Friday, 12 January 2024

சுவாமி விவேகானந்தர் - 25 பொன்மொழிகள்!

சுவாமி விவேகானந்தர் - 25 பொன்மொழிகள்!


1. நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

2. தீண்டாமையை தீவிர கொள்கையாகவும், உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

3. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.


4. எப்போதும் பொறாமையை விலக்குங்க ள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

5. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

6. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

7. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

8. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

9. பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.


10. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

11. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

12. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)

13. நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு


14. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

15. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்

16. வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

17. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

18. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.


19. வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது

20.இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு

21. நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

22 உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

23. பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது

24. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

25. எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.

-தொகுப்பு ரமணி மோகனகிருஷ்ணன்

தன்னம்பிக்கை

👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

கஷ்டம் வரும் தருணங்களில் நிலைகுலைந்துப் போய் விடாதீர்கள். நடப்பதை ஜீரணிக்க முடியாமல் திண்டாடாதீர்கள்.

எதையும் நம்பி யாரும் இல்லை என்று தைரியமடையுங்கள். இறைவன் ஒன்றை எடுத்துக் கொண்டால் இன்னொன்றைத் தராமலிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையை வைத்திருங்கள்.

அமைதியாக அந்த இன்னொன்றைத் தேடுங்கள். அந்த நேரங்களில் அமைதியிழக்காமல், நம்பிக்கை இழக்காமல் நீங்கள் அப்படித் தேடுவீர்களானால் பெறுவது இழப்பதற்கு முன்னிருந்த நிலையை விட உயர்வான நிலையாகவே இருக்கும்.

நீங்கள் செய்யும் நல்ல காரியங்களும், பிறரிடம் காட்டும் பரிவும் செலுத்தும் அன்பும் நல்லெண்ணமும் பல்கிப் பெருகி மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்.

அடுத்தவரைப் பற்றி நீங்கள் நினைக்கும் விதத்திற்கு நீங்களே காரணம். அதற்கு அவர் பொறுப்பல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள் மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன.

உங்களுடைய மௌனமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் குறிக்கும் உங்கள் அகம் சார்ந்தப் பேச்சு உங்களிடம் மற்றவர்கள் நடந்துக் கொள்ளும் விதத்தில் வெளிப்படும்.

வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்.

👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

எந்தவொரு நிகழ்வுக்கும்


நம் வாழ்வில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும், decesion எடுக்கும் பொழுது, ரெண்டு solution இருக்கும்.

இந்த ரெண்டில் ஒன்னை தேர்வு பண்ணும் பொழுது, ஒன்னை விட மற்றொன்று better ஆக தோன்றும். 

சில நேரங்களில், ரெண்டு solution ன்னும் இருந்தா நல்லா இருக்கும் என்று feel பண்ணுவோம்.

 அனேக நேரங்களில், ஒரு solution எடுத்த பின், மற்ற solution இதைவிட better ஆக இருக்குமோ என்று மனம் எண்ணும் .

 இக்கரைக்கு அக்கரை பச்சை..
 இந்த எண்ணம் எப்போ ஆரம்பிச்சது..

 ரகளை பண்ணி அம்மாகிட்ட செம்மையா அடிவாங்கும் பொழுது தோன்றியது.. 

இக்கரைக்கு ப்ரெண்ட் வீடு அக்கரை பச்சை என்று.

 அவங்க வீட்டுல ஒரே ஒரு நாள் தங்கிய பொழுது ( அம்மா அப்பா ஊருக்கு போன பொழுது) புரிந்தது இக்கரையே சிறந்தது என்று.

  ஸ்கூல் சேர்ந்து .. correct ஆ Tenth படிக்கும் பொழுது தான்னு நினைக்கிறேன்.
என்னடா எப்ப பாரு விழுந்து விழுந்து படிச்சிண்டு.. எப்போ தான் collage போவோமோ.. daily jolly யா பிரெண்ட்ஸ் கூட அரட்டை அடிக்கலாம். படிக்க ஒன்னும் இருக்காது என்று.. 

collage வந்த பொழுது, புரிந்தது.. அக்கரை அளவானது என்று.

 College la படிக்கும் பொழுது தோன்றியது.. எப்போடா வேலைக்கு போவோம்.. நல்லா சம்பாதிச்சு.. சொந்த சம்பாதியத்துல, வாழ்க்கையை enjoy பண்ணலாம் என்று....

வேலைக்கு போன பொழுது தான் புரிஞ்சுது.. இக்கரை ( அப்பா சிக்கனம்) சூப்பர் என்று.
 hard earned money.. தாம் தூம்ன்னு செலவு பண்ண முடியல.

 திருமணம் ஆனா நிறைய ஊர் சுத்தி பார்க்கலாம் என்ற அக்கரை பச்சை, 

 வெறும் relatives வீட்டுக்கா போகும் பொழுது , இக்கரை வெறும் பச்சை இல்ல.. மஞ்சள், சிகப்பு.. என்று colour colour ஆனது என்று.

 வீட்டில் வேலை முடித்து, வேலைக்கு, on time போக வேண்டும் என்றால், அதிகாலை 4. 30 மணிக்கு எழுந்து வேலை செய்யணும். . அப்போ தோணும்.. ச்ச.. பேசாம படிக்காமல் இருந்திருந்தால், வீட்டிலேயே இருந்து இருக்கலாம் என்று. 

ஒரு மாசம் leave ல வீட்டில் இருக்கும் பொழுது, slow motion ல வேலை செய்யும் பொழுது புரிந்தது.. எப்பவும் சுறுசுறுப்பாய் இருப்பது எவ்வளவு நல்லது என்று.

பிறரை சார்ந்து இல்லாமல் independent ஆக இருப்பது ,சொர்க்க வாழ்க்கை போலஇருந்தது.

 வேளையில் pressure அதிகமாகும் பொழுது, தோன்றும், வேலையை resign பண்ணிட்டு, வீட்டில் இருக்கலாம் என்று. வீட்டில் இருக்கும் பொழுது தான் புரிந்தது, வெறும் ஊர் வம்பில் புத்தி போகாமல்,வேலையில் கிடைத்த வெற்றி, achievement எல்லாம் எவ்வளவு best என்று.

Colleagues உடன் பழகும் பொழுது புரிந்தது,. Introvert மாதிரி பிறர் மீது போட்டி, பொறாமை, இல்லாமல், நமக்கு நாமே போட்டி என்று தெளிவு கிடைத்தது.

இதனால், எப்பவும் என்னுடைய next level பற்றியே யோசித்து, முன்னேற்றம் கிடைத்தது.

 தான், தான் ரொம்ப clever என்று நினைத்துகொண்டு, குதற்கமாக சிந்திக்கும் மனிதர்கள் மத்தியில், உள்ளதை உள்ளபடி accept பண்ணிக்கொண்டு, உண்மை பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கு ஏற்ப, என் approach மாற்றி கொள்வதில், புரிந்தது, உண்மையான education ன்டைய value.

 தொலைவில் இருக்கும் வரை, ஒன்னை விட மற்றொன்று better ஆக தான் தெரியும்.

 Better, best என்று தேர்ந்து எடுத்துக்கொண்டு போனால், வாழ்வில் திருப்பதியே இருக்காது.

By Lakshmi Desikan

┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈ 

🎋

*'கூக்குரல் எழுப்புவதும் ஒரு இயலாமையே...!"*

*'கூக்குரல் எழுப்புவதும் ஒரு இயலாமையே...!"*
*.......................................*

நாம் சொல்லப் போகும் கருத்து நியாயமானதாக இருந்தாலும் கூக்குரல் எழுப்பிப் பேசும் பொழுது எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.*

அது நமக்கொரு தவறான தோற்றத்தைத் தந்து விடும். குரலினை உயர்த்திப் பேசுவது நல்லதா...? என்று எவரிடம் கேட்டாலும், நல்லது இல்லையென்றே உரைப்பார்கள்.*

ஆனால்!, சினம் கொள்ளும் போதும், நாம் கூறிய கருத்தினை மறுத்துப் பேசும் பொழுதும் நம் குரலினை உயர்த்தியே பேச வேண்டிய கட்டாயமும் வருகிறது...*

அந்நேரம் இதயத் துடிப்பு அளவுகளைக் கடந்து உயர் மன அழுத்த நிலையால் நாளங்கள் தடித்து, கண்கள் சிவந்து சினத்தின் உயரத்திற்கே நம்மை அறியாமல் சென்று விடுகின்றோம்...*

இப்படி நம்மிடம் இடையிடையே நிகழ்வதனால் பல வேண்டாத விளைவுகளும் ஏற்படும்.*

இவையெல்லாம் அமைதியாக இருக்கும் பொழுது நமக்கே புரியும்.*

ஆனால் இதயத்தின் துடிப்புகள் அளவை மீறும் பொழுது நம் மூளையின் செயல்பாடுகளை சீர்குலைப்பது என எவரும் அறிவதற்கு இல்லை.*

குரலினை உயர்த்திப் பேசும் பொழுது நாம் மனிதன் என்ற நிலையை மீறி ஒருபடி கீழே இறங்கிப் போய் விடுகிறோம். அப்போது நம் மீது நமக்கே வெறுப்பு ஏற்படுகிறது.*

அதுவொரு தரக்குறைவான செயல். அமைதியின் சக்தியை எவரும் புரிந்து கொள்வதில்லை என்பதே குரலினை உயர்த்திப் பேசக் காரணமாக இருக்கிறது.*

அமைதியானவர்களால்தான் எதையும் சாதிக்க முடியும். ‘பொறுத்தவர் பூமியாள்வார்’ என்பார்கள். மாறாக தம் குரலினை உயர்த்தியே பேசுபவர்களால் எதையுமே சாதிக்க முடியாது*

நம் உயிரின் சக்தியை சேமித்து வைத்துக் கொண்டால் தான் நாம் நினைத்ததை சாதிக்கவியலும்*

உளவியல் முறையாக பார்க்கும் பொழுது அது ஒரு இயலாமை. குரலினை உயர்த்தும் பழக்கம் இடம் பொருள் பார்க்காது.*

இவ்வாறு உரக்க ஓலமிட்டு குரலெழுப்புவதால் எவரும் தன் வலிமையை நிலைநாட்ட இயலாது.*

முயற்சித்துப் பார்த்தால் அந்த வாழ்க்கை நோயற்ற நிலையிலும், மகிழ்ச்சியானதாகவும், மன நிறைவானதாகவும் இருக்கும்...!*

*ஆம் தோழர்களே...!*
*குரலினை உயர்த்திப் பேசுவது பல நோய்களுக்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறது. உரக்கப் பேசும்பொழுது சிந்தனையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. நம் கவனமும் சிதறுகிறது.*

*இந்நிலையில் பல தவறுகள் நிகழ வாய்ப்பும் இருக்கிறது.*

*⚽உரக்கப் பேசுவதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. எந்தவொரு செயலையும் அமைதியாக எதிர்கொள்ளும்போது சிக்கல்கள் எளிதாகி விடும். குரலினை உயர்த்திப் பேசுவதால் அது மேலும் சிக்கலாகி விடும்...✍🏼🌹*