Tuesday, 31 January 2017

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

!!!பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

*  வெந்தயம்.    -  250gm
*  ஓமம்               -  100gm
*  கருஞ்சீரகம்  -  50gm

* மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது.

👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது.

👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

👉 இருதயம் சீராக       இயங்குகிறது.

👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது.

👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும்,  சுறுசுறுப்பும் உண்டாகிறது. 

👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. 

👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்  வலுவடைகிறது.

👉 கண் பார்வை
தெளிவடைகிறது.

👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

👉மலச்சிக்கல்  நீங்குகிறது.

👉 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

👉  நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது. 

👍  இந்த கலவையை  2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது. நன்றி.

Monday, 30 January 2017

அரைத்த கேழ்வரகு

அரைத்த கேழ்வரகு மாவு மட்டும் இருந்தால் போதும், பத்து நிமிடங்களுக்குள் விதவிதமான பலகாரங்களைச் செய்து அசத்திவிடலாம்.
கேழ்வரகு மாவில் செய்யும் பலகாரங்கள் சத்துமிக்கவை, குறிப்பாக எலும்பை வலுவாக்கும் சுண்ணாம்பு எனப்படும் கால்சியச் சத்து.
உடனடி நொறுவை
கிராமங்களில் சமைப்பதற்கு முன்னர்ப் பசியென்று பிள்ளைகள் பெற்றோரைப் படுத்தி எடுத்தால், ஏதாவது பளபளப்பான பாக்கெட்டுகளில் விற்கும் மாமாங்கம் கழிந்த நொறுவைகளை வாங்கிக் கொறிக்குமாறு சட்டென்று கையில் இரண்டு ரூபாயைத் திணித்து விட மாட்டார்கள்.
கார விரும்பிப் பிள்ளைகளாக இருந்தால், ஒரு கப் கேழ்வரகு மாவை எடுத்து அதில் நான்கு சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு, பன்னீர் தெளிப்பதுபோலத் தேங்காய்ப் பூவைத் தூவி, ஒரு சிட்டிகை சீரகத்தை நுணுக்கிச் சீராகத் தெளித்து, உப்பெடுத்து மாவில் காட்டி, பிடியளவு பொட்டுக்கடலையைச் சேர்த்து, மாவு தொண்டையைப் பிடிக்காமல் இருக்க ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிக் கரண்டியால் மெல்லக் கிண்டுவார்கள்.
இந்தக் கலவையில் அறுசுவையும் இருக்கும், அனைத்துச் சத்துகளும் இடம் பெறும். வயிற்றை வறண்டு போகச் செய்வதாகவோ, சுள்ளென்று காரம் பிடிப்பதாகவோ இல்லாத மேற்படி பண்டம், மறுநாள் காலைக்கடனைச் சுளுவாகத் தீர்த்து விடும்.
பாக்கெட் பண்டம் வேண்டாமே
கண்களைச் சுண்டியிழுத்து உண்ணச் செய்யும் தற்காலப் பாக்கெட் பண்டங்களை அரையும் குறையுமாக மென்று தள்ளும் பிள்ளைகள் பலருக்கும் மலச் சிக்கல் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மலச் சிக்கல், மனச் சிக்கலில் கொண்டுவந்து விடும். உடல் பருமன் தொடங்கித் தோல் ஒவ்வாமைவரை அடுத்தடுத்த நோய்களாகப் பரிணமிக்கும் என்ற உண்மையை இன்றைய அவசர கதியில் பலரும் உணரத் தவறுகிறோம்.
பாக்கெட் நொறுவைகளைத் தவிர்க்க வேண்டுமென்றால், பிள்ளைகள் விரும்பி உண்ணும்படியான பலகாரங்களை வீட்டிலேயே தயாரிக்கப் பெற்றோர் படைப்பார்வத்துடன் இறங்கிவிட வேண்டும்.
இனிப்பும் உண்டு
சரி, கேழ்வரகு மாவுக்குத் திரும்புவோம். அதே கேழ்வரகு மாவில் இன்ஸ்டன்டாக ஒரு இனிப்பைச் செய்யலாம். அரை கப் மாவில் 30 கிராம் உடைத்த வெல்லம், ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல், அரை ஸ்பூன் நல்லெண்ணெயை விட்டுக் கிளறிக் கொடுத்தால் அற்புதமான இனிப்பு ஓரிரு நிமிடங்களில் தயாராகிவிடும்.
இந்த இனிப்புடன் தேங்காய்ப் பூவும், நல்லெண்ணெயும் கலக்கப் பட்டிருப்பதால் குழந்தைகள் மென்றும், மெல்லாமல் விழுங்கிவிட்டாலும் உணவுத் துகள்கள், செரிமான இயக்கத்தின்போது வயிற்றில் பசையாக ஒட்டாமல் வயிற்றையும், சிறுகுடலையும், பெருங்குடலையும் `பை-பா'ஸில் செல்லும் வாகனங்களைப் போல இலகுவாக விரைந்து கடந்து சென்றுவிடும்.
வறண்ட பண்டங்கள் வேண்டாம்
சூரியக் குஞ்சாக வெப்ப ஆற்றலைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் கேழ்வரகை, மாவாக்கிப் பண்டங்கள் தயாரிக்கிறபோது மிகுந்த கவனம் தேவை. தற்காலத்தில் காராச்சேவு, மிக்சர் போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களுக்குக் கேழ்வரகு மாவைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய பலகாரங்கள் வயிற்றுக்குள் போனதும் உடலின் நீர்ச்சத்தைக் கவர்ந்து உபாதைகளை உருவாக்கும்.
எனவே, கேழ்வரகில் இறுகலான பண்டங்களைச் செய்யலாகாது. தற்காலக் குறைந்த உடலுழைப்புக்கு ஏற்ப எளிதில் செரிக்கும்படியாக மெத்தென்ற ஊடுபாவு (Texture) அமையும் விதத்தில் தேங்காய்ப்பூ, நல்லெண்ணெய் போன்றவற்றைக் கலந்தே செய்ய வேண்டும். அப்படிச் செய்கிறபோது சத்துகள் சமவிகிதத்தில் கிடைப்பதுடன் மலக்கட்டு ஏற்படாமலும் தவிர்க்கலாம்.
விருந்தினரை அசத்தலாம்
சாப்பாட்டு நேரமல்லாத இரண்டுங்கெட்டான் நேரத்தில் நண்பர்களோ தோழிகளோ வீட்டிற்கு வருகிறார்கள். எதையாவது செய்து அவர்களை அசத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதற்காக ரொம்பவும் மெனக்கெடத் தேவையில்லை. இருக்கவே இருக்கிறது ஆபத்பாந்தவன் கேழ்வரகு மாவு. இரண்டு கப் மாவு எடுத்து மிக்ஸி ஜாரில் போடுங்கள். ஒரு வாழைப்பழத்தை உரித்து ஒன்றிரண்டாகப் பிசைந்து மாவுடன் சேருங்கள்.
ஒரு ஏலக்காய், சுவைக்கேற்ப வெல்லத் தூள் சேர்த்து, நீர் ஊற்றி, தோசைமாவுப் பதத்தைக் காட்டிலும் கெட்டியாக அரைத்து, அதனுடன் அரை மூடி தேங்காய்ப்பூ சேர்த்து, ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து ஜனகராஜ் சொல்வது போல 'ஒரு கலக்கு கலக்கி' தோசைக்கல்லில் அழகான குட்டிக்குட்டி வட்டமாக வார்த்து, நெய் காட்டிப் புரட்டிப் போட்டு எடுத்தால், தேவாலயங்களில் கொடுக்கப்படும் அப்பத்தைப் போன்ற பண்டம் ஆவி பறக்கப் புன்முறுவல் காட்டும். புதுமையான இந்த `கேழ்வரகு அப்பம்' உடலுக்கு இனிமை சேர்க்கும்.
இதே மாவைப் பணியாரக் கல்லில் ஊற்றிக் குழிப் பணியாரமாகவும் சுடலாம். அல்லது `டுபுக்… டுபுக்…' என்று குமிழ் விடும் எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். எந்தப் பின்விளைவுகளையும் தராத இந்தப் பலகாரத்தை ஆசை அடங்க எத்தனை தின்றாலும் நம்மைப் பழி வாங்காது. செரிக்கக் கடினமில்லாத இந்த இனிப்பைக் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.
மேற்படி மாவில் வெல்லத்துக்குப் பதிலாக ஓமமும், பொடியாக அரிந்த வெங்காயமும், அரிந்த மல்லி, கருவேப்பிலைத் தழைகளையும் சேர்த்துவிட்டால் அற்புதமான காரப் பலகாரமாகிவிடும்.

குக்கர் அறிமுகமான புதிதில் அதனுள் அடங்கும் ஒரு பாத்திரத்தில் அரிசி

குக்கர் அறிமுகமான புதிதில் அதனுள் அடங்கும் ஒரு பாத்திரத்தில் அரிசியும், பொருத்தமான அளவில் தண்ணீரும் வைத்து மூடி, அதற்குப் பின்னர் குக்கரின் மூடியைப் போட்டு அடுப்பில் ஏற்றுவார்கள். அதிலாவது சற்றுக் கஞ்சித் தன்மையுடன் கூடிய சோற்றை ருசிக்க முடிந்தது. இந்த முறையில் அரிசியின் சத்துகள் முழுமையாகச் சிதையாது.

காரணம், அரிசியை நேரடியாக ஆவி தாக்குவதில்லை என்பதால் அழுத்தம் குறைவாகச் செலுத்தப்படும். அரிசி, நீரில் தளதளத்து மலர்ந்து வேகச் சற்றேனும் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கும். சோறும் ஓரளவு சுவையாக இருக்கும்.

சோற்றை மீண்டும் சூடுபடுத்தலாமா?

ஆனால், இன்று அநேக வீடுகளில் அரிசியைக் கழுவோ கழுவென்று கழுவி நேரடியாகக் குக்கரில் போட்டு, நீர் ஊற்றி நீராவியின் நேரடி அழுத்தத்தில் வேகவைப்பதால் சோறு, எரிமச் சத்துகள் மிகுந்து, நுண்சத்துகள் முற்றாகச் சிதைந்து விடுகின்றன. இன்னும் பல வீடுகளில் மின்சார குக்கரில் சோற்றை அவிப்பதுடன், அவ்வப்போதுச் சூடாகச் சாப்பிடுவதற்காகச் சிறிதளவு நீர் ஊற்றி மறு சூடு ஏற்றுகிறார்கள். மறு சூடேற்றிய சோற்றில் ஆவி பறக்கும். ஆனால் சுவையிருக்காது.

எந்த உணவில் அதற்குரிய இயல்பான சுவையில்லையோ, அதில் சத்தும் முழுமையாகக் கிடைக்காது. "பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில், அதெல்லாம் பார்க்க எங்க சார் நேரமிருக்கு?" என்ற சமாதானத்தை உடனடியாகக் கையில் வைத்திருக்கிறோம்.

உடல், பாழடைந்த வீடா?

இயல்பான சுவைக்கு மாறாக எப்போது புளிப்பு, காரம், உப்பைப் போன்று நாவை வன்மமாகத் தாக்கும் சுவையைச் சார்ந்திருக்கத் தொடங்கினோமோ, அன்றைக்கு நம் உடலில் உயிரின் சாரம் குறையத் தொடங்கும். உயிரின் சாரம் குறைகிற உடலில் நோய்கள் குடியேறத் தொடங்கும். பாழடைந்த வீட்டில் விஷ ஜந்துகள் குடியேறுவதைப்போல.

வெள்ளையாக இருந்தால் போதுமா?

நாம் உண்கிற உணவில் பெரும்பங்கு அரிசி. ஆனால், அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோமா? இன்றைய தலைமுறையினர் பலருக்கும் பச்சரிசி, புழுங்கலரிசி, அரை வேக்காட்டு அரிசி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் தெரியவில்லை. இதற்குப் பொருள் அரிசியில் பேதம் இல்லை என்ற பெருந்தன்மை அல்ல. பச்சையோ புழுங்கலோ எதுவானாலும் வெள்ளையாக இருந்தால் போதும் என்ற வெள்ளை மோகம்தான்.

அரிசி, உஜாலாவில் முக்கி எடுத்தது போன்று டாலடிக்கும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டியதில்லை. வெண்மையின் உச்சத்தைக் குறிக்க 'முத்து போன்ற வெள்ளை'என்கிறோம். அந்த முத்தே முழுமையான வெண்மையுடன் இருப்பதில்லை. திரட்சிதான் முத்துக்குச் சிறப்பே தவிர, அதன் நிறம் அல்ல. அரிசியும் பழுப்பு நிறத்தில் திரண்டிருப்பதுதான் நல்லது.

வழக்கொழிந்த அரிசிக் கஞ்சி

அரிசியைச் சோறு, இட்லி, தோசை ஆகியவற்றுக்கு மட்டுமே ஆதாரப் பொருளாகப் பயன்படுத்துகிறோம். அரிசியை அடிப்படையாகக் கொண்ட பிற பதார்த்தங்களான ஆப்பம், புட்டு, பணியாரம், களி, உப்புமா போன்றவை வழக்கில் இல்லாதது போலவே அரிசிக் கஞ்சியும் கிட்டத்தட்ட முழுதாக வழக்கொழிந்துவிட்டது.

முன்பு குளிர் காலங்களில், காய்ச்சலுற்ற நாட்களில் கஞ்சி காய்ச்சுதல் வெகு இயல்பான ஒன்றாக இருந்தது. காலைக் கஞ்சி, மாலைக் கஞ்சி, கறிக் கஞ்சி என்ற சொற்கள் இன்றளவும் மதுரை, தேனி மாவட்டங்களில் வழக்கில் உள்ளன.

"முட்டிக்கு முட்டி தட்டி, ஜெயில்ல தள்ளி இவனைக் கஞ்சி குடிக்க வைச்சாத்தான் சரிப்படுவான்" என்று பழி தீர்ப்பாகச் சிறைக் கஞ்சியைச் சொல்வார்கள். உண்மையில் சிறைக் கஞ்சியும், பொட்டுக் கடலைச் சட்டினியும் அபாரமான சுவையுடன் இருந்த காலம் உண்டு.

அரசியல் கைதியாக ஐந்து நாட்களுக்குச் சேலம் சிறையில் நான் இருந்தபோது கஞ்சியைச் சுவைத்த அனுபவம் உண்டு. அந்த நாட்களில் விடியும் முன்னரே அரிசிக் கஞ்சியின் வாசம் நாசியைத் தாக்கி, வயிற்றில் கபகபவெனப் பசியைத் தூண்டிவிடும். அத்தனை சுவைமிக்கதாக இருக்கும் அரிசிக் கஞ்சி.

அதே சுவையிலான அரிசிக் கஞ்சியைச் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஐந்து நட்சத்திர உணவகத்தில் சுவைத்திருக்கிறேன். நம்மூர் ஜெயில் கஞ்சி, ஐந்து நட்சத்திர உணவகத்துக் கஞ்சியை மிஞ்சும் சுவையில் இருந்தது. அந்தக் கஞ்சியை ருசிப்பதற்காகவே சிறைக்குப் போகலாமா என்றுகூடத் தோன்றுவதுண்டு.

அசைவக் கஞ்சியும் உண்டு

சீனர்களின் காலைச் சிற்றுண்டியில் கஞ்சி சகஜமாக இடம்பெறும். அரிசியுடன் சிறிதளவு கொத்துக் கறி, பொடியாகத் தறித்த கோழிக்கறி, முள்ளில்லாத மீன் துண்டுகள், இறால், பொரித்த நெத்திலி பொடி ஆகியவற்றில் எதையாவது ஒன்றைக் கலந்து அசைவக் கஞ்சியாகவே காய்ச்சி உண்கிறார்கள்.

சிங்கப்பூர் உணவுத் தொகுதிகளில் பத்துக்கு ஒரு கஞ்சி ஸ்டால் இருக்கும். சிக்கன் போரிட்ஜ், ஃபிஷ் போரிட்ஜ் என நம் விருப்பத்துக்கேற்ப ஆர்டர் செய்தால் ஆவி பறக்கும் கஞ்சியை, தேங்காய் போன்ற அழகான பிளாஸ்டிக் கும்பாவில் இறைச்சித் துண்டுகள் மிதக்கப் பரிமாறுகிறார்கள். அதனுடன் கலக்கப் புளிப்புக் காடியும், வினிகரில் ஊறிக் காரம் மட்டுப்பட்ட மிளகாய்த் துண்டுகளும் வைப்பார்கள். தொட்டுக்கொள்ளத் துணைச் சுவையின்றியே கஞ்சி, கபகபவென அடிவயிற்றில் சூடாகப் பரவும். அவ்வப்போதுப் போனஸ் சுவையாக இறைச்சித் துண்டுகள் பல்லில் அரைபடும்.

எனது சிறு வயதில் வீட்டில் யாருக்குக் காய்ச்சல் என்றாலும், ஒட்டுமொத்தமாக அனைவருக்குமே கஞ்சிதான். என் அம்மாவின் பழுப்பு நிறக் கஞ்சியைக் குடிப்பதற்காகவும், பள்ளி விடுப்புக்காகவும், தடித்த போர்வை வாசத்துக்காகவும் காலமெல்லாம் காய்ச்சலில் விழுந்து கிடக்கலாம் போலத் தோன்றும்.

உடலுக்கு வெப்பமேற்றுவது என்றால் கொள்ளுக் கஞ்சி, வலுவேற்றுவது என்றால் உளுந்துக் கஞ்சி, உதிரப் போக்கை ஈடுசெய்ய எள்ளுக் கஞ்சி எனப் பத்துக்கும் மேற்பட்ட வகைகளில் அடுத்தடுத்துக் கஞ்சிகளைச் சுவைக்கலாம்.



ஆரோக்கியத்தை வரவேற்கும் கஞ்சி செய்முறை

ரண்ட புழுங்கல் அரிசியில் ஒன்றுக்கு ஆறு பங்கு நீர் விட்டு மலரக் கஞ்சியாகக் காய்ச்சினால் பிரியாணியையே தூக்கி சாப்பிடும் வாசம் வீசும். குளிர் காய்ச்சலென்றால் புழுங்கல் அரிசியை லேசாக வறுத்து, அதை மிக்ஸியில் இட்டு ஒன்றிரண்டாக உடைத்து அதனுடன் சுமார் எட்டில் ஒரு பங்கு பாசிப்பருப்பு கலந்து, ஐந்தாறு பல் பூண்டும், விரல் பிடியளவு இஞ்சித் துருவலும் தூவி, மசிய வேகவிட்டு, கல் உப்பு காட்டினால் - அந்தக் கஞ்சி ஒரு சிறு குழந்தைபோல் நம்மைக் கை நீட்டி அழைக்கும். உடனே ஆசையில் நாம் உருகிவிடக் கூடாது.

அரை ஸ்பூன் மிளகு, சீரகத்தைப் பொடித்துப் போட்டு நெய்யில் தாளித்து, அதன் மீது ஊற்றினால் முதல் குவளை நீர் ஊற்றும்போது சிலிர்த்துச் சிரிக்குமே குழந்தை, அதுபோலச் சிரிக்கும் கஞ்சி.

லேசாக ஆறிய நெளுநெளுப்பான கஞ்சியினுள் மணிக்கட்டுவரை கையை முக்கி, அலைத்து அள்ளிப் பருகுவது ஒரு சுவையென்றால், ஸ்பூனில் அள்ளி `ப்ப்பூ… ப்ப்பூ..' என ஊதி, ஸ்பூனைத் தழுவச் சுழற்றி உண்பதும் மற்றொரு சுவை.

எச்சரிக்கை. நுனி நாக்கில் வன் சூடு தாக்கினால் இரண்டு மூன்று நாட்களுக்கு எதன் சுவையுமே தெரியாது.

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. 

ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.

முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. 

அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.

பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள். 

ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?

தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

#கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.

#கடல்_நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

#வெளியேறும்_வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

#மொட்டை_போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

#நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

#மூன்று_வயதில்_ஓர்_மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

#ஆன்மீக_ரீதிக்கே_மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.

: பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.

உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம். 

பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம். 

செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.

 ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். உண்மையான விளக்கம் இதுதான் !!

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

இது ஒரு பழமொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு.

இதனின் ௨ட்பொருள்;
ஆனையைப் பிாித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் உண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து உடலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதே போல்,பூ னைக்கு என்பதை பூ + நெய் என்று பிாித்துப் பாா்க்கும்போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் உணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். 
ஆயுளும் வளரும்...

: சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...???

இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும்..!!
தெரியாதோர்க்காகஇந்தப் பதிவு...

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. 

இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. 

விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம். ஆனால் இப்போது டைனிங் டேபிள். 

இது சரியா..? தவறா..?

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன..? 

என்பதைத் தெரிந்துக் கொள்வோம்:-

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்...சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. 

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது...!!!

: ஆதி தமிழர்கள் பாம்பிற்குப் பால் ஊற்றுவது மற்றும் முட்டை வைப்பதன் காரணம் என்ன..?

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. 

பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன. காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிகமிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும்.அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையைப் பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. 

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். 

அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே...

: பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.

வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் 

கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... 

அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

Sunday, 29 January 2017

கருப்பட்டி

*கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்*
********************************************************

*சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது*

*இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி*

*சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்*

*"உணவே மருந்து" என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது*

*பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்:-*

*1.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது*

*2.விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது*

*3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்*
*4.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்*

*5.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன*

*6.கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள 'கிளைசீமி இன்டெக்ஸ்' உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது*

*7.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்*

*8.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்*

*9.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்*

*10. மேனிபளபளப்பை பெறும்*

*11.கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்*

*12.சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்*

*13.ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்*

*14.கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்*

*15.நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்*

*16.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது*

*17.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது*
.
*18.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்*

*19.அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்*.

*20.உடல்இயக்கத்தையும் சீரான சக்தியையும் சமநிலையில் செய்கிறது*

 *பொறுமையைவிட மேலான தவமுமில்லை* 
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*  
   
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*  
                           *அன்பான இனிய நற்காலைப்பொழுது வணக்கம் நட்பே*

 *வாழ்க வளமுடன்*

Saturday, 28 January 2017

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும்


**முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---  
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

** வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் --- 
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

** கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் --- 
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

** காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் --- 
காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

** கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் --- 
கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- 
அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

**கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- - 
உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

**முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் --- 
உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.

**தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் --- 
அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

** உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் --- 
உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும்  குறைந்துவிட்டது என அர்த்தம்.

** தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் --- 
உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

** கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் --- 
இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

**என்னிடம் இருந்து உங்களுக்கு  மெசேஜ் வந்தால் - நல்லதை அறிந்து கொள்ளுங்கள் என அர்த்தம்...            

12 காய்கறி

*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்* 
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*
 
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்"*💚
*🎀நலம் உடன் வாழ்வோம்...

Friday, 27 January 2017

உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்

உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்

உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம்தான். இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகிவிட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங் களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக் கும், கொழுப்பு சத்து குறையும், உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சிறுதானியங்கள்
கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடு பவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல்பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை.

கம்பு, சோளம்
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

வரகு, ராகி
வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ள து. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

ஆண்மைக்கு சாமை
சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இது மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

சம்பா அரிசி
நாம் அன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி என பலவகை உள்ளது.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

கோதுமை, பார்லி
அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.

வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.

குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.

புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்..

'புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...' என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீ.....ளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது 'வேர் பரப்பி, இலை பரப்பி' அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் 'பார்ட்டிகளும்' உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.

இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.

காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.

பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம்.

தூசினால் ஏற்படும் அலர்ஜியை சரி செய்ய எளிய இயற்கை உணவுகள்:-

தூசினால் ஏற்படும் அலர்ஜியை சரி செய்ய எளிய இயற்கை உணவுகள்:-

சிலருக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் சென்ஸிடிவாக இருக்கும். சின்ன தூசிக்கு கூட தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும். தூசு, பூச்சி கடித்தால், மாசுப்பட்ட காற்று என எங்கு சென்றாலும் உடனேயே நோய் எதிர்ப்பு செல்கள் அலர்ஜி உண்டாக்கும் செல்களை தூண்டும்.

இந்த அலர்ஜி செல்கள் தனது வேதிப்பொருளை வெளிப்படுத்தும் இதன் விளைவே அலர்ஜி உண்டாகிறது. தும்மலில் தொடங்கி, ஆஸ்துமா, சரும பிரச்சனை வரை பலவிதமான அலர்ஜிகள் உண்டாகின்றன. இவ்வாறு அலர்ஜியால் அதிகம் பாதிக்க்ப்படுபவர்கள் கீழே சொல்லப்பட்டிருக்கும் உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அலர்ஜியை கட்டுப்படுத்தலாம்.

பசலைக் கீரை :-

பசலைக் கீரை நுரையீரல் சம்பந்தமான அலர்ஜியை தடுக்கிறது. அனைத்து விதமான விட்டமின் மினரல்கள் உள்ளன. பசலைக் கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமாவை வரவிடாமல் தடுக்கலாம்.

ஆப்பிள் :-

ஆப்பிள் நோயை மட்டுமல்ல அலர்ஜியையும் தடுக்கிறது. கர்ப்பிணிகள் வாரம் 4 நான்கு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழ்ந்தைக்கு ஆஸ்துமா போன்ற நுரையீரல் பாதிப்புகள் வராது

வாழைப் பழம் :-

வாழைப் பழம் அதிக நார்சத்துக்களை கொண்டது. இதனை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தூசினால் வரும் அலர்ஜி தடுக்கப்படும்.

அவகாடோ :-

அலர்ஜிக்கு மிகச் சிறந்த உணவு இதுதான். இதிலுள்ள குளுடதயோன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். இது பாதிப்படைந்த நுரையீரலையும் சரி செய்து மூச்சுக் குழாயை தொற்றிலிருந்தும் கிருமிகளிடமிருந்தும் பாதுகாக்கிறது.

காலே :-

காலே அதிக விட்டமின் சி யைக் கொண்டுள்ளது. இது ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து, செல்களின் ஆரோக்கியத்தை காக்கிறது. முக்கியமாக நுரையீரல் சம்பந்தப்பட்ட அலர்ஜியை தடுக்கும்.

பூண்டு :-

பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் அலர்ஜியை தடுக்க முடியும். நுரையீரலை பலப்படுத்தும். ஆஸ்துமாவை வரவிடாமல் தடுக்கும். இது அலர்ஜியினால் உண்டாகும் பாதிப்புகளையும் சரி செய்கிறது.

Wednesday, 18 January 2017

புடலங்காய்

வயிற்றில் சிலருக்கு குடல் புண்கள் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களால் முழுமையாக சாப்பிட முடியாது. ஒரே வயிற்று வலி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதுபோன்ற, குடலில் ஏற்படக்கூடிய புண்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாகும்.

புடலங்காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த ஒரு காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை பயன்படுத்துகின்றனர்.

புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயே பயன்படுத்த வேண்டும். இது குடல் வலிக்கு நல்லதாகும்.

* விந்துவை கெட்டிபடுத்தும். ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய். காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு.

* அஜீரண கோளாறு அகன்று, எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும் என்றும் கூறப்படுகின்றது.

* குடல் புண்ணை ஆற்றும். வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.

* இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது.

* மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.

* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

* பெண்களுக்கு வெள்ளைப்படுதலை குணப்படுத்தும். கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.

9. இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.

பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய்

உணவே மருந்து, மருந்தே உணவு. திரைப்படங்களில் கிராமத்து சீன்கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத்தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.

இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது. ஆனால் முதல் நாள் சோற்றில்  நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான்வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய  வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது !

பழைய சாதத்தின் நன்மைகள் சில

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து,  மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால்  இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும், உடல் எடையும் குறையும்.
மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
அலர்ஜி,அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.
அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர,ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.
ஆரோக்கியமாக அதே சமயம்  இளமையாகவும் இருக்கலாம்

Friday, 13 January 2017

இயற்கையாக மண்ணில் விளையும் எல்லா உணவுகளுமே நல்லவை தான். ஆனால்

இயற்கையாக மண்ணில் விளையும் எல்லா உணவுகளுமே நல்லவை தான். ஆனால், இருவேறு நல்ல உணவுகள் கூட ஒன்றாக சேரும் போது உடலுக்கு விஷமாகிவிடும். பாலில், சாம்பார், ரசம் போன்ற உணவு ஒரு துளி கலந்தால் கூட கெட்டுப்போகிறது அல்லவா அது போல தான்.
கொழுப்பை கரைத்து, பசியை குறைக்க உதவும் உணவுகள்!!
சில உணவுகள் எளிதாக செரிமானமாகக் கூடியவை. சில உணவுகள் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இவற்றை ஒன்றாக ஒரே நேரத்தில் உண்பது செரிமான கோளாறை உண்டாக்கும். அதே போல உணவில் குளிர்ச்சியான, சூடான இருவேறு வகைகள் இருக்கின்றன. இவற்றை ஒன்றாக உட்கொள்ளுதல் உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்து கூடியதாக அமையும்.
உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
எனவே, எந்தெந்த உணவருந்தும் போது, எந்தெந்த உணவை சேர்த்துக் கொள்ள கூடாது என இனிக் காண்போம்....
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் உணவுகள் + பழங்கள் 
பால் உணவுகள் + பழங்கள்
பழங்கள் விரைவாக செரிமானம் ஆகிவிடும் ஆனால், பால் உணவுகள் செரிமானம் நேரம் எடுத்துக் கொள்ளும். இது ஒட்டுமொத செரிமான செயற்பாடுகளை நிதானமாக்கிவிடும். மேலும் இதனால் அசிடிட்டி பிரச்சனையும் உண்டாகலாம்.
பால் உணவுகள் + முள்ளங்கி

முள்ளங்கி சூடான உணவு, பால் உணவுகள் குளிர்ச்சியானவை. இவற்றை ஒன்றாக உண்பது நிச்சயம் செரிமான கோளாறை ஏற்படுத்தும்.

மீன் + பால்
மீன் மட்டுமின்றி எந்த ஒரு இறைச்சி உணவு உண்ணும் போதும் பால் அருந்துவது உடலுக்கு தீங்கானது. இந்த கலவை உடலில் நச்சுக்களை உண்டாகும். இதனால் உணவு ஒவ்வாமை (Food Poisoning) ஏற்படலாம்.
உப்பு+பால் 

உப்பு பால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணான உணவுப் பொருட்கள், இதை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நெய் + தேன் 

நெய் உடலுக்குள் குளிர்ச்சியையும், தேன் சூட்டையும் அதிகரிக்கும் உணவுப் பொருள். எனவே, இவை இரண்டை ஒன்றாக உட்கொள்ள வேண்டாம்.

பழங்கள் + மாவு உணவுகள்
பழங்கள் உண்ணும் போது உருளைக்கிழங்கு, சீஸ், வறுத்த உணவுகள் மற்றும் மாவு உணவுகளுடன் உட்கொள்ள வேண்டாம். முன்பு கூறியதை போல பழங்கள் உடனே செரிமானம் ஆகிவிடும், மற்றவை செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால், செரிமான கோளாறு தான் உண்டாகும்.

மெலன் உணவுகள் + தானியங்கள்
செரிமானத்தை கடினமாகும் மற்றொரு கலவை உணவுகள் இவை. மெலன் பழங்கள் உண்ணும் போது தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.

குளிர்பானங்கள்
உணவு உண்ட உடனே குளிச்சியான பானங்கள், பனிக்கூழ் போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம். இது செரிமான கோளாறு உண்டாக்கும்.

இனிப்பு உணவுகள்
மாலை ஆறு மணிக்கு மேல் இனிப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டாம். இது உடலில் அதிகப்படியான சளி உண்டாக காரணியாக இருக்கிறது.

தேன்
தேனை எப்போதும் சமைத்து சாப்பிடக் கூடாது. சமைக்கும் போது தேனில் உண்டாகும் ரசாயன மாற்றம் அதனை விஷமாக மாற்றிவிடும்.

குழந்தை வளர்ப்பு / நலம் பற்றிய பயனுள்ள குறிப்புகள்!

குழந்தை வளர்ப்பு / நலம் பற்றிய பயனுள்ள குறிப்புகள்!

கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும்போது, மரத்தினால் ஆன ஐஸ்கிரீம் ஸ்டிக்கினால் எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது, குழந்தைக்கும் சாப்பிட எளிது.

சிறு குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால், காய்ந்த திராட்சை 10 போட்டுக் கொதிக்க வைத்து, கசக்கி பிழிந்து, வடிகட்டி கொடுத்தால் பலூனில் காற்று இறங்குவது போன்று இறங்கிவிடும்.

குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால், சுக்கு தட்டிப்போட்ட வெந்நீரில் சர்க்கரை கலந்து வெதுவெதுப்பாகக் கொடுத்தால், வாயு கலைந்து வெளிப் போக்கு ஆகி சரியாகிவிடும்.

பச்சிளங்குழந்தைகளுக்கு ஜலதோஷம் வந்தால் நீளமான முழு மஞ்சள் ஓன்றை எடுத்து, ஒரு முனையில் கருப்பாகச் சுட்டு, சிறிது சுண்ணாம்புடன் விழுதாக தயாரிக்கவும். கரண்டியில் இந்த விழுதை லேசாக சுடவைத்து மிதமான சூட்டில் குழந்தையின் மூக்கு மற்ற்றும் நெற்றியில் தடவினால் ஜலதோஷம் பறந்து போய்விடும்.

பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்குத் தொண்டையில் படியும் "அக்கரம்" நீங்க, தினந்தோறும் உள்நாக்கில் தேனில் குழைத்த வசம்பு பொடி தடவி வரலாம். இது உடனடியாக உடனே உறிஞ்சப்படுவதால் "அக்கரம்" நீங்கும்; மூளை தூண்டப்படும்; கபம் சேராது; நல்ல ஜீரணசக்தி வரும்; மந்தம், மலச்சிக்கலும் வராது.

குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்ட வேண்டும். எளிதாகவும், சுத்தமாகவும் வேலை முடியும்.

பரங்கிக்காய் மற்றும் ச்சவ் ச்சவ் (பெங்களூர் கத்திரிக்காய்) முதலியவற்றை அரியும்போது முத்து முத்தாக நீர் வரும். அந்த நீரைக் குழந்தைகளின் புண்களுக்குத் தடவினால் புண்கள் விரைவாக ஆறிவிடும்.

குழந்தை அழுது, கையை காதுப்பக்கம் கொண்டு போய் வத்துக்கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம்.

குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளைநிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளி விடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

குழந்தைகளிடம் அப்பா வேண்டுமா? அம்மா வேண்டுமா? என்று கேட்கக் கூடாது. அவர்களுக்கு இருவருமே வேண்டும். இவ்வாறான கேள்வியால் அவர்கள் மனதில் யாராவது ஒருவர் போதும் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புண்டு.

காலில் முள்குத்தி இருந்தால் எடுக்கும்போது வலி தெரியாமலிருக்க முதலில் சிறிது ஐஸ் வைத்து மரத்துப் போகச் செய்து விட்டு பிறகு எடுக்கலாம்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால், 10 பசலைக்கீரையை எடுத்து பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.

பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் இருக்கும்.

குழந்தைகளுக்கு இரவில் பேரீச்சம்பழம் 4 அல்லது 5 கொடுத்து உடன் பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் மனோபலம் கூடும். மூளை பலப்படும்.

"குழந்தை வளர்ப்பான்" ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்து விட்டால் எறும்பு மட்டுமல்ல, கொசு மற்றும் பிற பூச்சிகளும் வராது.

கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈத்தொல்லை அவதியாக இருந்தால் குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கி போட்டால் ஈக்கள் அந்த பக்கமே வராது.

குழந்தைகளுக்குப் பால் ஜவ்வரிசியில் கஞ்சி போட்டுக் கொடுத்தால் மிகவும் நல்லது. நைலான் ஜவ்வரிசியை எண்ணெய் விடாமல் வறுத்து, மிக்சியில் திரித்து கஞ்சி செய்து கொடுக்கலாம்.

குழந்தைகளுக்குத் தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்து சாப்பிட கொடுக்கலாம். பசும்பாலைவிட அதிகச்சத்து வாய்ந்தது.

சிறு குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு தரையை கூட்டிப் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் பாதிக்கும்.

சிறு குழந்தைகள் கீழே விழுந்து நெற்றியில் வீங்கிக் கொண்டு விட்டால் வீங்கிய இடத்தில் இரண்டு மூன்று முறை மண்ணெண்ணெயைப் போட்டு விட்டால் வீக்கம் குறையும்

நல்லகுடி நீர் என்பதற்கும், சுத்தமான குடி நீர் என்பதற்கும்

நல்லகுடி நீர் என்பதற்கும்,
சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்...அவ சிய பதிவு.
அவசியம் படியுங்கள்.

குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.

நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும்
தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு
சாதனங்களை வைத்திருக்கிறோம்.

இந்த R.O சாதனத்தில் மூன்று
மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை
வெளியில் எடுத்துப் பார்த்தால்
வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.

அதை உதறி தட்டினால் அதிலிருந்து
மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.

நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த
வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.

ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக
அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.

கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து
எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!.

அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத்
தேவைப்படும் அத்தியாவசிய
தாதுப் பொருட்கள் ஆகும்.

நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது.

ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத்
தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.

தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத
தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...ஆனால்
கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச்
சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்.

யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம்
செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.

தண்ணீரில் இருக்கும் அந்தத்
தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.

தண்ணீரை R.O செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது.

சரி...

மினரல் பாட்டில் வாட்டர் -ஐ
பயன்படுத்தலாமா?

மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.

மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும்.

இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.

எனவே நல்ல தண்ணீரை
ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக
மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை
செய்து அதை பாட்டிலில் அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கி
குடிக்கிறோம்.

எனவே தயவு செய்து பாட்டிலில்
அடைக்கப் பட்ட மினரல் வாட்டர்
என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன?...

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.

ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.

வேறு எப்படித்தான் தண்ணீரை
சுத்தப் படுத்துவது என்று கேட்டால்,
சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.

அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.

யார் ஒருவர் குழாய் தண்ணீரை
நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக
இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.

குழாயில் வரும் தண்ணீரை எப்படிக்
குடிப்பது?...

தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.

சாக்கடை நீர் கலந்து வருகிறது
என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.

எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.

உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர்
கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில்
மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து
பிரச்சாரம் செய்கிறது.

அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில்
தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.

உண்மையிலேயே குழாய் தண்ணீர்
குடித்தால் ஒன்றும் ஆகாது.

இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,

தண்ணீர் கெட்டிருக்கிறது என்று
ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம். நான் கூறுவது போல உங்கள்
தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில்
இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை
சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட
பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.

நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து
உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால்
எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.

ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான
இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை.

எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும்
அழியும். மண் சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல்
வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள்.

எனவே தேவைப் பட்டால் இந்த
முறையில் தண்ணீரைச் சுத்தப் படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின்
மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான
சக்தி கிடைக்கிறது.

அதில் உள்ள கெட்டப்
பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.

எனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க
பயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை
சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.

பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக்
கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா?.

அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால்
அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும்.

எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை
சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள்
இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.

இதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

அதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.

வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.

என் அருமை மக்களே!... 
நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க்காதே எனும் முன்னோர் வாக்கை நம்புங்கள்.

R.O எனும் அமெரிக்க என்சைம் அரக்கனை தூக்கி எறியுங்கள்.

கழுத்தில் டை கட்டி விட்டு வந்தால் உடனே நம்பி மோசம் போகாதீர்கள்.

நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

மூலிகைப் பயன்கள்

. மூலிகைப் பயன்கள்


 அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி



 நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது



 கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.



 வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது



 அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.



 சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.



 நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.



 வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.



 தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.



 துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.



 ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.



 கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.



 ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.



 ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், 



 ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.



 திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.



 வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.



 நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.



 நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.



 கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.



 வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.



 திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.



 அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.



 துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.



 செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.



 கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.



 சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.



 கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.



 முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.



 கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.



 குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.



 பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.



 முருங்கைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.



 லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.



 வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.



 பாகற்காய் பவுடர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.



 வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.



 மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.



 சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.



 பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.



 சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.



 ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.



 கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.



 வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.



 வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.



 நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.



 நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.



 பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.



 கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.



 பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.



 வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.



 சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.



 மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.



 கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

மருத்துவம்

இயற்கை மருத்துவம்


1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.



2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.



3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 



4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.



5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.



அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.



சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.



6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.



7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.



8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.



9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.



10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.



11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.



12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.



13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.



14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.



15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.



16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.



ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.



17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.



18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.



19. உடம்புவலி 

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.



20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.



21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.



22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.



23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.



24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.



25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.



26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.



27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.



28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.



29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.



30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.



31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.



32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.



33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.



34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.



35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.



36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.



37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.



38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.



39. கபக்கட்டு 

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.



40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.



41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.



42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.



43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்



44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.



45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.



46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.



47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.



48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்



49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.



50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.. 



கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.



எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.



நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.



எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.



கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

Wednesday, 11 January 2017

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

*சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*...

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர  வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில்,

சோபாக்களில்,  கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

*இப்படிக்  காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல
உடல் உபாதைகள் உருவாகிறது*...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து  அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

*நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு  அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது*.

*நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*.

*மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது  ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*.

எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்
போட்டு அமர்ந்திருந்தால்  அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை
மடக்கி அமர்ந்துதான்  சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு
ஜீரணம்  நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல்  காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்  யுரோப்பியன் கழிவறையில்  அமரும் பொழுது குடலுக்கு அதிக

அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட  யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப்  புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து  வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன்  வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில்  ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால்
சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு  வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

*சாப்பிடும் முறை*...!

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக  மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது  இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர  அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட  வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு  சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

*அமருங்கள் சம்மணமிட்டு*.