யோகாசனம் ஒரு விளக்கம்
யோகக் கலை அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.
யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன.மேலும் யோகா வஜ்ரயான(Hatha yoga) மற்றும் திபெத்திய(Rāja yoga) புத்த மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.
யோகாவின் குறிக்கோள்:-
யோகாவின் குறிக்கோள் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதில் தொடங்கி, மோட்சத்தை அடைவது வரை பல வகைப்படும். சமண மதத்திலும் மற்றும் தனித்த அத்வைத வேதாந்தப் பள்ளிகளில் மற்றும் சைவ சமயத்திலும் யோகாவின் குறிக்கோள் மோட்சம். அதாவது உலகியல் துன்பங்களில் இருந்து, பிறப்பு, இறப்பு (சம்சாரம்) என்ற சுழற்சியில் இருந்து விடுதலை, இந்தக் கட்டத்தில் மிக உயர்ந்த பிரம்மத்தில் ஐக்கியம் என்ற கருத்து. மஹாபாரத்தத்தில், யோகாவின் லட்சியம் பலவிதமாக பிரம்ம லோகத்தில் பிரம்மனாக நுழைவது, அல்லது எல்லாவற்றிலும் உள்ள பிரம்மம் அல்லது ஆத்மாவை உணர்தல் என்று பலவாறாக விளக்கப்பட்டுள்ளது.
பக்தி பள்ளிகளான வைணவம் , பக்தி அல்லது ஸ்வயம் பகவானுக்கான சேவை/கைங்கரியம் செய்வது யோகாவின் முறைகளின் ஆணித்தரமான / இறுதியான இலக்கு. இங்கு இலக்கு என்பது முடிவில்லாத ஒரு தொடர்பை பகவான் விஷ்ணுவுடன் அனுபவிப்பதாகும்.
உங்கள் உடல் உங்களுடன் ஒரு நிரந்தர/ நிலையான உறவை பேணி வர வேண்டும் , எப்படி என்றால் ஒரு அமைதியான , நடுநிலையான மன அமைதி பெற்று விளங்க வேண்டும் என்பதே!.
யோகாசனம் செய்வதால் ஏற்படும் ஐந்து முக்கியப் பலன்கள்:-
இதயத்துடிப்பைச் சீராக்குகிறது. இதன் மூலம் உடல் முழுக்கச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கிறது. இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
உடலை ஓய்வுபெறச் செய்கிறது. தொடர்ந்து யோகா செய்துவந்தால், உடலில் ரத்த ஓட்டம் சீரடைகிறது. உடலில் உள்ள உறுப்புக்களுக்கு ஆக்சிஜன் ஓட்டம் நன்றாக நடப்பதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது.
யோகாவின் மிக முக்கியப் பலன், உடலின் வளைந்து கொடுக்கும் தன்மை அதிகரிப்பது தான் முதல் நாள் பயிற்சியின் போது பெரும்பாலானவர்களால் உடலை வளைத்து கால் விரல்களைத் தொடக்கூட முடிவது இல்லை. ஆனால், தொடர்ந்து பயிற்சி செய்து வரும் போது, முடியாது என்று நினைத்த ஆசனங்கள் கூட எளிதில் செய்யக்கூடிய அளவுக்கு உடலின் வளைந்து கொடுக்கும் தன்மை அதிகரிப்பதை உணரலாம்.
தொடர்ந்து யோகா செய்யும் போது, சர்க்கரை அளவு மற்றும் கெட்ட கொழுப்பின் அளவு கட்டுக்குள் வருகின்றன. நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இன்சுலின் செயல்திறன் குறைய மன அழுத்தமும் ஒரு காரணம் அதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
மன அழுத்தத்துக்குக் காரணமான கார்டிசோல் என்கிற ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், கோபம், ஸ்ட்ரெஸ் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன. மகிழ்ச்சியான மனநிலை உருவாகிறது.
No comments:
Post a Comment