கிராமிய வைத்தியம்
மூட்டுத் தேய்மானம் மூட்டு வலிக்கு பிரண்டை சூரணம் பிரண்டை வற்றல் செய்முறை பிரண்டையை சிறு சிறு துண்டுகாளாக நறுக்கிக் கொள்ளவும்) மோரில் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வடி கட்டி பிரண்டையை மட்டும் வெயிலில் காய வைக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் ஒவ்வொரு நாளும் புது மோரில் ஊற வைத்து பின்னர் நன்கு காயவைத்து ஆறாவது நாள் முதல் மறுபடியும் மோரில் ஊற வைக்காமல் பிரண்டையை மட்டும் நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும் நன்கு காய்ந்த பின் கிடைப்பது பிரண்டை வற்றல் ஆகும் பிரண்டை சூரணம் செய் முறை பிரண்டை வற்றல் தோல் நீக்கிய சுக்கு நாட்டு வெல்லம் ஒவ்வொன்றிலும் நூறு கிராம் அளவு அதாவது சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சூரணமாக்கி சேமிக்கவும் நாள் தோறும் காலை மாலை என இரு வேளைகள் வேளைக்கு ஒரு தேக்கரண்டி சூரணம் பாலில் கலந்து குடித்து வர மூட்டு வாதம் எலும்பு தேய்மானம் இடுப்பு எலும்பு தேய்மானம் பாத எலும்பு தேய்மானம் கால் எலும்பு தேய்மானம் தோள்பட்டை வலி ஆஸ்டியோ ஸ்போரோசிஸ் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் போன்ற நோய்கள் குணமாகும்
No comments:
Post a Comment