Wednesday, 19 July 2017

வாழைத்தண்டை

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். வாழைத்தண்டு தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கொழுப்பை கரைக்கும் வாழை தண்டு தயிர் பச்சடி
தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு – ஒரு பெரிய துண்டு
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – கால் டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்
தயிர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வாழைத்தண்டை நாரை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வாழைத்தண்டை வேக வைத்துக் கொள்ளவும்.

* கடலைப்பருப்பை ஊற வைக்கவும்.

* உளுத்தம்பருப்பை சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

* ஊற வைத்த கடலைப்பருப்புடன், வறுத்த உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல், பச்சைமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து, வேக வைத்துள்ள வாழைத்தண்டில் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

* தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

* கடைசியில் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

* இப்போது வாழை தண்டு தயிர் பச்சடி ரெடி.

No comments:

Post a Comment