Tuesday, 18 December 2018

இலந்தைப்பழம்

தூய்மையற்ற இரத்தம்
இலந்தைப்பழம் இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்கும். பசியை தூண்டும்.
நெஞ்சுவலி
நெஞ்சுவலி உள்ளவர்கள் இலந்தைப்பழம் சாப்பிட்டு வர குணம்பெறலாம்.
இரத்த பேதி
இலந்தை தளிர் இலை அரைத்து கஷாயம் செய்து சாப்பிட இரத்த பேதி சரியாகும்.
இருதய வலி
இருதய வலிக்கு இலந்தப்பழம் சாப்பிட்டு வரலாம்.
கருப்பை நோய்கள் குறைய
கருப்பை நோய்கள் குறைய இலந்தை இலை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பை நோய்கள் குறையும்.
தொண்டை புண் ,ஈறுகளில் ரத்தம் வருதல் போன்ற பிரச்சனைகளுக்கு
இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு இட்டு வாய் கொப்பளித்து வர தொண்டை புண் ,ஈறுகளில் ரத்தம் வருதல் போண்டர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மாதவிலக்கு கோளாறுகள் சரியாக
மாதவிலக்கு தாராளமாக இலந்தைபூ, வெற்றிலை சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டு வர சரியாகும்.
தெளிவான பேச்சு திறன் கிடைக்க
தெளிவான பேச்சுக்கு இலந்தை இலைகளை இடித்து சாறு எடுத்து சாப்பிட்டு வந்தால் தெளிவான பேச்சு திறன் கிடைக்கும்.
உடல் அரிப்பு, நமைச்சல் நீங்க
இலந்தை மரத்தின் பூவை சுத்தம் செய்து பசைபோன்று அரைத்து உடல் முழுவதும் பூசி பின் காய்ந்த பின் குளித்து வர உடல் எரிச்சல்,அரிப்பு போன்ற நோய்கள் குணமாகும்.
முடி வளர
முடி வளர இலந்தை மரத்தின் இலையை இடித்துச் சாறெடுத்து தலையில் தடவி வர முடி வளரும்.
திக்கு வாய் குணமாக
இலந்தை இலையை சாறு எடுத்து சாப்பிட்டு வர திக்கிப்பேசுதல் சரியாகும்.

No comments:

Post a Comment