👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
கஷ்டம் வரும் தருணங்களில் நிலைகுலைந்துப் போய் விடாதீர்கள். நடப்பதை ஜீரணிக்க முடியாமல் திண்டாடாதீர்கள்.
எதையும் நம்பி யாரும் இல்லை என்று தைரியமடையுங்கள். இறைவன் ஒன்றை எடுத்துக் கொண்டால் இன்னொன்றைத் தராமலிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையை வைத்திருங்கள்.
அமைதியாக அந்த இன்னொன்றைத் தேடுங்கள். அந்த நேரங்களில் அமைதியிழக்காமல், நம்பிக்கை இழக்காமல் நீங்கள் அப்படித் தேடுவீர்களானால் பெறுவது இழப்பதற்கு முன்னிருந்த நிலையை விட உயர்வான நிலையாகவே இருக்கும்.
நீங்கள் செய்யும் நல்ல காரியங்களும், பிறரிடம் காட்டும் பரிவும் செலுத்தும் அன்பும் நல்லெண்ணமும் பல்கிப் பெருகி மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்.
அடுத்தவரைப் பற்றி நீங்கள் நினைக்கும் விதத்திற்கு நீங்களே காரணம். அதற்கு அவர் பொறுப்பல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள் மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன.
உங்களுடைய மௌனமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் குறிக்கும் உங்கள் அகம் சார்ந்தப் பேச்சு உங்களிடம் மற்றவர்கள் நடந்துக் கொள்ளும் விதத்தில் வெளிப்படும்.
வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்.
👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
No comments:
Post a Comment