியெனில், முதலில், வசம்பின் நறுமண எண்ணெயை நாம் பிரித்து உபயோகிப்பது இல்லை. அதோடு, வசம்பில் இருக்கும் அந்த எண்ணெயின் அளவும் மிகக் குறைவானது. அப்படிப் பிரித்த எண்ணெயிலும் மிக நுண்ணிய அளவே பீட்டா ஆசரோன் உள்ளது. அந்த ஆசரோனும், நாம் வசம்பைச் சுடுவதில் உண்டாக்கும் வெப்பத்தில் 100 சதவிகிதம் ஓடியே போய்விடும்.

குடல் பூச்சியில் இருந்து குடல் புற்றுநோய் வரை நோய் எதிர்ப்பாற்றல் கிடைப்பதற்கு நம் பாரம்பர்யம் சுட்டிக்காட்டுவது வேப்பங்கொழுந்தைத்தான். நல வாழ்வு குறித்த புரிதலும், அக்கறையும், அதற்கான மெனக்கெடலும் நம் சமூகத்துக்கு மிக அதிகம். அதைத் தொலைத்துவிடாமல் பாதுகாக்கவேண்டியது நம் அவசரத் தேவை!

உணவே மருந்து

உணவே மருந்து என்றும் மருந்தே உணவு என்றும் வாழ்வியல் வகுத்த பாரம்பர்யம் நமது. சத்துள்ள சிறுதானியங்கள் நம் உணவாக இருந்தன. அவற்றை உண்டு ஆரோக்கியம் காத்து அழகான வாழ்க்கை வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். இன்றோ நாகரிகம் என்ற பெயரில் ஃபாஸ்ட் ஃபுட், சாட் உணவுகள், கோலா பானங்கள் எனப் புதியதைத் தேடிப்போய் உடல்பருமன், சர்க்கரைநோய், இதயநோய், புற்றுநோய் என நோய் பெருக்கி விழி பிதுங்கி நிற்கிறோம். மறுபுறம் பூச்சிமருந்து தெளித்தும் செயற்கை உரமிட்டும் மண்ணை மலடாக்கியும் ஆற்றைச் சுரண்டி, குளங்களை ஃபிளாட்டுகளாக்கி நீர்நிலைகளை கபளீகரம் செய்தும் விவாசாயத்தையும் விவசாயியையும் நடுத்தெருவில் நிறுத்தி உள்ளோம். நாள்தோறும் தொடரும் விவசாயிகள் தற்கொலையும் பெருகிக்கொண்டே இருக்கும் லைஃப்ஸ்டைல் நோய்களும் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

தினை

ஆர்கானிக்குக்கு மாறுவோம்!

சிறுதானியங்கள் நம் ஆரோக்கியம் காக்கும் அற்புத வரங்கள். சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, சோளம், வரகு, பனிவரகு ஆகியவற்றை சிறுதானியங்கள் என்கிறோம். இவற்றில், கார்போஹைட்ரேட்,  புரோட்டின், நார்ச்சத்து, ஏ, சி, இ மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், தாமிரம், துத்தநாகம், மக்னீஷியம், மாங்கனீஸ் போன்ற தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. நம் உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சிறுதானியங்களிலேயே கிடைக்கின்றன என்பதுதான் இவற்றின் சிறப்பே.

கேழ்வரகு

மூன்று வேளையும் அரிசியால் செய்யப்பட்ட உணவுகளையே சேர்ப்பதால் உடலுக்கு கார்போஹைட்ரேட் மட்டுமே கிடைக்கும். இதற்கு மாற்றாக, குறைந்தபட்சம் தினசரி ஒருவேளை ஏதேனும் ஒரு சிறுதானியத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும், உரங்கள், பூச்சிகொல்லிகள் இல்லாத இயற்கைமுறையில் விளைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை உண்ணும்போது நம் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

சோளம்

இவற்றால் என்ன பலன்?

தமிழகத்தில் உள்ள விவசாயிகளில் சுமார் இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். சிறுதானியங்களின் உற்பத்தியும் குறைவே. ஏன் இந்த நிலை? நம் முன்னோர்கள் உண்ட சிறுதானியங்களைத் தவிர்த்துவிட்டு அனைவருமே அரிசியை நாடுவது ஒரு முக்கியமான காரணம். சிறுதானியங்களையும் ஆர்கானிக் உணவுகளையும் நம் தினசரி மெனுவில் கட்டாயம் ஆக்கும்போது, இவற்றுக்கான தேவை அதிகரிக்கும். சிறுதானியங்களைப் பயிரிட நிறைய நீர்வளமோ, நில வளமோ தேவை இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். குறைந்த அளவு நீரில், கிடைக்கும் இயற்கையான உரங்களைப் பயன்படுத்தினால்கூட சிறுதானியங்களை விளைவிக்க முடியும் என்கிறார்கள். எனவே, சிறுதானியங்களை உணவில் சேர்ப்பது நம் தனிப்பட்ட ஆரோக்கியம் காக்கும் விஷயம் மட்டும் இல்லை. நம்  விவசாயிகளையும் காக்கும் நல்லதொரு விஷயம்...

சிறிய முடிவுகள்தான் சில சமயம் பெரிய விஷயங்களைச் சாதிக்கும்! கரம் கோப்போம்... நலம் காப்போம்!

ஆரோக்கிய பானங்கள் பருகுவதை

சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் எத்தனையோ கதவுகளைத் திறந்திருக்கிறது. அவற்றில் ஒன்று, இளைஞர்கள் மத்தியில் கோலா பானங்களின் மேல் ஏற்பட்டிருக்கும் அசூயை. அவற்றின் மீதான மோகம் தவறு என்கிற புரிதல் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தாகத்தைத் தணிக்கவும் உடலைக் குளுமைப்படுத்தவும் நம்மூர் பாரம்பர்ய ஆரோக்கிய பானங்கள் பல இருக்கின்றன. அவற்றை அன்றாடம் பருகினால் ஏற்படும் நன்மைகள் பல. பாரம்பர்ய பானங்களில் முக்கிய இடம் வகிப்பது பானகரம். கோயில் திருவிழாக்களில் கோடை காலத்தில் நீர்மோர், பானகரம் வழங்கும் வழக்கம் நம் மக்களிடையே உண்டு. இவற்றோடு சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் பல சிறந்த பானங்களும் கோடை காலத்தில் உடலைக் குளிர்ச்சிப்படுத்துகின்றன, சில குளிர்காலத்தில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கின்றன. இந்தத் தமிழர் பாரம்பர்ய பானங்களை எப்படித் தயாரிப்பது, இவற்றைப் பருகுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போமா?

ஆரோக்கிய பானங்கள்

பானகரம்

பானகரம் அம்மன் கோயில் திருவிழாக்களில் பிரபலம். 
கொடம்புளி போட்டு கொதிக்கவைத்த நீரில் நாட்டு வெல்லம், எலுமிச்சைச் சாறு ஆகியவை கலக்கப்படும்.

சமீபகாலமாக, பானகரத்தில் தரமற்ற ஐஸ் கட்டிகள் கலக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க வேண்டும்.
இது கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், சிறுநீரக கல் பிரச்னை ஆகியவற்றைத் தடுக்க உதவும்.

பதநீர்

ஆரோக்கிய பானங்கள் தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது.

நம்மூர் கிராமபுறங்களில் கோடை காலங்களில் உடல் உஷ்ணம் தணிக்க அதிகமாகக் குடிக்கப்படும் இயற்கை பானம் பதநீர்.

பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளன. 

சமீபகாலங்களில் போலி பதநீர் தயாரிப்புப் பெருகிவிட்டது. சுக்ரோஸ் பௌடர், தண்ணீரில் கலக்கப்படுகிறது. இதுபோன்ற பதநீர்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

உண்மையான பதநீர் குடிக்கும்போது, துவர்ப்புச் சுவை இருக்கும். குடித்து முடித்ததும், இனிக்கும். சுக்ரோஸ் கலந்த பதநீர் குடிக்கும்போதே இனிப்பு தெரியும்.

தமிழ்நாடு பனைபொருள் கார்ப்பரேஷனில் தரமான பதநீர் விற்கப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள், பிரசவ காலத்தில் ஏற்படும், உடல்  உஷ்ணத்தைத் தவிர்க்க பதநீர் அருந்தலாம்.

கர்ப்பக் காலத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாகத் தேவைப்படும். மாத்திரைகளைவிட இயற்கையான பதநீர், தாய்க்கும் சேய்க்கும் சிறந்தது.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள், வயோதிகத்தினால் ஏற்படும் எலும்பு தேய்மானத்தைத் தடுக்க பதநீர் அருந்தலாம்.

தமிழர் பானங்கள்

நன்னாரி மணப்பாகு டானிக்

100 கிராம் நன்னாரியுடன் 400 மி.லி நீர் சேர்த்து கொதிக்கவைத்து  100 மி.லி-யாக வற்ற வைக்கவும் . இந்த நன்னாரி கஷாயத்துடன் வெல்லம் சேர்த்து பாகு பதத்துக்குக் காய்ச்சி பத்திரபடுத்தவும்.

இதனை காலை, மாலை இருவேளையும் குடித்துவர, பித்தம் நீங்கும். உடல் உஷ்ணம் குறைந்து, உடல் புத்துணர்ச்சி பெறும்.
பாகு, தமிழர்கள் பயன்படுத்தி வந்த இயற்கை பிரிசர்வேடிவ். பாகு சேர்ப்பதால், உணவுப் பொருட்களை ஆறு மாதங்கள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும்.

நீர்மோர்

தமிழர் திருவிழாக்களில் பானகரத்தோடு, நீர்மோர் வழங்கப்படும். தாகம், உடல் உஷ்ணத்தைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பானம் இது.

தயிருடன் நீர் சேர்த்து நன்றாக ஆற்றி, வெண்ணெயை வடிகட்டவும். நீர்மோரில் பச்சைமிளகாய் சேர்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக அரைத்த இஞ்சி, மிளகுத் தூள், கடுகு, புதினா சேர்க்கவும். இதனால் செரிமானம் எளிதாகும்.

காயகல்பம்

பஞ்சகோலம்

கொடிவேலி வேர் (Plumbago), சுக்குப் பொடி, திப்பிலிப் பொடி, திப்பிலி வேர்ப் பொடி, மிளகு வேர்ப் பொடி ஆகியவற்றைத் தலா ஐந்து கிராம் எடுத்துக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, 5-6 சிட்டிகை எடுத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்கலாம்.

இதை காலை, மாலை பருகி வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தன்மை உடையது பஞ்சகோலம். மழைக்காலத்தில் ஏற்படும் சளி தொடர்பான நோய்க்கும் இது சிறந்த மருந்தாகும்.

காயகல்பம்

காலை இஞ்சிச் சாறு, மதியம் சுக்குப் பொடி கலந்த நீர், இரவு கடுக்காய்ப் பொடி கலந்த நீர் குடித்துவந்தால் தீராத நோயெல்லாம் தீரும் என சித்த மருத்துவம் கூறுகிறது. இந்த முறைக்கு `காயகல்பம்’ என்று பெயர். இது சுக்குமல்லி காபி போன்ற ஓர் ஆரோக்கிய பானம். இதனைப்  பண்டையத் தமிழர்கள் பருகி வந்துள்ளனர்.  

காலநிலைக்குத் தகுந்தாற்போல், உடல் உஷ்ணத்தை அதிகரித்துக்கொள்வதே காயகல்பத்தின் அடிப்படைப் பண்பு.  இதில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ளதால், இவ்வாறு தொடர்ந்து குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இது போன்ற சத்தான ஆரோக்கிய பானங்கள் பருகுவதை நாமும் வழக்கமாக்கி கொள்வோம்