சாப்பிட்டு முடித்ததும் டீ குடித்தால் பிரச்சனை வருமா?
சாப்பிட்டு முடித்ததும் டீ குடித்துப் பழகி விட்டேன். இந்தப் பழக்கத்தால் பிரச்னை ஏதாவது வருமா?
டயட்டீஷியன் உத்ரா உணவில் இருக்கும் இரும்புச் சத்தை உடலில் சேரவிடாமல் தடுத்துவிடும் டீ. அதனால் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டு உடல்ரீதியாக பல விளைவுகளை சந்திக்க வேண்டி யிருக்கும். எனவே, உணவுக்குப் பிறகு டீ குடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக பழங்கள், உலர் திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. டீ குடித்துத்தான் ஆக வேண்டும் என்றால், ஒரு மணி நேரம் கழித்துக் குடிக்கலாம்.
No comments:
Post a Comment