Wednesday, 29 April 2015

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக்குணங்கள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக்குணங்கள்!
------------------------------------------------
மருத்துவத்திற்க் கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.
தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன. பொதுவாக் 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டு வலி, கை,கால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டது. அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால், நடப்பதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விட்டது.
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற “அலோசன் ஹெல்த் டிரிங்க்” உதவும். இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்தையும் (கால்ஷியம்) அலோசன் ஹெல்த் டிரிங்க் அளித்து மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.
மஞ்சள் காமாலை நோய்க்கும் சோற்றுக் கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.
கண்நோய், கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும். உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும், தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம், வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி, சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து, ஈரப்பதம் அளிக்கும்.

அரிசி சமையல் மட்டும் போதுமா?

தினமும் அரிசி சமையல் மட்டும் போதுமா?
--------------------------------
அரிசி: அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என பலவகைகள் உள்ளன.. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அதை அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து இடித்து பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது, கொழுப்பு சத்தை அதிகமாக்கும் தன்மை கொண்டது. இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.-
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.
பார்லி: குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. இதை நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். பார்லியை கஞ்சியாக காய்ச்சி குடிக்கலாம். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும் தன்மை கொண்டது.. உடல் வறட்சியை போக்க க்கூடியது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
கோதுமை: அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணெய், நெய் விடாமல் சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும். கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.
கேழ்வரகு: தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
வரகு: நவதானிய வகைகளில் வரகும் ஒன்று. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
சாமை: சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.
கம்பு: இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும். கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.
சோளம்: சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும்.

செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
----------------------------------
மிழர்கள் பண்டையக் காலத்தில் இலக்கியமும் வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து அந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும் எவ்வாறு சாப்பிட வேண்டும் என அனைத்தையும் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கின்றனர். ப்ளீஸ் பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி குடிக்காதீங்க நாம் இன்று தண்ணீர் பருகப் பயன்டுத்தி வரும் பிளாஸ்டிக் உபகரணங்கள் 100% உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை. முக்கியமாக ஆண்களுக்கு ஆண்மையை பாதிக்கும் தன்மை உடையவை. நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்! நமது முன்னோர்கள் பயன்படுத்திய செப்புப் பாத்திரங்கள் இதற்கு நேர் எதிராக 100% ஆரோக்கிய நன்மைகளை தருபவையாக இருக்கின்றன. அதைப் பற்றி ஸ்லைடுகளில் விரிவாகப் பார்க்கலாம்.
பாக்டீரியாக்களைக் கொல்லும் செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவதால் நீரில் இருக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன. முக்கியமாக வயிற்று உபாதைகள் மற்றும் வயிறு சார்ந்தப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கப் பயன்படுகிறது செப்புப் பாத்திரங்கள். தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்த சீரான முறையில் செயல் இயக்கம் நடைப்பெற வெகுவாக உதவுகிறது செப்புப் பாத்திரங்கள். செப்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது. செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் பருகுவதனால் மூட்டு வலியை குறைக்க குணமடைய செய்ய முடியும். காயங்கள் விரைவில் குணமடைய செப்பு உங்கள் உடலில் செல்கள் புதிதாக வளரவும் ஆரோக்கியமாக இருக்கவும் வழிவகுக்கிறது. உங்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலும் அது விரைவாக குணமடைய செப்பு உதவுகிறது.
மூளையில் நியூரான்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை மையிலின் என்னும் உறை மூடிப் பாதுகாக்கிறது. இந்த மையிலின் உறைகளைப் பாதுகாக்க செப்பு உதவுகிறது. செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். செரிமானம் செப்புப் பாத்திரங்களில் நீரைப் பருகுவதனால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு காணக் இயலும். இரத்த சோகை சிகப்பு இரத்த அணுக்கள் உடலில் பெருமளவில் உற்பத்தி செய்ய செப்பு நீர் பயன்படுகிறது. செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவதனால் இரத்த சோகை கோளாறுக்கு சீரான தீர்வு காண முடியும். புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை உடலில் அண்டவிடாமல் தவிர்க்க செப்புப் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் நீர் உதவுகிறது.
மற்றும் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது. முதிர்ச்சி செப்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. உங்கள் சருமத்தின் முதிர்ச்சி அடையும் தன்மையைக் குறைத்து உங்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள இது பயனளிக்கிறது.

அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள்

பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.
தோல்நோய்களை நீக்கும்
இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
நரம்புகளை வலுப்படுத்தும்
பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி
மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம். பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கண்பார்வை தெளிவாகும்
வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப் படுத்துகிறது. தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும் கட்டுப்படுத்தப்படும். மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.

மன அழுத்தத்தைக் குறைக்க 16 வழிகள்!

மன அழுத்தத்தைக் குறைக்க 16 வழிகள்!
-----------------------------------
காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.
எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.
முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.
சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.
சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை.
இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.
செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் “மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.
உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்

உடல் அரிப்பாக உள்ளதா? இதோ குணமாக்கும் மூலிகை!


உடல் அரிப்பு என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை.
இதனால் அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் வீட்டிலிருந்தபடியே இந்த அரிப்பை விரட்ட அற்புதமான மூலிகை தாவரம் கீழாநெல்லி.
இது பல நோய்களை தீர்க்ககூடிய வல்லமை படைத்தது. இது ஒரு சிறு தாவர வகையை சேர்ந்தது.
இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர்.
இதை பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.
இந்த செடியின் தண்டு, வேர் மற்றும் இலைகள் என அனைத்தும் பயன்தரக் கூடியவை.
கீழாநெல்லியின் மகத்துவங்கள்
கீழாநெல்லியினால் தயாரித்த தையலம் கை,கால் எரிச்சல், கண்களின் உஷ்ணத்தன்மை, தலைசுற்றல் மயக்கம், பித்தக் கிறுகிறுப்பு, அதிக போகத்தினால் உண்டான அசதி அகியவற்றை நீக்கும் குணமுடையது.
குளிர் காய்ச்சலுக்கு கீழாநெல்லி ஒரு பங்கும், மிளகு அரை பங்கும், வெள்ளைப் பூண்டு அரை பங்கும் சேர்த்து நன்றாக கரைத்து மிளகளவு மாத்திரைகளாகச் செய்து காலை மாலை கொடுக்க காய்ச்சல் குணமாகும்.
ரத்த குறைவினால் ஏற்படும் சோகை வியாதிக்கும் கீழாநெல்லி ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
கல்லீரல், மண்ணீரல், சிறு நீரகங்களின் வீக்கத்தையும் குறைத்து இரத்தத்தை சுத்தமடைய செய்கிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று மாந்தம், சீதபேதி முதலிய நோய்களுக்கும் கீழாநெல்லி உதவுகிறது.
இதை சுண்டைக்காயளவு பாலோடு அல்லது நீரிலோ கொடுத்தால் எந்த நோய்களும் அண்டாமல் இருக்கும்.
இதன் இலைகளை தேவயான அளவு அரைத்து உடம்பில் தேய்த்து குளித்தால், உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிறு புண்கள் ஒழிந்து விடும்.

இதயத்தை பாதுகாக்க தினமும் பாதாம் பருப்பு!

இதயத்தை பாதுகாக்க தினமும் பாதாம் பருப்பு!
------------------------------------------------

நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.
இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது. இதயத்தை பாதுகாக்க தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும்.
இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.
1999ம் ஆண்டில் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.
வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட(ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
மூலிகை மர்மங்கள்'s photo.விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.
பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினசரி அளவான 50 மைக்ரோகிராம் முதல் 20 மைக்ரோகிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.

சக்கரை நோய்க்கு மிக சிறந்த இயற்கை மருத்துவம்!

சக்கரை நோய்க்கு மிக சிறந்த இயற்கை மருத்துவம்!
---------------------------------------------------------------
என் குடும்ப நண்பனக்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும். அதான். அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் , எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா. இருக்கிறது. என் நண்பனக்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி.
எங்களது இயற்கை மருத்துவ ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை தினமும் சாப்பிட்டு வந்தாங்க. என் நண்பனக்கு மட்டும் அல்லாமல் எனது அத்தைகளும் நிலவேம்பு கஷாயம் குடித்ததன் பலனாக இன்று சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது.
நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம்.
இதை எவ்வாறு பயன் படுத்துவது- இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம்.
பின் குறிப்பு- உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும். சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள். சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது.

Tuesday, 28 April 2015

இரண்டு மூன்று உணவு பொருட்கள் சேர்ந்து, உணவு விஷமாக மாறுதல்

இரண்டு மூன்று உணவு பொருட்கள் சேர்ந்து, உணவு விஷமாக மாறுதல் .
சில உணவுப்பொருட்கள், சில உணவு பொருட்களுடன் சேரும்போது 'வீரியாதி தன்மை' களால் அவைகளின் குணம் மாறுபட்டு நாளடைவில் விஷத்தன்மையை (SLOW POISON) உண்டாக்கும்.
எனவே பின்வரும் பழக்கங்களை தவறாமல் கடைப்பிடியுங்கள் .
௧) பாலுடன் புளிப்பு, கனிகளை சேர்த்து உண்ணுதலை தவிர்த்தல் .
௨)பாலுடன் கொலு, கம்பு, காட்டுப்பயறு வகைகளை சேர்த்து உண்ணுவதை தவிர்த்தல்.
௩ )பாலுடன் கீரைகளைச். சேர்த்து உண்ணுதலை தவிர்த்தல்.
௪ )பால் மற்றும் பால் பொருட்களுடன் மீன் சேர்த்து உண்ணுதலை தவிர்த்தல்.
௫ )தயிருடன் கோழிக்கறி , மாமிச உணவுகளைத் தவிர்த்தல்.
௬ )தயிருடன் வாழைப்பழத்தை தவிர்த்தல் .
௭) முள்ளங்கியுடன் உளுத்தம் பருப்பைத் தவிர்த்தல்.
௮ )மணத்தக்காளியுடன் திப்பிலி, மிளகு, தேன், வெல்லம் இவைகளில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ சேர்த்து உண்ணுதலை தவிர்த்தல்.
௯ )கொத்துபசலைகீரையுடன் எள் சேர்த்தலை தவிர்த்தல்.
௧௦ )வெற்றிலையுடன் எண்ணெய் சேர்த்தலை தவிர்த்தல்.
௧௧ ) தேனுடன் தாமரை வித்து கலந்த பண்டங்களைத் தவிர்த்தல் .
௧௨ )தேனுடன் நெய்யை சம அளவில் சேர்த்துண்ணுதலை தவிர்த்தல்
௧௩) தேனுடன் கொழுப்புப் பொருட்கள், எண்ணெய், நீர் போன்றவற்றில் ஒன்றையோ (அ) பலவற்றையோ சேர்த்துண்ணுதலை தவிர்த்தல்.
௧௪ ) மீன் பொறித்த எண்ணெயை வேறு எந்த சமையலுக்கும் பயன்படுத்துவதை கண்டிப்பாகத் தவிர்த்தல்.
௧௫) கரும்பு தின்றவுடன் நீர் அருந்துவதை தவிர்த்தல்.
௧௬) கீரையுடன் மீன், மாமிச உணவுகளைத் தவிர்த்தல்.
௧௭ )வெந்தயத்துடன் நெய்யைச் சமமாகச் சேர்த்து உண்ணுதலை தவிர்த்தல் .
௧௮.) கோழி முட்டையுடன் பருப்பு வடைகளைத் தவிர்த்தல் .
தவிர்க்கப்படும் நோய்கள்.
இந்த மாதிரியான உணவுமுறையை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூளை சம்பந்தமான நோய்கள், கல்லீரல் சம்பந்தம்மான நோய்கள், மூலநோய், நரம்பு சம்பந்தமான நோய்கள், ஆண்களுக்கு - ஆண்மை குறைவு, பெண்களுக்கு கர்பப்பை சம்பந்தமான நோய்களை எல்லாம் தவிர்க்கலாம்.

சத்து லட்டு

ஆரோக்கிய சமையல் !!!



தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை - 100 கிராம்.
பொரிகடலை - 100 கிராம்.
கோதுமை மாவு - 100 கிராம்.
வெள்ளை எள் வறுத்தது - 100 கிராம்.
வெல்லம் - 200 கிராம்.
நெய் - 100 கிராம்.
ஏலக்காய் - 5 .

செய்முறை:
வேர்க்கடலை வறுத்தது, வறுத்த எள், பொரிகடலை முதலியவற்றைக் தனித்தனியாகப் பொடி செய்து கொள்ள வேண்டும். நெய்யைச் சூடாக்கி முதலில் கோதுமைமாவைப் போட்டு வறுக்க வேண்டும். வாசனை வரும் வரை வறுத்த பிறகு பொடி செய்தவற்றையும் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து வெல்லத்தைப் பொடி செய்து போட்டு உடனே இறக்கி வைத்து ஏலக்காய்ப் பொடி தூவி சூடாக இருக்கும் போதே லட்டுகளாகப் பிடிக்க வேண்டும்.

வெட்டி வேரின் பயன்கள்


    வந்த முகப் பருக்களை விரட்டியடிப்பதிலும், பரு வராமலே தடுப்பதிலும் ஒரு எக்ஸ்பர்ட் வெட்டிவேர்!
    முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது...
    சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் \ ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கியகடுக்காய் & 1... இந்த இரண்டையும் முந்தின தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள்.
    ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!
    பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும். அதற்கான நிவாரணம் இதோ...
    ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள்.
    இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத் தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி,பிழிந்துமுகத்தை ஒற்றி எடுங்கள்.
    வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.
    சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப் பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் ‘பேக்’ இது...
    வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை... இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.
    வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய்பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.
    சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும்பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண் களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.
    இந்த இரு பிரச்னை களுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.
    பச்சைப் பயறு & 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் & 50 கிராம்... இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள்.
    தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறுகட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.
    அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
    வெட்டிவேர் & 100 கிராம், வெந்தயம் & 100 கிராம்... இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.
    தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு, உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்!

Thursday, 23 April 2015

முகத்தில் உள்ள கருமை இரண்டே நாட்களில் நீங்க சில அற்புத வழிகள்



கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள். மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர்.
இதற்காக வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க ஆண்களும் பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். எனவே கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகளை  பட்டியலிட்டுள்ளது. இந்த இயற்கை வழிகள் அனைத்தும் பாதுகாப்பானவையே. ஆகவே அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி, உங்கள் சருமத்தின் நிறத்தை பாதுகாப்பதோடு, அதிகரித்துக் கொள்ளுங்கள்.
பேக்கிங் சோடா பேஸ்ட்
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
வாழைப்பழம் மற்றும் பால்
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.
சூரியகாந்தி விதை
இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.
மாம்பழத் தோல்
மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.
தேன்
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக்
சர்க்கரை
சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.
தண்ணீர் குடிக்கவும்
முக்கியமாக தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதிலும் தினமும் குறைந்தது 9 டம்ளர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும்.
நன்கு தூங்கவும்
தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கருவளையங்கள் நீங்கி, முகம் இயற்கையான அழகுடன் காணப்படும்.
நன்றி: http://tamil.boldsky.com