கேக்குகளில் உங்களுக்குப் பிடித்தது எது கப் கேக்கா? இல்லை மஃபினா? இரண்டையும் ஒரு கடி கடிக்கிறார் ரிதிமா சாப்ரே
கப் கேக்
ஏன் பிடிக்கும்:
- மென்மையான, சில்லென்ற, இனிப்பான கிரீம் கொண்ட அழகான கப் கேக்குக்கு வேறு எதுவும் இணையாக முடியாது.
- ஒரு நேரத்தில் ஒரே ஒரு கப் கேக் போதுமானது. கேக் சாப்பிடும் உங்கள் ஆசையை அது தீர்த்து வைத்துவிடும். அதேநேரம் பெரிய கேக்கை சாப்பிடுவதால் உடலில் சேரும் அதிக கலோரி அளவு இதில் கிடையாது.
பிரச்சினை
- ரீஃபைன்ட் மாவும், சர்க்கரையும் இதன் கலோரி அளவை கூட்டுகின்றன. அதேநேரம் இதிலிருந்து எந்த வகையான ஊட்டசத்தும் கிடைப்பதில்லை.
- மேலும் இதன் மேல்புறத்தில் உள்ள வெண்ணெய், இனிப்புக் கிரீம் காரணமாக கொலஸ்ட்ரால் அதிகம். அத்துடன் கலர்களும் சேர்க்கப்பட்டிருக்கும்.
மஃபின்
ஏன் பிடிக்கும்:
- எதைப் பற்றியும் கவலைப்படாமல் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு இதை சந்தோஷமாகச் சாப்பிடலாம்.
- இவை கப் கேக்கைவிட சிறந்தவை. ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய ஓட்ஸ், ஃபிளாக்ஸ் விதை, நார்ச்சத்து நிறைந்த தானியங்கள் இதில் சேர்ந்திருக்கும்.
- டிரை ஃபுரூட், ஃபிரெஷ் ஃபுரூட் சேர்க்கப்படுவதால் இதில் வைட்டமின் சத்தும் அதிகம்.
பிரச்சினை
- மஃபினில் பிரச்சினை ஏதும் இல்லை என்று சொல்ல முடியாது. இதில் கொழுப்பு இல்லை என்றாலும் வெண்ணெயும் சர்க்கரையும் இருக்கின்றன.
- பேக்கரி மஃபினில் கலர்களும், பிரிசர்வேடிவ்களும் இருக்கின்றன.
துணுக்குகள்
1. நார்ஸ் மொழி வார்த்தையான காகாவில் இருந்து கேக் என்ற வார்த்தை 13ஆம் நூற்றாண்டில் வந்திருக்கலாமாம்.
2. ஜெர்மன் வார்த்தையான மஃபே, ஃபிரெஞ்சு வார்த்தையான மோஃப்லெட் ஆகியவற்றிலிருந்து மஃபின் பிறந்திருக்கலாம்.
2. கேக்கின் மீது மெழுகுவர்த்தி ஏற்றி நிலவுக் கடவுளான ஆர்டெமிஸை பண்டைய கிரேக்கர்கள் வணங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment