Thursday, 19 April 2018

இலவங்கப் பட்டை

இலவங்கப் பட்டை என்பது சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும். இவை உடல் எடையை குறைப்பதற்கு மட்டும் பயன்படுவதோடு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதன் ஆரோக்கிய நன்மைகளால் இவை மருத்துவ மற்றும் அழகு பராமரிப்புகளில் பெரிதும் பயன்படுகிறது. இதிலுள்ள அரோமேட்டிக் பொருட்கள் சமைக்கின்ற உணவுகளில் சுவையை சேர்ப்பதோடு, நல்ல நறுமணத்தையும் கமழச் செய்கிறது. பிரியாணி போன்ற உணவுகளில் முக்கிய மசாலா பொருளாக இது உள்ளது. நாம் பண்டிகைகளின் போது தயாரிக்கும் இனிப்பு மற்றும் பலகாரங்களிலும் இதன் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், மக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும்அடங்கியுள்ளன.இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நமது இரத்த அழுத்தத்தையும், இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. மேலும் கருவுற்ற காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், சுவாச பிரச்சனை மற்றும் ஜீரண பிரச்சனை போன்றவற்றிற்கு மருந்தாகவும் செயல்படுகிறது. எனவே இப்படிப்பட்ட பட்டை தண்ணீரை தினமும் குடிப்பதால் நம் உடலில் உண்டாகும் அற்புத நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் பார்க்க உள்ளோம்.

உடல் எடை குறைப்புக்கு நல்லது பட்டை தண்ணீர் மற்றும் தேன் சேர்ந்த கலவை உடல் எடையை குறைக்க சிறந்த மருந்து. இவை நமது உடலில் உள்ள வேண்டாத நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது. இது நமக்கு வயிறு நிறைந்த தன்மையை கொடுப்பதால் நாம் அதிகமான நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது குறைக்கப்படுகிறது. இதனால் நமது உடல் எடையும் குறைகிறது.
மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தருதல் தேச தாவிரயியல் மையம் மேற்கொண்ட ஆராய்ச்சி படி பார்த்தால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த பட்டை தண்ணீரை குடிப்பதன் மூலம், அப்போது ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு பட்டையில் உள்ள அனல்கெஸிக்(வலி நிவாரணி பொருட்கள் ) மற்றும் இரத்த உறைதலுக்கான எதிர்ப்பு பொருள் போன்றவை மாதவிடாய் வலியையும் அதிகப்படியான இரத்தம் வெளியேறுவதையும் தடுக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் இந்த பட்டை தண்ணீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான பாலிஃபீனால் மற்றும் புரோன்தோசயனின்ஸ் போன்றவை நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் மற்றும் ஆன்டி வைரல் பொருட்கள் போன்றவை இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் வராமல் தடுக்கிறது
பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் பிரச்சனையை குறைத்தல் பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் என்பது ஒரு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினை. இது பொதுவாக பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. எனவே இதற்கு பட்டை தண்ணீரை குடித்து வந்தால் இந்த நோய்குறியிலிருந்து தப்பிக்கலாம். மேலும் இவை பெண்களின் இன்சுலின் எதிர்ப்பு பொருளை குறைத்து பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் பிரச்சினையை குறைக்கிறது
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது பட்டை தண்ணீர் நமது மூளையின் செயல்திறனையையும் நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. மேலும் மூளையின் பாதிப்புகளால் வரும் நோய்களான பர்கின்சன் நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்றவற்றின் வேகத்தை குறைக்கிறது. மேலும் இந்த தண்ணீர் ஓரே செயலில் ஈடுபடுவதற்கான கவனத்தை கொடுக்கிறது.
பல் வலியை குணப்படுத்துகிறது நீங்கள் பல்வலியால் அவதிப்பட்டால் அதற்கு இந்த பட்டை சிறந்த பலனை கொடுக்கும். தினமும் இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால் பல்வலி மற்றும் பற்களின் ஈறுகளில் உள்ள வீக்கமும் குறையும்.
நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது பட்டை தண்ணீரில் பாலிபினோல் என்ற, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து, டைப் 2 டயாபெட்டீஸ் வராமல் தடுக்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம்.
புற்றுநோயிலிருந்து காக்கிறது பட்டையில் உள்ள ஆன்டி கார்சினோஜெனிக் என்ற பொருள் புற்றுநோய் செல்கள் வருவதை குறைக்கிறது. எனவே பட்டை தண்ணீர் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
கேட்கும் திறனை அதிகரிக்கிறது உங்களுக்கு காது கேட்பது சரியாக கேட்கவில்லை என்றால் அதற்கு இந்த பட்டை தண்ணீர் போதும். ஏனெனில் இதிலுள்ள பொருட்கள் காதின் கேட்கும் திறனை அதிகரிக்கிறது.
சரும தன்மையை பராமரிக்கிறது பட்டை தண்ணீர் உங்கள் சருமத்தையும், அதே நேரத்தில் சருமத்திற்கு நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடுகிறது. எனவே நச்சுகள் நமது சருமத்தில் தங்காமல் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், இந்த பட்டை தண்ணீரை தினமும் அருந்தி பலன் பெறலாம்.

Tuesday, 17 April 2018

நரம்புகளின் மையப்புள்ளி

நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா?  குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அளவு பூயின் சுற்றளவு இருமடங்கு இருப்பதைப் போல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவும், ஆண்களிடம் கண்டு கொள்ளாமலும் வைத்திருக்கிறோம். இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய் துளி விட்டதும் அடுத்த நொடியை குழந்தை நிப்பாட்டுவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

வாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும் என்பதில் சந்தெகமில்லை.

அப்படி உடனடி நிவாரணம் தரும் முக்கிய புள்ளியான தொப்புளில் எண்ணெய் சிறிது விடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவீர்களா? தொடர்ந்து படியுங்கள்

கண் பார்வை :
தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது

பாதவெடிப்பு, சரும பிரச்சனை :
உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.

மூட்டு வலி :
முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.

உடல் சோர்வு :
உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.

நரம்பு பாதிப்புகள் :
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய் :
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

விளக்கெண்ணெய்
இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.

வேப்பெண்ணெய் :
வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

எலுமிச்சை எண்ணெய் :
எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.

பாதாம் எண்ணெய் :
சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

ஆலிவ் எண்ணெய் :
தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

Friday, 13 April 2018

பௌர்ணமி வழிபாடு:


பௌர்ணமி வழிபாடு:

பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும்.

பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்கிறது. பூமி சூரியனை சுற்றி வருவதுபோல் சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது.

பூமி மற்றும் சந்திரன் சுழற்சியில் சந்திரனின் ஒளிபெறும் பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாளே பௌர்ணமி ஆகும்.

சந்திரனின் ஒளிபெறாத பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாள் அமாவாசை ஆகும்.

ஆன்மீகரீதியாக பார்க்கும் போது தட்சனின் 27 மகள்களை சந்திரன் திருமணம் செய்திருந்தார். ஆனால் ரோகிணியிடம் மட்டும் பாசத்துடன் நடந்து கொண்டு, ஏனைய மனைவியரைப் புறக்கணித்தார்.

இதனால் வருந்தமடைந்த தட்சனின் மகள்கள் தந்தையிடம் தங்களது கணவரின் செயல்பாடு குறித்து முறையிட்டனர்.

தட்சன் சந்திரனிடம் எல்லா மனைவியரிடமும் அன்பு செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சந்திரன் தட்சன் சொன்னதை ஏற்காமல் ரோகிணியிடம் மட்டும் அன்பு செலுத்தினார்.

இதனால் கோபம் அடைந்த தட்சன் சந்திரனின் ஒளி மங்கும்படி ஆணையிட்டார். ஒளியிழந்த சந்திரன் இறைவனான சிவபெருமானை சரணடைந்தார். சிவபெருமானும் சந்திரனுக்கு ஒளியினைக் கொடுத்து தேய்ந்து வளரும்படி வரம் அருளினார்.

சிவபெருமானின் வரத்தின்படி சந்திரன் பதினைந்த நாட்கள் வளர்ந்து பௌர்ணமியாகவும், பதினைந்து நாட்கள் தேய்ந்து அமாவாசையாகவும் காட்சியளிக்கிறார்.

காலநிலை மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்:

பௌர்ணமி அன்று சந்திரனில் இருந்து வெளிவரும் காந்த ஈர்ப்பு விசையானது பூமியின் மேல்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அன்றைய தினத்தில் கடல் அலைகள் அதிகமாக மேலெழும்புகின்றன.

அதேபோல் உயிரினங்களின் மனஎழுச்சியும் அதிகமாக இருக்கும். அதாவது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பௌர்ணமி அன்று கரடுமுரடாக நடந்து கொள்வர். மனதினை கட்டுக்குள் வைத்திருப்பவர் ஆனந்தத்தின் உச்சியினை பௌர்ணமி அன்று உணரலாம்.

காலநிலை மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பௌர்ணமி தினத்தில் இறைவழிபாடு மேற்கொள்வது வழக்கத்திற்கு வந்திருக்கலாம்.

பௌர்ணமி விரதம்:
பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.

பௌர்ணமி அன்று விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமுறை மேற்கொள்கின்றனர்.

மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் வழிபாடுமேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்யப்படுகிறது.

மாத பௌர்ணமி சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்:

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் ஏதேனும் ஒரு விழா கொண்டாடப்படுகிறது.

1) சித்திரை பௌர்ணமி:
சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது. சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

2) வைகாசி பௌர்ணமி:
வைகாசி மாதத்தில் பௌர்ணமி பொதுவாக விசாக நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினம் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் பிறந்த தினமாகவும், புத்தர் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.

வைகாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.

3) ஆனி பௌர்ணமி:
ஆனியில் பௌர்ணமி பொதுவாக மூல நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும். சுமங்கலித்தன்மை நிலைத்திருக்கும். ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்க காதல் கைகூடும்.

4) ஆடி பௌர்ணமி:
ஆடி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும்.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட பதவி கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும்.

5) ஆவணி பௌர்ணமி:
ஆவணி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் வருகிறது. ஆவணி பௌர்ணமி அன்று ஓணமும், ரக்சாபந்தனும் கொண்டாடப்படுகின்றன.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட கடன் தொல்லை தீரும். சகோதர வாழ்வு மேம்படும்.

6) புரட்டாசி பௌர்ணமி:
புரட்டாசியில் பௌர்ணமி பொதுவாக உத்திரட்டாதியில் வருகிறது. புரட்டாசி பௌர்ணமி அன்று உமாமகேஸ்வர வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இன்றைய தினத்தில் அம்மை,அப்பர் வழிபாடு  கடன் தொல்லையை நீக்கும். காரியத் தடங்கல் விலகும். புரட்டாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். நல்ல திருமணப்பேற்றினை நல்கும்.

7) ஐப்பசி பௌர்ணமி:
ஐப்பசி பௌர்ணமி பொதுவாக அசுவனியில் வரும். ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிசேகம் நடத்தப் பெறுகிறது.

இன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட விருப்பங்கள் நிறைவேறும். வரங்கள் அதிகம் கிடைக்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

8) கார்த்திகை பௌர்ணமி:
கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி கார்த்திகை நட்சத்திரத்தில் வரும். அன்றைய தினத்தில் தான் இறைவன் ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார்.

ஆலயங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண்நோய் தீரும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

9) மார்கழி பௌர்ணமி:
மார்கழியில் பௌர்ணமி பொதுவாக திருவாதிரையில் வரும். இன்றைய தினத்தில் சிவபெருமான் ஆனந்த நடனமாடி நடராஜராக காட்சியருளிய நாள். அதனால் மார்கழி பௌர்ணமி அன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நம் குறைகள் நீங்கும். நோய்கள் குணமாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

10) தை பௌர்ணமி:
தை மாதத்தில் பௌர்ணமி பொதுவாக பூசத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் சிவன் மற்றும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இன்றைய தினத்தில் வழிபாடு மேற்கொள்ள பிறவிப் பயன் நீந்து முக்தி கிடைக்கும். தை பௌர்ணமியில் விளக்கேற்ற ஆயுள் விருத்தி கிடைக்கும்.

11) மாசி பௌர்ணமி:
மாசி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக மகத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது. கும்பமேளா, மாசி மகம் போன்ற விழாக்கள் மாசி பௌர்ணமியில் கொண்டாடப்படுகின்றன. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நற்கதி கிடைக்கும்.

12) பங்குனி பௌர்ணமி:
பங்குனியில் பௌர்ணமியானது உத்திரத்தில் வருகிறது. அன்றைய தினத்தில்தான் பார்வதி-பரமேஸ்வரர், முருகன்-தெய்வயானை, ராமன்-சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன.

எனவே பங்குனி பௌர்ணமி வழிபாடு நற்திருமணப்பேற்றினை அருளும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள துன்பங்கள் துயரங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும்.

கிரிவலம்:
பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும், உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும் போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைக்கும்.

கார்த்திகை பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

நாமும் வாழ்வினை வளமாக்கும் பௌர்ணமியில் வழிபாடு மேற்கொண்டு நன்னிலை பெறுவோம்.

Tuesday, 10 April 2018

வெயில் காலத்தில் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வெயில் காலத்தில் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இயற்கை நம்மை காலத்திற்கேற்ற பாதுகாப்புகளை கொடுத்து நம்மை காக்கிறது. அதை நாம் முழுமையாய் உணராமல் விடுவதால்தான் பாதிப்புகளுக்கு ஆளாகின்றோம். உதாரணமாக கோடையில் அதிகம் கிடைப்பதுதான் வெள்ளரிக்காய். குவிந்து கிடக்கும் இதன் அருமையினை பற்றி நன்கு அறிந்தால் இதன் பலன்களை முழுமையாய் பெறுவோம்.

* கோடை என்றாலே உடலில் நீர் சத்து எளிதில் குறையும். இதனால் உடலின் கழிவுப்பொருள் வெளியேற்றத்தில் பிரச்சினை ஏற்படலாம் வெள்ளரியில் நார்சத்தும், நீர் சத்தும் அதிகம் என்பதால் இந்த பிரச்சினை இருக்காது.

* வெள்ளரி சிறுநீரக பாதை பிரச்சினைகளை தீர்க்க உதவும். வெள்ளரி சாறு இருவேளை குடித்தால் போதும். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்து விடும். சிறுநீரகத்தின் அழுத்தத்தினை குறைத்து சிறுநீரகங்களை ஆரோக்கியமாய் வைக்கும்.

* வெள்ளரிக்காய்க்கு நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் இவைகளை நீக்கும் ஆற்றல் உள்ளது. தினமும் இதன் சாறு எடுத்துக் கொள்ள இப்பிரச்சினைகள் தீரும் ஜீரண சக்தி கூடும்.

* வெள்ளரி குடலிலுள்ள நாடா பூச்சிகளை நீக்கும். இதிலுள்ள எகிப்ஸின் என்ற என்னஸம் நாடா பூச்சிகளை கொன்று விடும்.

* வெள்ளரி ரத்த அழுத்தத்தினை சீராய் வைக்கும். இதிலுள்ள பொட்டாசியம் உப்பு (சோடியம்) அளவினை சீர் செய்து தாது உப்புகளை சீராய் வைக்கும்.

* வெள்ளரி வீக்கத்தினை குறைக்கும். இதிலுள்ள பீட்டா கரோடின் நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கும். வீக்கம் தரக்கூடிய பராஸ்டோக்ளான்டின் என்ற பொருளை தடுக்கும். உடல் முன்னேற வெள்ளரி உதவும்.

* வெள்ளரி சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது. வெள்ளரியில் உள்ள ஹார்மோன் உடலின் கணையம் இன்சுலின் ஹார்மோன் சுரக்க உதவுகின்றது.

* வெள்ளரி பல வகை புற்று நோய்களை எதிர்க்கும் சக்தி வாய்ந்தது. நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்க வல்லது.

* இதிலுள்ள சில பொருட்களை (ஸ்பைடோ கெமிக்கல்) வாய் துர்நாற்றத்தினை நீக்க வல்லது.

* உடலில் நச்சுத்தன்மையை நீக்குவது.

* வெள்ளரியில் உள்ள வைட்டமின் ‘கே’ எலும்புகளை உறுதிப்படுத்த வல்லது.

* நரம்புகளுக்கு வலு அளிப்பது.

* குறைந்த கலோரியின் காரணமாக உடல் எடை குறைய உதவுகின்றது.

மிக சிலருக்கு வெள்ளரி அலர்ஜி இருக்கலாம். இவர்கள் வெள்ளரியினை பச்சையாக உண்ணாமல் சமைத்து உண்ணலாம். மிக சிலருக்கு வயிற்றுவலி ஏற்படலாம்.

மிக அதிகமாக உண்பதனை தவிர்ப்பது நல்லது. அழகு பராமரிப்பில் வெள்ளரிக்காய் மிக சிறந்த இடத்தினை பெறுகின்றது. வெள்ளரி + தயிர் + சோற்று கற்றாளை + அரை ஸ்டீபூன் எலுமிச்சை பழம் சாறு கலந்து ஈரமான உடல், முகம் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளித்து விடுங்கள்.

* உடல் அழகாகும், இறுகும்.

* கண்களின் மீது வெள்ளரி துண்டுகள் வைக்க கண் இறுக்கம் நீங்கும். கண் கருமை நீங்கும். சுருக்கம் நீங்கும்.

* உடலில் தடவும் வெள்ளரி சாறு வெயிலால் ஏற்படும் கருமையினை நீக்கும்.

* சரும புத்துணர்வு ஏற்படும்.

* உடல் உப்பிசம் நீங்கும்.

* வெள்ளரி சாறு சிறிது நேரம் தலையில் தடவினால் முடி கொட் டுதல் நீங்கும். முடி பளபளவென இருக்கும்.