Friday, 27 January 2017

தூசினால் ஏற்படும் அலர்ஜியை சரி செய்ய எளிய இயற்கை உணவுகள்:-

தூசினால் ஏற்படும் அலர்ஜியை சரி செய்ய எளிய இயற்கை உணவுகள்:-

சிலருக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் சென்ஸிடிவாக இருக்கும். சின்ன தூசிக்கு கூட தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும். தூசு, பூச்சி கடித்தால், மாசுப்பட்ட காற்று என எங்கு சென்றாலும் உடனேயே நோய் எதிர்ப்பு செல்கள் அலர்ஜி உண்டாக்கும் செல்களை தூண்டும்.

இந்த அலர்ஜி செல்கள் தனது வேதிப்பொருளை வெளிப்படுத்தும் இதன் விளைவே அலர்ஜி உண்டாகிறது. தும்மலில் தொடங்கி, ஆஸ்துமா, சரும பிரச்சனை வரை பலவிதமான அலர்ஜிகள் உண்டாகின்றன. இவ்வாறு அலர்ஜியால் அதிகம் பாதிக்க்ப்படுபவர்கள் கீழே சொல்லப்பட்டிருக்கும் உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அலர்ஜியை கட்டுப்படுத்தலாம்.

பசலைக் கீரை :-

பசலைக் கீரை நுரையீரல் சம்பந்தமான அலர்ஜியை தடுக்கிறது. அனைத்து விதமான விட்டமின் மினரல்கள் உள்ளன. பசலைக் கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமாவை வரவிடாமல் தடுக்கலாம்.

ஆப்பிள் :-

ஆப்பிள் நோயை மட்டுமல்ல அலர்ஜியையும் தடுக்கிறது. கர்ப்பிணிகள் வாரம் 4 நான்கு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழ்ந்தைக்கு ஆஸ்துமா போன்ற நுரையீரல் பாதிப்புகள் வராது

வாழைப் பழம் :-

வாழைப் பழம் அதிக நார்சத்துக்களை கொண்டது. இதனை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தூசினால் வரும் அலர்ஜி தடுக்கப்படும்.

அவகாடோ :-

அலர்ஜிக்கு மிகச் சிறந்த உணவு இதுதான். இதிலுள்ள குளுடதயோன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். இது பாதிப்படைந்த நுரையீரலையும் சரி செய்து மூச்சுக் குழாயை தொற்றிலிருந்தும் கிருமிகளிடமிருந்தும் பாதுகாக்கிறது.

காலே :-

காலே அதிக விட்டமின் சி யைக் கொண்டுள்ளது. இது ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து, செல்களின் ஆரோக்கியத்தை காக்கிறது. முக்கியமாக நுரையீரல் சம்பந்தப்பட்ட அலர்ஜியை தடுக்கும்.

பூண்டு :-

பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் அலர்ஜியை தடுக்க முடியும். நுரையீரலை பலப்படுத்தும். ஆஸ்துமாவை வரவிடாமல் தடுக்கும். இது அலர்ஜியினால் உண்டாகும் பாதிப்புகளையும் சரி செய்கிறது.

No comments:

Post a Comment