**வாழை
வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டு வர குடலில் சிக்கி இருக்கும் முடி, நஞ்சு ஆகியவை வெளியேறும்.
வாழைப்பூவை வாரம் ஒரு முறை கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.
வாழைப்பழத்தோலை கண்ணாடி குத்திய இடத்தில் வைத்து கட்டினால் ரத்தப் போக்கு நின்று விரைவில் குணமாகும்.
வாழைப்பூவை வேக வைத்து அல்லது பொரியல் செய்து சாப்பிட நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் அகலும்.
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.
வாழைத்தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சதை போடுவதை தடுக்கலாம்.
வாழைப்பழத்தில் மிளகை வைத்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள சிறுநீர் கற்கள் கரைந்து வெளியேறும்.
தீக்காயங்கள் ஆற
வாழை குருத்தை பிரித்து தீப்பட்ட இடத்தில் கட்ட கொப்பளங்கள் குணமாகும்.
வாழைத்தண்டடை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவினால் தீப்புண் வடு குறையும்.
வாழைப்பூ சாறுடன் சீரகம் சேர்த்து குடிக்க மூலம் குறையும்.
No comments:
Post a Comment