Friday, 21 December 2018

கிராமத்து வைத்தியங்கள்....!!

மாதவிடாய் பிரச்சனைகளுக்கான சில கிராமத்து வைத்தியங்கள்....!!

ஒவ்வொரு மாதமும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை தான் மாதவிடாய் சுழற்சி. இக்காலத்தில் பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அதிலும் இன்றைய காலத்தில் சில பெண்களுக்கு சீரான மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதில்லை.
இன்னும் சிலருக்கு அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்றவை ஏற்படும். இந்த மாதிரியான சூழ்நிலையில் பெண்கள் கண்ட மாத்திரைகளைப் போடுவார்கள்.

ஆனால் இப்படி கண்ட மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால் அதனால் பிற்காலத்தில் கருவுறுதலில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே தமிழ் போல்ட்ஸ்கை மாதவிடாய் பிரச்சனைகளுக்கான சில கிராமத்து வைத்தியங்களைக் கொடுத்துள்ளது.

வெற்றிலை :-
இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் போது, சிறிது வெற்றிலையை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து குடித்து வர அப்பிரச்சனை குணமாகும்.

மல்லி விதை :-

2 கப் நீரில் 1 டீஸ்பூன் மல்லியை சேர்த்து தண்ணீர் பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி, அதில் தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வர அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படுவது குறையும்.

இஞ்சி :-

வயிற்று வலி மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சி இல்லாதவர்கள், 1 துண்டு இஞ்சியை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து, உணவு உண்ட பின் பருக குணமாகும்.

பட்டைத் தூள்

பட்டைத் தூளை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வர, மாதவிடாய் சுழற்சி சீராகும்.

முளைக்கட்டிய வெந்தயம்

சிறிது வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து, சாலட் உடன் சேர்த்து உட்கொண்டு வர, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி தடுக்கப்படுவதோடு, மாதவிடாய் சுழற்சியும் சீராகும்.

எள் :-

மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள், 1 டீஸ்பூன் எள்ளை தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர, அனைத்தும் குணமாகும்.

உப்பு அதிகமானாலோ... குறைந்து போனாலோ.....

உப்பு அதிகமானாலோ... குறைந்து போனாலோ.....
உணவுக்குச் சுவை தருவது மட்டுமல்ல, எலும்பு மற்றும் மஜ்ஜைகளை வளர்க்க மிகவும் உதவியாக இருக்கும். நாட்டு மருந்துக் கடையில் ‘சைந்தலவனம்’ என்ற உப்பை வாங்கிப் பயன்படுத்தலாம். சோடியம், பொட்டாசியம் போன்ற எல்லா தாது உப்புக்களும் அதில் நிறைந்திருக்கின்றன. உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
அயோடைஸ்டு உப்பு, தாதுக்களை எல்லாம் பிரித்துவிட்டு, வெறும் அயோடினை மட்டுமே சேர்த்துத் தரும். இதைச் சாப்பிடுவதால், எந்தப் பலனும் இல்லை. கடல் ஒரங்களில் கிடைக்கும் காய்கறிகள், மீன்கள், பால் இவற்றிலேயே அயோடின் இருக்கிறது. அதனால், அயோடின் உப்பு தேவையற்றது.
சிப்ஸ், லேஸ், குர்குரே பர்கர் போன்றவற்றைச் சாப்பிட்டாலோ, சோடா, பிரிசர்வ்டு டிரிங் குடித்தாலோ, மோனா சோடியம் குளுட்டமேட் (MSG) கலந்த உணவுகளைச் சாப்பிட்டாலோ உடம்பில் சோடியம் கலந்த உப்பு சேர்ந்துகொண்டே இருக்கும். சோடியம் உப்பு, சிறுநீரகத்தில் பிரச்னைகளை உண்டாக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
அதிகமானால்...
உடலில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். தேவை இல்லாத நீர் சேரும். ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும். பித்தத்தை அதிகரித்து, சீக்கிரமே நரை முடி, முடி உதிர்தல், கொட்டுதல், வழுக்கை போன்ற பாதிப்புகள் வரும். எனவே, உப்பை அளவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குறைந்தால்...
உப்பு சாப்பிட்டால் தப்பு என்று, உப்பைக் குறைத்துவிடவும் கூடாது. இதனால், எலும்பு மஜ்ஜை வலுவிழந்துபோகும். சிலருக்குக் கெண்டைக்காலில் தசைப் பிடிப்பு ஏற்படும். தசைகள் சோர்வடையும். தலைசுற்றல் வரும்.

அழகான ஆபத்துகள் ...

அழகான ஆபத்துகள் ...
இன்று பெரும்பாலான மக்கள் வரட்டுத்தனமான கவர்ச்சியை மட்டுமே நம்புகின்றனர். இது அறியாமையினால் என என்னிவிடவும் கூடுவதில்லை .தெரிந்தே செய்கின்றார்களோ என நினைக்க தோன்றுகிறது .உணவுக்கு நல்ல நிறத்தையும் அழகையும் தர செய்யப்படும் உணவுப்பொருட்கள் முதற்கொண்டு அழகு ஆக்கி கொள்ள செய்யப்படும் அழகு சாதனங்கள் வரை மனித உயிர்களுக்கே பெரும் தீங்கை விளைவிக்க கூடியது என பல ஆய்வு முடிவுகள் வெளிவருகிறது .
துரித இன்றைய உணவுகள் இதேவகையை சேர்ந்தவை காரணம் இவைகள் எந்த விதத்திலும் மனித உடலுக்கு ஏற்புடையதல்ல என கூறலாம். பிட்சா, பர்கர் , பரோட்டா போன்ற உணவுகளுக்கும் துரித உணவுகள் என்று அழைக்கப்படும் இப்படிப்பட்ட உணவுகளுக்கும் உடல் நலத்திற்கும் எந்த பிணைப்பும் இல்லை எனலாம் . இவைகள் எல்லாமே கடுமையான நோய்களை உண்டாக்குவான என்கிறனர் . உணவுகள் முதற்கொண்டு இன்றைய வாழ்க்கை முறை எல்லாமே மேலை நாட்டு முறையை படி (நகல் ) எடுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர் நாம் மக்கள் . எந்த ஒரு புதுமையிலும் நன்மையையும் தீமையும் உண்டு தான் என சிலர் வரட்டுவாதம் புரியலாம். இது முட்டுக்கட்டை போடுவதன்றி வேறல்ல. பாவம் இவர்கள் என விட்டுவிட வேண்டியதுதான். ஆனால் நோய் இல்லாமல் வாழவேண்டும் என நினைப்பவர்களின் பலரின் பார்வையில் படவேண்டும் என்பதே எமது எண்ணம்.
தமிழகத்தில் ஒரு நடிகரின் மகன் இந்த துரித உணவை மட்டுமே எல்லாநேரமும் எடுத்துக் கொண்டதால் இளைய அகவையில் புற்று நோய் கண்டு மரித்து போனார் என்பது பலர் அறியாத செய்தி.அந்த துரித உணவுகளின் மாறுபட்ட தோற்றமும் சுவையும் கண்மூடித்தனமாக பலரை வீழ்த்தி விடுகிறது.
துரித உணவுகள் புற்றுநோய் முதற்கொண்டு சிறுநீரக செயலிழப்பு ,இரண்டாம்தர சர்க்கரைநோய் என பலநோய்களை உண்டாக்கும் என்கிறார்கள் . உடல் பருமன் எலும்புருக்கி , இரத்த சோகை, போன்ற நோய்களை உண்டாக்கும் என்பது பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. துரித உணவுகள் எல்லாவகையிலும் மனித குலத்திற்கே கேடு என்பது உண்மை .
இப்போது மாம்பழ காலம் இந்த மாம்பழத்தை பழுக்க வைக்க இரசாயணம் கலந்த அதாவது ஒருவித கற்களை பழத்தை பரப்பிவிட்டு
அதன் நடுவில் இந்த கற்களை வைத்து பழுக்க வைக்கிறனர் . இது பல்வேறு பிணிகளை உண்டாக்குகிறது சடங்கு போல பல இடங்களில் மாம்பழத்தை அரசு அலுவலர்கள் கைபற்றி அழித்து விட்டதாக கூறுவார்கள் . இது சடங்கு அன்றி வேறல்ல. காரணம் பழங்களை குறிப்பாக மாம்பழத்தை பொறுத்தவரை கல் வைக்காமல் பழுக்க வைக்க இயலாது என்று மாம்பழ விற்பனையாளர்களும் பழ மண்டிக் காரர்களும் கூறுகின்றனர் . அதாவது இயற்கையாக பழத்தை பழுக்க வைத்தால் வெறும் பத்து விழுக்காடு பழமே பழுக்கும் எனவும் மீதம் உள்ளவை கெட்டுபோகும் எனவும் கூறுகின்றனர் . இந்த இரசாயண கற்களை கொண்டு பழுக்க வைப்பதால் நல்ல நிறத்துடனும் , எல்லா பழங்களும் ஒரே நாளில் பழுத்துவிடும் என்று கூறுகின்றனர்.இதற்க்கு தீர்வை உங்களிடமே விட்டுவிடுகிறேன் .
அதேபோல இனிப்பகங்களில் (மிட்டாய்) கடைகளில் பார்த்தல் எல்லாமே வண்ண வண்ண நிறம் கொண்டதாக இருக்கும் இவைகள் எல்லாமே செயற்கை இரசாயனங்கள் கலந்த இனிப்புகள் இவைகளினால்சிறுநீரக செயலிழப்பு முதற்கொண்டு பல்வேறு நோய்கள் வருகிறது . வண்ணம் இல்லாத இனிப்புகளை யாரும் வாங்குவதில்லை என விர்ப்பனையளர்கள் கூறுகின்றனர் .இதற்க்கு யார் பொறுப்பு ?விழிப்போடு இருக்க வேண்டும் அல்லது உண்மைகளை உலகம் முழுமையும் தெரிந்தவர்கள் பரப்புரை செய்ய வேண்டும் தேவையில்லாத செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட உண்மைகளுக்கு தருவத்தில்லை என்பது தானே உண்மை ?
இப்போது சந்தையில் கிடைக்கும் மென்பானங்களும் இதேரகத்தை சேர்ந்ததே , அதேபோல சக்கலேட்டுகளும் இதேவகையை சேர்ந்ததே அதுமட்டுமின்றி பெண்கள் எனின் கருப்பை சேர்ந்த நோய்களை உண்டாக்கும் மிகையான குருதி போக்கு வீட்டுவிலக்கு (பூப்பு காலத்தில் )உண்டாக்கும் .
அது மட்டும் இல்லாமல் இன்று அழகு படுத்தி கொள்ள பயன் படுத்தும் முகச்சாயம் , உதட்டு சாயம் போன்றவை எல்லாமே புற்று நோய் முதற்கொண்டு பல்வேறு நோய்களை வரவழைக்கிறது என்கிறனர் . ஆய்வாளர்கள் உங்களைதனே ? அருள் கூர்ந்து இதை படித்ததற்கு முன் எப்படியோ எனக்கு தெரியாது இனிமேல் இதுபற்றி சிந்திப்பீர்கள் தானே ?
வாழ்க தமிழர்கள் தமிழ் கலைகள் வெல்க .

சம்மணங்கால்

#சங்கடங்கள்_தீர
#சம்பணம்மிடுங்கள்.
#இந்த_5_உண்மை #தெரிஞ்சா_நீங்க #இனிமேல்_கால_கீழ #தொங்கப்போட்டு
#சாப்பிடவே #மாட்டீங்க!

கீழே தரையில் அமர்ந்து #சம்மணங்கால் இட்டு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

அவரு எவ்வளோ பெரிய ஆளு அவர கீழே உட்கார வெச்சு சாப்பாடு போட முடியும்?
தம்பி எம்புட்டு பெரிய படிப்பு படிச்சுருக்கு அவரு கீழே எல்லாம் உட்கார்ந்து சாப்பிடுவாரா?
போன்ற ஏற்றத்தாழ்வு காணும் கேள்விகள் ஒருபுறம்.

கீழ சம்மணங்கால் போட்டு சாப்பிடற பழக்கமே இல்லைங்க... ,

கீழ உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு நான் கேவலமா போயிட்டேனா..? என தன்மானம், கவுரம் சார்ந்த காரணங்களால் மறுபுறம்....
நாம் சம்மணங்கால் இட்டு சாப்பிடும் பழக்கத்தை விட்டு வெகுதூரம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால்,
#அறிவியலோ... சம்மணங்கால் இட்டு சாப்பிடுவது தான் #ஆரோக்கியத்திற்கு #சிறந்தது என பலமாக நமது தலையில் ஒரு குட்டு வைக்கிறது....

#இரத்த_ஓட்டம்!

நமது உடலை இடுப்பை மையமாக வைத்து, கீழ் உடல், மேல் உடல் என இரண்டாக பிரிக்கலாம். இதில் முக்கியமான உடல் உறுப்புகள் பல மேல் உடலில் தான் இருக்கிறது.

கீழ் உடலில் கால்கள் மட்டுமே இருக்கின்றன. நடக்கும் போது மட்டும் தான் இரத்த ஓட்டம் கால்களுக்கு தேவைப்படுகிறது.

மற்ற வேளைகளில் மேல் உடலில் இருக்கும் கண், காது, மூளை, கணையம், நுரையீரல், சிறுநீரகம், போன்றவைக்கு தான் இரத்த ஓட்டம் அதிகமாக தேவைப்படுகிறது.

#சக்தி!
சாப்பிடும் போது கீழே தரையில் சம்மணங்கால் இரட்டு அமர்ந்து உணவு உட்கொள்வதால் உடலுக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகம் கிடைக்கிறது.

#காலை_மடக்கி #அமர்தல்!
காலை மடக்கி அமரும் இந்த நிலை உணவு உட்கொள்வதால், சாப்பிடும் போது மேல் உடலுக்கு தேவையான அளவு இரத்த ஓட்டம் செல்லும். இது மேல் உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கும்.

#செரிமானம்!
முக்கியமாக, சம்மணங்கால் இட்டு உணவு உட்கொள்வதால் செரிமான மண்டலம் வலுபெற்று, செரிமானம் சீராகவும், அஜீரண கோளாறுகள், வயிறு பிரச்சனைகள் உண்டாகாமல் இருக்கவும் உதவும்.

#கீழே_கால்களை #தொங்கவிடுதல்... மாறாக, நீங்கள் கால்களை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து உணவு உட்கொள்ளும் போது, போதுமான இரத்த ஓட்டம் மேல் உடலுக்கு செல்லாமல்.
தேவையின்றி கீழ் உடலுக்கு கால்களுக்கு செல்லும். இதனால் மேல் உடலின் செயற்திறன் பாதிக்கப்படும்.

#இன்று_முதல்....
எனவே, உணவை கீழே அமர்ந்து உட்கொள்வது கேவலமோ, கவுரவ குறைச்சலோ இல்லை என்பதை புரிந்துக் கொண்டு.
இது முற்றிலும் ஆரோக்கியம் சார்ந்தது என்பதால், கீழே சம்மணங்கால் இட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை இன்று முதலே பின்தொடருங்கள

உமிழ் நீர்: உயிர் நீர்

உமிழ் நீர்: உயிர் நீர்
*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!_
_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_
_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_
_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் , அதிக அளவு எடுத்துக் கொண்டனர்!!```_
_```வாழ்வதற்காக உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர்!```_
_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_
_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_
_```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_
_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_
_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_
_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_
_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது. உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_
_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_
_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_
_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_
_```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_
_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_
_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_
_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_
_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_
நொறுங்கத் தின்னா நூறு வயசு..
உமீழ் நீர் - உயிர் நீர்.

Tuesday, 18 December 2018

உப்பு

*5 ந்தே நிமிடத்தில் சாகக் கூடியது ஒரு கையளவு அயோடின் உப்பு.*

*3 நிமிடம் , உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள்.*

ஒரு கூட்டம்,

*இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார்* டாக்டர் இர்வின்.

அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது..

டாக்டர் இர்வின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்.

மேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர்.

பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தபோது ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன்.

*சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்: “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள்.*

*காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள்.*

வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன.

இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம்.

*நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.*

பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.

சென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது.

தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன.

பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன.

வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை.

உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம்.

அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம்.

அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” – ஒரு பண முதலை கேட்டது. ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம்.

இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும். நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும்.

அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர்.

அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம். அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?”

உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு” ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.

இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது.

எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன.

கல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது. சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன.

அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.

இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள்.

மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்:

“பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்? ஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”.

*“ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.*” “

நாம் வாங்கும் பொடி உப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.” ‘

2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள்.

அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.” “ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?.

இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான்.

போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.” கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன.

இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.

*நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன.*

*வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள்.*

ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.

போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.” சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள்.

அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார்

அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர். இதை எல்லாத் தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள்.

ஆனால்

*எதிலும் ஒளிபரப்பவில்லை! இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது!*

மக்களாகிய நாம் தான் திருந்த வேண்டும்…! பொடி உப்பைத் தவிர்ப்போம்… கல் உப்பைப் பயன் படுத்துவோம்.          Kinldy forward to all without FAIL. SAVE your self and your family and friends ...

             இதனை ஏற்கனவே படித்திருந்தாலும் ,

*மாற்றம் வரும்வரை*
*மீண்டும் மீண்டும்*
*பகிரவேண்டும்*

நன்றி
உணவே மருந்து