நம் வாழ்வில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும், decesion எடுக்கும் பொழுது, ரெண்டு solution இருக்கும்.
இந்த ரெண்டில் ஒன்னை தேர்வு பண்ணும் பொழுது, ஒன்னை விட மற்றொன்று better ஆக தோன்றும்.
சில நேரங்களில், ரெண்டு solution ன்னும் இருந்தா நல்லா இருக்கும் என்று feel பண்ணுவோம்.
அனேக நேரங்களில், ஒரு solution எடுத்த பின், மற்ற solution இதைவிட better ஆக இருக்குமோ என்று மனம் எண்ணும் .
இக்கரைக்கு அக்கரை பச்சை..
இந்த எண்ணம் எப்போ ஆரம்பிச்சது..
ரகளை பண்ணி அம்மாகிட்ட செம்மையா அடிவாங்கும் பொழுது தோன்றியது..
இக்கரைக்கு ப்ரெண்ட் வீடு அக்கரை பச்சை என்று.
அவங்க வீட்டுல ஒரே ஒரு நாள் தங்கிய பொழுது ( அம்மா அப்பா ஊருக்கு போன பொழுது) புரிந்தது இக்கரையே சிறந்தது என்று.
ஸ்கூல் சேர்ந்து .. correct ஆ Tenth படிக்கும் பொழுது தான்னு நினைக்கிறேன்.
என்னடா எப்ப பாரு விழுந்து விழுந்து படிச்சிண்டு.. எப்போ தான் collage போவோமோ.. daily jolly யா பிரெண்ட்ஸ் கூட அரட்டை அடிக்கலாம். படிக்க ஒன்னும் இருக்காது என்று..
collage வந்த பொழுது, புரிந்தது.. அக்கரை அளவானது என்று.
College la படிக்கும் பொழுது தோன்றியது.. எப்போடா வேலைக்கு போவோம்.. நல்லா சம்பாதிச்சு.. சொந்த சம்பாதியத்துல, வாழ்க்கையை enjoy பண்ணலாம் என்று....
வேலைக்கு போன பொழுது தான் புரிஞ்சுது.. இக்கரை ( அப்பா சிக்கனம்) சூப்பர் என்று.
hard earned money.. தாம் தூம்ன்னு செலவு பண்ண முடியல.
திருமணம் ஆனா நிறைய ஊர் சுத்தி பார்க்கலாம் என்ற அக்கரை பச்சை,
வெறும் relatives வீட்டுக்கா போகும் பொழுது , இக்கரை வெறும் பச்சை இல்ல.. மஞ்சள், சிகப்பு.. என்று colour colour ஆனது என்று.
வீட்டில் வேலை முடித்து, வேலைக்கு, on time போக வேண்டும் என்றால், அதிகாலை 4. 30 மணிக்கு எழுந்து வேலை செய்யணும். . அப்போ தோணும்.. ச்ச.. பேசாம படிக்காமல் இருந்திருந்தால், வீட்டிலேயே இருந்து இருக்கலாம் என்று.
ஒரு மாசம் leave ல வீட்டில் இருக்கும் பொழுது, slow motion ல வேலை செய்யும் பொழுது புரிந்தது.. எப்பவும் சுறுசுறுப்பாய் இருப்பது எவ்வளவு நல்லது என்று.
பிறரை சார்ந்து இல்லாமல் independent ஆக இருப்பது ,சொர்க்க வாழ்க்கை போலஇருந்தது.
வேளையில் pressure அதிகமாகும் பொழுது, தோன்றும், வேலையை resign பண்ணிட்டு, வீட்டில் இருக்கலாம் என்று. வீட்டில் இருக்கும் பொழுது தான் புரிந்தது, வெறும் ஊர் வம்பில் புத்தி போகாமல்,வேலையில் கிடைத்த வெற்றி, achievement எல்லாம் எவ்வளவு best என்று.
Colleagues உடன் பழகும் பொழுது புரிந்தது,. Introvert மாதிரி பிறர் மீது போட்டி, பொறாமை, இல்லாமல், நமக்கு நாமே போட்டி என்று தெளிவு கிடைத்தது.
இதனால், எப்பவும் என்னுடைய next level பற்றியே யோசித்து, முன்னேற்றம் கிடைத்தது.
தான், தான் ரொம்ப clever என்று நினைத்துகொண்டு, குதற்கமாக சிந்திக்கும் மனிதர்கள் மத்தியில், உள்ளதை உள்ளபடி accept பண்ணிக்கொண்டு, உண்மை பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கு ஏற்ப, என் approach மாற்றி கொள்வதில், புரிந்தது, உண்மையான education ன்டைய value.
தொலைவில் இருக்கும் வரை, ஒன்னை விட மற்றொன்று better ஆக தான் தெரியும்.
Better, best என்று தேர்ந்து எடுத்துக்கொண்டு போனால், வாழ்வில் திருப்பதியே இருக்காது.
By Lakshmi Desikan
┈❀🌿🀼┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈
🎋
No comments:
Post a Comment