Friday, 30 December 2016

ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..?

நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

* தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

* மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

* ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

* பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

* சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

* சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

* வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

* பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

* சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

* சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

* பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

* அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

* தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

* பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

* கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

சாப்பிட்டு முடித்ததும் டீ குடித்தால் பிரச்சனை வருமா

சாப்பிட்டு முடித்ததும் டீ குடித்தால் பிரச்சனை வருமா?


சாப்பிட்டு முடித்ததும் டீ குடித்துப் பழகி விட்டேன். இந்தப் பழக்கத்தால் பிரச்னை ஏதாவது வருமா?

டயட்டீஷியன் உத்ரா உணவில் இருக்கும் இரும்புச் சத்தை உடலில் சேரவிடாமல் தடுத்துவிடும் டீ. அதனால் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டு உடல்ரீதியாக பல விளைவுகளை சந்திக்க வேண்டி யிருக்கும். எனவே, உணவுக்குப் பிறகு டீ குடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக பழங்கள், உலர் திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. டீ குடித்துத்தான் ஆக வேண்டும் என்றால், ஒரு மணி நேரம் கழித்துக் குடிக்கலாம்.

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ- பால், முட்டை, கேரட், மீன், பப்பாளி, பி1- ஈஸ்ட், முழு தானியங்கள், பயறுகள், ஈரல் பி2- கோதுமை, முட்டை, பால், ஈரல், ஈஸ்ட் பி6- ஈஸ்ட், மாமிசம், ரொட்டி, பட்டாணி

பி12- ஈஸ்ட், பால், முட்டை

சி- புளித்த பழங்கள்

டி- சூரிய ஒளி, வெண்ணெய்

ஈ- முளைவரும் கோதுமை, கீரை, பால்

கே- முட்டைகோஸ், பச்சை பட்டாணி, காய்கறிகள்

நெல்லிக்காயில் அதிகம் காணப்படும் வைட்டமின் சி கேரட், மீன், எண்ணெயில் உள்ள வைட்டமின் ஏ வடிகஞ்சி கரைசலில் உள்ளது ஸ்டார்ச் முட்டையின் வெள்ளைக்கருவில் காணப்படும் உணவுச்சத்து புரோட்டின் எண்ணெய் பொருட்களில் அதிகம் காணப்படுவது கொழுப்பு கீரைகளில்  இரும்புசத்து அடங்கியுள்ளது. வெல்லத்தில் இரும்புசத்து அதிகமாக உள்ளது.

இரும்பு சத்து நிறைந்த உணவுகள்:  முருங்கை கீரை மற்றும் மூளைக்கீரை அகத்திகீரை, புளிச்சகீரை, மற்றும் அரைக்கீரை முள்ளங்கிக்கீரை மற்றும்  காலிபிளவர் கீரை 

காய்கள்: பாகற்காய், சுண்டக்காய், கொத்தவரை, பீன்ஸ் போன்ற காய்கள்

பழங்கள்: மாதுளம் பழம், சப்போட்டா, தர்பூசணி, அன்னாசிப்பழம் போன்ற கனிகள் உலர்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் உலர்ந்த பழ வகைகள்.

இளம் தாய்மார்களின்

இன்றைய காலகட்டத்தில் பெருப்பாலான இளம் தாய்மார்களின் கவலையெல்லாம் குழந்தையின் உணவு விசயத்தில் தான்.எந்தக் காலகட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவ சாலியான தாய்மார்களுக்கு கூட தடுமாற்றம் இருக்கிறது. இளம் தாய்மார்களின் கவலை போக்கவே இந்தக் கட்டுரை...

  குழந்தைகளுகு முதல் மற்றும் முக்கியமான உணவே தாய்ப்பால் தான். குழந்தை பிறந்த முதல் நான்கு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது.அதற்குப் பிறகு பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம்.ஆனால் பால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும்.

  முடிந்தவரை நள்ளிரவில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதைத் தவிர்த்துப் பாருங்கள்.காரணம் நாளடைவில் குழந்தையின் பற்கள் சொத்தை விழ இது காரணமாகலாம் என்பதோடு, பால் காதுக்குள் நுழைந்து அப்படியே அசையாமல் குழந்தை தூங்கிவிடலாம்.

நான்காவது மாதம்:

 குழந்தை பிறந்து நான்கு மாதம் ஆகிவிட்டால், பருப்புத் தண்ணீர் அல்லது கேரட் தண்ணீரை கொடுத்து பழக்கலாம்.

ஐந்தாவது மாதம்:

  குழந்தை பிறந்த ஐந்து மாதங்கள் ஆனவுடன் காய்கறி மற்றும் பழங்களைக் கொடுக்கத் தொடங்கலாம்.
   
  பழங்களில் ஆப்பிள்,வாழைப்பழம்,பழுத்த பப்பாளி ஆகியவை உங்களது முதல் விருப்பமாக இருப்பது நல்லது.

  மாலை வாழப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழை மற்றும் ரஸ்தாளி அளிப்பதைத் தவிற்கலாம்.

  வைட்டமின் சி(C)) சத்து நிறைய அடங்கியவை-சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு,எலுமிச்சை ஆகியவை குழந்தைகளுகுத் தவறாமல் கொடுக்கலாம்.பெற்றோருக்கு இந்த சிட்ரஸ் வகைப்பழங்கள் அலர்ஜி என்றால்,குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது ஆன பிறகு இது போன்ற பழங்களை கொடுத்து பார்க்கலாம்.

  பெரும்பான்மையான எல்லா பழங்களையும்,காய்கறிகளையும் மிக்ஸியிலரைத்து குழந்தைக்ளுக்குக் கூழ் போலாக்கி கொடுக்கலாம்.பருப்பு வகைகளையும் இப்படி கொடுக்கலாம்.

ஆறாவது மாதம்:

   ஆறாவது மாதம் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைக் கொடுக்கலாம்.இட்லியும் கொடுக்கத்தொடங்கலாம்.அரை ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

  இட்லிக்கு சர்க்கரையைத் தொட்டு கொடுப்பதைவிட,தெளிவான "ரசம்"போன்ற வற்றைத்தொட்டுக் கொள்ளலாம்.ஏனென்றால் இனிப்பு மட்டுமல்லாது மீதி சுவைகளும் குழந்தையின் நாக்குக்கு பிடிபடுவது நல்லது.அப்போதுதான் வளர்ந்த பிறகு பலவகை உணவுகளை குழந்தை உண்ணத் தயாராகும்.

  சிறுகச்சிறுக புதிய உணவு வகைகளில் குழந்தையின் அனுபவத்தை வளர்க்க வேண்டும்.குழந்தை ஆறு மாதக் குழந்தையாகும் போது உணவில் சிரு பகுதி புரதம்,செறித்த இறைச்சி,மீன்,முட்டை ,கோழிக் குஞ்சியின் இறைச்சி இவைகளைச் சேர்க்கலாம்.ஆனால் இவை நன்றாகப் பக்குவப் படுத்தப்பட்டதாகவும் இருத்தல் அவசியம்.

  ஏழாவது மாதம்:

    ஏழாவது மாதம் சப்போட்டா போன்ற பழங்களை கொடுக்கலாம். தோசை,பால் குறைவான சப்பாத்தி,தானிய சுண்டல்,மிக்ஸ்ட் ரைஸ்,கிச்சடி,உப்புமா,பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக வேண்டும்.

பத்தாவது மாதம்:

  குழந்தைகளுக்குப் பத்து மாதம் ஆனதும் சாதத்தையும் குழந்தைக்குப் பிசைந்து வெண் பொங்கல் போலாக்கி காய்கறித்துண்டுகளையும் சேர்த்துக் கொடுக்கலாம்.

 குழந்தைகள் காய்கறிகளைக் துப்பிவிடுகிறது என்றால் அவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம்.தினமும் ஒரு முறை இப்படி சாப்பிடலாம்.நடுவே வெரைட்டிக்கு ரொட்டித்துண்டில் வெண்ணெய் மற்றும் ஜாம் தடவிக் கொடுக்கலாம்.

  காய்ந்த திராட்சை,பேரிச்சம் பழம் ஆகியவை குழந்தையின் உடலுக்கு நல்லது.ஆனால் இவற்றை சாப்பிட்ட பிறகு மறக்காமல் பற்களை சுத்தம் செய்து விடுங்கள்.

 எப்போதுமே ஒரே நாளில் இரண்டு வித புதிய உணவுகளைக் குழந்தைக்குக் அறிமுகப்படுத்த வேண்டாம்.சில நாட்கள் இடை வெளிக்குப் பிறகே அடுத்த புதிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்துங்கள்.அப்போதுதான் குழந்தக்கு வயிற்றுப்போக்கோ அல்லது வேறு எதாவது சிக்கலோ ஏற்பட்டால் அது எந்த உணவினால் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

மதுமேகம்

மதுமேகம் வந்த நோயாளிகளுக்கு சித்தர்கள் கொடுத்த மருந்து பருத்திக் கொட்டை, எள்ளுப் புண்ணாக்கு, கோரைக் கிழங்கு, ஆவாரம்பூ. 'மாடு சாப்பிடுவதை எல்லாம் மருந்து எனச்சொல்கிறாரே' என்று நினைக்கலாம். இப்போது டி.என்.ஏ. கட்டமைப்பு உள்ள ஹியூமன் இன்சுலின், உலகம் முழுக்க வந்துவிட்டது. இதற்கு முன்பு கோரைக் கிழங்கையே பிரதானமாகச் சாப்பிடக் கூடிய பன்றிகளின் கணையத்தில் இருந்தும், பருத்திக் கொட்டையையும், எள்ளுப் புண்ணாக்கையும் சாப்பிட்ட எருமை மாட்டுக் கணையத்திலிருந்தும்தான் இன்சுலின் எடுக்கப்பட்டது. 

இதில் ஓர் ஆச்சர்யம் என்ன என்றால், சித்தர்களுக்கு எவ்வாறு இது தெரிந்தது என்று தெரியவில்லை. ஏன் என்றால் பிரதானமாக பருத்திக் கொட்டையிலும், கோரைக் கிழங்கிலும், எள்ளுப் புண்ணாக்கிலும் இன்சுலின் அளவு அப்படியே இருக்கிறது. அதில் உள்ள கந்தகச் சத்தும் அப்படியே வரும். நம் உடம்பில் இருக்கக் கூடிய கார்போஹைட்ரேட்டைக் கரைக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு.
கிராமங்களில் சர்க்கரை நோய் என்று தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்களைப் பார்க்கவே முடியாது. அரை கிலோ எள்ளு புண்ணாக்கு, அரை கிலோ பருத்திக் கொட்டை, அரை கிலோ ஆவாரம்பூ, 100 கிராம் கருஞ்சீரகம் இவற்றை உரலில் இட்டு இடித்துவைத்துக் கொள்கிறார்கள். இதில் ஒரு கை அளவு எடுத்து சிறிது கருப்பட்டி, பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, அதை நன்றாக வடிகட்டி காலையிலும் இரவிலும் தொடர்ந்து சாப்பிடுவார்கள். இப்படித் தொடர்ந்து செய்யும் போது, சர்க்கரை நோய் தானா கவே சரியாகிவிடும்.

இந்தியர்களுக்கு, உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தப் பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளைப் பற்றி பார்ப்போம்.

1. வெந்தயம்: சர்க்கரை நோயைப் பிரதானமாக கட்டுப் படுத்தக்கூடிய தன்மை வெந்த யத்துக்கு உண்டு. வெந்தயத்தைப் பிரித்தால் வெந்த அயம். வெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்த்தம். அயம் என்றால் இரும்பு என்று பொருள். இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள், வெந்தயம். வெந்தயத்தை வறுத்துவைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். இரவில், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை 100 மி.லி. தண்ணீரில் ஊறவைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்த யத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப் பாட்டுடன் இருக்கும்.

2. தக்காளி: உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

3. பாதாம்: தினமும் தண்ணீரில் ஊறவைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

4. தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டைக் கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங்கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிடத் தோன்றினால், அதனுடன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக்கொள்ளலாம்.

5. பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால், இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

6. காய்கறிகள்: அதிக நார்ச்சத்து உள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

7. பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளைவிட, பருப்பு வகைகளால் ரத்தத்தில் குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாகக் கருதப்படுகிறது.

8. ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பு போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது.

9. பழங்கள்: அதிக நார்ச்சத்து உள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.

10. உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால் சிறிய அளவு உணவை, போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்து உள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

11. இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனைக் கலந்துகொள்ளலாம்.

12. உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாட்டு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்துக்குப் பக்கபலமாக நிற்கும்.

13. பாகற்காய்: பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு, கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்.
சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும். சிறுநீரகச் செயலிழப்புகூட உண்டாகலாம். நினைவுத்திறன் குறைந்து போவது, மூளைத்திறன் குறைந்துபோவது இப்படி பல நோய்களைக் கொண்டுவரக் கூடிய நோய் இது. 

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இந்த மூன்றையும் சம அளவில் கலந்துவைத்து, திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும்போது சர்க்கரை கட்டுப்படும்.

சமையலில் சீரகத்துக்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்ப்பது, சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.

தவிர்க்க வேண்டியவை

சர்க்கரை, கரும்பு, சாக்லெட், ஊட்டச்சத்து பானங்கள், குளிர்பானங்கள், ஜாம் வகைகள், பாலாடை கட்டிகள், திரட்டுப்பால், ஐஸ்க்ரீம், வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், நுங்கு, சப்போட்டா, சீதாப்பழம், உலர் திராட்சை, சேப்பங் கிழங்கு, உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு.

அளவோடு சேர்த்துக் கொள்ளக் கூடியவை

கம்பு, ஓட்ஸ், அரிசி, அவல், ரவை, பார்லி, சோளம், மக்காச் சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, வால்நட்.

அதிக அளவில் சேர்த்துக் கொள்ளக் கூடியவை

பாகற்காய், சுரைக்காய், வாழைத் தண்டு, வெள்ளை முள்ளங்கி, தக்காளி, கொத்தவரங்காய், காராமணி, வெள்ளரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், கீரை, கண்டங்கத்திரி, கோவைக்காய், வெங்காயம், பூசணிக்காய், கத்தரிக்காய், வாழைப்பூ, பீர்க்கங்காய், பப்பாளிக்காய், வெண்டைக்காய், முட்டைகோஸ், நூல்கோல், சீமை கத்தரிக்காய்.
சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்

கத்தரிப் பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக் காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காலிஃப்ளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்த வரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழைப் பிஞ்சு, நூல்கோல், முருங்கைக்காய், வெள்ளரிக் காய், சௌசௌ இவற்றுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பச்சடி யாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்

கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத் தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லா ரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை. இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து, தினமும் ஒரு டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துவந்தால், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

இயற்கையாய் இயற்கையோடு வாழ..! 
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!

Wednesday, 28 December 2016

வாழை

#வாழை #இலையின் #பயன்கள்

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

Tuesday, 27 December 2016

வெள்ளை சீனி

எச்சரிக்கை !!!

வெள்ளை சீனி
 ( White Sugar )

யாரும் உண்ண வேண்டாம்...

 
நாய்க்கு கூட கொடுக்க வேண்டாம்... 

Sugar disease is a slow POISON

சர்க்கரை வியாதி என்பது மெல்ல கொல்லும் 
 ...   விஷம்   ...

இதுதான், 
இன்றைக்கு இனிப்பான செய்தி.. 😀

உங்கள் 
சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள்
.
 நிச்சயமாகப் போகும். 
ஆக,
சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம்.
இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்?

காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு 
படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை 
சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.... 😈😈😈😈

பதார்த்தத்தில் தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்
😬.

இந்த 
வெள்ளை சீனியை
எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்
களானால்..... 
இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசாயன‌ப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன என்று பார்ப்போம்... 

1.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. 
பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரேட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. 
இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. 
இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்
கள்.

4. 
102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகி
றது
.
5. 
அடுத்து, 
பாலி எலக்ட்ரோ
லைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது

6. 
சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜூஸ் தயாரிக்கப்படு
கிறது
.
7. 
மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. 
சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகி
றது.

8. 
இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே
.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனியை சாப்பிடக் கூடாது.
காரணம்

அதில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது
.
குடலில்
மட்டுமல்ல, 
பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி 
( சர்க்கரை வியாதி ), 
 இரத்த அழுத்தம் போன்ற பெரிய
வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது
.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,

வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்
.
 இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

This is true so Can we avoid?

டாக்டர் 
டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்
"சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11
இந்த சர்க்கரையில்
 12 கார்பன் அணு (atom)
 22 ஹைட்ரோஜன் அணு, 
1 ஆக்ஸிஜன் அணு உள்ளது
இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது
கொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4
இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது
.
 சர்க்கரையில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு
.
நண்பர்களே இன்றைய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் இதைக் கூறலாம்.

இது பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!

நண்பர்களே... (முக்கியம்)
படித்துவிட்டு பகிருங்கள்

இயற்கையைப்  போற்றுவோம் 

நோயற்று வாழ்வோம்.👍

நீர் சிகிச்சை

நீரே     மருந்து     செஞ்சு   பாருங்க சந்தோஷமா    இருங்க

🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿
ஜப்பானிய நீர் சிகிச்சை

💧தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்'என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

💧தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

💧காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.

💧தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

👆🏾இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.

💊💉💴மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-

🎈தலைவலி
🎈இரத்த அழுத்தம்
🎈 சோகை
🎈 கீல்வாதம்
🎈பொதுவான பக்கவாதம்
🎈ஊளைச்சதை
🎈 மூட்டுவலி
🎈 காதில் இரைச்சல்
🎈 இருதயப் படபடப்பு
🎈 மயக்கம்
🎈இருமல்
🎈 ஆஸ்த்மா
🎈 சளி
🎈 காசநோய்
🎈 மூளைக் காய்ச்சல்
🎈 கல்லீரல் நோய்கள்
🎈 சிறுநீரகக் கோளாறுகள்
🎈 பித்தக் கோளாறுகள்
🎈 வாயுக் கோளாறுகள்
🎈வயிற்றுப் பொருமல்
🎈 இரத்தக் கடுப்பு
🎈 மூலம்
🎈 மலச்சிக்கல்
🎈 உதிரப்போக்கு
🎈 நீரழிவு
🎈 கண் நோய்கள்
🎈 கண் சிவப்பு
🎈 ஒழுங்கில்லாத மாதவிடாய்
🎈 வெள்ளை படுதல்
🎈 கர்ப்பப்பை புற்றுநோய்
🎈 மார்புப் புற்றுநோய்
🎈 தொண்டை சம்பந்தமான நோய்கள்

😳நம்பவே முடியவில்லையே! சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைபிடிக்கப்படுகிறது.

🔬சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

🎐 மலச்சிக்கல் - ஒரே நாளில்
🎐 வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்
🎐 சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்
🎐 இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்
🎐 புற்று நோய் - ஆறு மாதங்கள்
🎐 காசநோய் - மூன்று மாதங்கள்

Thursday, 22 December 2016

ஊறுகாய்

நாம் உணவு உண்ணும் போது முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய்.
பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள்.
செரிமான பிரச்சனைகள்
ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.
அல்சர்
ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

 
உயர் இரத்த அழுத்தம்
ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோய்
ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக்கூடும்.
இதய நோய்
ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.
வயிற்றில் உப்புச உணர்வு
ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.

உஷ்ணமாக

பொதுவாக நம் உடல் மிகவும் உஷ்ணமாக இருப்பது என்பது ஒரு பாதிப்பு.
இது உடல்நலத்திற்கு கேடு என்றும் கூறலாம். ஏனெனில் அதீத வெப்பம் நம் சர்மத்தில் இருந்தால், அது உடலுக்கும் செரிமானத்தும் பல பக்கவிளைவுளை ஏற்படுத்தும்.
உடல் சூடாக இருக்க காரணங்கள்
இறுக்கமான ஆடை
ஜுரம்
தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய்தல்
கடும் உழைப்பு
நரம்புக் கோளாறுகள்
ஆனால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட நாம் சில உணவு முறைகளை தீவிரமாக கடைபிடித்தால் உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம்.
உஷ்ணத்தை குறைக்கும் சூப்பர் டிப்ஸ்

 
இளநீர் குடிக்க வேண்டும்.
கார, மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழம், வெள்ளரி, கரும்புச்சாறு மூன்றுமே நன்மை பயக்கும்.
ஆலிவ் எண்ணெயில் சமைக்கலாம்.
காய்கறி உணவு சிறந்தது.
சந்தனம், பன்னீர் கலந்து உடலில் தடவலாம்.
கொழுப்பற்ற தயிர் தினமும் உட்கொள்ளுங்கள்.
மனதினை அமைதியாய் வைத்திருப்பதும், யோகா செய்வதும் உடல் சூட்டினைத் தணிக்கும்.
பழங்கள் உண்பது உடல் சூட்டினைத் தணியச் செய்யும்

அரிப்பு

பெரும்பாலானவர்கள் `அரிப்பு' என்பது ஒருவிதமான நோய் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரிப்பு என்பது நோயல்ல என்னும் உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளில் தோன்றும் பலவகையான நோய்களின் வெளிப்பாடே அரிப்பு. உதாரணமாக, எந்த இடத்தில் உங்களுக்கு அரிப்பு ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் ஏதோ நோய் தோன்ற போகிறது எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது நோய் வருவதற்கு முன்பே அதை அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.
பெரும்பான்மையான பெண்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குவது பிறபுறுப்பில் ஏற்படும் அரிப்பு. சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக வெள்ளைபடும். அது பிறபுறுப்பில் உள்ள உதட்டு பகுதியில் படிவதால், அந்த வெள்ளையிலுள்ள நுண்ணுயிரிகள் உதடுகளைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. சில வகையான பூஞ்சைக் காளான்கள் அதிகமாக பெருகி வளரும்போது தாங்க முடியாத அரிப்பை உண்டாக்குகின்றன.

 
கருவுற்ற காலங்களில் கர்பபை வாசல், பிறப்புறுபு போன்ற வற்றில் அளவுக்கு அதிகமான சுரப்பிகள் சுரக்கின்றன. இவை புறபகுதியில் ஏற்படும்போது அரிப்பு ஏற்படுகிறது. வயதாகும்போது பெண்களின் பிறபுறுப்பில் சிதைவு மாற்றம் நிகழ்வதாலும் அரிப்பு உண்டாகும். மஞ்சள் காமாலை, ரத்தசோகை, வைட்டமின் சத்துக் குறைபாட்டினால் உடலின் பிற பகுதிகளில் மட்டுமின்றி, பிறபுறுப்பிலும் அரிப்பு ஏற்படுவதுண்டு.
குடாக இருக்கும் பெண்களின் வயிறு, தொண்டை போன்ற இடங்களில் உள்ள மடிப்புகளில் அழுக்குகள் தேங்குகின்றன. இவற்றில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அடைந்து அரிப்பு ஏற்படுகிறது. உடல் அழுத்தம் காரணமாக பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கசிவதாலும் பிறபுறுப்பில் அரிப்பு உண்டாகும். இவ்வாறு இருக்கும்போது சில பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தாங்களாகவே பலவகையான மருந்துகள், களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். இது தவறு.
அரிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீர்க்கடுப்புக்கு

" நீர்க்கடுப்புக்கு

சீரகம் 

சோம்பு

வெந்தயம்

சின்ன வெங்காயம்

கொத்தமல்லி விதை

இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து அரைச்சு மோர் அல்லது தயிர்ல கலந்து குடிக்கலாம். இல்லாட்டியும் இதையெல்லாம் பொடியாக்கி தேனிலும், நெய்யிலும் கலந்து சாப்பிடலாம். நீர்க்கடுப்பு உடனே குணமாயிடும்..."

"வேனல் காலத்துல நெறயா தண்ணி குடிக்கணும்..."

உடற்பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

கவலைக்கு முதல் மருந்து

உடற்பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்தப் பழைய உண்மையை இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மீண்டும் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. இத்துடன் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது டி.வி., தியானம் போன்றவற்றிற்குப் பதிலாக இருபது நிமிடங்கள் உடற்பயிற்சியோ அல்லது துரித நடை ஓட்டமோ செல்வது நல்லது. இதற்காக நன்கு துடிப்பாகச் செயலாற்றும் 34 மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்தனர். முதல் குழு ஓர் அறையில் அமைதியாக அமர்ந்தது. இரண்டாவது குழு பரிசோதனைச் சாலைக்குள்ளேயே 'ஜாக்கிங்' செய்தது. மூன்றாவது குழு உடற்பயிற்சி செய்தது. இருபது நிமிடங்கள் கழிந்ததும் ஓவ்வொரு குழுவையும் பரிசோதித்தனர். உடற்பயிற்சி செய்தவர்கள் மற்ற இரு குழுவினர்களைவிட 25% அளவில் ஓய்வு நிலையில் இருந்தனர். தியானமும், ஜாக்கிங்கும் கொஞ்ச நேரம் கழித்து ஓய்வு நிலையைத் தரும். உடனடி நிவாரணத்திற்கு உடற்பயிற்சி நல்லதாம்.

கவலைப்படாதே சகோதரா…

உடல் நலமும் நல்ல உற்சாகமான மனநிலையும் தேவை என்றால் கவலைப்படாதீர்கள்!

எப்படிப்பட்ட நோயும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தால் நமது அமைதியே உடல் அணுக்களில் பரவி நோய்களைக் குணமாக்கிவிடும். பிரச்னைகளுக்கு எளிதாகத் தீர்வினைக்கொண்டு வந்துவிடும்.

இந்த முறையைப் பின்பற்றினால் எளிதாக குணம் பெறலாம். மருந்துகள் மீது உள்ள நம்பிக்கை அதிகமாவதைவிட, நம் உடல் தானாகவே குணப்படுத்திக்கொள்ளும் சக்தியுடையது. அது நன்றாகக் குணமாகிவிடும் என்று மனப்பூர்வமாக ஒரு இம்மியளவு கூட சந்தேகம் இல்லாமல் முழுமையாக நம்பினால் முற்றிலும் குணமாகிவிடும். எனவே, மகிழ்ச்சியாக வாழுங்கள்.

இந்த உண்மைகளை ஆஸ்திரிய மனோதத்துவ டாக்டரான ஆல்பிசட் ஆட்லர் கண்டுபிடித்து நிரூபித்தும் காட்டினார்.

கவலையினால்தான் இதய நோய், புற்றுநோய் மட்டுமல்ல மூட்டுவலி, தலைவலி, இளமையிலேயே முதுமை, வயிற்றுக்கோளாறுகள் முதலியன வருகின்றனவாம்.

உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்படாதீர்கள். நம்பிக்கையுடன் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்புங்கள். கஷ்டங்கள் அகலும் என்று நம்புங்கள்.

இத்துடன் உங்கள் நோயையும் அகற்றும் மனதையும் அமைதிப்படுத்தும் சில உணவு மருந்துகளையும் பின்பற்றுங்கள்.

மாடர்ன் ரொட்டி போன்ற கோதுமை ரொட்டியைக் காலையில் சாப்பிடுங்கள். இல்லையெனில் கைக்குத்தல் அரிசி, கோதுமை உப்புமா சாப்பிடுங்கள். டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் மூளைக்கு படுவேகமாகச் செல்லவும் செய்தி சொல்லவும் தவிடு நீக்காத இந்த தானிய உணவுகள் உதவுகின்றன. இதனால் மூளையும் மனமும் அமைதியடைகின்றன. நோய் தானாகக் குணமாக உடலில் சூழ்நிலைகள் உருவாகின்றன.

ஆரஞ்சுப்பழம் தவறாமல் சாப்பிடவும். இதில் உள்ள பொட்டாசியம் உப்பு அடிக்கடி மூளைக்கு கண்ட கண்ட கவலைகளையும் தெரிவிக்கும் மின் ஆற்றல் போன்ற துடிப்புகள் கொண்ட நரம்புகளைக் கட்டுப்படுத்தி மனதை எப்போதும் சாந்தமாக வைத்திருக்கும்.

இதே நன்மைகளை வாழைப்பழம், சீஸ், பால், ஏப்ரிகாடி, வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகளும் செய்கின்றன. குறிப்பாக வாழைப்பழமும், பாலும் தினமும் சாப்பிட்டு மூளைக்குக் கவலைகளைத் தெரிவிக்கும் நரம்புகளைக் கட்டுப்படுத்துங்கள்.

சட்டென்று குணம் மாறி வள் வள் என்று விழுதல் என்பது கவலையான பின்னணியின் வெளிப்பாடே. வைட்டமின் பி (B) குறைந்தாலும் எளிதில் கோபம் கொள்ளுதல் அதிகரிக்கும். இதனால் நரம்புகள் பலவீனமாகும். கவலைகளால் புதிய நோய்கள் உண்டாகும். எனவே இவர்கள் உருளைக்கிழங்கைத் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். அசைவம் எனில் மீன் நல்லது. இந்த வைட்டமின் மீனின் மூலம் நன்கு கிடைக்கும்.

உணர்ச்சிக் கொந்தளிப்பால் உடலும் மனமும் சோர்வடையும் சிலருக்கு மூளைக்காய்ச்சல் கூட வரலாம். தயாமின் என்ற பி வைட்டமின் அதிகமுள்ள அரிசி, மீன், பீன்ஸ், சூரியகாந்தி விதைகள் மற்றும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் நன்கு சேர்த்துப் பலப்படுத்த ஹார்லிக்ஸ், ஹார்லிக்ஸ் ரொட்டி போன்ற மாவு வகைகளையும் ரொட்டி வகைகளையும் உணவில் சேர்க்கவும்.

மக்னீசியம் குறைந்தால் உடலும் மனமும் கடும் சோதனையில் இருக்கின்றன என்று பொருள். இவர்கள் டாக்டர்களையும் மாற்றுவார்கள். இவர்கள் சோயா மொச்சையையும் வாழைப்பழத்தையும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். மதியம் பசலைக்கீரை அல்லது தண்டுக்கீரை சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து கிடைக்கும் மக்னீசியம் உணர்வுகளைச் சமநிலைப்படுத்தும். இதனால் நோய்களும் குணமாகும்.

தினமும் மூளையுடன் தொடர்புள்ள இரண்டு கட்டை விரல்களையும் சரியாக 5 நிமிடங்கள் பிடித்து விடுங்கள். பிறகு 15 அல்லது 20 நிமிடங்கள் கண்களைமூடி அமைதியாக இருங்கள். கடல் என்றோ அமைதி என்றோ மனதுக்குள் சொல்லித் கொள்ளலாம். இந்த இரண்டு அம்சங்களாலும் மனம் உண்மையில் அமைதியடையும். கவலையை முறியடிக்கும் உணவுகளும் தினமும் சேர மன அமைதி தொடர்ந்து கிடைக்கும். இதனால் பல்வேறு நோய்களும் குணமாகும். பிரச்னைகளுக்கும் நல்ல முடிவுகள் தோன்றும்.

காலை உணவை சாப்பிடுங்க! சந்தோஷமா

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் வண்டியை ஓட்ட பெட்ரோலாக தேவைப்படும் உணவு அது. 

காலை உணவு முறையை "பிரேக் பாஸ்ட்" என்று கூறுவர்.  "பாஸ்ட்" டை (உண்ணாதிருத்தலை) "பிரேக்" (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம்.  முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது.  அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது.  காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல.  பத்துமணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும்.

என்ன சாப்பிடணும்

காலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர்.  சிலர், காலையில், முழு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம் சாதாரண அளவில் சாப்பிட்டு, இரவு டிபன் சாப்பிடுகின்றனர். 

ஆனால், காலை உணவை தவிர்ப்போரும் உண்டு. இவர்களுக்கு தான் பாதிப்பு வரும்.  குறிப்பாக வீட்டு, ஆபிஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உணவு மிக முக்கியம். அதை தவிர்த்தால் அவர்களுக்கு பல கோளாறுகள் வரவாய்ப்பு அதிகம்.

உணவு என்றால் ...

உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவதுதான் உணவு.  கார் போன்றது உடல்.  கார் ஓட பெட்ரோல் தேவைப்படுவது போல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை.  அந்த எரிசக்தியை தருவது சத்துக்கள் தான்.  அந்த சத்துக்களை நாம் உணவில் இருந்து தான் பெறவேண்டும்.  காலை உணவு சாப்பிட்டால், அது சிற்றுண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரிபொருளை தருகிறது.  சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக்கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும் காலை உணவு மிக முக்கியம்.

எடை குறைக்கவேண்டும் என்று இருப்பவர்கள், காலையில் உணவை சாப்பிட மாட்டார்கள்.  ஆனால் அப்படி இருப்பது ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.  ஏனெனில் இரவில் உண்ட பிறகு, நீண்ட நேர இடைவெளிக்குப் பின் காலை நேரத்தில் உணவு உண்போம். ஏனெனில் அப்போது உண்டால்தான் அந்த நாளை தொடங்குவதற்கு ஏற்ற சக்தியானது கிடைக்கும்.  இத்தகைய சக்தியை காலை உணவில் மட்டுமே கிடைக்கும். மதியம் கூட உண்ணாமல் இருந்துவிடலாம்.  ஆனால் காலையில் உண்ணாமல் இருந்தால் எந்த வேலையையும் செய்யமுடியாது.  அப்படி உண்ணாமல் இருப்பவர்கள், இப்போது இருந்து உண்ணும் பழக்கத்தை கொள்ளுங்கள்.  மேலும் அப்படி ஏன் உண்ணாமல் இருக்கவேண்டும் என்று பல காரணமும் இருக்கிறது.  அது என்னவென்றால் படித்துப் பாருங்கள் ...

காலையில் உண்ணாமல் இருந்தால் என்ன ஏற்படும்? ...

1.காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது.  காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு சக்தியானது தேவைப்படுகிறது.  அதற்கு காலை உணவே சிறந்தது.

2.சிலர் எடையை குறைக்க காலை உணவை மட்டும் தவிர்த்து, மற்ற நேரத்தில் கொஞ்சம் உண்பர்.    ஆனால் உண்மையில் காலையில் உண்ணாமல் இருந்து மதியம் குறைவாக உண்ண முடியாது,     அப்போது வயிறு நிறைய தான் உண்பர். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. மேலும் அத்தகைய உணவை உண்ணும் போது ஆரோக்கியமான உணவைக் கூட உண்ண மாட்டார்கள். ஆகவே இதனால் எடைதான் கூடுமே தவிர எடை குறையாது.

3.மேலும் உணவை உண்ணாமல் இருந்தால் முதலில் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு அதிகரித்து, பின் கலோரியின் அளவு அதிகரிக்கும்.  மேலும் இது உடலில் மெட்டபாலிக் டிஸ்ஆடரை ஏற்படுத்தும். இதனால் எடை தான் அதிகரிக்கும்.

4.வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் காலை உணவை உண்ணாமல்     சென்றால் அவர்களால் வேலையில் கவனத்தை செலுத்த முடியாது.  ஆகவே காலை உணவு அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்து கவனத்தை அதிகப்படுத்துகிறது.

5.காலை உணவை உண்டால், உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரியானது விரைவில் கரைத்து விடும்.

6.மேலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் எப்போதும் நீங்கள் நடந்து கொள்வதையே பழகுவார்கள்.  இப்படி நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் அவர்களும் போக போக சாப்பிடாமல் தான் இருப்பார்கள்.  பின் அவர்கள் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.  ஆகவே அவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க நினைப்பவர்கள், சரியான நேரத்தில் சாப்பிடுங்கள், அவர்களும் அதையே பின்பற்றுவார்கள்.

7.காலையில் உண்ணும் போது வேண்டுமென்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான தானியங்கள், பழங்கள், பால் போன்றவற்றை உண்டால் உடலும் ஆரோக்கியமாக இருப்பதோடு எடையும் கூடாமல் அளவாக இருக்கும்.

8.வேலைக்குச் சென்று சிடுசிடுவென டென்சனாக இருக்கிறீர்களா? அதற்குக் காரணம் வேலைப்பளு    அல்ல.  அதற்கு காரணம் காலை உணவை உண்ணாதது ஆகும். 

ஆகவே காலை உணவை சாப்பிடுங்க! சந்தோஷமா அன்றைய தினத்தை துவங்குங்க!!

Monday, 19 December 2016

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ''கண்ணிக்காணம்'' என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ' அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

மஞ்சள் காமாலைக்கு:
கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப்பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.

மகோதர வியாதிக்கு:
கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்துச்சாரெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப்பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.

மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

ஆஸ்துமா குணமாக:
கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு நோய் நீங்க:
கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கத்திற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.

பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங் கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.

குழந்தைகளின் சளி நீங்க:
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

கரிசலாங்கண்ணித்தைலம்:
கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

இரத்தசோகை நீங்கி நல்ல ரத்தம் உண்டாக:
இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.

கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.

தலைமுடி நன்கு வளர:
கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணி இலைச் சூரணமும், ஜாட்டை கரந்தை இலைச் சூரணமும் சமம் கலந்து தேவையான அளவிற்கு வைத்துக்கொண்டு அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இரண்டு மாத உபயோகத்தில் இளநரை மாறி விடும்.

கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.

தலைப்பொடுகு நீங்க:
கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.

பல் உறுதிக்கு!
கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

பித்தத்தைலம் :
கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.

நரை நீக்கும் தைலம்:
புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொணடு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால், இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.

நாள்பட்ட புண் ஆற...
கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் நினைக்க முடியாத பல பிரச்சனைகளுக்கு

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் நினைக்க முடியாத பல பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. அதில் குறிப்பாக உடல் எடையால் தான் பலரும் கஷ்டப்படுகின்றனர். ஒருவரின் உடல் எடை அளவுக்கு அதிகமானால், அதைத் தொடர்ந்து இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம், இதய பிரச்சனைகள், கொலஸ்ட்ரால் என பல பிரச்சனைகள் அழையா விருந்தாளியாக வந்துவிடும்.
சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!
இந்த பிரச்சனைகளெல்லாம் வராமல் இருக்க இயற்கை வைத்தியங்களில் பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் இஞ்சி சாற்றின் தேன் கலந்து குடிப்பது. அனைவருக்கும் இஞ்சி மற்றும் தேனின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியும். மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க இவை பெரிதும் உதவியாக உள்ளன.
உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ்!!!
இத்தகைய இஞ்சியை சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

செரிமான பிரச்சனைகள்
தற்போது கண்ட ஜங்க் உணவுகளை உட்கொண்டு, செரிமான மண்டலத்தினால் சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனை சரிசெய்ய, இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.

ஆஸ்துமா
ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக நுரையீரலினுள் செல்லும் இரத்த நாளங்கள் நன்கு ரிலாக்ஸ் அடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, சுவாச பிரச்சனைகள் நீங்கும்.

புற்றுநோய்
தேன் கலந்த இஞ்சி சாறு புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எப்படியெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

நோயெதிர்ப்பு சக்தி
நோயெதிர்ப்பு சக்தியின்றி இருப்பவர்கள், அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றினால் அவஸ்தைப்படுபவர்கள், இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

கொழுப்புக்களை கரைக்கும்
இஞ்சி தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பைல் சுரப்பை தூண்டி, வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் தொப்பை குறையும். நல்ல மாற்றத்தைக் காண தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும். அதே சமயம் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

குறிப்பு
முக்கியமாக இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடிக்கும் முன்பு, மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளவும்.

பூண்டை வறுத்து சாப்பிட்டால்

பூண்டை வறுத்து சாப்பிட்டால்……???

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?
பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.
இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.

2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.

4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
6-7 மணிநேரம்
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.
7-10 மணிநேரம்
இக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
10-24 மணிநேரம்
முதல் 1 மணிநேரத்தில் ழுண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும். அவையாவன:
* கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.
* தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
* இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
* உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
* உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
* எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
* அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.
* உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கலாம்

ஏழே நாட்களில் ஏழு கிலோ

ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா? அது நடக்காது என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.

அதிலும் பலர் இந்த புத்தாண்டில் இருந்து, உடல் எடையை குறைத்து, சிக்கென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக என்ன செய்யலாம் என்று யோசிப்பதுண்டு. அப்படி நீங்கள் உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தால், தமிழ் போல்ட் ஸ்கை அட்டகாசமான டயட் டிப்ஸ்களை கொடுத்துள்ளது.

அதனைப் படித்து, அதன் படி நடந்தால், நிச்சயம் ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள்!!! இந்த மாதிரி எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் படித்து பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம்.

ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். முக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும். என்ன நண்பர்களே! ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ரெடியா!

எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம். ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். முக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும். என்ன நண்பர்களே! ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ரெடியா!

நாள் 1

ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு அந்நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் வாழைப்பழத்தை தவிர வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம்.

நாள் 2

இரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். ஏன் உங்களுக்குப் பிடித்த உருளைக்கிழங்கைக் கூட பயமின்றி சாப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது, மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் குடித்து வாருங்கள்.

நாள் 3

மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், மதியம் ஒரு பௌல் காய்கறி சாலட்டையும், இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளையோ சாப்பிடலாம். ஆனால் இந்நாளில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

நாள் 4

நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அது ஸ்மூத்தி, மில்க் ஷேக் என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அதிலும் குறிப்பாக ஸ்கிம் செய்யப்பட்ட பாலை தான் சாப்பிட வேண்டும்.

நாள் 5

இந்நாளில் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 7-8 தக்காளியை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட வேண்டும். அதுவும் காலை முதல் மாலை வரை தக்காளியையும், இரவில் சாதத்தையும் சாப்பிடுவது நல்லது. ஆனால் இந்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவை இன்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, சாதாரணமாக 12 டம்ளர் தண்ணீர் குடித்தால், இந்நாளில் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நாள் 6

ஆறாம் நாளில் மதிய வேளையில் ஒரு கப் சாதத்தையும், மற்ற நேரங்களில் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

நாள் 7

இந்த நாளில் ஒரு கப் சாத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் பழச்சாறுகளையும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும்.

8

பூண்டு என்றவுடன் மூக்கை

பூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பொதுவாக அமர்ந்தபடி அலுவல் புரியும் பலருக்கு ஏற்படும் பெரும் தொல்லை, வாயு தொல்லை. அதற்கு அற்புதமான மருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று அவர் தரும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவில் பூண்டை சேர்த்து கொள்வது பல வகைகளிலும் நல்லது.

இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. இதில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன். அவற்றினை காண்போம்.

மருத்துவ குணங்கள்:

இது ஒரு சிறந்த கிருமி நாசினி.
வியற்வையை பெருக்கும்,
உடற்சக்தியை அதிகப்படுத்தும்,
தாய்பாலை விருத்தி செய்யும்,
சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,
சீரண சக்தியை அபிவிருத்தி செய்யும்,
இரத்த கொதிப்பை தணிக்கும்.
உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
இதய அடைப்பை நீக்கும்.
நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்.
ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு.
 பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.
தொண்டை சதையை நீக்கும்.
மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.
பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.
சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.
மூட்டு வலியைப் போக்கும்.
வாயுப் பிடிப்பை நீக்கும்.
இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது
உபயோகிக்கும் முறை:

தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

உள்நாக்கு வளர்தலுக்கு: வெள்ளை பூண்டை இஞ்சி சாறுவிட்டு அரைத்து கொஞ்சம் தேனும் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும். இவ்விழுதை தொண்டையின் வெளிப் பூசி வர வேண்டும். இப்படி செய்தால் மூன்றே நாளில் குணமாகும்.

சுளுக்கு : வெள்ளை பூண்டை உப்பு சேர்த்து இடித்து,சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கி விரடும்.

தேமல் : வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மங்கி கொண்டே வந்து கடைசியில் மறைந்துவிடும்.

இரத்த அழுத்ததிற்கு: இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும்.

இளம் தாய்மார்கள், பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிட அதிகமான பால் சுரக்கும்.

அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.

மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும்.

நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.

இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும்.

கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.

ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

குறிப்பு:பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இந்த பூண்டை உண்பதால் ஒருவித வாடை ஏற்படுகிறது. இதனாலேயே பலர் பூண்டை உணவுடன் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கின்றனர். இதை தவிர்க்க பூண்டு பற்களை, வெங்காய துண்டுகள், இஞ்சியுடன் இளம் சூட்டில் வறுத்து உண்ணலாம். தவிர, பூண்டு உணவு அல்லது பூண்டை உட்கொண்ட பிறகு கொத்தமல்லி, லவங்கம் அல்லது கிராம்பு போன்றவற்றை வாயில் ஒதுக்கி கொண்டால் பூண்டினால் உண்டாகும் ஒரு விதமான வாடையை தவிர்க்கலாம்.

ஆனால் பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

நன்றி: பாட்டிவைத்தியம்

எட்டுக்குள் ஒரு யோகா!!!*

*எட்டுக்குள் ஒரு யோகா!!!*


*எட்டு* போடுகிறவனுக்கு *நோய்* எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர் அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம், மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம். எத்தனைதான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும்.

இதிலிருந்து விடுபட்டு, நாம் மனிதர்கள், நலமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர் சித்தர்கள்.

காலை நேரத்திலோ, அல்லது நேரம் கிடைக்கும் பொழுதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி நீளம் வேண்டும்) எட்டு போடுகிற வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்ய வேண்டும். முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காக நடக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இருமுறை செய்ய வேண்டும். காலையும், மாலையும் வேளைகள் மிக வசதியாக இருக்கும்.

*இதை செய்வதால் என்ன நடக்கும்!*
பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி கரைந்து வெளியேறுவதை காணலாம். இந்த பயிற்சியை இருவேளை செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று அர்த்தம். நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை வியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும். (பின்னர் மாத்திரை, மருந்துகள் தேவை இல்லை). குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும். கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம். கேட்கும் திறன் அதிகரிக்கும். உடல் சக்தி பெருகும், ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும். குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும். ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும். பாத வலி, மூட்டுவலி மறையும். சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்.

சரி! இதெப்படி நடக்கிறது என்று உங்களுக்குள் கேள்வி ஏழும். "8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள், அந்த வடிவம் *முடிவில்லாதது* மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சமநிலை படுத்துகிறது. மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்!! உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும், உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும், நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம், உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்!! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கணும்.

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள், ஆண்கள் வலது கை பக்கம் -- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும், ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 15 நிமிடம் நடக்கணும், பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 15 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும், மொத்தம் முப்பது நிமிடம்!!

*1வது 21 நாளில* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி, இடகலை நாடி புத்துயிர் பெரும்!!!,   *2 வது 21 நாளில்* மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்!!!, *3 வது 21 நாளில்* தொடை பகுதி பலம் பெரும்!!!, *4 வது 21 நாளில்* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும்!!!, *5 வது 21 நாளில்* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்!!!, *6 வது 21 நாளில்* இரத்த அழுத்தம், இதய நோய், ஆஷ்துமா, காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்!!!

*நம்முடைய உடலின் மீது அக்கறை கொள்வோம். நலமுடன் வாழ்வோம் பல்லாண்டு!!!*

புளியம் இலையை நன்கு அவித்து சூட்டோடு துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்த

புளியம் இலையை நன்கு அவித்து சூட்டோடு துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்த பின்னர் சுளுக்கு உள்ள இடத்தில் புளிய இலையுடன் கூடிய துணியை அப்படியே கட்டி வைத்தால் உடனடி குணமாகும்.
சிலருக்கு மூட்டுகளில் வீக்கம் வந்து வலியும் இருக்கும். இதற்கு புளியம் இலைகளை நன்கு நசுக்கி நீரில் போட்டு நன்கு கொதித்த பின்னர் அந்த பேஸ்ட்டை வீக்கங்களின் மீது பற்றிட்டு வர நீர் குறைந்து வலியும் போகும்.
நன்கு உலர்த்தி பொடி செய்யப்பட்ட பிரண்டை வேர் பொடியுடன் நெய் விட்டு லேகியம் போல் தயார் செய்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை 1 1/4 கிராம் வீதம் காலை மாலை இருவேளை உட்கொண்டு வர நாளடைவில் ஒடிந்து போன எலும்புகள் கூட இணைந்து விடும். முருங்கை கீரை தினசரி உட்கொள்ளும்போது கழுத்துவலி காணாமல் போகும்.

 
பிரண்டையின் உட்பக்க சதை பகுதியை காயவைத்து பொடித்து, அத்துடன் ஜாதிக்காய் சூரணத்தையும் 10:20 என்ற விகிதத்தில் கலந்து வைத்து கொண்டு மூன்று நாட்கள் காலை, மாலை என 6 வேளை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணம் பெற வாய்ப்பு உண்டு.
காலில் முள் குத்தி அவதிப்படுபவர்கள் முள்ளை அகற்றிய பின்னர், நல்லெண்ணை தடவிய வெற்றிலையை அனலில் வாட்டி சூட்டோடு ஒத்தடம் கொடுத்தால் விஷம் முறிந்து, வலியும் பறந்து போய் விடும்.

தலைவலி ஏற்பட்டால் எந்த வேலையையும் சரியாக செய்ய இயலாது.

தலைவலி ஏற்பட்டால் எந்த வேலையையும் சரியாக செய்ய இயலாது.
தாங்கி கொள்ள முடியாத தலைவலியால் நாம் செயலிழந்து காணப்படுவோம்.
இத்தகைய தலைவலியானது அதிக சப்தத்துடன் இசை கேட்டாலோ, அதிகப்படியான வாசனையினாலோ அல்லது மன அழுத்தத்தினாலோ ஏற்படக்கூடும்.
அத்துடன் ஒருசில உணவுகளை உட்கொண்டாலும், தலைவலியானது அதிகரிக்கும்.
சொக்லெட்
அடிக்கடி தலைவலி வருமானால், இதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் சாக்லெட்டானது தலைவலியை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று.
காப்ஃபைன்
ஏராளமான மக்கள் தலைவலிக்கும் போது காபி குடித்தால், தலைவலி குணமாகும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் காபியை அளவாக குடித்தால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக குடித்தால், அது கடுமையான தலைவலியை உண்டாக்கும்.
ஐஸ் க்ரீம்

 
பொதுவாக அதிக அளவில் குளிர்ச்சியுடன் இருக்கும் உணவுப் பொருட்கள் தலைவலியை ஏற்படுத்தும். அதிலும் ஐஸ்க்ரீமில் உள்ள அதிகப்படியான குளிர்ச்சியானது நரம்புகளை பாதித்து, தாங்க முடியாத தலைவலியை ஏற்படுத்தும்.
வாழைப்பழம்
சிலருக்கு தைரமின் என்னும் கெமிக்கல் ஒப்புக் கொள்ளாது. அத்தகையவர்கள் வாழைப்பழத்தை உட்கொண்டால், கடுமையான வலியுடன் கூடிய தலைவலியை சந்திப்பார்கள்.
உலர் பழங்கள்
உலர் பழங்களான உலர் திராட்சை மற்றும் அத்திப் பழம் போன்றவையும் தலைவலித் தூண்டும்.
ஈஸ்ட்
வலியை தாங்கி கொள்ள முடியாதவர்கள், பிரட், பன் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
ஏனெனில் இத்தகைய பொருட்களில் ஈஸ்ட் அதிக அளவில் இருக்கக்கூடும். இதனால் இவை சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்.

நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையானது

நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையானது இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேசவே முடியாது.
ஏனெனில் எங்கு அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
அவற்றில் சரியாக வாயை பராமரிக்காமல் இருப்பது மட்டுமின்றி, இன்னும் வேறு பல காரணங்களும் உள்ளன. ஆனால் அந்த காரணங்களைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் அவை அனைத்தும் அன்றாட பழக்கவழக்கங்களுடன் தொடர்பில் இருப்பவை. இங்கு அப்படி வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் சில காரணங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து அவைகளை முறையாக பின்பற்றி வந்தால், வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
வறட்சியான வாய் வாய் துர்நாற்றம் அடிப்பதற்கு வாய் வறட்சியும் ஒரு காரணம். பொதுவாக இந்த நிலையானது வாயின் வழியாக சுவாசிக்கும் போது ஏற்படும். இப்படி வறட்சி அடைவதால், வாயில் உள்ள எச்சில் வறண்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே எப்போதும் மூக்கின் வழியாக சுவாசித்துப் பழகுங்கள்.
சரியான மௌத் வாஷ் மௌத் வாஷ் பயன்படுத்தினால் வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் சரியான மௌத் வாஷ் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஆல்கஹால் குறைவாக உள்ள மௌத் வாஷ்களை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே கடுமையான துர்நாற்றத்தை வீசும்.
மூக்கு ஒழுகல் சளி அல்லது மூக்கு ஒழுகல் இருந்தால், மூக்கின் வழியாக சுவாசிக்க முடியாமல், வாயின் வழியாக சுவாசிப்போம். மேலும் காய்ச்சல் இருந்தால் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருக்கும்.

 
காலை உணவு
பெரும்பாலானோர் காலையில் அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று காலை உணவை உட்கொள்ளாமல் கூட செல்வார்கள். ஆனால் காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தாலும், வாய் துர்நாற்ற பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். எனவே சரியான வேளையில் உணவுகளை உட்கொண்டு வர வேண்டும்.
கார்போஹைட்ரேட் குறைவான உணவு
டயட் என்ற பெயரில் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே சரியான முறையில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்து வாருங்கள்.
ஆல்கஹால் சாதாரணமாக ஆல்கஹால் பருகினாலேயே நாற்றம் வீசும். ஏனெனில் ஆல்கஹால் வாயை வறட்சியடையச் செய்து, வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கிறது. ஆகவே ஆல்கஹால் பருகுவதை நிறுத்துங்கள்.
உணவில் சேர்க்கும் பொருட்கள்
உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட்டால் கூட, வாய் துர்நாற்றம் வீசும். ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை உட்கொண்ட பின்னர் புதினா அல்லது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.
தண்ணீர் குடியுங்கள்
முக்கியமாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அப்படி போதிய அளவில் தண்ணீரை குடிக்காமல் இருந்தால், அது கூட வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் தண்ணீரானது வாய் வறட்சியை தடுப்பதுடன், எச்சில் உற்பத்தியை அதிகரிக்கும்.
கல்லீரல் கோளாறு
இன்னொரு காரணம் என்னவென்றால், கல்லீரலில் பிரச்சனை இருந்தாலும், வாய் துர்நாற்றம் வீசும். எனவே வாயை நன்கு பராமரித்து வந்து, மேற்கூறியவற்றை பின்பற்றிய பின்னரும் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் உடலில் அம்மோனியாவானது அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் தான் வாய் துர்நாற்றம் வீசுகிறது

சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுவது இயல்பான ஒன்று. ஆனால், பலரும் சூழ்நிலை காரணமாக பல மணி நேரம்

சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுவது இயல்பான ஒன்று. ஆனால், பலரும் சூழ்நிலை காரணமாக பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள், குறிப்பாக பெண்கள், பயணம் மேற்கொள்ளும் போது மோசமான கழிவறை மற்றும் பல்வேறு காரணங்களால் சிறுநீரை அடக்குகிறார்கள்.
இது ஆபத்தானது. ஆண்களை விட பெண்களே அதிகளவில் சிறுநீரை அடக்குகிறார்கள். பொதுவாக மனிதனின் சிறுநீர்ப்பையின் கொள்ளளவு 350 முதல் 500 மி.லி. வரைதான் இருக்கும். எப்போதுமே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் சிறுநீர் கழித்து விடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக அடக்கி வைக்கக்கூடாது.
அதிலும் பெண்கள் சிறுநீரை அடக்க கூடாது. இதனால் பலவிதமான பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சிறுநீரை அடக்கக்கூடாது. இதனால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஒரு நாளில் காலை தொடங்கி இரவு வரை 5 முதல் 7 முறை சிறுநீர் கழிக்க வேண்டும்.
மூன்று மணி நேரத்துக்கு மேல் சிறுநீரை தேங்க விடக்கூடாது. சிறுநீர்ப் பையின் கொள்ளளவை மீறி சிறுநீர் தேங்குவதால் நிறைய விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சிறுநீர்ப்பை அதிகமாக விரிவடைவதால் சிறுநீர்ப்பையில் உள்ள அழுத்தும் கொடுக்க வேண்டிய திசுக்கள் காலப்போக்கில் பாதிப்படைந்து விடும்.

 
இந்த திசுக்கள் தான் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்ததுமே அதை வெளியேற்றத் தூண்டுகின்றன. இத்தகைய திசுக்கள் பாதிப்படைவதால் சிறுநீர்ப்பை செயலிழந்து போகும். சிறுநீர் முழுவதுமாக வெளியேற்றப்படாமல் உள்ளே தேங்கிவிடும் நிலை ஏற்படும். இப்படி உள்ளே சிறுநீர் தேங்குவதால் அடிக்கடி சிறுநீர்ப்பாதை அடைப்பு ஏற்படவும் சிறுநீர்ப்பையில் கல் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.
நாட்கள் செல்லச் செல்ல சிறுநீரகங்கள் வீக்கமடைந்து செயல் இழந்து போகும் வாய்ப்பும் உண்டு. அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் சிலருக்கு வயிறு வீங்கிவிடும். சிறுநீர் கழித்து முடிந்ததும், அது சகஜ நிலைக்கு வந்து விடும். சிறுநீரை கட்டுப்படுத்தாமல் அவ்வப்போது வெளியேற்றுவது தான் ஆரோக்கியமான உடல் நலத்துக்கு நல்லது.

ஆரோக்கியத்தை மறந்துவிட்டு ருசிக்காகவும், நறுமணத்துக்காவும் உணவை சாப்பிட

ஆரோக்கியத்தை மறந்துவிட்டு ருசிக்காகவும், நறுமணத்துக்காவும் உணவை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் மனிதர்கள்.
அவ்வாறு, ருசியை கொடுக்கும் அஜினமோட்டோவில் ஏராளமான தீமைகள் மறைந்துள்ளன என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை.
இதன் வேதிப் பெயர் 'மோனோ சோடியம் குளூட்டமேட் Mono Sodium Glutamate என்பதாகும்.
அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது.
அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும்.
இதனால், உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் 'ஆர்குவேட் நுக்ளியஸ்' என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.
மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும், அழற்சியையும், சிறு இரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

 
இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்று வலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப்பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும்.
பல்வேறு விளம்பரங்களில் அஜினோ மோட்டோ ஒரு தாவர உணவு என்றும் அதனால் ஆபத்து எதுவுமில்லை என்றும் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். தாவரங்களிலும் உயிரைப் பறிக்கும் நச்சுத் தன்மை உண்டு என்பதே உண்மை.
பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் தங்கள் உணவு வகைகளின் சுவைகளில் ஒரு பிரத்யேகத் தன்மை இருப்பதாக பீற்றிக்கொண்டாலும், அதற்கான இரகசியங்கள் அஜினோ மோட்டோவில்தான் இருக்கிறது.
பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்ற தன்மை, தலைவலி, வாந்தி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை அஜினோமோட்டோவை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென்று கடுமையான தலை வலியா?

திடீரென்று கடுமையான தலை வலியா? தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.

Thursday, 15 December 2016

மலச்சிக்கல்

இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் அந்த மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும். இவ்வாறு இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு வந்தால், அவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள். இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் உண்ணும் உணவு தான். ஏனெனில் உண்ணும் உணவில் குறைவான அளவில் நார்ச்சத்து இருந்தால், அவை குடலியக்கத்தை பாதிக்கும், பின் உடலில் இருக்கும் கழிவுகள் சரியாக வெளியேறாமல், உடலிலேயே தங்கி எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமலிருக்குமாறு செய்யும்.

இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்றால் அது நார்ச்சத்துள்ள உணவுகள் தான். இந்த சத்துள்ள உணவுகள் குடலின் இயக்கத்தை அதிகரித்து, உடலில் இருக்கும் கழிவுகளை சரியாக வெளியேற்றிவிடும். ஆகவே இந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம். இப்போது அந்த மலச்சிக்கலை தடுக்கும் நார்ச்சத்துள்ள உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காய்

மலச்சிக்கலானது பொதுவாக வயிறு உப்புசத்துடன் இருந்தால் ஏற்படுவது. இதற்கு பழங்களில் ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காயை சாப்பிட்டால், அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.

பாப்கார்ன்

பாப்கார்னில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நார்ச்சத்துக் குறைபாடும் ஒரு காரணம். ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, மற்ற பிட்சா, சாண்ட்விச் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, பாப்கார்னை சாப்பிட்டால், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

பீன்ஸ்

காய்கறிகளில் கிடைக்கும் நார்ச்சத்துக்களை விட, பீன்ஸில் இரண்டு மடங்கு அதிகமாக நார்ச்சத்து உள்ளது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், குடலியக்கம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாது தடுக்கலாம்.

Wednesday, 14 December 2016

செருப்பை தேடுகிறோம்

பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள்ளன. இந்த 2 எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் ஏற்படும் பிரச்னைகளால் குதிகால் வலி ஏற்படலாம்.

பாதத்தில் பிளான்றார் பேசியா எனப்படும் மெல்லிய சவ்வு உள்ளது. இது பாதத்தின் முன் பகுதியையும் பின்பகுதியில் உள்ள கேல்கேனியம் எலும்பையும் இணைத்து பாதத்தில் உள்ள வளைவுகளை (ஆர்ச்) தாங்குகிறது.

நாம் உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் நிலையில் பாத வளைவுகளும் பிளன்றார் பேசியாவும் குறுகிய நிலையில் இருக்கும். நாம் எழுந்து நிற்கும் போது, உடல் பருமனாலோ அல்லது தவறான பாதணிகளை அணிவதாலோ பாதத்தில் உள்ள வளைவுகள் இழுக்கபடுகிறது. இவ்வாறு அது இழுக்க படுவதால் அதனை தாங்கும்

பிளான்றார் பேசியா என்ற சவ்வானது அது இணைக்கபட்டுள்ள கேல்கேனியம் எலும்பிலிருந்து அறுக்கபடுகிறது. இவ்வாறு அறுக்கப்பட்ட சவ்வை இணைக்கும் நோக்கத்தில் நமது உடலானது கால்சியத்தை அதன்மீது படிய செய்கிறது.

இவ்வாறு அதிகமாக படிந்த கால்சியத்தால் அங்கு வீக்கம் ஏற்பட்டு நரம்புகள் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த பிரச்னையில் குதிகாலின் அடிபகுதியில் வலி உணரபடுகிறது. எக்ஸ்ரேவில் இவ்வாறு அதிகமாக படிந்த கால்சியத்தை

'கேல்கேனியல் ஸ்பர்' என குறிப்பிடுவர். சில வேளைகளில் 'ஸ்கையாட்டிகா' போன்ற இடுப்பு பிரச்னைகளிலும் குதிகால் நரம்புகள் அழுத்தப்பட்டு குதிகால் வலி ஏற்படுகிறது.

இதற்கு முதலில் இடுப்பு பிரச்னையை சரிசெய்தல் அவசியம். குதிகால் வலி இடுப்பு பிரச்னையால் ஏற்படுகிறதா? அல்லது குதிகால் பிரச்னையால் ஏற்படுகிறதா என்பதை சில எளிய ஆய்வுகள் மூலம் கண்டறியலாம்.

குதி காலில் வலி நீங்க என்ன வழி?
குதிகாலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டடுள்ளதாக என்பதை எக்ஸ்ரே மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள்

வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும் காலையல் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லி.யும்

கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் சிறிது எண்ணெயை (10 M .L.) . சூடு செய்து
இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து (20 நிமிடங்கள் வரை ) வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் கால் முழ்குமளவு 5-10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும. காலையில் குளிப்பதற்கு முன்பும்

இதுபோலச் செய்யலாம். கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபேயாகிக்கவும். கால்களைத் தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும்.

சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.

முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.

குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும்.

பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.

அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வரக் காரணமாகின்றது.

ஹை ஹீல்ஸ் குதிகாலின் "லும்பார்" முள்ளெலும்பில் அழுத்தம் எற்படுத்தி, உங்கள் கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாகுகிறது.

உடல் எடையைக் குறைக்க என்ன வழி?

நீங்கள்உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.

வராதி(Varadi) என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 M .L அளவில் கிடைக்கும். 3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 M .L) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு

வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம்.

ஆயுர்வேத மருந்துக் கடைகளில் லோத்ராஸவம் (Lodhrasavam) எனும் மருந்து 450 M .L அளவில் கிடைக்கும். அதை 5 ஸ்பூன் அதாவது 25 M .L – 30 M .L வரை உணவிற்குப் பிறகு காலை, இரவு சாப்பிடவும்.

தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது 'திரிபலா' எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 M .L தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.

சில ஆசனங்களால் நிவாரணம்:

வஜ்ராசனம்
உஷட்டிராசனம்
சர்வாங்காசனம்
ஹலாசனம் மற்றும்
சிரசாசனமும் வலி குறைக்கும்.

கோடைக் காலத்தின் சூடு தணிந்த பிறகு, கொள்ளு தானியத்தை நன்கு கழுவி உலர்த்தி மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளித்த மோரைச் சிறிது சூடாக்கி 70-100 கிராம் வரை கொள்ளு மாவை அதில் குழைத்து உடலில் கூடுதல் சதை உள்ள இடங்களில் கீழிருந்து மேலாக சூடு பறக்கத் தேய்த்து அரை மணி

நேரம் ஊறிய பிறகு சுடு தண்ணீரில் குளிக்கவும். கொள்ளு சதையை உருக்கிவிடும். சோப்புக்கு பதிலாக 'ஏலாதி சூர்ணம்' கடையில் கிடைக்கும், அதை வெந்நீருடன் குழைத்து மேல் தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும், உடல் எடையைக் குறைக்கவும் முடியும். 'இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு' என்பது பழமொழி.

புலால் உணவை முழுவதுமாக நிறுத்தி விடவும். குடலைச் சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியம். திரிபலா சூர்ணம் 1 ஸ்பூன் அளவில் இரவில் படுக்கும் முன் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்ல் இல்லாமல் குடல் சுத்தமாக இருக்கும்.

அனுபவத்தில் சில:

தவிடும் உப்பும் வறுத்து ஒத்தடம் தரலாம்.
தினசரி மிதமான வென்னீரில் கல் உப்பு போட்டு கால்களை சிறிது நேரம் அமிழ்த்தி வைத்திருக்கலாம்.

வில்வக்காய் கிடைத்தால் அதை சுட்டு நசுக்கி எருக்கிலை பழுப்பை அதன் மேலிட்டு குதிகால்களை ஒத்தடம் கொடுக்கலாம். (வலி தீரும் வரை தினசரி செய்க)

மிகு பித்தம் குறைய மைக்கொன்றை இலைகளை காய்ச்சாத பசும் பால் சேர்த்து அரைத்து தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட (சுமார் 48 நாட்கள்) வெகுவாய் வலியற்றுப் போகிறது மாயமாய்.
வெற்றிலை நெல்லி ரசம்

தேவையானவை:

முழு நெல்லிக்காய் – 10, வெற்றிலை – 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் – 4, பூண்டு – 6 பல், வால் மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை:

நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பொடியாக அரிந்த பூண்டு,

ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு இளவறுப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்துவைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

மருத்துவப் பயன்:

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. எலும்புப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

மேற்கண்ட குதிகால் பிரச்னையில் வலியையும், ரணத்தையும் குறைப்பதற்கு சைலீசியா லைக்கோபோடியம் போன்ற ஹோமியோபதி மருந்துகள் மிகுந்த பலனளிக்கிறது.

பிஸியோதெரபியில் அல்ட்ராசவுண்ட், ஷாட்வே டைய தெரபி மெழுகு போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தபடுகிறது. உடல் எடை குதிகாலில் விழுந்து ரணமாவதை தடுக்க மைக்ரோ செல்லுலார்

(எம்.சி.ஆர்) ரப்பரால் தயாரிக்கபட்ட காலணிகளை அணிதல் நல்லது. கால் பாதத்தில் உள்ள விளைவுகளை பராமரிக்க பாத தசைகளுக்கான உடற்பயிற்சி செய்வது அவசியம்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

Tuesday, 13 December 2016

கல்லீரலில்

 உடல் ஆரோக்கியத்தின் அடையாளம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கல்லீரல் நலனில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் எனவும் கூறுகின்றனர்.

நமது உடலில் சிறுநீரகம், நுரையீரலில் தேங்கும் அளவிற்குக் நிகராக கல்லீரலில் அதிக நச்சுக்கள் தேங்குகிறது. இதனால், சிறுநீரக செயலாற்றல், செரிமானம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்க இது காரணியாக அமைகிறது.

ஊட்டச்சத்து குறைவான உணவு, சுற்றுப்புற மாசு, உடல் வேலை குறைவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது பழக்க, போன்றவை தான் கல்லீரலில் நச்சுக்கள் அதிகரிக்கவும், உடல் எடை கூடவும் முக்கிய காரணிகள்.

எனவே, கல்லீரலில் உள்ள நச்சுக்களை அழிக்க, உடலில் தேங்கும் அதிக கொழுப்பை கரைக்கஇயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஜூஸை குடித்து வாருங்கள். இந்த ஜூஸ் எளிதாக செரிமானம் ஆகவும், உடற்சக்தியை அதிகரிக்கவும் பயனளிக்கிறது
.
ஆறு கேல் (Kale) இலைகள்
பாதி எலுமிச்சை பழம்
இரண்டு ஆப்பிள்
அரை இன்ச் அளவிலான இஞ்சி
ஒரு பீட்ரூட்
மூன்று கேரட்
இவை எல்லாம் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளாக இருந்தால் மிகவும் சிறப்பு.

மாதுளம்பழத்தின்

மாதுளம்பழத்தின் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது.நாம் உண்டு வரும் பழங்கள் எல்லாம் மருத்துவ தன்மை வாய்ந்தது. அதில் மாதுளை ஒரு அற்புத மருத்துவ தன்மை கொண்டது.

அதன் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது ஆகும். மாதுளையின் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவதில் பயன்படுபவை.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பழம், இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பூ, பழத்தோல் ஆகியவை ரத்தப் போக்கைக் கட்டப்படுத்தும். துவர்ப்புச் சுவையைக் கூட்டும். பழம்

குளிர்ச்சியை உண்டாக்கும். பூ, பசியைத் தூண்டும். மரப்பட்டை, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். விதை, ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். பல நோய்களையும் கட்டுப்படுத்தி உடலை வளமாக்க மாதுளை பயன்படுகின்றது.மயக்கம், தலைச்சுற்றல், தொண்டை வறட்சி, புளிப்புயேப்பம், வாந்தி தீர :
மாதுளம் பழச் சாறு, 100 மி.லி. அளவு காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க :
மாதுளம் பழச்சாறு குடிப்பது உடனே பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ரத்த சோகையும் ஏற்படக்கூடும். இதற்கும் மாதுளம் பழச்சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாற்றுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்துச் சாப்பிட குணம் பெற முடியும்.

வயிற்றுப் போக்கு, பேதி தீர :

மாதுளம் பிஞ்சை நன்றாக அரைத்து, பசைபோலச் செய்து கொண்டு, நெல்லிக்காய் அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்யலாம்.

ரத்த மூலம் கட்டுப்பட :

பூச்சாறு 15 மி.லி. சிறிதளவு கற்கண்டு சேர்த்து, காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வரலாம்.

உடல் குளிர்ச்சி பெற :

ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, காலையில் குடிக்க வேண்டும்.

வாய்ப்புண், தொண்டை ரணம், வலி தீர :

மாதுளம் பூக்களைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை 1/2 தேக்கரண்டி யளவுல், 1/4 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, வாய் கொப்புளித்து வர வேண்டும்.

மாதுளம் பற்கள் :

பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு, முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தால் உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கப்பட்டிருக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடவது மிகவும் அவசியமானதாகும்